Monday, November 23, 2009

பதிவர்கள் சந்திப்பு - சில கேள்விகள்

பதிவர்கள் சந்திப்பு பற்றி அறிந்ததில் இருந்து செல்ல மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். கடந்த 2 வாரமாய் மழையால் நடக்காத சந்திப்பு, இம்முறை செம ஷார்ட் நோடிஸில் காந்தி சிலைக்கு பின்னே நடந்தது. ஐந்தரை மணி என போட்டிருந்தாலும் 5.45 வரை யாரையும் காணும். முன்னே பின்னே தெரியாத மக்களை அடையாளம் எப்படி காண்பது என சற்று குழம்பி போனேன். ஒரு வழியா ஜெட் லி மற்றும் அவரது நண்பர் (சரவணன் என நினைக்கிறேன்) ஆகியோரை பார்த்தேன். சிறிது நேரத்திலேயே நரசிம், Dr . ப்ருநோ, பைத்திய காரன் (சிவ ராமன்), ஜ்யோவ் சுந்தர், அதியமான், அதிஷா, லக்கி,ஆதி, முரளி கண்ணன், அனுஜன்யா மற்றும் பலர் வந்து சேர்ந்தனர். சிறப்பு விருந்தினர்: கவிஞர் வா. மணிகண்டன். அவரது நண்பர் நரன் (இவரிடமும் ஏகப்பட்ட நவீன கவிதை வாசம்). அனைவரும் ஒரு circle-ஆக அமர்ந்து அறிமுகம் செய்தவாறு பேச துவங்கினோம்.



***********
போட்டோ நன்றி: ஆதி @ தாமிரா. மீதம் போட்டோ காண: http://www.aathi-thamira.com/2009/11/211109.html
**********
பைத்தியக்காரன் தான் பல்வேறு கேள்வி கணைகளை வீசினார். Yorker, Bouncer என அவர் வீசிய பல்வேறு கேள்விகளுக்கு மணிகண்டன் சமாளித்து ஆடினார். கேள்வி கேட்ட விதத்தில் ஒரு வழி பண்ணாம விடறதில்லை என்ற ரீதியில் பேசிய பைத்தியக்காரன், கடைசியில் "ஷோக்கா ஆடுனேப்பா!!" என கட்டை விரலை தூக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மணிகண்டன், கவிதை எழுத வரும் எவரும் முதலில் வைரமுத்து போன்றோரின் பாதிப்பில் எழுத வருவதாகவும், பின் நல்ல கவிதை தேடி, படித்து , எழுதும் பாணி மாறுவதாகவும், தனக்கும் அதுவே நடந்ததாகவும் சொன்னார்.

" நிசப்தமான இந்த இரவின் விளிம்பில் உன் விரல்களில் இருந்து உதிரும் வார்த்தைகள்" என்ற தனது கவிதையை சொல்லி, பலரும் இது சத்தமில்லா இரவில் இருவர் பேசுவதாக நினைக்கின்றனர். ஆனால் இது செக்ஸ் மற்றும் அந்த நேரத்தில் விரல்கள் பேசுவதை குறிப்பதாக சொன்னார். சுந்தர ராமசாமி (பசுவய்யா என்ற பெயரில்) மொத்தமே 107 கவிதைகள் தான் எழுதி இருந்தாலும் அவரது கவிதைகளை தான் முக்கியமான ஒன்றாக கருதுவதாக சொன்னார். மேலும் தற்போதைய கவிஞர்களில் குறிப்பிடதக்கவராக முகுந்த் நாகராஜ் உள்ளதாகவும் சொன்னார்.

"இலக்கியம் என்றால் என்ன? ", "கவிதைகள் புரிந்து கொள்ள பட வேண்டுமா?", " கவிதை, கட்டுரை என படைப்பாளி பிரிப்பது தேவையா?' , "பின்னூட்டங்கள்.." என விவாதம் நன்றாகவே போனது.

