Wednesday, December 23, 2009

2009- சிறந்த 10 படங்கள்


புத்தாண்டுக்கு எட்டே நாள் இருக்கும் நிலையில் இதோ புத்தாண்டு ஸ்பெஷல் தொடங்கி விட்டது.. இந்த வரிசையில் முதலாவதாக எனக்கு பிடித்த 10 படங்கள்.

இதன் தொடர்ச்சியாக சிறந்த 10 பாடல்கள், சிறந்த நடிப்பு, இயக்கம், etc இன்னொரு பதிவாக விரைவில் வெளி வரும்.

10 நான் கடவுள்படம் பற்றி நண்பர் பைத்திய காரன், நர்சிம்மின் விமர்சன பின்னூட்டத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அது நரசிம் விமர்சனத்தை விட நன்றாயிருந்தது. உண்மையை சொல்லனும்னா பைத்திய காரன் பின்னூட்டம் தந்த அனுபவம் இந்த படம் எனக்கு தர வில்லை. தமிழில் இது ஒரு வித்யாசமான படம் என்ற அளவில் தான் இதனை நான் சேர்க்கிறேன்.

9. சிவா மனசுல சக்தி


CD -யில் ரொம்ப நாள் கழித்து பார்த்தாலும் படம் ஓரளவு பிடித்திருந்தது. ரெண்டு பாட்டு அருமை. படத்தின் ஹீரோயின் தான் பெரிய மைனஸ். நடிக்கவும் தெரியலை. எந்த features-ம் நல்லா இல்லை. It falls under "We can see this film once" category.

8. யாவரும் நலம்

மாதவன் நடித்த வித்யாசமான த்ரில்லர் படம். A சென்டரில் நன்கு ஓடியது.

7. உன்னை போல் ஒருவன்

மொழி மாற்று படம் என்பதால் சற்று பின் தங்கி வருகிறது. ஒரே நாளில் நடக்கும் கதை - ஒரு வித்யாசமான ட்ரீட்மேன்ட். எனக்கு மோகன் லால் நடிப்பு பிடித்தது. போட்ட பணம் plus some profit எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

6. பேராண்மை

ஜன நாதன் இயக்கத்தில் பழங்குடியினரின் வாழ்கையை பற்றி ஆழமாக பேசிய படம். ஜெயம் ரவி உழைப்பு ......ஆச்சரியம் + நன்று.

5. வெண்ணிலா கபடி குழுநல்ல கதை; சொன்ன விதமும் அருமை. சென்னை -28 க்கு பிறகு விளையாட்டை அடிப்படையாக வைத்து வெற்றி பெற்ற இன்னொரு படம்.

**********

இனி நான் மிக என்ஜாய் செய்த, இந்த வருடம் மிக பிடித்த 4 படங்கள்:

4. அயன்

மிக விறு விறுப்பான கதை. சூர்யாவின் growth ஆச்சரியப்பட வைக்கிறது. நடிக்க வந்த போது ஆடவும், முக பாவமும் செய்ய தெரியாத சூர்யாவா இது!! K.V. ஆனந்த் ஒரு intelligent டைரக்டர். அது அவர் இயக்கிய இரு படங்களிலும் தெரிகிறது. அற்புதமான பாடல்கள். Picturization-ம் அருமை. இவற்றுக்கும் மேல்.. தமன்னா நமக்கு தலைவியான படம்..!! படத்தின் கடைசியில் ரொம்ப இழுத்துட்டாங்க. அதான் மைனஸ். இந்த வருடத்தின் செம ஹிட் படங்களுள் இது ஒன்று.

3. ஈரம்பொதுவாய் நான் பேய் மற்றும் திரில்லர் படங்கள் பார்ப்பதை தவிர்ப்பேன். காசு குடுத்து பயந்துட்டு வரணுமா என்பது நம்ம பாலிசி. ஆனால் என்னை அதிகம் கவர்ந்த த்ரில்லர் படங்களில் இது ஒன்று. காரணம் இயக்குனர் அறிவழகன். ஒவ்வொரு முறையும் நிகழ் காலத்துக்கும், flash back-க்கும் மாறி மாறி இயல்பாய் சென்ற விதம் - simply superb. ஆதி நடிப்பு ஆச்சரிய பட வைத்தது. இந்த படம் ஏதேனும் ஆங்கில பட தழுவலா என அறியேன். அப்படி இல்லது இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.

