Tuesday, December 15, 2009

எழுத வந்த கதை

தோழி விக்கி "எழுத வந்த கதை" தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். வர வர நம்மளையும் ரவுடின்னு இந்த உலகம் நம்ப ஆரம்பிச்சிருக்கு!! அதான் பிடித்த 10 பிடிக்காத 10, மற்றும் எழுத வந்த கதை என ஒரே அழைப்புகள்..எவ்வளவோ வேலை இருந்தாலும் ("டேய் அடங்குடா") நம்மளை நம்பி ஒருத்தர் வேலை குடுத்தால் அதை முடிச்சிட்டு தான் மறு வேலை!!

எனக்கு ஆறு வயசிருக்கும் (அப்போல்லாம் ஐயா - சட்டை டிராயர் போன்றவற்றை வீட்டுக்கு வந்தோன முதல் வேலையா கழட்டி எறிஞ்சுட்டு தெருவுக்கு ஓடிடுவார்) யாராவது "பெரியவனாகி என்ன பண்ண போறே?" என்றால் தயங்காமல் சொல்வேன்" டைரக்டராக போறேன்"

ஏழு வயசில் முதலில் பள்ளி டிராமாவில் நடித்தேன். வந்திருந்த Chief Guest- "குட்டி பய்யன் நல்லா நடிச்சான்" என மைக்கில் பாராட்டி, தனக்கு போட்ட மாலையை எனக்கு போட்டு விட்டார். அதனை கழட்டாமல் கடை தெரு முழுக்க நடந்து வீடு வரை வந்தது இன்னும் நினைவில் ஆடுகிறது .... அதே ஏழு வயதில் எங்க தெருவிலும் பக்கத்துக்கு தெருக்களிலும் டிராமா எழுதி நண்பர்களை சேர்த்து கொண்டு நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

பள்ளி, கல்லூரி என தொடர்ந்தது எழுத்தும் நடிப்பும்.. கல்லூரி மேகசின் முதல் இப்போது அலுவலக மேகசின் வரை சில நேரம் வெறும் பங்களிப்பு, சில நேரம் எடிட்டோரியல் டீமில் மெம்பர் என இந்த ஆர்வம் தொடர்கிறது.

கல்லூரி முடிந்து தமிழ் சினிமாவில் "தொபுக்கடீர்" என குதித்தே தீருவேன் என்று இருந்தவனை அண்ணன்கள் மற்றும் அக்கா பேசி பேசி "படிச்சு முடி; இப்போ படிச்சா தான் உண்டு; எப்போ வேண்ணா நடிக்கலாம்" என திசை திருப்பிட்டாங்க !! படு பாவிங்க !! What a great loss to Tamil Industry:)))

படிச்சதும் கொஞ்சம் அதிகமா ஆனதாலே (பட்டம் முழுக்க போட்டா பேரை விட நீளமா போகும். ச்சே!!) வாழ்க்கையில் ஒரு குறிப்பட்ட உயரம் வந்தாச்சு.

இதுக்கிடையிலே கல்யாணம் வேறே ஆகி போச்சு. நானும் டிபிகல் சவுத் இந்தியன் ஹஸ்பண்ட மாதிரி மனைவி பேச்சை தட்ட மாட்டேன். மனைவிக்கு நம்ம மேல ரொம்ப நம்பிக்கை. " நீ அந்த பக்கம் போனா கெட்டு குட்டி சுவராய்டுவே" என ஆசிர்வதித்து, "போனா போகுது. வேண்ணா ஏதாவது எழுதிட்டு கிட" என பெர்மிஷன் குடுத்தாங்க.

என் நண்பனின் தம்பி கிச்சா "அண்ணா நீங்க blog ஆரம்பிங்க" ன்னு ரொம்ப நாளா சொல்லிட்டுருந்தான். நான் "வேணாண்டா; பாத்திரம் கழுவவும், துணி மடிச்சு வைக்கவுமே நேரம் பத்தலை" ன்னு சொல்லிட்டுருந்தேன்.

