Tuesday, March 22, 2011

மன்னர்குடியுடன் பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்

மன்னார்குடி (சுருக்கமாய் மன்னை ) எங்கள் ஊரான நீடாமங்கலதிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எங்கள் ஊரை விட பல மடங்கு பெரிய ஊர். எங்களுக்கெல்லாம் அது ஒரு "டவுன்". இப்படி டவுனில் உள்ள மன்னை டீம் எங்களை விட நன்றாக ஆடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எங்கள் ஊரில் உள்ள "பெரிய டீம்" பல முறை மன்னையுடன் ஆடி அத்தனை முறையும் தோற்றது. மன்னையுடன் நாங்கள் ஆடிய அந்த மறக்க முடியாத மேட்சை பார்க்கும் முன் வேறு ஒரு தகவல்.

எங்கள் ஊரின் பெரிய டீம் கிரிக்கெட்டுக்காக எத்தனை முறை பணம் வசூல் செய்துள்ளனர் !! டோர்னமென்ட் விளையாடுவது , புதிதாய் கிரிக்கெட் கிட் வாங்குவது என எதற்கும் வசூல் வேட்டை ஆரம்பித்து விடும். அப்படி தான் அந்த முறையும் வசூல் நடந்தது.   ஊரில் கொழும்பு ஸ்டோர் என்ற பெயரில் ஒரு மளிகை கடை இருந்தது. இசுலாமியர்கள் நடத்தி வந்த கடை. அவர்களிடம் தான் முதலில் வாங்குவார்கள். எந்த கேள்வியும் கேட்காமல் அதிக பணமும் போடுவார்கள். இப்படி வசூல் நடந்து புதிதாய் பேட் உட்பட நிறைய கிரிக்கெட் கிட் வாங்கப்பட்டது.

பணம் தந்தவர்களில் சிலர் " என்னப்பா புதுசா பேட் எல்லாம் வாங்கியாச்சா? எப்போ அடுத்த மேட்ச்?" என்று கேட்டு கொண்டே இருப்பர்கள். அப்போது தான் மன்னையுடன் மறுபடி மேட்ச் வந்தது.

அந்த காலத்தில் செல்போன் இல்லாமல் , பல வீடுகளில் போனும் இல்லாமல் எப்படி மேட்ச் ஆட தேதி குறித்தார்கள் தெரியுமா? யாராவது ஒரு நபர் (தூதர் போல) எந்த ஊருடன் கிரிக்கெட் ஆடணுமோ அந்த ஊருக்கு போகணும். அங்கு போய் கேம் விளையாடலாமா என்று கேட்டு தேதி குறித்து விட்டு வர வேண்டும். ம்ம் கிரிக்கெட் மேல் எவ்வளவு காதலுடன் அப்போதெல்லாம் இருந்திருக்க வேண்டும்!


(போட்டோவில் மன்னையின் புகழ் பெற்ற ராஜ கோபாலசாமி கோயில்)

மன்னை மேட்சுக்கு வருவோம். வழக்கம் போல் எங்கள் சீனியர் கிரிக்கெட் டீம் அடி வாங்கவே செய்தது. இரண்டு இன்னிங்க்ஸ் உள்ள டெஸ்ட் மேட்ச் ஆடினர். முதலில் பேட் செய்த மன்னை அணி நூற்று நாற்பது ரன் அடித்தது. பின் ஆடிய எங்கள் அணி அறுபதுக்கு ஆள் அவுட். மன்னை எங்களை பாலோ ஆன் ஆட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஆடினார்கள். ஓரிரு விக்கெட் இழப்புக்கு ஐம்பது ரன் போல அடித்து விட்டு டிக்ளர் செய்து விட்டனர்.  130 ரன் அடித்தால் வெற்றி. இவ்வளவு அதிக ரன்கள் மன்னை உடன் நாங்கள் அடித்ததே இல்லை. அதுவும் நான்காவது இன்னிங்க்ஸ் வேறு.

ஆனால் யாரும் எதிர் பாராமல் மேட்ச் சூடு பிடித்தது. எங்கள் அணி சற்று நன்கு ஆடியது. சந்தானம் என்று ஒரு ப்ளேயர். மிக நன்றாக ஆட, எங்கள் அணி ரன்களில் முன்னேறி கொண்டே இருந்தது. மறுபக்கம் விக்கெட்டுகளும் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசியில் பத்து ரன் எடுத்தால் நாங்கள் வெற்றி. ஒரு விக்கெட் மட்டுமே கை வசம் உள்ளது. சந்தானம் நாற்பதுக்கு மேல் எடுத்து விளையாடி கொண்டிருக்க மறு முனையில் சிங்கிள் சுந்தரம் விளையாடினார். சிங்கிள் சுந்தரம் பெயருக்கேற்ற படி சிங்கிள் மட்டும் தான் எடுப்பார். இவரை வைத்து கொண்டே சந்தானம் மீதம் உள்ள ரன்களையும் பெரும்பாலும் எடுத்து விட்டார். நாங்கள் ஜெயிக்க மூன்று ரன்கள் உள்ள போது திடீரென "இது தான் கடைசி ஓவர்" என முடிவானது.