2. நாடோடிகள்அட்டகாசமான படம். திரை கதை.. என்னா ஸ்பீட் !! இடை வேளைக்கு முந்தய sequence- முடிந்த போது எழுந்து போக மனசில்லாமல் விக்கித்து அமர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது. சமுத்திர கனிக்கு third time lucky -ஆக அமைந்த படம். (அவருக்கு முதல் ரெண்டு படமும் failure). சசி குமார் காட்டில் 2 வருடங்களாக செம மழை.

1 . பசங்கஎன்னோட All time favourites-ல் இடம் பிடிக்க கூடிய படம். பொதுவாகவே எனக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். இது குழந்தைகளே நடிச்ச படம். குறிப்பா ஒரு குட்டி பய்யன் (ஹீரோ பையனோட தம்பியா) வருவான் பாருங்க. அவன் அடிக்கும் லூட்டியெல்லாம் CD- யில் மூணாவது முறை பார்க்கும் போது தான் செமையா தெரிந்தது. "நல்ல விஷயம் பார்த்தால் பாராட்டுங்கள்" என்பது தான் கதை சொன்ன மெசேஜ். மகிழ்ச்சியில் அழ வைத்த படம்
********
நீங்கள் இந்த படங்களில் ஏதேனும் ரசித்திருந்தால் சொல்லுங்கள். இவை தவிர வேறு ரசித்திருந்தாலும் சொல்லலாம்.

29 comments:

 1. நல்ல தொகுப்பு :)

  ReplyDelete
 2. உங்க டாப் டென் சூப்பர்......

  இதை நான் வழி மொழிகிறேன்.......

  ReplyDelete
 3. பசங்க........நான் இந்த வருடம் தியேட்டரில் பார்த்த ஒரே படம். என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இதனை எண்ணுகிறேன். இந்தப் படம் முதல் இடத்தில் வருவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

  ReplyDelete
 4. அயன் எல்லாம் உ.போ.ஒ, நான் கடவுளை விட முன்னாடி..ரைட்டு சகா?

  திசம்பரில் வந்த படமெல்லாம் கணக்கில் இல்லையா சகா?

  ReplyDelete
 5. அயன் உங்களுக்கு ஏன்
  பிடிக்கும்னு எங்களுக்கு தெரியும் அண்ணே...
  வாழ்க தமன்னா நாமம்...
  மற்றபடி உங்களை லிஸ்ட்இல்
  உள்ள எல்லா படங்களும் எனக்கும் பிடிக்கும்...

  ReplyDelete
 6. முத்திரை, எங்கள் ஆசான், அழகர்மலை, ஆறுமுகம், ஆதவன் போன்ற காவியங்கள் பட்டியலில் இல்லாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்

  ReplyDelete
 7. மோகன் கார்க்கி என்ன கேட்கிறாருன்னு புரியுதா? ஊஃப்...

  இது என்ன வசூல் படியான வரிசையா? இல்லை...?

  :-)

  எனிவே சுஜாதா வேலைக்கு வாழ்த்துக்கள். மனுசன் இருந்திருந்தா இன்னும் எத்தனையோ பத்து வந்திருக்கும்.. :-(
  வீ மிஸ் ஹிம் சோ மச், தலைவரே!

  ReplyDelete
 8. நன்றி பிரசன்னா முதல் முறை வந்துள்ளீர்கள். எனது நெருங்கிய நண்பன் ( எட்டு வயது முதல் இன்று வரை) பெயர் பிரசன்னா.

  நன்றி சங்கவி & பெயர் சொல்ல..

  கார்க்கி: இது எனது லிஸ்டு தானே சகா.Taste always differ. என்ன செய்ய? நான் கடவுள் என் சின்ன அறிவுக்கு முழுசா எட்டலை. தூக்கு தண்டனையே கூடாது என்று விருமாண்டியில் பேசிய கமல் அதற்கு நேர் எதிர் கருத்து சொன்னது எனக்கு நெருடல். வேட்டை காரன் விஜய் ரசிகர்களுக்கு தான் சகா பிடிக்கும். கோபிக்கதீங்க

  ReplyDelete
 9. நன்றி ஜெட் லி: சினிமா ஆய்வாளரான உங்களுக்கு (நல்ல பேரா இருக்கே?), எனது லிஸ்ட் பிடித்தது மகிழ்ச்சி. அயன் பாட்டு, இயக்கம் இவற்றாலும் கூட பிடித்தது

  சங்கர், வாங்க. என்ன தோஸ்துங்க சொல்லி வச்சு வர்றீங்க? இந்த திரை காவியங்கள் பட்டியலில் ஆதவனை சேக்கணுமா நண்பா? அவ்ளோ மோசமா? (ம்ம் இருக்காலாம்)


  நன்றி முரளி. கார்க்கி கேட்பது புரியது. நம்ம மாதிரி neutral ஆட்கள் வேட்டைக்காரனை நல்லா இருக்குன்னு சொல்லிட்டா அவர் மகிழ்வார்.