அலுவலகத்தில் B.பிரகாஷ் என ஒரு நண்பர். எல்லார் பிறந்த நாளுக்கும் தமிழில் வாழ்த்து அனுப்புவார். அவர் மூலம் தமிழில் டைப் செய்யும் Google Transliteration அறிந்தேன். தமிழகம் தாண்டி இருக்கும் நண்பர்களுக்கு தமிழில் மெயில் எழுத ஆரம்பிதேன். தொலை தூரத்தில் இருந்து தமிழை படிக்கும் போது அவர்களுக்கு மிக மகிழ்ச்சி.

பின் சில blog-பார்த்து கொஞ்சம் எழுதும் ஆசை வந்தது. ஒரு நாள் ஏதோ செய்து கொண்டிருக்கும் போது ப்ளாக் ஒன்று ஆரம்பிக்கும் இடம் வந்து விட்டேன். ப்ளாக் பெயர் அது கேட்க திடீரென ஒன்றும் தோன்றலை. எங்கள் நண்பன் லட்சுமணன் இறந்த பின் அவன் கவிதைகளை தொகுத்து புத்தமாக வெளியிட்டோம். அதன் பெயர் வீடு திரும்பல். அவசரத்தில் அந்த தலைப்பு தான் தோன்றியது. ப்ளாக் துவங்கி முதலில் ஒரு கவிதை பப்ளிஷ் செய்து விட்டு அப்படியே இருந்து விட்டேன்.

சனி கிழமைகளில் ஹவுஸ் பாசுக்கு ஆபிஸ் உண்டு. குழந்தை சிறு வயதிலிருந்தே சனி கிழமை என்னுடன் இருப்பாள். இப்படி பட்ட நேரங்களில் ஏதேனும் எழுதி அப்படியே வச்சிடுவேன். பின் வியாழன் or வெள்ளி re-write செய்து பப்ளிஷ் செய்வேன். உடன் நண்பர்களுக்கு இது பற்றி ஒரு மெயில் அனுப்புவேன். என் நண்பர்கள் யாருக்கும் பின்னூட்டம் எப்படி இடுவது என தெரியாது. ஆனால் போனிலோ நேரிலோ மெயிலிலோ பிடித்திருந்தால் சொல்லுவர். இப்படி ரொம்ப காலம், விட்டு விட்டு எழுதிட்டிருந்தேன்.

நண்பன் லட்சுமணன் இறந்த பின் நிகழ்ந்த நெகிழ்வான புத்தக வெளியீடு பற்றி எழுதியிருந்தேன். ஆனால் நண்பர்கள் பலர் தமிழ் font இல்லை; படிக்க முடியலை என சொல்ல, பின் ஆங்கிலதில் ஓர் ப்ளாக் துவங்கி அதையே எழுதினேன். ஆங்கிலத்தில் எழுதியதை எனது சட்ட கல்லூரி நண்பர் கூட்டம் (எங்களுக்குன்னு தனி யாஹூ குரூப் உண்டு; இதில் அடிக்கும் லூட்டி தனி...) ஆர்வமாய் படித்தாலும், தாய் மொழியில் எழுதுற மாதிரி இல்லை. எனவே ஆங்கிலத்தில் எழுதுவது குறைஞ்சுடுச்சு.

ஆரம்ப எழுத்துக்களில் சில நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள். வீடு திரும்பல் புத்தக வெளியீடு, சிறு வயது குறும்புகள் ஆகியவற்றை நீங்கள் வாசிக்க பரிந்துரைக்கிறேன். இவை வாசித்தால் மோகன் என்பவனை பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் அறிய முடியும்!

S. கண்ணன் என ஒருவர் எப்படியோ நம்ம ப்ளாக் படிச்சுட்டு follower facility -துவங்குங்க என்றார். அவர் சொல்லி சில மாசம் கழிச்சு தான் அதை செய்தேன். ரொம்ப மாசம் அஞ்சு, ஆறு பேர் தான் followers இருந்தாங்க. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆகணும்!! (கண்ணன் எங்க உங்களை காணும்? ஒரு ஹலோ சொல்லுங்க தல )

பின் திரு ரேகா ராகவன் மூலம் தமிழிஷ், தமிழ் மணம் பற்றி அறிந்து அவற்றில் ப்ளாகை சேர்த்தேன். அதன் பின் தான் வாசிப்போர் எண்ணிக்கை மள மள வென அதிகமானது. நிறைய பேர் படிக்கிறார்கள் என்றதும் தான் எழுதுவது அதிகமானது.

