Tuesday, March 6, 2012

சென்னை ஆசிரியை கொலை குறித்து சக பள்ளி ஆசிரியை கவிதை


சென்னையில் உமா மகேஸ்வரி என்கிற ஆசிரியை வகுப்பறையில் மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் கவிதை எழுதியுள்ளார். அவரது சகோதரரான ரவீந்திரன்  வீடுதிரும்பலை தொடர்ந்து வாசிப்பவர். இந்த கவிதையை நமது ப்ளாகில் வெளியிடுமாறு கேட்டார்.

இந்த மரணம் ஆசிரியைகள் மனதில் என்ன உணர்வுகளை ஏற்படுத்தியது என்று இந்த கவிதை மூலம் உணர முடிகிறது.

மறைந்த ஆசிரியை உமா மகேஸ்வரியின் குரலாக ஒலிக்கிறது இக்கவிதை !உங்கள் பின்னூட்டங்களை இக்கவிதையை எழுதிய ஆசிரியை நிச்சயம் வாசிப்பார். அவர் உங்கள் கருத்துகள் பற்றி என்ன சொன்னார் என்பதை பிறகு "வானவில்லில்" பகிர்கிறேன் !

22 comments:

 1. அம்மாவின் சிறப்பை பற்றி சிறு வயதில் நான் கேட்ட கதை (முழுவதுமாக ஞாபகமில்லை) : பெற்ற தாயிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்ட திருடனாகிய மகன், கடைசியில் யாரோ அவனின் தாயின் இருதயத்தை கேட்க, அதையும் கொடுத்து விட்டாள் அந்த தாய். தன் தாயின் இருதயத்தை எடுத்துக் கொண்டு திருடனகிய மகன் செல்லும் போது சாலையில் தடுக்கி விழுகிறான். அதை பார்த்து அந்த நேரத்திலும் அத் தாயின் இதயம் படத்தத்துடன் கேட்டதாம். ஐயோ மகனே வலிக்கிறதா என்று?

  அது போல் தான் ஆசிரியத் தொழிலும்...தாய்க்கு ஈடானது.

  //என்னை பூமிக்குள் புதைத்து உன்னை நான்கு சுவர்களுக்குள் அடைத்துக் கொண்டாயே! நன்றாக படிடா - அங்கேனும்//.

  நாமும் அச் சிறுவனை வாழ்த்துவோமாக...

  ReplyDelete
 2. Anonymous12:54:00 PM

  இதை எழுதிய ஆசிரியையிடம் நான் கேட்க விரும்புவது: இக்கொலை நடந்ததை நேரில் பார்த்த மாணவர்களின் மனநிலை என்னவென்று யாருக்கேனும் தெரியுமா? தேர்வு எழுதும் நிலைக்கு அவர்கள் தயாராகி விட்டனரா?

  ReplyDelete
 3. அந்த ஆசிரியையின் குழந்தைகளின் நிலையை நினைத்தால் மனம் வேதனைப்படுகிறது. இது போன்றதொரு அசம்பாவிதம் இனி நடக்கக் கூடாது. அதற்கு பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களுக்கும் சம பங்கு உண்டு. நாம் அனைவரும் கூட்டு முயற்சியாக இதை சாதிப்போம் நண்பர்களே.. வருங்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்..

  ReplyDelete
 4. ஆதிமனிதன்: உங்கள் அம்மாவும் ஆசிரியை ஆக இருந்தவர் என்பதால் அவர்கள் கஷ்டம் முழுக்க தெரியும் என நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 5. சிவகுமார்: இந்த கவிதை எழுதிய ஆசிரியை , மறைந்த உமா அவர்கள் வேலை செய்த பள்ளியில் வேலை செய்ய வில்லை. எனவே அவர்களுக்கு அந்த மாணவர்கள் தற்போதைய நிலை பற்றி அறிய வாய்ப்பில்லை

  ReplyDelete
 6. நமது கல்விமுறையில் பெருமளவு மாற்றம் வேண்டும். அதைச் செய்யாமல், ஆசிரியர் மாணவர் உறவு மேம்படும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

  ReplyDelete
 7. நித்திலம் மேடம். தங்கள் கருத்துக்கு நன்றி. இறந்த ஆசிரியையின் பெண்களை நினைத்தால் எனக்கும் மிக வருத்தமாகவே உள்ளது

  ReplyDelete
 8. ரகு: உண்மை தான். ஆசிரியர்களும் மேனேஜ்மெண்டால் மிகுந்த stress-க்கு ஆளாகிறார்கள். ஆனாலும் கூட நல்ல ஆசிரியை/யர் என சிலர் (ஆம் சிலர் மட்டும் தான்) இருக்கவே செய்கிறார்கள்.

