Monday, March 7, 2011

வானவில்: தங்க மழை.. விஜய்யின் காவலன்

கிரிக்கெட் கார்னர்

நேற்று இந்தியா அயர் லேண்டை ஒரு வழியா ஜெயித்தது. ஆனா அதை விட சென்னையில் நடந்த இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான மேட்ச் செம இன்டரஸ்டிங் ஆக இருந்தது. இது மாதிரி லோ ஸ்கோரிங் மேட்ச் தான் டோர்னமேன்டிற்கு சுவாரஸ்யம் தருகிறது.(இது வரை இங்கிலாந்து விளையாடிய நான்கு மேட்ச்களுமே கடைசி வரை யார் ஜெயிப்பார்கள் என்று தெரியாத நிலை தான் கவனித்தீர்களா?) நேற்றைய மேட்சில் இங்கிலாந்து வென்றது இந்தியாவிற்கு நல்லது. எப்படி என்கிறீர்களா? தென் ஆப்பிரிக்கா எல்லா மேட்சும் ஜெயித்தால் இந்த குருப் அவர்கள் தான் டாப்பில் இருப்பார்கள். நமது குருப்பில் நாம் டாப்பில் வந்தால்தான்  எதிர் குருப்பில் உள்ள வீக்கான (நான்காம் இடத்தில உள்ள) அணியுடன் விளையாடலாம். எனவே செமி பைனல் வாய்ப்பு வலுக்கும்.

நமது ஆரம்ப ஊகங்களை பொய்யாக்கி இதுவரை பாகிஸ்தான் நன்கு விளையாடி வருகிறது. அதிலும் அப்ரிதி இந்த உலக கோப்பையில் மிக அதிக விக்கெட் வீழ்த்தியவராய் வர கூடும்.

நிற்க. தோனி இன்னும் பியூஷ் சாவ்லாவையே மலை போல் நம்பி இருக்கிறார். அஸ்வினுக்கு எப்போது தான் வாய்ப்பு தர போகிறாரோ? இரண்டு பாஸ்ட் பவுலர்கள் மட்டும் வைத்து விளையாடும் போது அஸ்வின் நிச்சயம் நல்ல சாய்ஸ். அவர் பவர் ப்ளேயிலும் பந்து வீச கூடியவர். இந்தியாவின் பீல்டிங் & பவுலிங் முன்னேறா விடில் நாம் கப் ஜெயிப்பது கடினமே !

பார்த்த படம்: காவலன்

விஜய்யை இப்படி பார்க்க எவ்வளவு நன்றாக உள்ளது ! மசாலா பஞ்ச்  டயலாக்குகள் பின்னால் போகாமல் இப்படி பட்ட கேரக்டர்களில் நடித்தால் நன்றாக இருக்கும். அசின் எப்போதுமே எனக்கு பிடிக்கும். துவக்கத்தில்  நமக்கு கோபம் வர வைக்கிற கேரக்டர் எனினும் நன்கு தான் நடித்திருந்தார். அதிசயமாக இந்த படத்தில் பாடல்கள் சில, படத்தோடு மிக சரியாக பொருந்தி, கேட்பதை விட படத்தோடு பார்க்க பிடிக்கிறது. வடிவேலுவும் அவ்வபோது சிரிக்க வைக்கிறார். கடைசி அரை மணி நேரம் நிச்சயம் ஆச்சரிய படுத்துகிறது. கிளைமாக்சில் சண்டை இல்லாமால் உணர்வுகளை வைத்தே அமைத்தது பெரும் ஆறுதல். விஜய்க்கு அடுத்து த்ரீ இடியட்ஸ்.. பன்ச் டயலாக்குகள் & குபீர் சண்டைகளிலிருந்து வெளி வந்து அடிக்கடி இப்படி படம் செய்தால் நன்றாயிருக்கும்.

சட்ட சொல்: ஹோஸ்டைல் விட்னஸ் 

வழக்கு துவங்கும் போது ஒரு சாட்சி ஒருவருக்கு எதிராக சாட்சி சொல்கிறார். ஆனால் அவரே பின்னர் தன் நிலையை மாற்றி கொண்டு ஆதரவாய் சாட்சி சொன்னால், அவரை ஹோஸ்டைல் விட்னஸ் என்று சொல்லுவார்கள். கிரிமனல் வழக்குகளில் பெரும்பாலும் வழக்கு பதிவு செய்வதும் சாட்சிகளை கொண்டு வருவதும் போலிசாக இருக்கும். அப்படி போலிஸ் கொண்டு வரும் சாட்சிகள் அவர்களுக்கு எதிராகவே போகும் நிலை வந்தால் "ஹோஸ்டைல் விட்னஸ் " என்பார்கள். அநேகமாய் அவரை எதிர் அணியினர் சரிக்கட்டியது ஒரு காரணமாய் இருக்கலாம். இப்படி மாற்றி பேசும் சாட்சிகள் நம்ப தன்மை இழப்பார்கள். நீதி மன்றம் அவர்கள் பேச்சை எடுத்துகொள்ள மாட்டார்கள். அப்ப என்ன பலன் என்கிறீர்களா? உங்களுக்கு எதிரான ஒரு சாட்சி நம்பக தன்மை இழந்து அவர் சாட்சியம் எடுத்து கொள்ள படாவிடில் அது நல்லது தானே! அது !!