சமீபத்தில் எனது பள்ளி கால நண்பனுடன் ப்ளாக் மூலம் மறுபடி நட்பு கிடைத்தது. பின் அவன் மூலம் 10௦ பழைய நண்பர்கள் தொடர்பு கிடைத்தது. என் நண்பன் பெயர் சொல்ல விருப்பமில்லை என்ற பெயரில் ப்ளாக் எழுதி வருகிறான்!!

நண்பர் அதி பிரதாபன் நம்ம blog-ஐ வடிவமைத்துள்ளார். இன்னும் செய்ய நிறைய இருக்கு!!

எழுதும் ஒவ்வொருத்தரும் recognition -க்காகவே எழுதுகின்றனர். சமீபத்தில் பதிவர் சந்திப்பில் நரசிம் போன்ற பிரபல பதிவர்கள் கூட தனது blog-ல் பின்னூட்டம் பற்றி மிக எதிர் பார்ப்பது தெரிந்தது.

சில பதிவுகள் நல்ல பதிவுகள் நிறைய பேர் ரசிப்பார் என நினைத்தால் நமத்து போன வெடி
போல சத்தமில்லாமல் இருக்கிறது. அதிகம் எதிர் பார்க்காத சில பதிவுக்கு நிறைய பின்னோட்டம், வோட்டு விழுகிறது. இதிலிருந்து ஒன்று புரிகிறது. எழுதுவது மட்டும் தான் நம்ம வேலை. பின்னோட்டம், வோட்டு, இதெல்லாம் நம்ம கையில் நிச்சயமா இல்லை. இதுக்கெல்லாம் டார்கெட் வச்சிக்க முடியாது:))) மேலும் வாசிப்போரில் வெகு சிறிய பகுதியினர் தான் பின்னூட்டம் இடுகின்றனர்.

"என்னை பற்றி உண்மையாக யாரேனும் பாராட்டினால் அதை வைத்து ஒரு வாரம் உயிர் வாழ்வேன்" என்று மார்க் ட்வைன் என்ற மிக பெரிய அறிஞர் சொல்லியிருக்கிறார். வாசிப்பவர்க்கள் பிடித்திருந்தால் பாராட்டுவது நிச்சயம் எழுதியவருக்கு நிறைய மகிழ்வை தரும். ஒருவரின் எழுத்து உங்களுக்கு மகிழ்வை தந்தால், அதை அவருக்கு சொல்லலாமே? அவரும் மகிழ்ந்து விட்டு போகட்டுமே!!பெரும்பாலும் நான் வாசித்தது பிடித்தால், ஒரு வரி எழுதி விட்டே வருகிறேன்; நேரம் இல்லா விடில் ஓட்டு போட்டு விட்டு வந்து விடுவேன்.

சில நேரம் ப்ளாகிலும் ஒரு விரக்தி வந்து எட்டி பார்க்கிறது; பின் சரியாகிறது. எத்தனை நாள் ஆர்வமாய் எழுதுவேன் என்ற கேள்வி குறி இருந்து கொண்டே தான் உள்ளது. நான் குடும்பம் தவிர மற்ற எல்லாவற்றிலும் variety எதிர் பார்ப்பவன். உதாரனமாய் ஒவ்வோர் நாள் வெவ்வேறு ரூட்டில் ஆபிஸ் செல்ல நினைப்பவன். இதனை தவிர Board meeting, Annual General Meeting நேரங்கள் என்றால் சில வாரங்கள் முழுக்க, வீட்டுக்கு வரவே 11 மணி ஆகும். அடுத்த Board meeting ஜனவரி கடைசியில்.. அப்போது blog-ல் ஒரு கேப் நிச்சயம் விழும். அதன் பின் மீண்டும் துவங்குவேன்.

