Saturday, November 28, 2009

அணு அளவும் தமிழ் இல்லை (டிவி விமர்சனம்)


சூப்பர் சிங்கர் ஜூனியர்: (விஜய் டிவி)

வார நாட்களில் TV பக்கம் போக நேரம் குறைவே. இருந்தாலும் இரவு 9 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் மட்டும் பார்க்கிறோம்.

குட்டி பசங்க பாட்டு கேட்க நல்லா இருக்கு. ஸ்ரீ காந்த்ன்னு ஒரு குட்டி பையன் -அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும். முகத்தை சீரியஸா வச்சிக்கிட்டு பாடுவான். செம காமெடியா இருக்கு பார்க்க. மோனிஷான்னு ஒரு பெண் பம்பாயில் இருந்து வந்து நன்றாகவே பாடுகிறாள். இன்னொரு பெண் பெயர் நினைவில்லை (இவள் பெயரும் ஸ்ரீயில் தான் துவங்கும்) மழலை குரலில் நன்கு பாடுகிறாள்.

இந்த வாரம் மனோ ஏதோ voice trainer ஆனந்த் வந்த பிறகு தான் பசங்க ரொம்ப நல்லா பாடுறதாக ஒவ்வோருதருக்கும் சொன்னது 20 மச் (பின்னே 20 பேருக்கும் இப்படியே சொன்னாராக்கும் !!)

நம்ம சின்மயி போயிட்டு திவ்யா வந்தோன மனசு ஒப்பலை (என்னது உப்பலைன்னு படிச்சிங்களா .. கண்ணை டெஸ்ட் பண்ணுங்க). ஆனா தனுஷ் சொல்ற மாதிரி அம்மையார் "பார்த்தா பிடிக்காது; பார்க்க பார்க்க பிடிக்கும்" ரகம். இப்போ.. ஹி ஹி .. நல்லா ஒரு மாதிரி வாட்ட சாட்டமா இருக்காங்கப்பு...

நமக்கு நல்லா பாடுனதா தோனுபவர்களை கூட மேல் சாதியில் சரியா பாடலை, கீழ் சாதியில் சரியாய் பாடலை என்று judgesசொல்றாங்க. ஒன்னும் பிரிய மாட்டேங்குது. (ஓ!!. அது சாதி இல்லையா? வேற எதோ ஒன்னு).

ஒன்னு கவனிச்சிங்களா? இந்த காமெரா மேன் எல்லாம் பார்வையாளரில் உட்கார்ந்திருக்கும் வல்லிய ஆண்டீஸ் தான் கான்பிகிறாங்க. நாலைஞ்சு காமெராமேனில் ஒருத்தர் இதுக்காகவே வாழ்க்கையை அர்பனிசிட்டாருன்னு நினைக்கிறேன்.

டீலா நோ டீலா (சன் டிவி)

நான் பார்ப்பது என்னவோ அந்த 26 பொட்டிக்காக தான்.. சரி சரி அந்த பொட்டி உடன் நிற்கும் சின்னஞ்சிறு auntyகளுக்காக.. எனக்கு சில doubts :

முதல் டவுட்:

26 பொட்டியிலும் என்ன பணம் இருக்குன்னு அதை ஓட்டும் போதே நடத்துறவங்களுக்கு தெரியும் தானே.. ?அப்போ முதல் முறை பொட்டி தேர்வு செய்யும் போதே அதில் என்ன பணம் இருக்குன்னு அவங்களுக்கு தெரியும். அப்புறம் என்ன புதுசு புதுசா offer தர்றது?

அடுத்த டவுட்:

அது எப்படி வரும் ஒவ்வொருவரும் சரியாய் ஒன்னுலேருந்து ரெண்டு லட்சத்துக்குள் ஜெயிச்சிட்டு போறாங்க?

கடைசி டவுட்:

ஏம்பா இந்த ப்ரோக்ராம்மிலாவது அந்த பணத்தை ஜெயிச்சவருக்கு சரியா குடுக்கிரீங்கலாப்பா?