  ReplyDelete
 9. மனதைத் தொட்ட கவிதை...

  கோபத்தில் செய்த ஒரு காரியத்தின் விளைவு எப்படி எல்லாம் இருவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது.....

  ReplyDelete
 10. வெங்கட் நாகராஜ் said...

  கோபத்தில் செய்த ஒரு காரியத்தின் விளைவு எப்படி எல்லாம் இருவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது.....
  ***
  Yes. you are correct Venkat. Thanks.

  ReplyDelete
 11. பெருங்கவிதைதான். உணர்ச்சி வேகத்தில் வரைந்து தள்ளிவிட்டார். சுருக்கமாகவும், கொஞ்சம் கருத்துச் செறிவுடனும் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் கொதித்தெழும் மன உணர்வுகள் எல்லாவற்றையும் வென்றுவிட்டன. வாழ்த்துக்கள் அவருக்கு. நன்றி உங்களுக்கு. ஆசிரியையின் ஆன்மாவின் கதறலை கேட்க முடிந்தது. உணர்வுகள் சுடுகிறது. பகிர்வுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 12. Anonymous3:00:00 AM

  //மோகன் குமார் said...
  சிவகுமார்: இந்த கவிதை எழுதிய ஆசிரியை , மறைந்த உமா அவர்கள் வேலை செய்த பள்ளியில் வேலை செய்ய வில்லை. எனவே அவர்களுக்கு அந்த மாணவர்கள் தற்போதைய நிலை பற்றி அறிய வாய்ப்பில்லை//
  மோகன் சார், இந்த ஆசிரியை வேறு பள்ளியை சேர்ந்தவர் என்பதறிவேன். நான் கேட்க விரும்பியதென்னவெனில் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் இப்போது சகஜ நிலைக்கு திரும்பி விட்டனரா என்கிற தகவல் பிற ஆசிரியர்களுக்கு தெரிய வாய்ப்பு அமைந்ததா என்பதே.

  ReplyDelete
 13. //துரைடேனியல் said...

  வாழ்த்துக்கள் அவருக்கு. நன்றி உங்களுக்கு. ஆசிரியையின் ஆன்மாவின் கதறலை கேட்க முடிந்தது. உணர்வுகள் சுடுகிறது. //

  *****
  நன்றி துரை டேனியல் சார்

  ReplyDelete
 14. சிவகுமார்: நன்றி. அந்த மாணவர்கள் குறித்த உங்கள் ஆர்வம் மெச்ச தக்கது. ஆசிரியை இடம் கேட்டு சொல்ல முயல்கிறேன்

  ReplyDelete
 15. சாதிகா: மகிழ்ச்சியும் நன்றியும்

  ReplyDelete
 16. கவிதை பல்வேறு கருத்துக்களை சொல்கிறது.

  ஆசிரியர் மாணவர் பெற்றோர் என்று மூன்று தரப்பின் இழப்பையும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது சிறப்பு.

  கவிதையில் அனைத்தையும் சொன்ன ஆசிரியைக்கு பாராட்டுக்கள்.

  அடுத்த இலக்கு நோக்கி பயணம் செய்யும் வீடு திரும்பல்-க்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. மனசு நெகிழ்கிறது.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 18. அமைதி அப்பா said...


  கவிதை பல்வேறு கருத்துக்களை சொல்கிறது.ஆசிரியர் மாணவர் பெற்றோர் என்று மூன்று தரப்பின் இழப்பையும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது சிறப்பு.

  ***
  நன்றி சார். கவிதை எழுதிய ஆசிரியை இதை வாசித்தால் நெகிழ்வாக உணர கூடும்

  ReplyDelete
 19. //Rathnavel Natarajan said...

  மனசு நெகிழ்கிறது.எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  ****

  நன்றி ஐயா !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...