Wednesday, February 9, 2011

ஹைதை பயணம்:சார்மினார்,NTR பார்க் & சலார்ஜங்

சலார்ஜங் மியூசியம் 

மிக புகழ் பெற்ற இந்த மியூசியத்தை சுற்றி பார்க்க குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும் . சைனீஸ், ஜப்பானீஸ் காலரிகள், வித விதமான கிளாக்குகள், சான்டிலியர்கள் என பல வித பிரிவுகள் உள்ளன. மிக நிதானமாக பார்த்து அனுபவிக்க வேண்டிய மியூசியம் இது. 

ரெண்டு பில்டிங்குகள்..இரண்டிலும் தரை தளம், முதல் தளம் என எந்த இடம் பார்த்தோம் எது பார்க்கலை என சற்று குழம்பும் அளவு எக்கச்சக்க விஷயங்கள்.. . நாங்கள் சென்ற விடுமுறை நாளில் செம கூட்டம். கேமரா உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. விமான நிலையத்தில் உள்ள மாதிரி ஸ்கானர் வைத்து உள்ளே உள்ள பொருட்களை பார்த்து கேமரா இருந்தால் திருப்பி அனுப்பி கொண்டிருந்தார்கள். மறுபடி கிளாக் ரூம் சென்று கேமராவை வைத்து பூட்டி விட்டு வர வேண்டியதாகி விட்டது. 

தரை தளத்தில் உள்ள மியூசிக் கிளாக் மிக புகழ் பெற்றது. இதில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு பொம்மை மனிதன் கிளாக்கின் உள்ளே இருந்து வந்து என்ன நேரமோ, அத்தனை முறை மணி அடித்து விட்டு செல்கிறான். இது போன்ற கடிகாரம் லண்டனிலும் இங்கும் மட்டும் உள்ளதாக சொல்கிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு பொம்மை மனிதன் மணி அடிப்பதை காண அங்குள்ள ஹாலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம். டிவி வேறு வைத்து காட்டுகிறார்கள் !

மியூசியத்தில் ஒரு குறிப்பிட்ட சிலை கவனத்தை கவர்கிறது. முன்னாலிருந்து பார்த்தால் ஆண் போல இருக்க, பின்னால் உள்ள கண்ணாடியில் பெண்உருவம் தெரிகிறது! சிலையின் முன்புறம் ஆணின்  முன் புறமாகவும் பின்புறம் பெண்ணின்  முன்புறமாகவும் செய்யப்பட்ட இந்த சிலை அற்புதம்!!

சார்மினார் 
பிளேக் நோயால் இறந்தவர்கள் நினைவால் 350  வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்டது சார்மினார். இங்கிருந்து ஹைதராபாத் நகரையும் மக்கள் கூட்டத்தையும் பார்க்க முடியும் அதை தவிர உள்ளே சிறப்பாக ஏதும் இல்லை என்றார்கள். எனவே நாங்கள் உள்ளே சென்று பார்க்கவில்லை. 

சார்மினார் ஏரியா வளையல்கள் முத்து இவற்றிற்கு மிக புகழ் பெற்றது. சுற்றி உள்ள ஏரியாவை சுட்டி பஜார் (வளையல் பஜார்) என்கிறார்கள். நிறைய்ய்ய வளையல் கடைகள். நம்ம ஹவுஸ் பாஸ் & பெண் நிறைய வளையல் வாங்கினார்கள்.  நன்றாக பார்கெயின் செய்து வாங்கலாம். முத்துக்களில் ரெண்டாம் குவாலிட்டி (Look  like) முத்துக்கள் & செருப்புகள் மிக குறைந்த விலைக்கு இந்த ஏரியாவில் கிடைக்கின்றன. 

சார்மினார் அருகிலேயே ஹைதராபாத்தின் புகழ் பெற்ற "புல்லா ரெட்டி" இனிப்பு கடை உள்ளது.  இங்கு ஹைதராபாத் ஸ்பெஷல் இனிப்புகள் வாங்கி சாப்பிட்டோம். செம டேஸ்டியாக இருந்தது.