நாங்கள் ஜெயிக்க மூன்று ரன். அவர்களுக்கு தேவை ஒரு விக்கெட். கடைசி ஓவர். டென்ஷன் ! டென்ஷன் ! ! எப்படியோ இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டு விட்டன.கடைசி மூன்று பந்துகள். ஒரு ரன் எடுக்க வேண்டும். இரண்டு பந்துகளில் சிங்கிள் சுந்தரம் ரன் எடுக்க முடிய வில்லை. கடைசி பந்து. சுந்தரம் பேட்டை சுழற்ற பந்து பேட்டில் படவில்லை. ஆனாலும் சுந்தரம் ரன் எடுக்க, ஓட ஆரம்பித்து விட்டார். விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச முயல்கிறார். மறு முனையில் சந்தானம் ஓடவே இல்லை. அம்பயர் பொதுவாய் பேட்டிங் அணி ஆள் தான் நிற்பார். அவர் பிடித்து சந்தானத்தை தள்ளி விட்டு ஓட சொல்ல, சந்தானம் அந்த ரன்னை ஓடி எடுத்து விட்டார்.

மன்னை அணியுடன் முதலும் கடைசி முறையுமாக நாங்கள் வென்றோம் !! சந்தானத்திடம் ஏன் ஓட வில்லை என்று கேட்டதற்கு " அடுத்த ஓவர் நான் தானே ஆட போகிறேன். அப்போ அடிச்சிக்கலாம்" என நினைத்தேன் என்றார். அது கடைசி ஓவர், கடைசி பந்து என்பதே அவருக்கு தெரிய வில்லை!!

மன்னை அணியால் எங்களிடம் தோற்றதை டைஜஸ்ட் செய்யவே முடிய வில்லை. "இன்னொரு சின்ன மேட்ச் (ஒரு இன்னிங்க்ஸ் மட்டும்) ஆடி விட்டு போங்கள்" என்று சொல்ல, எங்கள் அணி சிரித்து மழுப்பி திரும்பி விட்டது.

கிரிக்கெட்டை விட சுவாரஸ்யமாய் அடுத்து ஒரு சம்பவம் நடந்தது. "இப்போ தான் பணம் வசூல் செய்து முடிச்சோம். மேட்ச் ஜெயிச்சிட்டோம். இதுக்கு ஒரு பேனர் எழுதி வச்சிட வேண்டியது தான்" என்று முடிவு செய்து எங்கள் வெற்றி பற்றி ஒரு பேனர் எழுதி ஊரின் முக்கிய இடத்தில் வைத்தனர். அதில் " மன்னை உடன் நடந்த பரபரப்பான மேட்சில் கடைசி பந்தில் நீடாமங்கலம் அணி வெற்றி பெற்றது" என்று எழுத பட்டிருந்தது. இதனை ஊரில் பலரும் நின்று வாசித்து விட்டு மகிழ்ச்சி உடன் சென்றனர். மேட்ச் விளையாடாத என் பெயரும் கூட 13 அல்லது 14 ஆவது நபராக அதில் எழுத பட்டிருந்தது. (என்னோட அண்ணன் தான் டீம் கேப்டன். அந்த போர்ட் எழுதியது எங்கள் கடை மாடியில் உள்ள பொன். தேசிங் என்ற பெயிண்டர்.  பேர் வந்தது இவர்கள் உபயம்!!)

இந்த போர்ட் எங்கள் ஊர் மக்கள் பார்த்து மகிழ்ந்தது இருக்கட்டும். ஊருக்கு வேறு வேலையாக வந்த மன்னை கிரிக்கெட் டீமை சேர்ந்த ஒருவரும் படித்து விட்டார். மன்னை டீம் ஆட்களுக்கு இது தெரிய வர, "அட பாவிங்களா. நாம டிக்ளேர் செய்து குடுத்ததால் ஜெயிச்சிட்டு, இப்போ இப்படி போர்ட் வைக்கிறாங்க" என கடுப்பாகி மறுபடி மேட்சுக்கு அழைத்த வண்ணம் இருந்தனர்.

போவோமா நாங்க? நாங்கல்லாம் யாரு??

21 comments:

  1. நல்லா இருக்குங்க மோகன் இந்த கிரிக்கெட் சீரிஸ் :)

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்.நாந்தான் முதல் காமெண்ட்னு பாத்தேன்..மாப்ள போட்டுட்டாரு...சரி விடுங்க.அது என்னா எல்லா மேட்சும் கடேசியா ஜெவுச்சுப்புடிறீங்க :-)

    ReplyDelete
  3. நல்ல அனுபவ பதிவு...!

    நானும் மன்னை அணியுடன் விளையாடி இருக்கிறேன்..!

