Friday, December 4, 2009

உள்ளூர் துயரம் ...வெளியூர் வலி

வேதாரண்யத்தில் பள்ளி வேன் விபத்தில் 10 பேர் ( 9 குழந்தைகள்; ஒரு ஆசிரியை) இறந்துள்ளனர். இன்னும் எத்தனை முறை தான் இது மாதிரி செய்திகள் கேள்விப்பட போகிறோம்? அரசாங்கம் பள்ளி வாகனங்களில் அதிகம் பேர் ஏற்ற கூடாது என்ற மிரட்டல் அறிவிப்பு மட்டும் சில நேரம் செய்கிறது. நடவடிக்கை ஒன்றும் காணும்.

இந்த விபத்தில் டிரைவர் குறித்த இரண்டு விஷயங்கள் அதிர வைக்கிறது. முதலாவது: அவரிடம் வண்டி ஓட்ட லைசென்ஸ் கூட இல்லை. அடுத்தது இன்னும் கொடுமை: அந்த accident -நடக்கும் போது டிரைவர் செல் போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.


Photo: Thanks to Dinamalar.

ஒரு தனி மனிதனின் அலட்சியம் எத்தனை குழந்தைகளின் உயிரை குடித்திருக்கிறது?

அரசாங்கத்தை நம்பி எந்த பயனும் இல்லை. நீங்கள் செல்லும் வண்டியில் டிரைவர் செல் போனில் பேசினால் தயங்காமல் அவரை கீழே வைக்க சொல்லுங்கள். (நான் எப்போதும் இதை வலிக்காமல் சொல்வேன். உதாரணமாய், “வண்டியை ஓரமா நிறுத்திட்டு பேசுங்க அப்புறம் போகலாம்”)

உங்கள் குழந்தை வண்டி செல்லும் டிரைவர் எப்படி பட்டவர், எப்படி வண்டி ஓட்டுகிறார் என்று கொஞ்ச நேரம் செலவு செய்து அறிய பாருங்கள். என் பெண் செல்லும் வண்டியில் முதலில் கிட்ட தட்ட 15 பேர் பயணம் செய்தனர். பல முறை அவரிடம் நான் பேசி, இப்போது அவர் தனது 2 ஆட்டோவும் உபயோகிக்கிறார். (இப்பவும் 7-8 பேர் செல்கின்றனர் என்ன செய்வது !! இதற்கு குறைவாய் செல்லும் ஆட்டோ கிடைப்பதில்லை). காலையில் எப்போதும் பள்ளியில் நான் சென்று விடுகிறேன். அந்த நேரம் ஏதோ சில விஷயங்கள் அவளுடன் பேச முடிகிறது. மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என காட்ட முடிகிறது. இது குழந்தைக்கு மனதளவில் உதவவே செய்கிறது. (காலையில் பள்ளிக்கு பெற்றோர் அழைத்து சென்று விடுவதை குழந்தைகள் மிக விரும்புவார்கள் என ஒரு டாக்டர் எழுதியதை படித்தேன் ..)

அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது? அரசாங்கம் வழக்கம் போல் பணம் மட்டும் தரும். அது அந்த துயரை ஆற்றி விடுமா?

மற்றொரு துயர சம்பவம் போபால் கேஸ் விபத்து. யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்திலிருந்து வெளியான கேஸ் கசிவால் இறந்தவர்கள் 3000 பேர்; பின் அடுத்த சில வருடங்களில் 12000 பேர் இறந்தனர் உறுப்புகள் பாதிக்க பட்டவர் லட்ச கணக்கில்.
இது நடந்து 25 வருடங்களுக்கு பின்னும் அந்த விபத்தில் பாதிக்க பட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு அரசு, கோர்ட் என பல இடங்கள் இத்தனை வருடங்களாக ஏறி இறங்குகின்றனர். போபால் கேஸ் விபத்து நான் சட்டம் படித்த போதே பாடத்தில் படித்த வழக்கு. இன்றைக்கும் நீதி கிடைத்த பாடில்லை. இத்தனை வருடங்கள் ஆன பிறகும் தினம் குறைந்தது 6000 பேர் மருத்தவர்களை பார்க்க வேண்டிய நிலையாம்!! இதற்கு நடுவே யூனியன் கார்பைடு நிறுவனம் மறுபடி திறக்க போவதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீடு குறைவு என இன்றைக்கும் போபாலில் மக்கள் போராடுகின்றனர்.