ஹை டி (சுட்டி டிவி)

உங்களில் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சி பற்றி அறிவீர்களோ தெரியலை. ஆனா இந்த கார்ட்டூன் கதையை காலையில் ஸ்கூல் போகும் முன் என் பெண் பார்க்க கூடவே ஹவுஸ் பாசும் பார்க்கிறாங்க. படு பயங்கர செண்டிமெண்ட் கதையா இருக்கு. அடிக்கடி பார்பவர்களை அழ வைக்கிறாங்க. முக்கிய characters - 2 குட்டி பெண்கள் என்பதால் பசங்க இந்த தொடர் பக்கம் வருவதில்லை.

டைட்டில் போடும் போது ஹைடி கை நீட்டி நீட்டி நடப்பது போல் வீட்டில் ஆள் ஆளுக்கு நடந்திட்டு இருக்கோம்.

அணு அளவும் பயம் இல்லை (விஜய் டிவி)
ஒரே நேரத்தில் நிறைய பேரை சைட் அடிக்கிறேன் என ஹவுஸ் பாஸ் இந்த ப்ரோக்ராம் பார்க்கும் போதெல்லாம் திட்டுவாங்க. ஆனா என் பெண் விடா பிடியா பார்க்கணும் என்பாள். அதுனாலே நாமளும் வெங்காயம் உரிச்சிகிட்டே பார்க்கிறோம்..

போட்டியில் தைரியமா பங்கெடுப்பதை பாராட்டி தான் ஆகனும். பல விஷயம் ஆண்களால் கூட முடியாதது தான்.

ஆனா இந்த லக்ஷ்மி ராய் வந்த பிறகு இது தமிழ் நிகழ்ச்சியா இங்கிலீஷ் நிகழ்ச்சியான்னு சந்தேகம் வந்துடுச்சு. 15 இங்கிலீஷ் வாக்கியங்களுக்கு நடுவே ரெண்டு தமிழ் வார்த்தைகள் பேசுறாங்க. லக்ஷ்மி ராய் தான் இப்படின்னா, சீரியலில் தமிழில் அழும் மற்றவங்களும் இதில் பீட்டர் தான் விடுவேன்னு அடம் பிடிக்கிறாங்க. " நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலை நாராயணா"

17 comments:

  1. ஹிஹிஹி, இதெல்லாம் தமிழ்நாட்டில் எந்த சானல்களில் வருகின்றன??? இந்த ஜூனியர் சிங்கர் மட்டும் கொஞ்சம் தெரியும், மத்தது தெரியாது. அதனால் என்ன கருத்துச் சொல்றது? :D

    ReplyDelete
  2. Fine, u r watching tv programmes more than me. i just know about this programmes, but no time to watch any programme continously atleast for 10 minutes.

    ReplyDelete
  3. இந்த சானல்களில் வர புரொகிராம் எல்லாம் பாக்கறீங்களா - சரி சரி - நோ கமெண்ட்ஸ்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அண்ணே நீங்க அணு அளவும் பயம் இல்லை
    எதுக்கு பாக்குரிங்கன்னு எனக்கு தெரியும்....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. கீதா மேடம் வாங்க. நன்றி. சாரை கொஞ்ச நேரம் அடுப்படி பார்த்துக்க சொல்லிட்டு போடுங்க. . அணு அளவும் மற்றும் டீலா நோ டீலா ரெண்டும் சனி, ஞாயிறில் வருது

    வரதராஜலு சார். வாங்க நன்றி.

    சீனா என்ன பண்றது? பொண்ணு பார்க்கும் போது நாமும் பார்க்க வேண்டி இருக்கு

    ஜெட் லி நாம ரெண்டு பேரும் சின்ன பசங்க தனிய பேசிக்கலாம்.

    ReplyDelete
  7. Anonymous8:35:00 AM

    எனக்கும் அப்படித்தான் தோணும் ,நல்லா பாடும் போது ,ஸ்ருதி சதி என்பார்கள் ,சுமாராக பாடும்போது
    சூப்பர் என்று சாக்லேட் மழை பெய்யும் .

    அணு அளவும் பயம் இல்லை அவர்களுக்கு , ஆனால் அமிதாப் அளவு பயம் plus அருவரப்பு நமக்கு .