    மன்னையில் கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்ததாக நினைவு...!

    ReplyDelete
  4. நன்றி ராம சாமி. நீங்க ரொம்ப நல்லவரு
    **
    மரா: நீங்க வேற. ஜெயிச்ச மேட்ச் மட்டும் தான் இங்க சொல்லுறது. அடி வாங்கினதெல்லாம் சொல்றதில்லை
    **
    தமிழ் அமுதன்: மிக்க நன்றி. நீங்களும் மன்னை உடன் ஆடி உள்ளீர்களா? மகிழ்ச்சி .

    ReplyDelete
  5. இளைமை கால கிரிக்கெட் , அதன் கடைசி நிமிட பதட்டம் எல்லாம் என் கிரிக்கெட் வாழ்வை பிரிதிபலிக்கின்றன.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சுவாரஸ்யம்.

    மேட்சுக்கு பணம் வசூலிக்க வருவார்கள் நாங்கள் இருந்த காலனியில்:)!

    ReplyDelete
  7. நீங்களும் கிரிக்கெட் விளையாடுறிங்களா? மேட்ச் பிக்ஸிங் இருக்குமா?


    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    ReplyDelete
  8. கிரிக்கெட் தொடர் விருவிருப்பாய் உள்ளது. தொடரட்டும்!

    ReplyDelete
  9. நல்ல பதிவு.
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
    சிறப்பு மிக்க மன்னார்குடி பற்றி எழுதுன்வலேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. இதைபத்தி மன்னை மைனர் ஒன்னும் சொல்லவே இல்லையே . இருங்க அவர வர சொல்றேன்

    ReplyDelete
  11. எல். கே வந்துட்டேன்.. ;-)))
    மன்னையை ஜெயித்த நீடாவிர்க்கு லேட்டான வாழ்த்துக்கள்.
    ஆமா இது எந்த வருஷம்? ;-))

    ReplyDelete
  12. @தமிழ் அமுதன்
    கவாஸ்கர் கிரிக்கெட் க்ளப், ஸ்டீஃபன், ராக்கெட் ராஜா போன்றோர் விளையாடிய ஹவுசிங் யூனிட் அணி... நீங்கள் எந்த ஊர்? ;-))

    ReplyDelete
  13. வெற்றி பெற்ற நீடாமங்கல அணியினருக்கு வாழ்த்துக்கள்..

    from மன்னையின் மைந்தருள் ஒருவன்

    ReplyDelete
  14. ஜெயிச்ச கதை நல்லாருக்கு:)

    ReplyDelete
  15. ரொம்ப நல்ல பதிவு!

    ReplyDelete
  16. //என்னோட அண்ணன் தான் டீம் கேப்டன். அந்த போர்ட் எழுதியது எங்கள் கடை மாடியில் உள்ள பொன். தேசிங் என்ற பெயிண்டர். பேர் வந்தது இவர்கள் உபயம்!!//

    ம்ம் புரியுது புரியுது...

    ReplyDelete
  17. //போவோமா நாங்க? நாங்கல்லாம யாரு??//

    அது சரி.

    சீசன் பதிவா.. ரொம்ப நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  18. நன்றி மதுரை சரவணன்
    **
    ராமலட்சுமி: நன்றி
    **
    தமிழ்வாசி - பிரகாஷ்: நன்றி
    **
    வாங்க ராஜாராம் நன்றி
    **
    வெங்கட்: மகிழ்ச்சி நன்றி
    **
    ரத்னவேல் ஐயா : நன்றி

    ReplyDelete
  19. நன்றி எல். கே பின்னூட்டத்திற்கும் மன்னை மைந்தரை அழைத்ததற்கும்
    **
    நன்றி மாதவி
    **
    நன்றி RVS . 1988-ல் என நினைக்கிறேன்
    **
    மாதவன்: நன்றி மன்னை காரர்கள் அடுத்தடுத்து வர்றீங்க. உங்க பெருந்தன்மை மகிழ்ச்சியா இருக்கு
    **
    நன்றி வித்யா
    **
    ரவி நன்றி
    **
    ஆதிமனிதன் : நன்றி
    **
    கமலேஷ்: ஆம் நன்றி

    ReplyDelete
  20. கொழும்புல எங்க ஏரியா கொட்டாஞ்சேனை ..எங்க டீமுக்கும் வத்தளை டீமுக்கும் தான் மேட்ச் நடக்கும்...பல தடவை அடி வாங்கினாலும் திரும்ப திரும்ப விளையாடினோம்...எப்புடியும் ஒரு நாள் வெத்திடுவோம்னு...அந்த நாளும் வந்துச்சு ...கடைசி ஒரு பந்தில 6 ரன்ஸ் அடிக்கணும் ...நண்பன் ஒருத்தன் கடைசி பந்தில சிக்ஸ் அடிச்சு குல பெருமைய காப்பாத்திட்டான்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...