மெக்கா மசூதி

இந்தியாவில் ரெண்டாவது பெரிய மசூதி என்று சொல்கிறார்கள். வெள்ளி கிழமைகளில் மிக அதிக (20,000) மக்களும், முஹரம் போன்ற விசேஷ தினங்களில் கிட்ட தட்ட லட்சம் பேரும் கூடுவார்கள் என்று கைட் ஒருவர் சொன்னார். சார்மினாருக்கு மிக மிக அருகிலேயே உள்ளது மெக்கா மசூதி.

என்.டி. ஆர் பார்க் 

நுழைவு கட்டணம் என இருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் அதுக்கப்புறம் ஒவ்வொன்றுக்கும் தனி தனியே காசு வாங்கி தீட்டிடுறாங்க. இதில் ரெண்டு மூணு சமாசாரம் காம்போ பேக் ஆக சேர்த்து அதுக்கு ஐம்பது ருபாய் என தனி மீட்டர் வேற ஓடுது.
டாய் டிரைனில் ஏறினால் பார்க் முழுதும் சுற்றி பாத்துடலாம். அப்போது தான் பார்க் முழுதும் சுற்றி பார்க்க பல மணி நேரங்கள் ஆகும் என்பது புரிகிறது. குடை   ராட்டினம் டைப்பில் நிறைய விளையாட்டுகள் உள்ளன, அவற்றில் சுற்றினால் வாமிட்டிங் வந்து விடுமென முழுக்க தவிர்த்தோம்.

ஏராளமாக புல் தரைகள் உள்ளன. பூங்கா உள்ளே நிறைய காதல் ஜோடிகள் மறைவிடம் தேடி ஒதுங்குகிறார்கள்.
  
ஹாரர் ஹவுஸ் என்ற ஒன்று உள்ளது. உள்ளே சென்றால் வினோத சத்தம், எலும்பு கூடு போன்றவை இருட்டுக்குளிருந்து வந்து நம்மை  பயமுறுத்துகின்றன. உள்ளே போவோரில் சிலர் கத்தியாவறே வெளியே வர, எல்லா நேரமும் உள்ளே இருந்து நாம் நடந்து போக வழி சொல்லுவது இளம் (ஏழை) பெண்கள். ஏனோ அவர்களை நினைத்தால் பாவமாக இருந்தது. 

ஏரோபிளேன் சிமுலேஷன் என்பது நீங்கள் சென்னை பிர்லா பிளனட்டோரியம் சென்றால் பார்த்திருக்கலாம். அதே போல் இங்கும் உள்ளது. ஒரு சிறு விமானம் போன்ற கருவிக்குள் இருபது பேர் அமர, எதிரே உள்ள திரையில் பல்வேறு காட்சிகள் ஓடுகிறது. அவற்றை பறந்தவாறே பார்க்குமாறு நம் இருக்கைகள் அசைகிறது. சில நேரம் மோதிகொள்வது போன்று "த்ரீ டீ எபக்ட்" உண்டு. குட்டி பசங்களுடன் நாமும் சிறு குழந்தையாகி மகிழ்கிறோம். ( "இது என்ன  இடம் சஸ்பென்ஸ்" என முதல் பகுதியில் சொன்னது நினைவிருக்கா?  அந்த படம்  இதற்கு வெளியில் எடுத்தது தான்).

மேலும் இந்த பார்க்கில் செயற்கை ஏரி ஒன்று உள்ளது. அதில் போட்டிங்கும் செல்கிறார்கள். நேரமின்மையால் செல்ல வில்லை. ஆங்காங்கு உள்ள சிலைகள் மற்றும் பொம்மைகள் ரொம்ப ரசனையுடன் உள்ளது. இதில் கன்னம் பெரிதாக உள்ள ஒரு பொம்மை அருகே என் பெண் போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்பட்டாள். அந்த பொம்மையின் கன்னத்தை அவள் கிள்ளியவாறு இருக்க, போட்டோ எடுக்கும் நேரத்தில் திடீரென ஹவுஸ் பாஸ் உள்ளே நுழைந்து தன் பெண் கன்னத்தை கிள்ள, இப்படி ரெண்டு கன்ன கிள்ளல்களுடன் அந்த போட்டோ ரொம்ப lively ஆக வந்தது. 