ஒரு வாசகனாக நான் எதை விரும்பி வாசிப்பேனோ சினிமா, ஹெல்த், சுய முன்னேற்றம், நல்ல நூல்கள்/ மனிதர்கள் அறிமுகம் போன்ற விஷயங்களை அதிகம் எழுதும் எண்ணம்.. பார்க்கலாம்.

கேபிளுக்கு கொத்து பரோட்டா போல, நரசிமுக்கு என்'ணங்கள் போல வாரந்திர பகுதி எழுத யோசித்து வருகிறேன். ஏதேனும் நல்ல தலைப்பு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.. நீங்கள் சொல்லிய தலைப்பு எனக்கு பிடித்து நான் உபயோகிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு ஓர் புத்தகம் அன்பு பரிசாக அனுப்ப படும்!!

எழுத வந்த கதை பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

22 comments:

 1. ம்ம்.. யோசிச்சு சொல்றேன். என்ன புத்தகம்ன்னு சொல்லுங்க :))

  ReplyDelete
 2. எழுத வந்த கதையை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. நீங்க‌ள் கூறிய‌து போல், ந‌ன்றாக‌ எழுதியிருக்கிறோம் என்றெண்ணிய‌து புஸ்ஸாகிப்போவ‌து, சுமார் ப‌திவு சூப்ப‌ர் ப‌திவு ஆவ‌து என்று எல்லாமே வாசிப்ப‌வ‌ர்க‌ள் முடிவுசெய்வ‌துதான். பின்னூட்ட‌ங்க‌ளை வைத்துதான் நாம் எப்ப‌டி எழுதியிருக்கிறோம் என்ப‌தை க‌ணிக்க‌ முடிகிற‌து. அத‌னால் பின்னூட்ட‌ம் மூல‌மாக‌ recognitionஐ எதிர்பார்ப்ப‌து இய‌ல்புதான்

  வாராந்திர‌ ப‌குதிக்கு என்ன‌ டைட்டில்...ஹும்..கொத்து ப‌ரோட்டா மாதிரி, நீங்க‌ பிரியாணின்னு வெச்சுக்கோங்க‌ளேன் (என்ன‌ங்க‌ ப‌ண்ற‌து, என்ன‌தான் யோசிச்சாலும் சாப்பாட்டுல‌தான் புத்தி போகுது)

  ReplyDelete
 4. அன்பின் மோகன்

  சுய அறிமுகம் - எழுத வந்ததைப் பற்றி - அருமையான இயல்பான இடுகை.

  நன்று நன்று நல்வாழ்த்துகள்

  சிந்தனை'கள்' - சிதறல்'கள்'

  ReplyDelete
 5. Anonymous3:03:00 AM

  //எனக்கு ஆறு வயசிருக்கும் //

  முதல்ல பயந்துட்டேன். அப்பவே ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சுன்னு சொல்வீங்களீன்னு

  //நானும் டிபிகல் சவுத் இந்தியன் ஹஸ்பண்ட மாதிரி மனைவி பேச்சை தட்ட மாட்டேன். //

  என்னைக்காவது ஒரு நாள் அவங்களும் ப்ளாக் எழுதாம போயிடுவாங்களா, உண்மை வெளிவராம போயிருமா என்ன

  //நரசிமுக்கு என்'ணங்கள் போல வாரந்திர பகுதி எழுத யோசித்து வருகிறேன். //

  யோசித்து சொல்வதுன்னு பேர் வையுங்க :)

  ReplyDelete
 6. //சில பதிவுகள் நல்ல பதிவுகள் நிறைய பேர் ரசிப்பார் என நினைத்தால் நமத்து போன வெடி
  போல சத்தமில்லாமல் இருக்கிறது. அதிகம் எதிர் பார்க்காத சில பதிவுக்கு நிறைய பின்னோட்டம், வோட்டு விழுகிறது.//

  கரெக்ட்ஆ சொன்னிங்க அண்ணே

  ReplyDelete
 7. கார்க்கி: என்ன இது!! என்கிட்டே இருக்கும் நான் படிச்சா புக்க தர முடியும்? கடைக்கு போய் தான் தல யோசிக்கணும்.

