Friday, December 18, 2009

என்ன பாட்டு? கண்டு பிடிங்க பாக்கலாம் !


எல்லோருமே பாட்டு கேட்கிறோம் ! எத்தனை முறை பாடல் வரிகளை கவனிக்கிறோம்? இதை டெஸ்ட் செஞ்சுடுவோமா? 2009-ல் வெளி வந்த famous பாடல்களில் இருந்து எடுத்த வரிகள்.. (அதாங்க க்ளு) என்ன பாட்டுன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பாக்கலாம்.. வித்யா சொன்னது போல கமெண்ட் மாடரேஷன் வைத்துள்ளேன். அனைத்து சரியான பாடல்களை யாரேனும் சொன்ன பின் தான் கமெண்டுகள் வெளியாகும். பொருத்தருள்க!!

இப்போ வரிகள்..

1. "கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே.."

2. "மாட்டி கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும் ... "

3. "கடலை பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது.."

4. "ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ?"

5. "என் விழியின் கரு மணியில் தேடி பார் உன் காலடி தடங்களை காட்டுமே"

6. "உரசாமல் அலசாமல் உயிரோடு ஓடுது ஆசை"

7. "விடியும் வரை அதிரடியாய் பட படக்கும் எங்களோட தாளம்"

8. "எல்லோரும் உறவே என்றால் சோகங்கள் ஏதும் இல்லை"

9. "நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்? நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்?"

10. "தேகமில்ல தேகமில்ல தீப்பிடிச்ச மேகம்"

Ready !! Start !! பின்னூட்டத்தில் பின்னுங்க!! என்ன பாட்டுன்னு சொல்லுங்க !!

"என்ன பாட்டு? கண்டு பிடிங்க பாக்கலாம் " பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஒட்டு போடுங்க பாஸ்!!

33 comments:

 1. //மாட்டி கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும் //

  இது ஒண்ணுதானுங்ணா தெரியுது...மத்ததெதுவும் விளங்கல.

  ReplyDelete
 2. ம்ம்ம்ஹூம், எல்லாமே புதுப்பாட்டு போலிருக்கு. எனக்குத் தெரியலை.

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 3. 2. அயன்- விழி மூடி யோசித்தால்
  4. கந்தசாமி-அலக்ரா..
  6. ஆதவன்-ஹசிலிபிசிலி.
  9. உ.போ.ஒ.-அல்லா ஜானே.
  10. வேட்டைக்காரன்-கரிகாலன் காலப் போல.

  ReplyDelete
 4. சுத்தம்... முதல் வரியை சொன்னாலே..தினறுவோம்.... இதுல சரணம், அனுபல்லவி வரிகளைச் சொன்னா கிழிஞசு கிருஷ்ணகிரி... ச்சீ.. இந்தபழம் புளிக்கும்...

  ReplyDelete
 5. நன்றி பாலாசி, ஜவஹர் & நாஞ்சில் பிரதாப்.

  சிலர் சரியான பாட்டு கண்டு பிடித்து எழுதி உள்ளனர். அவர்கள் கமெண்டுகள் மட்டும் (இப்போதைக்கு) பிரசுரிக்க வில்லை

  ReplyDelete
 6. 1. அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே( நினைத்தாலே இனிக்கும்)
  2. விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே ..(அயன்)
  3. கொக்கே கொக்கே பூவ போடு
  மக்கா மக்கா கொலவ போடு (கண்டேன் காதலை)
  4. இந்தியப் பொண்ணுதாங்கோ..
  இத்தாலி கண்ணுதாங்கோ (கந்தசாமி)
  5.சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே!
  உயிரே உயிரே பிரியாதே
  உயிரை தூக்கி எறியாதே
  சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே! (சர்வம்)
  6. அன்பே உன்னால் மனம் freezing
  அடடா காதல் என்றும் amazing (ஆதவன்)
  7. எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ
  நாங்கெல்லாம் நடுவுலங்க (சிவா மனசில சக்தி)
  8.உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
  தொடங்கும் கலகம் துணிந்து விடட்டும்
  பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
  தோள்கள் திமிரட்டும் (நாடோடிகள்)
  9. கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
  மண்ணில் பெருகா குருதியும் உண்டோ (உன்னைப்போல் ஒருவன்)
  10. கரிகாலன் காலப் போல கருத்திருக்கிது குழலு (வேட்டைக்காரன்)

  கூகிள் ஆண்டவருக்கு நன்றி!

  ReplyDelete
 7. ஏங்க இது எல்லாம் புதுப்பாடல்களா...........?

  நான் இதுல 0............

