Thursday, November 26, 2009

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது. நம்மளையும் மதிச்சு இப்போ யூத்து கேபிள் ஷங்கர் கூப்பிட்டுருக்கார்.

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நான் இதை இந்தியான்னு எடுத்திருக்கேன்)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.


1.அரசியல்வாதி

பிடித்தவர் : ரொம்ப யோசிச்சா கம்யுநிஸ்டுங்க சில பேர் (நல்ல கண்ணு போல) அதிகம் பணம் சேர்க்காம இருப்பது தெரிகிறது. (அதுக்காக கம்யுநிசம் பிடிக்குமா என்றால் " சாரி - நோ ")

பிடிக்காதவர்: 99.9999% அரசியல் வாதிகள் அனைவரும். (நம்ம நாடு உருப்படாம இருக்க காரணமே இவங்க தான்)

2. நடிகர்

பிடித்தவர் :

ரஜினி (For giving entertaining cinema )
கமல்ஹாசன் ( Variety -க்காக பல படங்கள்)
விக்ரம் (கடும் உழைப்பு மற்றும் காத்திருப்பால் வென்றமைக்காகவும், திறமைக்காகவும்)
நல்ல performance எங்கு பார்த்தாலும் பிடிக்கவே செய்கிறது உதாரணம் சூர்யா (கஜினி, பிதா மகன்).

பிடிக்காதவர் : சிம்பு (ஓவர் பந்தா ஒடம்புக்கு ஆகாதுன்னு யாராவது சொன்னால் தேவலை)

3. நடிகை

பிடித்தவர் : தமன்னா, கத்ரீனா, ஸ்னேஹா, அசின் மற்றும் ப......லர். (தனி பதிவு விரைவில் போடுறேன்.)

பிடிக்காதவர் : விஜய குமாரி (பழைய நடிகை; படத்தில் வந்த ரெண்டாவது நிமஷம் அழ ஆரம்பிப்பாங்க; கடைசி வரை அழுதுட்டு செத்து போய்டுவாங்க)

4. இயக்குனர்:

பிடித்தவர் :

1. மணிரத்னம் (சிக்கலான விஷயத்தை அழகாக கையாளுவதால்)
2. ஷங்கர் ( கருத்து, காமெடி, பிரம்மாண்டம், நல்ல பாடல்கள் என அனைத்தும் கலந்து எப்போதும் entertaining ஆன வெற்றி படம் தருவதால் )
3. மகேந்திரன் ( உதிரி பூக்களை மறக்க முடியுமா? )
4. பாசில் (எப்போதும் அன்பை சொல்லும் படம் எடுத்ததால்)

பிடிக்காதவர் : பேரரசு (இவர் டைரக் ஷனே கொடுமை!! இதில் face expression இல்லாமல் நடிச்சு வேறே கொல்லுவாரு ).

5. தொழிலதிபர்

பிடித்தவர் : இன்போசிஸ் நாராயண மூர்த்தி (என்ன ஒரு vision !! A very straight forward business man)
ரத்தன் டாடா (Another straight forward & courageous business man)

பிடிக்காதவர் : மாறன் பிரதர்ஸ் (தனது துறையில் மற்றவர்கள் வளர்வது பிடிக்காததால்).

6. எழுத்தாளர்

பிடித்தவர் :
எஸ். ராமகிருஷ்ணன்.
பிரபஞ்சன், பாவண்ணன், வண்ண நிலவன் (மூவருக்கும் சில கதைகள் மட்டும் பிடிக்கும்)

உயிரோடு என்று இல்லா விட்டால் 1 to 3 சுஜாதா இருந்திருப்பார் .

பிடிக்காதவர் : ராஜேஷ் குமார்

7. இசையமைப்பாளர்

பிடித்தவர் : பழைய இளையராஜா, இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ் (எப்படி தான் சொல்லி சொல்லி ஹிட் songs தாராரோ?)