அய்யாசாமி கார்னர் 
கெஸ்ட் ஹவுசில் பெரிய கண்ணாடி கதவு வாசலை மூடி இருந்தது. கண்ணாடியென்பதால் கதவு இருப்பதே தெரியாமல் நேரே போய் அதில் முட்டி கொண்டார் அய்யாசாமி. முட்டிய பிறகு தான் கதவு இருப்பது தெரிந்து "ஞே " என விழித்தார். ஒரு முறையே என்ற போதும் கை, கால், நெற்றி மூன்று இடத்திலும் நன்றாக வலிக்கிற மாதிரி கண்ணாடியில் முட்டி கொண்டார் நம்ம ஆளு. அய்யாசாமியா கொக்கா?

கேரக்டர்
நாங்கள் தங்கிய கெஸ்ட் ஹவுசில் சமையல் செய்த பையன் பெயர் ராஜேஷ். அங்கு தங்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்ன வேண்டும் என கேட்டு அவர்கள் சொல்கிற மெனுவை சமைத்து தந்து கொண்டிருந்தான். பத்து குடும்பத்துக்கும் அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதனை செய்தது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இவன் கூட உதவிக்கு இன்னும் ஒரு பையன் . ஆனால் அவன் வேலையில் ரொம்ப சுமார். இவன் தான் பெரும்பாலான வேலையை சுமக்கிறான். வருகிற பலருக்கும் இவனை பிடித்து "எங்க கூட வந்து விடுகிறாயா?" என்று கேட்கிறார்களாம். வட இந்தியாவை சேர்ந்த இவனுக்கு தெலுகும் தெரியலை. ஆங்கிலமும் தெரியலை. ஹவுஸ் பாசுக்கு கொஞ்சம் இந்தி தெரிந்ததால் சமாளித்தோம்.  வெளியே செல்லும் பலர் இரவு வெவ்வேறு நேரத்திற்கு வர, ஒவ்வொருத்தருக்கும் எழுந்து மெயின் டோரை திறப்பது இவன் தான். படுக்க கட்டில் இன்றி அந்த குளிரில் தரையில் பெட்ஷீட் போட்டு தூங்கும் ராஜேஷை பார்க்க பாவமாய் இருந்தது.

(அடுத்த பகுதியில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி எக்கச்சக்க படங்களுடன்)

17 comments:

  1. ஹைதராபாத் செல்லும் ஆசையைத் தூண்டி விடும் பதிவு... இறுதியில், ராஜேஷ் பற்றி சொல்லி, மனதை கனக்க வைத்து விட்டீர்கள். அவருக்கு விரைவில் நல்லது நடக்கட்டும்.

    ReplyDelete
  2. இந்த என் டி ஆர் கார்டன்ஸ் & மெக்கா மசூதி பார்க்கலை. அந்தக் குறை தீர்ந்தது உங்கள் பதிவால்!

    ராஜேஷ் நல்லா இருக்கணும்.

    ReplyDelete
  3. எட்டாவது படிக்கும் போது போனது. என் அம்மா வழி உறவினர்கள் செகந்திராபாத்திலும், வைசாகிலும் இருக்கிறார்கள்.

    சாலர் ஜங் மியூசியமும், கோல்கொண்டா ஃபோர்ட்டும் நாங்கள் ரொம்ப எஞ்சாய் செய்த இடங்கள்.

    அப்புறம் புல்லா ரெட்டி கடைல என்ன சாப்டீங்க? ஹி ஹி:))))

    ReplyDelete
  4. ஹைதராபாத் போகனும் போல இருக்கு உங்கள் பதிவு...

    ReplyDelete
  5. ஹைதைக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு..

    ReplyDelete
  6. டூருக்கு வசதியா இருக்கு!

    நல்லா இருக்கு பதிவு!

    ReplyDelete
  7. படங்களுடன் நல்ல பகிர்வு.

    ராஜேஷ்.. துளசி மேடத்தின் வாழ்த்தை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  8. அங்கு வேலை செய்பவரையும் மறக்காமல் சொல்லிருக்கீங்க, அவ்வளவு மனம் கவர்ந்துவிட்டார்போல!!

    ReplyDelete
  9. நன்றி சித்ரா. உங்க நேரத்துக்கு இப்போ இரவா இருக்கணும். அசத்துறீங்க போங்க
    **
    துளசி கோபால் said...

    என் டி ஆர் கார்டன்ஸ் & மெக்கா மசூதி பார்க்கலை.