டிவி பக்கம் 

சன் டிவியில் புதிதாய் சனி, ஞாயிறு இரவு எட்டு முப்பதுக்கு தங்க மழை என்று ஓர் நிகழ்ச்சி. பொது அறிவு கேள்விகள் சரி தவறு என்ற பதில்கள் சொன்னால் போதும். தங்க காசு பரிசாய் தருகிறார்கள் (டிவியில் தர்றாங்க; நிஜமா தர்றாங்களா?கலந்து கிட்டவங்களை தான் கேட்கணும்!) நிகழ்ச்சி கொஞ்சம் உலக விஷயங்களை தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு. நிகழ்ச்சியை நடத்தும் தேஜஸ்வினி (எங்கப்பா இருந்தார் இவ்ளோ நாளாய்?) அழகாய் இருக்கிறார். நன்றாக தமிழ் பேசி, நன்கு நடத்துகிறார். ஒரு முறை பாருங்களேன்.

அதீதத்தில் வீடு திரும்பல்

அதீதம் என்ற இணைய இதழ் சமீபத்தில் துவங்கப்பட்டது. மாதம் இரு முறை வரும் இந்த இதழ் இது வரை நான்கு இதழ்கள் வந்துள்ளது. இதில் வாரம் ஒரு ப்ளாகரை அறிமுக படுத்துகிறார்கள். இந்த இதழில் உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு ப்ளாகரை பற்றி எழுதியுள்ளார்கள். யாரா? அட.. அதை நானே எப்படி சொல்றது? இதோ இந்த லிங்கில் நீங்களே படிச்சிக்குங்க.

சிறு அறிவிப்பு


உலக கோப்பை நடக்கும் நேரத்தில் எங்கள் ஊரான நீடாவில் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளை பகிர உள்ளேன். மூன்று அல்லது நான்கு பதிவுகள் இந்த வரிசையில் வர கூடும். இந்த மினி தொடர் இந்த வாரம் புதன் அல்லது வியாழன் அன்று தொடங்கும்.


வாங்க முன்னேறி பார்க்கலாம் என்ன ஆச்சு என வினவும் நண்பர்களுக்கு : அடிக்கடி இடைவெளி வருவதால் மூன்று அல்லது நான்கு பகுதிகள் எழுதி விட்டே மறுபடிவெளியிட ஆரம்பிக்க உள்ளேன். அதுவும் விரைவில் தொடங்கலாம்.

அய்யா சாமி

தஞ்சையில் பிறந்து வளர்ந்த அய்யாசாமி, முதல் முறை தன் ஊரை தாண்டி போய் தங்கியது மதுரையில். தஞ்சை பக்கம் துணிகளை துவைக்கிற சோப்பை " சவுக்காரம்" என்று சொல்வார்கள். சோப் என்றால் அவர்களுக்கு உடலுக்கு போட்டு குளிப்பது மட்டுமே. மதுரையில் தங்கிய அய்யாசாமி, ஒரு பெரிய கடையில் சென்று " சவுக்காரம் குடுங்க" என்று கேட்டார். " சவுக்காரமா? அதெல்லாம் இல்லீங்க" என்று கூறி விட்டார்கள். சுற்று முற்றும் பார்த்த அய்யாசாமி கடையில் சவுக்காரம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார். அதனை காட்டி, " ஏங்க சவுக்காரம் வச்சுகிட்டே இல்லேங்குறீங்க" என கேட்க, " இதுவா சவுக்காரம்? இது சோப்புங்க" என சிரிக்க ஆரம்பித்து விட்டார் கடைக்காரர். சுற்றி இருந்தவர்களும் சவுக்காரம் என்ற வார்த்தை கேட்டு சிரிக்க, " அப்ப குளிக்கிற சோப்பை என்னன்னு சொல்லுவீங்க" என்றார் அய்யாசாமி . ""ம்ம் சோப்பு" " துவைக்கிறது ?" " அதுவும் சோப்பு தான் ". அப்ப எப்படிய்யா ரெண்டுத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பீங்க" என்ற கேள்விக்கு பதில் இல்லாமலே திரும்பினார்.

இப்போ சென்னை வாசியான பின் அவரும் ரெண்டையும் சோப்பு என்றே கூற ஆரம்பித்து விட்டார்.

15 comments:

  1. இன்னும் காவலன் பார்க்கவில்லை:))

    புது தொடர்களுக்கு அட்வான்ஸ் ஆல் தி பெஸ்ட்:))) எழுதுங்க. வாசிக்கிறேன்:)

    ReplyDelete
  2. Anonymous8:47:00 AM

    தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்ததை எதிர் பார்க்கவே இல்லை!
    //நமது குருப்பில் நாம் டாப்பில் வந்தால்தான் எதிர் குருப்பில் உள்ள வீக்கான (நான்காம் இடத்தில உள்ள) அணியுடன் விளையாடலாம். எனவே செமி பைனல் வாய்ப்பு வலுக்கும்//
    ரைட்டு! இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா?! :)
    சீக்கிரம் அந்த தொடர ஆரம்பிங்க அண்ணா!
    அண்ணா உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
    http://balajisaravana.blogspot.com/2011/03/blog-post_07.html

    ReplyDelete
  3. அதீதப் பதிவருக்கு வாழ்த்துக்கள்!

