Tuesday, January 15, 2019

பேட்ட சினிமா விமர்சனம்

 ங்கரின் சிவாஜிக்கு பிறகு பக்கா ரஜினி ஸ்டைலில் ஒரு படம்.

பழி வாங்கும்  கதை தான். ஆனால் சொன்ன விதம் வித்யாசம்.

வாவ்.. என்ன ஒரு துவக்கம் !

முதல் பாதி அட்டகாச விருந்து.  அனிருத் பாடல்கள் படத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ரசிக்கவைத்ததுடார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட முதல் பாதி கண்ணுக்கு குளிர்ச்சி. மெயின் பிளாட்டிற்கு வராவிட்டாலும் கூட முதல் பாதி மிக மிக ரசிக்க வைக்கிறது.

 சிம்ரன் வீட்டில் கலக்கும் ரஜினி -  பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை அடித்து நொறுக்கி விட்டு - அவர் வீட்டிற்கு நேரே சென்று பேசிவிட்டு - வெளியே வந்து அடிவாங்கியோரை நலம் விசாரிக்கும் பாங்கு.. என முதல் பாதியில் ரசித்து சிரிக்க பல காட்சிகள்.. ரஜினி படத்தை ரசிக்க கதையே தேவையில்லை - நல்ல காட்சிகள் போதும் என சொல்கிறது முதல் பாதி

ஆவரேஜ் செகண்ட் ஹாப் 

இரண்டாம் பாதியை- மட்டுமே முழு படமாய் எடுக்கலாம். அவ்வளவு விஷயம் இரண்டாம் பாதியில் வைத்ததால் நீண்ட படமாக தோன்றுகிறது.

முதல் பாதி மிகுந்த நேரமெடுத்து ஷாட் பை ஷாட்டாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் குறித்து அவ்விதம் சொல்ல முடியாது.

மேலும் பிளாஷ் பேக் முடிந்தவுடன் கிளைமாக்ஸ் மூட் வந்துவிடுகிறது. பின் படம் நீள்வது சற்றே அலுப்பு தட்டுகிறது

கிளைமேக்சில் வைத்த டுவிஸ்ட் இல்லாவிடில் இது கார்த்திக் சுப்புராஜ் படம் என்பதே மறந்திருக்கும். இயக்குனர் - எழுத்தாளர் சுஜாதா ரசிகர் போலும். முடிவை நம் ஊகத்திற்கு விடுகிறார். அடுத்த பார்ட் கூட எடுக்க வசதியாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் படத்தை முடிக்கிறார்.


பிற பாத்திரங்கள் 

சிம்ரன் கொஞ்சமே வந்தாலும் கவர்ந்து விடுகிறார்.

த்ரிஷா தான் மிக பாவம்.. ரஜினியுடன் நடித்தார் என்பதை தவிர மற்ற படி சொல்லி கொள்ள ஒன்றுமே இல்லாத ஒரு பாத்திரம். சசிகுமாரும் - சோ - சோ தான்.

வில்லனை இன்னும் கெத்தாய் காட்டியிருக்கலாம். ரஜினி கூட அவரை சுள்ளான் என்று தான் பல முறை அழைக்கிறார். தனுஷ் போன்ற உடல்வாகு கொண்ட நவாஸுதீன்.. நரித்தனத்தில் மட்டுமே வெல்கிறார்.

விஜய் சேதுபதி பாத்திரத்தை பரிதாபப்படும் படி செய்து விட்டனர்.

உண்மையில் ரஜினியை ப்ரமாண்டப்படுத்த மட்டுமே பிற பாத்திரங்கள்.. மற்றபடி அவர்களுக்கு பெரிதாக individuality ஏதும் இல்லை !அவ்வப்போது பழைய பாடலை பாடும் ரஜினியின் ரேடியோவே ஒரு பாத்திரம் போல தான் வருகிறது. இந்த ரேடியோ அளவு கூட மற்ற எந்த பாத்திரமும் ரசிக்க வைக்கவில்லை என்பதே உண்மை !

இயக்கம் 

ரஜினியை மட்டுமே மையப்படுத்தினாலும் இது ஒரு டைரக்டர் படம் தான் !

எங்கெங்கு கைதட்டல் கிடைக்கும் ..எதனை மக்கள் ரசிப்பார்கள் என யோசித்து செய்த விதத்தில் வெல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

முதல் பாதி முழுதும் லேசான சிகப்பு டோன்  ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு - லொகேஷன் அனைத்தும் அசத்துகிறது முதல் பகுதியில் !

சரியான பன்ச் டயலாக் அனைத்தும் டிரைலரில் வைத்து விட்டார். அந்த டயலாக் ஏற்கனவே பரிச்சயம் ஆனதால் அவை வரும்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர். இவ்விதத்தில் காலா போல ஏமாற்றவில்லை. பன்ச் எல்லாம் சரியான காட்சியில் தான் வைத்துள்ளார்

பேட்ட @ திண்டுக்கல் உமா தியேட்டர்

முதல் பாதி மாஸ் ....இரண்டாம் பாதி மரணம் என முகநூலில் எழுதினார் நண்பர் ஒருவர். இதில் கொஞ்சம் உண்மை உண்டு. 

இருப்பினும் பேட்ட - சினிமா ரசிகர்களுக்கு வேட்ட  தான் !

*****

அண்மை பதிவுகள்

2018 - சிறந்த 10 தமிழ் படங்கள்

கனா சினிமா விமர்சனம் 

5 comments:

 1. வழக்கம்போல்
  அருமையான விமர்சனம்
  புகைப்படம் அருமை
  தங்களுக்கும் தங்கள்
  குடும்பத்தார் அனைவருக்கும் இனிய
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. Waiting for your review. Too late sir. Make sure you give your review soon.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. நீங்களும் மகளும் நிக்கிற போஸ் ஏதோ பேமஸ்-ஆன் திரைப்பட போஸ்டர் மாதிரி ஞாபகம். எந்த படம்னு சொல்ல முடியுமா?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...