    என் டி ஆர் கார்டன் மறுமுறை சென்றால் பாருங்கள் மேடம். மெக்கா மசூதி வெளியிலிருந்து தான் பார்த்தோம்

    **

    வித்யா: எட்டாவது படிக்கும் போது பார்த்து என்ஜாய் செய்ததை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா? செம மெமரி பவர் தான்.

    //அப்புறம் புல்லா ரெட்டி கடைல என்ன சாப்டீங்க? ஹி ஹி:))))//

    அதானே: அது உங்க சமாசாரம் ஆச்சே. ரொம்ப நாள் ஆனதால் சுவீட் பேர் மறந்துடுச்சு. (நிறய விஷயம் குறிப்புகளா எழுதி வசத்தால் இவ்ளோ நாள் கழிச்சு எழுத முடியுது)

    ReplyDelete
  10. சங்கவி: நன்றி! ஹைதை டிசம்பரில் ஒரு முறை போயிட்டு வாங்க நண்பா (அது தான் நல்ல சீசன்)
    **
    நன்றி அமைதி சாரல்
    **
    நன்றி மிடில் கிளாஸ் மாதவி
    **
    ராமலட்சுமி: நன்றி
    **
    ஹுசைனம்மா : நன்றி. ஆம் எங்கள் அனைவருக்குமே மனதில் பதிந்து விட்டார் அந்த பையன்

    ReplyDelete
  11. //பிளேக் நோயால் இறந்தவர்கள் நினைவால் 350 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்டது சார்மினார்.//

    அப்படியா? அங்கு இது சம்மந்தமாக ஏதும் கல்வெட்டு இருக்கிறதா?

    //இங்கிருந்து ஹைதராபாத் நகரையும் மக்கள் கூட்டத்தையும் பார்க்க முடியும் அதை தவிர உள்ளே சிறப்பாக ஏதும் இல்லை என்றார்கள்//

    நல்ல வேலை நீங்கள் உள்ளே செல்லவில்லை. குறுகிய மாடிப்படிகளில் கஷ்டப்பட்டு மேலே ஏறுகையில் ஆங்காங்கே எச்சிலை துப்பி வைத்து, அப்பப்பா ஒரே அருவருப்பாய் இருந்தது.

    //நிறைய்ய்ய வளையல் கடைகள். நம்ம ஹவுஸ் பாஸ் & பெண் நிறைய வளையல் வாங்கினார்கள். நன்றாக பார்கெயின் செய்து வாங்கலாம். //

    வீடு வரும்வரை வளையல்கள் உடையாமல் இருந்ததா? நாங்கள் வாங்கி வந்ததில் பாதிக்கும் மேலானவை போடும்போதே உடைந்து விட்டது. அவ்வளவு தரமில்லை என்பது எங்கள் அபிப்பிராயம்.

    ReplyDelete
  12. நல்ல சுற்றுலா, நாங்களே போன மாதிரி!
    ...ராஜேஷ் போல சிலர் கடமையே கண்ணாயினராய்.. மழைக்குக் காரணமாய்...

    ReplyDelete
  13. ஹைதைக்கே சென்று சுற்றி விட்டு வந்த உணர்வு ஏற்பட்டது. வேறு சில இடங்களை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்!

    ReplyDelete
  14. நாங்களும் 12 மணிக்கு அந்த மியூசியத்தில் தான் இருந்தோம். இன்னொரு முறை போக தூண்டும் பதிவு.10 வருடங்கள் ஆச்சு.

    ReplyDelete
  15. நன்றி ஆதி மனிதன். ரெண்டு நாளாய் இணையம் பக்கம் வரலை.

    சார்மினார் பற்றி நீங்கள் எழுதியதை நாங்களும் கேள்விப்பட்டோம்.

    பிளேக் நோய் விஷயம் வயதான ஒரு கைட் சொன்னார்

    வளையல்கள் நல்லபடியாக கொண்டு வந்துட்டோம். மணிகளும் ஓகே

    **

    ஜனா சார்; நன்றி. ராஜேஷ் பற்றி நீங்க சொன்னது மிக சரி
    **
    கோவை டு தில்லி மேடம் : மிக்க நன்றி
    **
    அமுதா மேடம்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  16. படங்களும் திரு ராஜேஷ் ம் ரொம்ப பிடித்திருந்தது பிடித்திருந்தார்.

    பகிர்வு மிக அழகு. நன்றி.

    ReplyDelete
  17. Anonymous9:12:00 AM

    நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...