பிடிக்காதவர்: சங்கர் கணேஷ் (சின்ன வயதில் MSV vs இளையராஜா என நண்பர்களிடையே பெரும் சண்டை நடக்கும் ; அப்போ இளையராஜா கட்சி என்பதால் MSV பிடிக்காது என்பேன்)

8. காமெடியன்:

பிடித்தவர் : பழைய கவுண்டமணி (மன்னன், நடிகன், சின்ன தம்பி), இப்போ வடிவேலு . உயிரோடு இல்லாதவர்களில் : நாகேஷ் (What an actor!!);

பிடிக்காதவர் : மொக்கை போடும் போது விவேக்

9. பதிவர்

பிடித்தவர் :

ரேகா ராகவன் ( Blog-ல் பல விஷயங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்)
கேபிள் சங்கர் மற்றும் நரசிம் (கிட்ட தட்ட ரெண்டு பெரும் தான் எனக்கு ரோல் மாடலா இப்ப உள்ள மன நிலைக்கு தெரியிறாங்க.. வெரைட்டியா எழுதுறாங்க .. நானும் ஒரு நாள் இவங்களை போல ஆகணும்னு ஒரு (நப்) ஆசை)

மற்றும் எனது blog-ஐ தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும், அன்பு காட்டும் அனைவரும்.

பிடிக்காதவர் : யாரும் இல்லை (எழுதுறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பார்த்தா தெரியும் !!)

10. பழமொழி (saying)

பிடித்தது: Never, never, never give up !!

பிடிக்காதது: அழுகிற ஆம்பளையும், சிரிக்கிற பொம்பளையும் நம்ப கூடாது (உணர்ச்சிகள் அனைவருக்கும் பொதுவே. இதில் ஆண் என்ன பெண் என்ன?)

நான் கூப்பிடும் நால்வர்:

ரிஷபன்
ஈரோடு கதிர்
ஜெட் லி
வெங்கட் நாகராஜ்

10 comments:

 1. நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. அஹா நம்மளையும் கோத்து விட்டுடிங்களே அண்ணே....

  ReplyDelete
 3. எப்படி தல நல்லகண்ணுவை நான் சொன்ன நீங்களும் சொல்லிக்ருக்கீஙக

  தமன்னாவை பிடிக்குமா சொல்ல்லவே இல்ல..


  நல்லாருக்கு

  ReplyDelete
 4. நன்றி கேபிள்ஜி, நாஞ்சில் பிரதாப்.

  ஜெட் லி சினிமா பற்றி எவ்ளவோ பண்ணிட்டீங்க. இதை செய்ய மாட்டீங்களா

  ReplyDelete
 5. யூத்து கேபிள் ஷங்கர் //
  என்னாதிது....

  அழகான, ரசனையான, வித்தியாசமான பதில்கள்.

  ReplyDelete
 6. நால்வர் அணில நானுமா ?! தேவுடா .. நம்ம மோகன் குமாரை நல்லா பார்த்துக்க

  ReplyDelete
 7. Anonymous2:56:00 AM

  //பிடித்தவர் : தமன்னா, கத்ரீனா, ஸ்னேஹா, அசின் மற்றும் ப......லர். (தனி பதிவு விரைவில் போடுறேன்.)//

  கண்டேன் காதலை பத்தி விமரிசனம் பண்ணுவீங்க ன்னு நினைச்சேன். இன்னுமா பண்ணலை.

  ReplyDelete
 8. என்னது? பேரரசுக்கு பேஸ் எக்பிரசன் இல்லையா? அந்த டெர்ரர் முகத்தப் பாத்து இப்படி சொன்ன உங்களை... ஒரு பேரரசு படம் பாக்க வைக்கிறேன்...

  ReplyDelete
 9. ரிஷபன் சார் கவிதை மட்டுமே எழுதினா எப்புடி? . உங்களை பத்தி நாங்க தெரிஞ்சிக்க வேணாமா? Enjoy !!


  சின்ன அம்மணி: இன்னும் படம் பாக்கலை. நீங்க நினைக்கிற அளவு மோசம் இல்லை. TV-ல் (songs, trailer) பார்க்கும் போது ரசிக்கிறதோட சரி.

  அதி பிரதாபன்: ஏன் இந்த கொலை வெறி?

  ReplyDelete
 10. மோகன் நல்லா எழுதி இருக்கீங்க :-))) என்னோட இடுகை கூட பல உங்களோட பல விசயங்களை ஒத்து இருக்கிறது :-)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...