ஜ்யோவ் சுந்தர் நகுலனின் சில கவிதைகளை சிலாகித்து பேசினார். பிரம்ம ராஜனின் சில கவிதைகள் ஒரு வரி விட்டு விட்டு - அதாவது odd number வரிகள் முதலிலும், Even number வரிகள் பின்னரும் படித்தால் தான் புரியுமாம்!! அப்படி ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு ஒளிந்து பிடித்து விளையாட்டு மாதிரி என்ற பதில் வந்தது!!

அப்துல்லா guest appearance போல் நடுவில் வந்து, நடுவில் சென்றார். கேபிள் ஷங்கர் வந்ததும் கூட்டத்தை முடித்து விட்டனர்

டீ கடை சென்று அங்கு ஒரு விவாதம் தொடர, நானும் அதிய மானும் நேரமாச்சுன்னு எஸ்கேப்.

சிலரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்:

ஜெட் லி: Blog-ல் அசத்தும் நீங்க கூட்டத்தில் ஏன் இவ்ளோ மௌனம்?
அனுஜன்யா : எப்படி சார் யூத்து மாதிரியே இருக்கீங்க?
முரளி கண்ணன்: நீங்க P.H.D செய்வது Mechanical Engineering -ஆ? சினிமாவிலா?
நரசிம்: அது எப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்குறீங்க?
பைத்திய காரன்: உங்க மனைவி கிட்டே தைரியமா கேள்வி கேப்பிங்களா?

மொத்தத்தில்: இந்த டீ, முருக்குக்கெல்லாம் காசு தந்த புண்ணியவான் யாருப்பா?

********************* *********** **********

தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் வாக்களிக்க மறவாதீர்கள்!!

22 comments:

  1. அன்பின் மோகன்,

    //பைத்திய காரன்: உங்க மனைவி கிட்டே தைரியமா கேள்வி கேப்பிங்களா?//

    ஒண்டிக்கட்டை :)

    //மொத்தத்தில்: இந்த டீ, முருக்குக்கெல்லாம் காசு தந்த புண்ணியவான் யாருப்பா?//

    நர்சிம் :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. நல்லா கவர் பண்ணி எழுதியிருக்கீங்க மோகன். அதுவும் கிளைமாக்ஸ் கேள்விகள் அழகு.!

    ReplyDelete
  3. டாக்டர் புரு"நோ" என்ற நுண்ணரசியலையும் "நர்சிம்-அப்பாவி" என்ற நுண்ணரசியலையும்
    வெகுவாக ரசித்தேன்.
    :-)

    ReplyDelete
  4. நல்ல பகிரல் மோகன்.எல்லோரையும் முகம் பார்த்துக்கொள்ள உதவியாக இருந்தது ஆதியின் புகைப்பட பதிவு.நர்சிம்,உங்களின் பகிர்வு கூட்டத்தில் இருந்தது போல இருந்தது.நன்றி மோகன்!


    //ஜ்யோவ் சுந்தர் நகுலனின் சில கவிதைகளை சிலாகித்து பேசினார். பிரம்ம ராஜனின் சில கவிதைகள் ஒரு வரி விட்டு விட்டு - அதாவது odd number வரிகள் முதலிலும், Even number வரிகள் பின்னரும் படித்தால் தான் புரியுமாம்!! அப்படி ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு ஒளிந்து பிடித்து விளையாட்டு மாதிரி என்ற பதில் வந்தது!!//

    :-))))

    ReplyDelete
  5. thalaivaree,,கடைசியா நான் கவிதைய பத்தி கேட்ட கேள்விக்கப்புறம் குரூப் கலைஞ்சதுனு சொல்லவேயில்லையே..

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. பைத்திய காரன்: அப்படியா விஷயம்? ஹேப்பியா இருக்கீங்க போல.. :)

    ஆதி: நன்றி. முதல் வருகைக்கு.. அவ்வபோது வாங்க.