  ஆம் சுஜாதவை நாம் பெரிதும் மிஸ் செய்கிறோம். அவர் வழியில் பல சிறந்தவை நம் blog-ல் வர உள்ளது.. அடுத்த சில நாட்களில்

  ReplyDelete
 10. ராமலக்ஷ்மி has left a new comment on your post "2009 - சிறந்த 10 படங்கள்":

  அதிகம் படங்கள் பார்ப்பதில்லை. இந்த லிஸ்டில் பார்த்திருப்பது பசங்க மட்டும். ஆனா உங்க பரிந்துரையின் பேரில் மற்றதையும் முடியும் போது பார்க்கலாமென இருக்கிறேன்:)! நன்றி. தொடர்ந்து வரட்டும் மற்ற சிறந்த பத்துக்கள்!

  ReplyDelete
 11. வெ.க‌.கு இட‌த்துல‌ உ.போ.ஒ வ‌ந்திருக்க‌லாம், ரீமேக்னாலும் ந‌ல்லா பண்ணியிருந்தாங்க‌

  //தமன்னா நமக்கு தலைவியான படம்//

  ஹி.ஹி..நீங்க‌ளுமா...என்னையும் த‌லைவியா சேர்த்துக்க‌ மாட்டீங்க‌ளான்னு க‌ன‌வுல‌ அனுஷ்கா வ‌ந்து டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணாங்க‌‌..அத‌னால‌ ச‌ங்க‌த்தை கூட்டி "த‌ம‌ன்னா-அனுஷ்கா" கூட்ட‌ணியை ஆத‌ரிக்க‌ற‌துன்னு முடிவு ப‌ண்ணிட்டோம்

  ReplyDelete
 12. உங்களின் நல்ல ரசனை, "பசங்க" படம் முதலாவது இடத்தில் இருப்பதில் தெரிகிறது. சரியா சொல்லி இருக்கீங்க. V.C.D. இல் மட்டும் பல முறை பார்க்காமல், தியேட்டரில் போயும் எல்லோரும் பார்த்தால், இந்த மாதிரி நிறைய தரம் வாய்ந்த படங்கள் தொடர்ந்து வர வாய்ப்பு உண்டு.

  ReplyDelete
 13. என்னோட டேஸ்டும்,உங்க டேஸ்டும் ஒரே மாதிரி இருக்கு மோகன்..பட வரிசை சரியா இருக்கு..

  ReplyDelete
 14. இது உங்க ரசனைதானே..

  அப்டீன்னா ஓக்கே.

  ReplyDelete
 15. Anonymous6:18:00 AM

  நானும் பசங்களுக்கு முதல் இடம் குடுத்துருப்பேன். ரொம்பநாளுக்கப்பறம் ஒரு நல்ல படம் பாத்த திருப்தி இருந்தது.

  ReplyDelete
 16. தலைவரே இது உங்க விருப்ப லிஸ்டாக இருந்தால் ஓகே.. ஆனால் ஒரிஜினல் லிஸ்ட் இதுவல்ல.

  ReplyDelete
 17. மேலே கொடுத்துள்ள எல்லா படங்களையும் நான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.

  அயனில் சூர்யாவின் யதார்த்தமான நடிப்பை பார்த்து மற்றவர்கள் (தல வால் எல்லாம்) கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.

  ReplyDelete
 18. முதல் இரண்டும் சரி...

  பாக்கி எல்லாம் சன் டி.வி. ரேட்டிங் மாதிரி இருந்தது! முன்னாடி அங்க வேல பாத்தீங்கலோ???

  ReplyDelete
 19. நல்ல தொகுப்பு. சில படங்கள் எனக்கு உடன்பாடில்லை. டேஸ்ட் டிபர்ஸ்:)

  ReplyDelete
 20. நன்றி குறும்பன். அனுஷ்கா பற்றி இன்று நரசிம் எழுதிருக்கிறது படிங்க :)

  நன்றி சித்ரா

  அப்படிங்களா பூங்குன்றன்? மகிழ்ச்சி.
  நன்றி

  சுசி said... இது உங்க ரசனைதானே.. அப்டீன்னா ஓக்கே.
  நன்றி சுசி. நீங்க சொன்னதில் வேற ஏதும் உள் குத்து இல்லையே?

  ReplyDelete
 21. நன்றி சின்ன அம்மணி.

