Sunday, May 7, 2017

வெறும் காலில் 5 கி மீ ஓட்டம் ஒரு அனுபவம்

ன்று உலக Bare foot running தினம். இதனை முன்னிட்டு பெசன்ட் நகரில் உள்ள ரன்னிங் குழு ஒரு இலவச 5 கி மீ ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தரமான டி ஷர்ட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது

ஓட்டத்தின் போது Kesevan VS மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பர்கள் பழனி & மூர்த்தி ஆகியோரை சந்தித்தேன். பழனி அவர்களும் நானும் முழு ஓட்டமும் ஒன்றாக ஓடினோம்.வழக்கறிஞர் பழனி ஓட ஆரம்பித்த ஒரே வருடத்தில் முழு மாரத்தான் ஓடியவர்.. துவக்கமே 21 கி மீ தானாம் ! ஓட்டம் பல இனிய நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. ஜவ்வாதுவில் என்னை போலவே பழனி அவர்களும் 25 கிலோ மீட்டர் ஓடுவதால், இருவரும் மீண்டும் இணைந்து ஓடுவோம்..

அருமையான பாதை ...இது போன்ற சாலைகள் என்றால் - வெறும் காலில் ஓடலாமா. கண்ணாடி அல்லது முள் இருக்குமா என்ற கவலை இல்லை..

முதன் முறை திரு வெங்கடராமன் அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் மூன்றிலும் கலக்கும் 45 வயதுக்கு மேலுள்ள இளைஞர்..ஓட்டம் குறித்து பல டிப்ஸ் ஓடுகிற அனைவருக்கும் சொல்லும் அற்புத மனிதர்..வெறும் கால் ஓட்டம் பெரிய வித்யாசத்தை தரவில்லை; காலை கிளம்புவதில் 5 நிமிடம் குறைகிறது..விடிகாலையில் ஷூ, சாக்ஸ் போடுவது சற்று அலுப்பான வேலை தான். அந்த நேரம் மிச்சமானது.
மேலும் எனக்கு ஓடும்போது அவ்வப்போது ஷூ முடிச்சு கழன்று விடும். நின்று கட்டி விட்டு வர வேண்டும். அந்த நேரமும் மிச்சம்.


மற்றபடி பெரிய மாறுதல் தெரிய வில்லை; தொடர்ந்து ஓடஓட வித்யாசம் தெரியலாம். வெறும் காலில் ஓடுவது எப்போதோ ஒரு முறை எனக்கு நிகழலாம். தினமும் தற்போது வாய்ப்பில்லை..

பெசன்ட் நகரில் எத்தனை activities அந்த காலை நேரமே நடக்கிறது..அந்த நேரத்தில் பெசன்ட் நகர் கடற்கரை வேறு முகம் கொண்டிருந்தது. பல முறை சென்றும் காணாத வேறு முகம்..அந்த முகத்தை ரொம்ப பிடித்திருந்தது

கடந்த ஏழு ஞாயிறாக ஒவ்வொரு வாரமும் காலை வெவ்வேறு ஈவண்ட்களில் பங்கு கொண்டிருக்கிறேன்.. ஓட்டம் மட்டுமல்ல, சைக்கிள் ரைடு, டுவதல்லான், நங்கநல்லூரில் கோவில்களுக்கிடையேயான வித்தியாச ஓட்டம், இன்று வெறும் கால் ஓட்டம் ......வாழ்க்கை இப்போது தான் வண்ண மயமாக இருக்கிறது

பல்வேறு நண்பர்கள்,...இனிய அனுபவங்கள்.. போனஸாக நல்ல உடல் நலம்..இவை அனைத்தும் தரும் ஓட்டத்திற்கு வந்தனம் ! இந்த ஓட்டத்தை அருமையாக ஏற்பாடு செய்த குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துகளும் ...!

8 comments:

 1. உங்கள் பொழுது போக்கும் நேரங்களைப் பயனுள்ளதாக, முறையாக பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது!

  ReplyDelete
 2. சிறப்பு.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. வெறும் காலில் நடப்பதே இப்போதெல்லாம் எனக்குக் கஷ்டமாகி விட்டது!

  ReplyDelete
 4. வணக்கம்
  தங்களின் ஆர்வத்துக்கு எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. அண்ணே நீங்க ஸ்லிம்மா அழகாயிட்டீக.

  ReplyDelete
 6. ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு விதம். தொடரட்டும் இனிய அனுபவங்கள்.....

  ReplyDelete
 7. வெறும் காலில் ஓடுவது சிறிது கடினம் தான். ஓடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. பாண்டியன்

  //உங்கள் பொழுது போக்கும் நேரங்களைப் பயனுள்ளதாக, முறையாக பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது!//

  மிக்க நன்றி; இத்தகைய வார்த்தைகள் நிச்சயம் மகிழ்ச்சி தருகிறது
  **
  கந்தசாமி சார் : மகிழ்ச்சி; நன்றி
  **
  ராஜி: ரைட்டு சிஸ்டர்; அடுத்த முறை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு இனிப்பு உறுதி :)
  **
  நன்றி வெங்கட்
  **
  ஸ்ரீராம் & பரமசிவம் சார்; தொடர்ந்து வெறும் காலில் ஓடுவோர் அதை மட்டுமே ரசிக்கிறார்கள். நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...