    ராஜு: ஐயோ அப்படி எல்லாம் நினைச்சு எழுதலைங்க. நன்றி. நீங்க நல்லா கலக்கல்ல காமெடி எழுதுறீங்க

    பா. ரா. நன்றி. விரைவில் எதிர் பாருங்கள் பா. ரா பற்றிய பதிவு (வெள்ளிகிழமை இரவுக்குள் கம்ப்யூட்டரில் கிடைக்கும் :)

    கேபிள்ஜி : அதான் மேட்டரா? மிக பெரிய பதிவரான உங்கள் முதல் வருகை + comment-க்கு நன்றி

    ReplyDelete
  8. சரிதான்! கேபிள் சங்கரை அரசியல் கூட்டங்களுக்கும் அனுப்பிப் பார்க்கலாமே! :P

    ReplyDelete
  9. கடைசி கேள்விதான் சூப்பர்!

    ReplyDelete
  10. 1.நல்ல நிகழ்ச்சி. நல்ல அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  11. என்னால் தான் வரமுடியாமல் போய் விட்டது.. :(

    ReplyDelete
  12. //Blog-ல் அசத்தும் நீங்க கூட்டத்தில் ஏன் இவ்ளோ மௌனம்?
    //

    நான் அப்பாவிங்க....

    அப்புறம் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்...

    நான் எப்பவுமே தெரியாதது பற்றி பேசுவது கிடையாது கவனிப்பதோடு சரி....

    ReplyDelete
  13. கீதா மேடம், ரவி பிரகாஷ் சார், ஜனா சார், முரளி கண்ணன், ஜெட் லி நன்றிகள் பல...
    பால பாரதி நாம் அடுத்த முறை சந்திப்போம்

    ReplyDelete
  14. //முரளி கண்ணன்: நீங்க P.H.D செய்வது Mechanical Engineering -ஆ? சினிமாவிலா?
    //

    இந்த டவுட்டு எனக்கும் இருக்கு !
    :)

    ReplyDelete
  15. நல்ல பகிர்தல் நண்பரே. மீத 16th

    ReplyDelete
  16. நானும் வரனும்னு இருந்தேன்..ஆனா ஒரு திருமணத்தால் வர முடியல...

    ReplyDelete
  17. நன்றி மோகன்.

    நண்பர்களைச் சந்தித்ததிலும் சில விஷயங்களை உரையாடியதிலும் சந்தோஷமாக இருந்தது.

    நிசப்தம்
    விரவிக் கிடக்கும்
    இந்த
    இரவின் விளிம்பில்
    சொற்கள்-
    உன் விரல்களின்
    நுனியிலிருந்து
    உதிரத் தொடங்குகின்றன.

    இது அந்தக் கவிதை(காலச்சுவடு இதழில் பிரசுரமானது என்று நினைக்கிறேன்)

    இது 'என்னைப்' பொறுத்த வரைக்கும் மட்டுமே காமம் குறித்தான கவிதை. இது இந்தக் கவிதையோடு எனக்கான உறவு.

    இதே கவிதையை வேறொரு வாசகன் வேறு விதமாக புரிந்து கொள்ள முடியும். இப்படி பலவாறாக புரிந்து கொள்ளுதலுக்கான சாத்தியங்கள் கட்டுரைகளில் மிகக் குறைவு. கவிதையில் இது சாத்தியப்படும்.

    கவிதையோடு வாசகன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவின் மூலமே இத்தகைய வேறுபட்ட அர்த்தங்களை கவிதை அடைகிறது. கவிதையில் இருக்கும் பரப்பு இத்தகைய புரிதல்களுக்கான திறப்புகளை கொண்டிருக்கிறது என்பதாக சொல்ல வந்தேன்.

    தங்களின் பதிவு குறித்து மிகுந்த சந்தோஷம்.

    ReplyDelete
  18. கதை போட்டியில் முதல் இருபது வந்ததுக்கு
    வாழ்த்துக்கள் அண்ணே.....முதல் பரிசு பெற
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. நல்லா எழுதி இருக்கீங்க. உங்க கேள்விக்கு என் பதில்: ஒரு மலர், மலரைப் போலத்தான் இருக்கும் :)

    சரி சரி அடிக்க வராதீங்க. உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    அனுஜன்யா

    ReplyDelete
  20. ரசனையான பகிர்வு நண்பரே.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  21. இந்தமுறை தவறவிட்டுவிட்டேன். அடுத்தமுறை பார்க்கலாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...