    ReplyDelete
  8. //ஏம்பா இந்த ப்ரோக்ராம்மிலாவது அந்த பணத்தை ஜெயிச்சவருக்கு சரியா குடுக்கிரீங்கலாப்பா//

    நியாமான டவுட் தான்..

    //டைட்டில் போடும் போது ஹைடி கை நீட்டி நீட்டி நடப்பது போல் வீட்டில் ஆள் ஆளுக்கு நடந்திட்டு இருக்கோம்.//

    நல்ல காமெடி.. குட்டீஸ் இருக்கற வீட்ல இதெல்லாம் ஜகஜம்..

    அடுத்த முறை சுட்டி டிவியில் ஜாக்கிசானும், நைல் இளவரசியும் ட்ரை பண்ணுங்ளேன்..

    ReplyDelete
  9. //இந்த லக்ஷ்மி ராய் வந்த பிறகு இது தமிழ் நிகழ்ச்சியா இங்கிலீஷ் நிகழ்ச்சியான்னு சந்தேகம் வந்துடுச்சு. 15 இங்கிலீஷ் வாக்கியங்களுக்கு நடுவே ரெண்டு தமிழ் வார்த்தைகள் பேசுறாங்க//

    Excellent
    Mind Blowing
    Rocking
    Great
    Super
    Extra-ordinary
    wow
    Marvelous

    இதெல்லாம் நீங்க‌ கேட்ட‌தில்லையா? (மானாட‌ ம‌யிலாட‌)
    உலக‌ த‌மிழ‌ன‌ த‌லைவ‌ர் டீவி யிலேயே இப்ப‌டினா ம‌த்த‌ டீவி யில கேக்க‌னுமா????

    ReplyDelete
  10. intha program pakra alavu thairyam iruke great

    ReplyDelete
  11. ஜாலியான பதிவு! சூப்பர் சிங்கர்ல எனக்கும் அந்த டவுட் வந்திச்சு ..பாடினதுல குறை ஒண்ணும் இல்லியே ஏன் செலெக்ட் ஆவலனு .. அப்புறம் எனக்கு சங்கீத ஞானம் இல்லேனு பெருந்தன்மையா விட்டுட்டேன் !

    ReplyDelete
  12. ஏனுங். கான்மெண்ட் ஸ்கோல்ல படிக்காம இங்கிலீசு நாலஜ்ஜி வளர்க்கறது உங்களுக்கு பிடிக்கலையோ. =))

    ReplyDelete
  13. Dear Mohan,
    Seeing your profile, i guess you studied X "B" Section at NHSS, Mannargudi. Passed 10th in 1985. If it is correct, Please call me. My cellphone No. is 9442053584.

    ReplyDelete
  14. அனுபவம் நிறைய நிறைய இருக்கு உங்களுக்கு, [வெங்காயம் வெட்டுவது பாத்திரம் கழுவுவது அதச்சொன்னேன்]

    ஒன்னு விட்ரதில்லயோ. நல்லாத்தான் எழுதியிருக்கீங்க, பாத்து அப்பு..

    ReplyDelete
  15. ஹாஹாஹா.... நல்லா எழுதியிருக்கீங்க. இதெல்லாம் பார்த்து போரடிச்சு தான் நான் தொலைக்காட்சி பக்கம் போறதே இல்ல.

    ReplyDelete
  16. ஸ்வர்ண ரேகா நம்ம வாரிசு இதெல்லாம் already பார்கிராங்கலாம். கேட்ட போது சொன்னார்கள்.

    கரிசல்காரன் நீங்க சொல்றது கரீட்டு தான்.

    Angeline: Thanks. How is your studies going? (Dont get angry).

    ரிஷபன் சார் வானம்பாடிகள் சார் நன்றி.

    மலிக்கா :Matter-ஐ கரெக்டா கண்டு பிடிச்சீங்க. ஏதாவது வேலை செஞ்சிட்டே தான் டிவி பார்க்கிற வழக்கம்

    விக்னேஸ்வரி : You are escape. (Vadivel பாணியில் படிக்கவும்)

    ReplyDelete
  17. Anonymous3:08:00 PM

    voice trainer - velai ilathavanai chumma kupiddu pathavi kodupathu.

    ipo anu alavum bhayam ilai craig "no more tamil machan"

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...