  ReplyDelete
 8. ஏங்க இது எல்லாம் புதுப்பாடல்களா...........?

  நான் இதுல 0............

  ReplyDelete
 9. ஆஹா..டெஸ்ட்டு.பரிட்ஷை..என்றாலேஎனக்கு ஜூரம் வந்துரும் மோகன்.. நான் வரல நண்பா இந்த விளையாட்டுக்கு..
  அப்புறம் வந்து ரிசல்ட் பார்திக்கிறேன்..ரெடி ஜூட்ட்............

  ReplyDelete
 10. நன்றி சங்கவி & பூங்குன்றன்

  ஒரு சிலர் கிட்டதிட்ட க்ளோசா வந்துட்டாங்க. யாருன்னு அப்புறம் சொல்றேன். அவங்க கமெண்ட் வெளியிடலை

  ReplyDelete
 11. Anonymous2:43:00 PM

  எதுவும் தெரியலை. புதுப்பாட்டுன்னா நான் அம்பேல்

  ReplyDelete
 12. 1) அழகாய்ப் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும்
  2) விழி மூடி யோசித்தால் - அயன்
  3) சுத்துது சுத்துது - கண்டேன் காதலை
  4) அலேக்ரா - கந்தசாமி
  5) நீதானே என் நரம்புக்குள் - சர்வம்
  6) ஹஸிலி ஃபிஸிலியே - ஆதவன்
  7) எம்.ஜி.ஆர். இல்லீங்க - சிவா மனசுல சக்தி
  8) சம்போ சிவ சம்போ - நாடோடிகள்
  9) அல்லா ஜானே - உன்னைப்போல் ஒருவன்
  10) கரிகாலன் காலப் போல - வேட்டைக்காரன்

  ReplyDelete
 13. மக்களுக்கு சற்று இண்டரஸ்ட் வரட்டுமே என ராஜு கமெண்ட் (எழுதியவை வரை சரி) வெளியிட்டுள்ளேன். ரெண்டு பேரு ஆல் coorect-டா எழுதிருக்காங்க!!அப்புறம் சொல்றேன்

  ReplyDelete
 14. நா எஸ்கேப்பு...

  ReplyDelete
 15. 1.அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே - நினைத்தாலே இனிக்கும்
  2. விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே - அயன்
  3. சுத்துது சுத்துது இந்தறு சொக்குது சொக்குது இந்தறு - கண்டேன் காதலை
  4. அலேக்ரா அலேக்ரா இந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ - கந்தசாமி
  5. நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் - சர்வம்
  6. ஹசிலி ஃபிசிலி ரசமணி - ஆதவன்
  7. எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ நாங்கெல்லாம் நடுவுலங்க - சிவா மனசுல சக்தி
  8. சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ - நாடோடிகள்
  9. அல்லா ஜானே அல்லா ஜானே - உன்னை போல் ஒருவன்
  10. கரிகாலன் காலப் போல - வேட்டைக்காரன்

  ReplyDelete
 16. 1.நினைத்தாலே இனிக்கும் படத்தில்
  அழகாய் பூக்குதே சுகம்மாய் தாக்குதே ஜானகி ஐயர்ன்னு நினைக்கிறேன் பாடுனது சோகமான வரிகள் சூப்பரா பாடியிருப்பாங்க....

  ReplyDelete
 17. 2.அயன் படத்தில விழிமூடி யோசித்தால்
  வர்ற வரி யப்பா கார்த்திக்கோட குரலும் ஹேரீஸோட மியூசிக் செம்ம மேட்ட்சிங்கா இருக்கும் பாடல் பூரா வரும் ரம்மியமான இசை மனதை வருடி செல்லும்....

  ReplyDelete
 18. 3.கண்டேன் காதலை படத்தில் கொக்கே கொக்கே பூவ போடுன்னு ஒரு பாட்டுல வர்ற வரி ஹரிஹரன் மகரந்த குரலோன் படிச்சது எங்க்கூர் தேனில எடுத்தபடம்...

  ReplyDelete
 19. 4.கந்தசாமி படத்தில ஸ்ரேயா அலெக்ரா சொல்லுற அழகே அழகு அந்த பாட்டுதேன்...இந்திய பொண்ணு நாங்கோ

  யாரு படிச்சாங்கன்னு தெரில்லப்பா

  ReplyDelete
 20. அம்புட்டுதேன் தெரியும்

  ReplyDelete
 21. என்ன அதி பிரதாபன் உங்களுக்கு பிடிச்ச பாட்டுங்க கொஞ்சம் இருக்கே?