இது போன்ற செய்திகள் கேள்வி படும் போது மட்டும் ஏன் இந்தியாவில் வசிக்கிறோம் என்று வலிக்கிறது.

13 comments:

 1. நமது குழந்தை செல்லும் வாகனம்
  சரியானதா? டிரைவர் வண்டி எப்படி
  ஓட்டுகிறார்? குழந்தை உட்கார இடமிருக்கா?
  குழந்தை எப்படி செல்கிறது? இதை கவனிப்பதை விட
  பெற்றோருக்கு என்ன வேலை?

  ReplyDelete
 2. //இது போன்ற செய்திகள் கேள்வி படும் போது மட்டும் ஏன் இந்தியாவில் வசிக்கிறோம் என்று வலிக்கிறது //

  :(

  ReplyDelete
 3. //இதை கவனிப்பதை விட
  பெற்றோருக்கு என்ன வேலை?
  //

  //ஏன் இந்தியாவில் வசிக்கிறோம் என்று வலிக்கிறது //

  Amen :((

  ReplyDelete
 4. நன்றி சங்கவி, அப்துல்லாஹ் & அம்பி

  ReplyDelete
 5. செய்தியை படிக்கும் போதே ஒரு வலி! என்று திருந்துவார்கள் இந்த ஆறறிவு மிருகங்கள்!

  வெங்கட் நாகராஜ்
  புது தில்லி

  ReplyDelete
 6. நான் நல்ல பிள்ளை

  பெற்றோரின் கடமை அதிகமாகிறது

  வலி விரைவினில் மறைய வேண்டும்

  நல்வாழ்த்துகள் மோகன்

  ReplyDelete
 7. நன்றி வெங்கட்

  சீனா சார் நன்றி: தீபாவளிக்கு அப்புறம் ஏன் நீங்க ஏதும் எழுதலை?

  ReplyDelete
 8. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நம் அலட்சியம் மீண்டும் மீண்டும் இழப்புகளை தந்தாலும் நாம் திருந்துவதாக இல்லை. பெற்றோரின் பொறுப்பு குறித்த உங்கள் பார்வை மிக சரி.

  ReplyDelete
 9. அண்ணே புது நியூஸ் பார்த்திங்களா அந்த பள்ளிக்கு
  கூட அங்கிகாரம் இல்லையாம்.....
  என்ன சொல்வது??

  ReplyDelete
 10. 'நாம் ஏன் இந்தியாவில் வசிக்கிறோம்' என்ற
  கேள்வி இதயத்தை கனக்கத் தான் செய்கிறது?
  என்ன செய்ய! நாம் நம் அளவில் சரியாக
  இருப்போம்... சக மனிதர்களுக்கு ஒரு
  எடுத்துக் காட்டாக இருப்போமாக!

  ReplyDelete
 11. "இது போன்ற செய்திகள் கேள்வி படும் போது மட்டும் ஏன் இந்தியாவில் வசிக்கிறோம் என்று வலிக்கிறது."
  ........
  விலை மதிப்பில்லா உயிரின் அருமை பற்றி எல்லா இதயங்களும் புரிந்து கொண்டால்தான் இந்த வலி போகும். ஹ்ம்ம்.....

  ReplyDelete
 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ஜெய மார்த்தாண்டன், ஜெட் லி, ராம மூர்த்தி சார் & சித்ரா மேடம்

  ReplyDelete
 13. மிகவும் சோகமான நிகழ்வு... மந்தைகளை போல குழந்தைகளை அடைத்துக்கொண்டு பள்ளி வண்டிகள் செல்வது தின வாடிக்கை காட்சி என்றாலும்.. ஒவ்வொரு முறையும் மனது வலிக்கும்... இன்றைய அவசர உலகில் எத்தனயோ இழக்கிறார்கள் .. அதில் பெற்றோர் பிள்ளை பாசமும் ஒன்று.. கடைசிவரை குழந்தைகளை காப்பாற்ற தன உயிரை நீத்த அந்த டீச்சர் ஒரு வணங்கத்தக்க ஆத்மா..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...