    வானவில் வர்ண்ஜாலம்!

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. //தஞ்சை பக்கம் துணிகளை துவைக்கிற சோப்பை " சவுக்காரம்" என்று சொல்வார்கள். //

    உண்மை. ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் முதலில் தமிழா/இல்லை என்றால் எங்கிருந்து வந்தது என்று தான் தெரியவில்லை.

    இதே போல் எனக்கொரு அனுபவம். மும்பையில் ஒரு ஸ்வீட் கடையில் குலோஜாமுன் வாங்கிய பிறகு கொஞ்சம் ஜீரா போடுங்கள் என கூறிய போது அவர்கள் 'பே பே' என முழித்தார்கள். அவர்கள் மொழியில் ஜீரா என்பது ஜீரகம்.

    *****சாரி. வேறொரு ஈமெயில் முகவரியில் என் கமென்ட் வெளியாகிவிட்டது. அதை அகற்றி விடுங்களேன். பிளீஸ்.

    ReplyDelete
  6. அதீதத்தில் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.
    சட்ட சொல் பற்றிய குறிப்பு, நன்றாக உள்ளது.

    ReplyDelete
  7. அதீதம் இதழில் அறிமுகமா! வாழ்த்துகள். காவலன் பார்க்கவில்லை. சவுக்காரம் :)

    ReplyDelete
  8. எங்கூர்லயும் சவுக்காரம்தான்... ஆனா, நாங்க நாகரீகமான பொறவு, சோப்புதான், சிலசமயம், சோப்புக்கட்டி..

    காவலன்.. கொஞ்சம் ஆசுவாசமா இருந்துது உண்மையிலேயே!!

    ReplyDelete
  9. 'சவுக்காரம்' - காரம் என்பது தமிழ் சொல்[அமிலம்,காரம்]

    சோப்பு - இது தமிழ் சோல் அல்ல

    ReplyDelete
  10. அதீதத்தில் வீடு திரும்பல் என அமர்க்களமாய் அறிவித்து விட்டு, ‘யாரா? நானே எப்படி சொல்றது?’ன்னு கேட்டால் எப்படி:)? எல்லாம் அய்யா சாமியின் சகவாசம்! நல்வாழ்த்துக்கள் மோகன் குமார்:)! வீடு திரும்பலுக்குத் தரப்பட வேண்டிய அங்கீகாரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளது அதீதம்.

    வானவில் தொகுப்பு எப்போதும் போல் நன்று.

    ReplyDelete
  11. நம்ம பவுலர்களை நினைத்தால் ரொம்பவே பயமாகயிருக்கிறது. ப்ச்..சச்சினுக்காகவாவது ஒழுங்கா விளையாடணும்

    ReplyDelete
  12. வானவில் அருமை.

    அய்யாசாமி சார், கடையில 'டிம்மி' வாங்கிய அனுபவம் உண்டா?

    ReplyDelete
  13. நமீதா பிரசவ செலவை விஜய் செய்வாரா?
    என்ன கூத்து?
    உழுதவன் ஒருவன்:கண்டுமுதல் வேறு ஆளா ?

    ReplyDelete
  14. வித்யா: நன்றி காவலன் பாருங்கள்; உங்களுக்கு(ம்) பிடிக்கும் என்றே நினைக்கிறேன்
    **
    பாலாஜி: நன்றி. முடிந்தால் எழுதுகிறேன். எழுதா விடில் தவறாய் நினைக்க வேண்டாம்
    **
    நன்றி மாதவி
    **
    ஆதி மனிதன்: நீங்களும் தஞ்சை ஆச்சே! நீங்கள் ஜீராவை கேட்டது மும்பையில்; ஆனால் சவுக்காரம் என்பது தமிழகத்திலேயே தெரியலை!
    **
    நன்றி சித்ரா
    **
    வெங்கட்: நன்றி

    ReplyDelete
  15. ஹுசைனம்மா; நன்றி காவலன் நீங்களும் பாத்துட்டீங்களா? மகிழ்ச்சி
    **
    ஆராய்ச்சிக்கு நன்றி மாதவா
    **
    ராம லட்சுமி :)) ம்ம். தலைப்பு வச்சப்போ யோசிக்கலை. ம்ம்
    **
    ர‌கு said...

    நம்ம பவுலர்களை நினைத்தால் ரொம்பவே பயமாகயிருக்கிறது.


    எஸ் பாஸ்


    **


    அமைதி அப்பா said...


    //அய்யாசாமி சார், கடையில 'டிம்மி' வாங்கிய அனுபவம் உண்டா?//

    ஆஹா ; இன்னொரு நல்ல பேரை நினைவு படுத்தீட்டீங்க. டிம்மி என கேட்டதில்லை சார்
    **

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...