  நன்றி சரவணா குமார்

  குறும்பன் & ஜெட் லி : ஆம்.. பின்னூட்டங்கள் தான் நமக்கு டானிக் மாதிரி.

  சீனா சார்: நன்றி. தலைப்பு பற்றி யோச்சிக்கிரேன்..

  சின்ன அம்மணி: ஹவுஸ் பாஸ் இன்னும் blog படிக்கவே ஆரம்பிக்கல. அவங்களுக்கு எழுதும் ஆர்வம் இல்ல. ஒரு வேல நேர்ல பாத்தா கத கதையா சொல்வாங்க :))

  ReplyDelete
 8. rightu..தலைவரே.. உங்களூக்கு தலைப்பு ரெடி போன்ல சொல்றேன். வேற் யாராவது எடுத்துட்டாங்கன்னா..:)))))))

  ReplyDelete
 9. //சமீபத்தில் எனது பள்ளி கால நண்பனுடன் ப்ளாக் மூலம் மறுபடி நட்பு கிடைத்தது. பின் அவன் மூலம் 10௦ பழைய நண்பர்கள் தொடர்பு கிடைத்தது. என் நண்பன் பெயர் சொல்ல விருப்பமில்லை என்ற பெயரில் ப்ளாக் எழுதி வருகிறான்!! //

  வலைப்பூவின் மிகப் பெரிய வரப்ரசாதமாகவே இதை நினைக்கிறேன். நமக்கு ஏற்கெனவே அறிமுகமான ஆனால் இப்போது தொடர்பு விட்டுப் போன நட்பு மீண்டும் கிடைக்க இந்த வலைப்பூ உதவி இருக்கிறது என்று என்னும்போதே, மனம் வலைப்பூவின் பெருமையை வியக்கிறது!

  //கேபிளுக்கு கொத்து பரோட்டா போல, நரசிமுக்கு என்'ணங்கள் போல வாரந்திர பகுதி எழுத யோசித்து வருகிறேன். ஏதேனும் நல்ல தலைப்பு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.. /

  1. சில செய்திகள்....என் பார்வைகள்!

  2. யோசித்தேன்...எழுதுகிறேன்!

  3. இந்த வாரம்..........

  4. சிப்ஸ் & நொறுக்ஸ்

  5. உங்க மனசுக்குத் தீனி(?)

  ReplyDelete
 10. நல்லா இருக்குங்க நீங்க எழுதவந்த கதை. ஆமா அது என்ன புத்தகம்ன்னு சொல்லுங்க?

  ReplyDelete
 11. நல்லாயிருக்குங்க உங்க கதை.........

  அந்த புத்தகத்து பேரைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்............

  ReplyDelete
 12. உண்மை கதையா பாஸ்?
  :-)))

  நிறைய லிங்க்ஸை அமுக்கனதுல கையை வலிக்குது!!

  ReplyDelete
 13. கேபில்ஜி படத்துல உங்களுக்கு ஒரு சான்ஸ் இருக்கு...


  //ஒவ்வோர் நாள் வெவ்வேறு ரூட்டில் ஆபிஸ் செல்ல நினைப்பவன்//
  நீங்க சைதை டூ கோடம்பாக்கம் ரூட்டுக்கு வாங்க...

  //உங்களுக்கு ஓர் புத்தகம் அன்பு பரிசாக அனுப்ப படும்!!//
  நமக்கு ஒரு சான்ஸ் இருக்கு...

  ReplyDelete
 14. முரளி கண்ணன் & சங்கவி : நிஜமாவே என்ன புத்தகம்னு முடிவு பண்ணலை. புத்தக கடை போய் தான் பார்த்து எடுக்கணும்; நீங்க பேர் சொல்லுங்க முதல்ல

  நன்றி பெயர் சொல்ல.. நீ சொன்னதை நான் மைண்டுல வச்சிருக்கேன்

  கலையரசன் said...