  கேபெல்ஜி எந்த படம் மிஸ் ஆனது என்று சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்

  நன்றி ஆதி மனிதன். அயனில் சூர்யாவின் உழைப்பு அருமை தான்

  ReplyDelete
 22. கலை: நன்றி ஏன் இப்படி சந்தேகம்? நம்ம taste அந்த மாதிரி இருக்கு போல. சன்னின் பல படங்கள் (படிக்காதவன், கண்டேன் காதலை,etc) இதில் நான் சேக்கலையே?

  நன்றி வித்யா. நீங்கள் சொல்வது உண்மை தான் Tastes differ.

  ராம லக்ஷ்மி மேடம். என்னை மன்னியுங்கள். பதிவு போட்டதும் immediate முதல் கமெண்ட் உங்களிடமிருந்து தான். ஆனால் நான் செய்த ஒரு சொதப்பலால் பதிவு delete -ஆகி மீண்டும் போடுவது போல் ஆனது. நன்றி தவறாக எண்ணாதீர்கள்

  ReplyDelete
 23. //கார்க்கி: இது எனது லிஸ்டு தானே சகா.Taste always differ. என்ன செய்ய? நான் கடவுள் என் சின்ன அறிவுக்கு முழுசா எட்டலை. தூக்கு தண்டனையே கூடாது என்று விருமாண்டியில் பேசிய கமல் அதற்கு நேர் எதிர் கருத்து சொன்னது எனக்கு நெருடல். வேட்டை காரன் விஜய் ரசிகர்களுக்கு தான் சகா பிடிக்கும். கோபிக்கதீங்//

  தலைவா.. நானும் நான் கடவுளை நல்லா இல்லைன்னுதான் பதிவே எழுதினேன். எனக்கும் உங்க மூளைதான் :))

  அப்புறம் கமல். விருமாண்டி வேற படம். உ.பொ.ஒ வேற படம். ஏன் ரெண்டையும் கமல் சொன்னதா ஏன் பார்க்கறீங்க?

  உங்க ரசனை புரியுது. ஆனா பசங்க முதலிடத்தில் இருக்கும் போது அயனெல்லாம் லாஸ்டுல இருக்கனும் சகா. வேட்டைக்காரனெல்லாம் வரவே கூடாது. அது சும்மா ஜாலிக்காக கேட்டேன்.

  வசூல் லிட்ஸ் போட்டா நம்மாளு பேர் வரும் :))

  ReplyDelete
 24. லிஸ்ட் நல்லாயிருக்கு. என்னோட லிஸ்ட் உங்களோட ஒத்துவருது. வெண்ணிலா கபடி இன்னும் கொஞ்சம் அதிகம் மார்க் வாங்கியிருக்கு என்னோடதில. சி.ம.ச- பீல் குட் மூவி. தமிழ்ல இந்த டைப் படங்கள் ரொம்ப குறைச்சல். அதுனால அதுவும் நல்ல ரேங்க் என்னோடதுல.

  ReplyDelete
 25. //சிவா மனசுல சக்தி -படத்தின் ஹீரோயின் தான் பெரிய மைனஸ். நடிக்கவும் தெரியலை. எந்த features-ம் நல்லா இல்லை//

  ஸ்ரீஸ்ரீகோடம்பாக்கத்து ஆத்தா உம் குமட்டில் குத்த... என்ன கண்ணுய்யா உமக்கு!

  :)

  ReplyDelete
 26. மிக்க நன்றி கார்க்கி . அட கார்க்கி இடமிருந்து ஒரு சீரியஸ் கமெண்ட் !! :)

  நன்றி பின்னோக்கி

  ஊர்சுற்றி said...

  ஸ்ரீஸ்ரீகோடம்பாக்கத்து ஆத்தா உம் குமட்டில் குத்த... என்ன கண்ணுய்யா உமக்கு!


  என்ன கமெண்டுய்யா இது !!:))) (ஊர்சுற்றி அடிக்கடி தான் நம்ம blog-க்கு வர்றது!!)

  ReplyDelete
 27. நான் கடவுள், சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இந்த வரிசையில் எடுத்து விடலாமே?? யாவரும் நலம் இன்னும் உயரிய இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். படிக்காதவனை இணைத்திருக்கலாம்....

  ReplyDelete
 28. கந்தசாமியும் ஒரு தரமான படம்தான்.. நாடோடிகள் முன்பாதி ok...climaxs எனக்குப் பிடிக்கல.....

  ReplyDelete
 29. பேராண்மை ஆதிவாசிகளைப் பற்றியது அல்ல.
  தாழ்த்தப்பட்ட ஒருவன் முன்னேறுவதை வெறுக்கும்
  மக்களின் மனோபாவத்தைக் காட்டும் படம்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...