  வசந்த்.. நீங்க சொன்ன வரைக்கும் சரி. பாட்டு பேர் மட்டும் சொல்லாம ஒவ்வொரு பாட்டு பத்தி கமெண்டும் சொன்னது நல்லா இருந்தது

  ReplyDelete
 22. எனக்குன் தெரிஞ்ச ரெண்டு மூணு பாட்டையும் எல்லரும் சொல்லிட்டாங்க....:)
  வடையை சொல்லுங்க....சாரி விடையை சொல்லுங்க..

  ReplyDelete
 23. நமக்கு அவ்வளவு நினைவாற்றல்
  இல்லை....நீங்க தமன்னா ரசிகர்னு
  அவுங்க படத்தை போட்டு மீண்டும்
  வெற்றி கொடி நாட்டிடிங்க தலைவரே...
  வாழ்க உங்கள் தமன்னா சேவை....

  ReplyDelete
 24. 1. அழ‌காய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும்
  2. விழி மூடி யோசித்தால் - அய‌ன்
  3. சுத்துது சுத்துது இந்தாரு -க‌ண்டேன் காதலை
  4. அலேக்ரா அலேக்ரா - க‌ந்த‌சாமி
  5. க‌ரிகால‌ன் காலைப் போல‌ - வேட்டைக்கார‌ன். இந்த‌ பாட்ட‌ பாடின‌ பிண்ண‌ணி பாட‌கி யாருன்னு தெரிய‌ல‌, சூப்ப‌ரா பாடியிருக்காங்க‌!


  பாதிதாங்க‌ தெரியுது...யாராவ‌து வ‌ந்து மீதி பாட்டுக‌ளை க‌ண்டுபுடிங்க‌ப்பா, ப‌ரிசு குடுத்தார்னா 50-50யா ஷேர் ப‌ண்ணிப்போம்

  ReplyDelete
 25. பெயர் சொல்ல விருப்பமில்லை மற்றும் கும்மாங்கோ ரெண்டு பேரும் எல்லா பாட்டும் சரியா சொல்லிட்டாங்க. இதில் பெயர் சொல்ல கூகிளில் எடுத்ததா சொல்லிட்டார். கும்மாங்கோ நீங்க எப்படிங்க? நீங்களும் கூகிள் உதவியாலா ? :))))

  கமெண்ட் மாடரேஷன் செய்து இவங்க கமெண்ட் இப்போதான் publish செய்தாலும், அவங்க எப்போ எழுதினாங்களோ அந்த வரிசையில் தான் மெயில் வருது !!

  ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. பெயர் சொல்ல விருப்பமில்லை மற்றும் கும்மாங்கோவிற்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 26. //ஜெட்லி said...
  நமக்கு அவ்வளவு நினைவாற்றல்
  இல்லை....//

  ஏன் ஜெட் லி ? இந்த பாட்டுகள் உள்ள எல்லா படமும் நீங்க விமர்சனம் எழுதியவை தான்!!

  //நீங்க தமன்னா ரசிகர்னு
  அவுங்க படத்தை போட்டு மீண்டும்
  வெற்றி கொடி நாட்டிடிங்க தலைவரே...
  வாழ்க உங்கள் தமன்னா சேவை....//

  பின்னே இதில் தலைவி பாட்டு மட்டும் ரெண்டு இருக்கே. ஏதோ நம்மால் ஆனது. நிரந்தர தலைவி தமன்னா !! (அடுத்த தலைவி வரும் வரை..........)

  ReplyDelete
 27. இப்படியெல்லாம் பாடல்களில் வந்தது என்று தெரிஞ்சிகிட்டேன். அறிவை வளத்துட்டீங்க. ரொம்ப நன்றி.

  ReplyDelete
 28. Thanks Chitra Madam. You come regularly and encourage. Pl. do continue.

  ReplyDelete
 29. ஒரு விருது இருக்கு மக்கா..நம் தளத்தில்.

  நேரம் வாய்க்கிற போது தளம் வாருங்கள்.

  ReplyDelete
 30. பதில் சொன்ன நன்பருக்கு நன்றி, ஏனென்றால் என்னக்கு பதில் தெரியாது

  ReplyDelete
 31. இது நம்ம ஏரியா இல்ல- ஜூட்

  ReplyDelete
 32. உங்களுக்கே நல்லா இருக்கா.. பாட்டு ஒலிக்கும்போது ஏதோ சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு தப்பு தப்பா வாயசைக்கற நம்மள பாட்ட கண்டு பிடின்னு டெஸ்ட் வச்சா தாங்காதுப்பா.. மொத வரிய தாண்டி இதுவரைக்கும் மேல போனதில்ல.. வுடு ஜூட்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...