  உண்மை கதையா பாஸ்?
  :-)))


  உங்க குசும்பு போகாதே; "பின்ன மண்டபத்தில் யாராவது எழுதி தந்து கொண்டு வந்ததா? என்னோட நிஜ கதை தான் ஐயா"

  அதி பிரதாபன்: பேரே சொல்லாம புக்குக்கு நமக்கு சான்ஸ் இருக்குன்னு சொன்னா எப்புடி?

  ReplyDelete
 15. என் நண்பனின் தம்பி கிச்சா "அண்ணா நீங்க blog ஆரம்பிங்க" ன்னு ரொம்ப நாளா சொல்லிட்டுருந்தான். நான் "வேணாண்டா; பாத்திரம் கழுவவும், துணி மடிச்சு வைக்கவுமே நேரம் பத்தலை" ன்னு சொல்லிட்டுருந்தேன். .....................அண்ணி பாவம். இப்படி நீங்க அவங்க பேரை துவைச்சி காய போட்டாலும், இன்னும் உங்களை உதைக்காத அமைதி தங்க மகளை, இப்படி வாருவது சரியா?

  ReplyDelete
 16. எழுத வந்த கதையை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

  பின்னூட்ட‌ம் பற்றி நீங்கள் கூறியிருப்பது சரிதான்.

  வானவில் (அ) எண்ணங்களின் வண்ணக்கலவை - சப்ஜெக்ட் பொருத்து ஒவ்வொரு எண்ணங்களும் தனித்தனி கலர்களில் சொல்லலாம். மங்களகரமான விஷயம் என்றால் மஞ்கல் கலர், கோபம் என்றால் சிகப்பு, ஏ ஜோக் என்றால் பச்சை கலரில் என்று. பதிவும் கலர்ஃபுல்லாக இருக்கும் தலைப்புக்கேற்றவாரு.

  ReplyDelete
 17. Chitra said...

  //.....................அண்ணி பாவம்//...........

  என்னங்க உங்க பேர் உள்ள நபர்னு பாசமா?

  //அமைதி தங்க மகளை, இப்படி வாருவது சரியா?//

  அமைதி .?? No comments.

  ReplyDelete
 18. வரதராஜலு .பூ said...

  //சப்ஜெக்ட் பொருத்து ஒவ்வொரு எண்ணங்களும் தனித்தனி கலர்களில் சொல்லலாம். மங்களகரமான விஷயம் என்றால் மஞ்கல் கலர், கோபம் என்றால் சிகப்பு, //

  சார் நல்ல suggestion தான். நமக்கு இந்த கலர் மாத்தும் அளவு தொழில் நுட்ப அறிவ இல்லை. பார்க்கலாம். அதி பிரதாபன் கிட்டே இது எப்படி சாத்தியம்னு கேக்குறேன்

  ReplyDelete
 19. 'எழுத வந்த கதை' நீங்க எழுதி வந்த கதை போலவே சுவாரஸ்யம்!

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் உங்கள் நடையில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. நிறைய எழுத வேண்டும் என்ற காரணத்தாலேயே தள்ளிப்போட்டு வந்தேன் பின்னூட்டம் உங்களுக்கு எழுதுவதை. இப்போதும் அவசரம். ஆனாலும் எழுதிவிட்டேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. 1)வாராவாரம் ஆரவாரம்
  2)வானவில்லின் வர்ண ஜாலங்கள்
  3)கொஞ்சம் காதைக் குடுங்க
  4)அதாகப்பட்டது
  5)பிம்பங்கள்
  6)மனக் குறளி
  7)சாத்தான் ஓதும் வேதம்
  8)வெரைட்டி மீல்ஸ்
  9)முத்துமாலை
  10)உண்டியல்

  அது சரி! நீங்க வக்கீலா?
  முடிஞ்சா ஈமெயில் அனுப்புங்க

  ReplyDelete
 22. லதானந்த் said...
  //வாழ்த்துக்கள் உங்கள் நடையில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.//

  ரொம்ப நன்றி சார். உங்கள் வார்த்தை மிகுந்த சந்தோசம் தருகிறது. தலைப்புகள் suggestion-க்கும் மிக்க நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...