Saturday, March 17, 2012

இந்திய பட்ஜெட் எப்படி? 7 பதிவர்கள் கருத்து

நண்பர்களே, பட்ஜெட் பற்றி வார பத்திரிக்கை, நாளிதழ்கள் மக்களிடம் கருத்து வாங்கி வெளியிடும் ! ப்ளாக் வாசிக்கும் நாம் பதிவர்களிடம் கருத்து கேட்பது தானே முறை? இந்திய பட்ஜெட் பற்றி அலசுகிறார்கள் 7 பதிவர்கள் !


மிடில் கிளாஸ் மக்களை பாதிப்பதற்கே வந்த மாதிரி இருக்கு இந்த பட்ஜெட். மிடில் கிளாசால் அதிகம் உபயோக படுத்தப்படும் பொருட்களான ஏ.சி, பிரிட்க், தங்கம், ரெடி மேட் டிரஸ் போன்றவை விலை ஏற்றம் செய்றாங்க. தங்கம் விலை ஏற்றத்தால் நகை கடைகள் மூணு நாள் ஸ்டிரைக் செய்றாங்கன்னா பார்த்துக்கோங்க ! முன்பு செல்போன் விலையை மட்டும் குறைசிக்கிட்டே போனாங்க. இப்போ செல்போன் இல்லாமல் இருக்க முடியாதுங்கிற நிலை எல்லாருக்கும் வந்துடுச்சு.

எல்லாருக்கும் தேவைப்படும் பொருட்களை விலை ஏத்துவதும், லவங்கம் மாதிரி யாரும் கேள்விப்படாத, அதிகம் யூஸ் செய்யாத பொருட்கள் விலை குறைப்பதும் என்ன லாஜிக்கோ?

சம்பளம் வாங்குவோருக்கு வெறும் ரெண்டாயிரம் வரி சலுகை தருவது எந்த விதத்தில் சரி என தெரியலை. பத்து லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு தான் இம்முறை வரி சலுகை நிறைய கிடைக்குது, இதை நினைச்சா மனசு வெறுத்து போகுது. சாதாரண மக்கள் உழைச்சு சம்பாதிக்கிற பணத்தை டேக்ஸ்ன்னு சொல்லி வாங்கிக்கிறாங்க. இந்தியாவிலேயே இருக்காதீங்க; வேற நாடு போயிடுங்கன்னு சொல்லாம சொல்றாங்களா?

பதிவர் மாதவன்

சேவை வரி இரண்டு சதவிகிதம் ஏற்றியது எனக்கு உடன்பாடு இல்லை. சேவை வரி அன்றாடம் தேவையான சேவைகளுக்கு கூட இருப்பதால் தான்.

பொழுதுபோக்கு / சினிமா / கேளிக்கை அத்தியாவசியம் அல்ல. அதற்கு ஏதோ ஒரு வகையில் வரி விலக்காமே!. தேவையா..? உண்மையில் ஆடம்பர சுகவாசிகளிடமிருந்து தான் அதிக வரி விதிக்க வேண்டும். கேளிக்கை இல்லை என்றால் உயிரா போகும். அது அத்தியாவசியமா?

சேலரிட் கிளாஸ் பெரும்பாலோனோர் எட்டு லட்சத்திற்கு குறைவாகவே சம்பாதிக் கின்றனர். அவர்களுக்கு அதிக பட்சமாக ஆண்டிற்கு ரெண்டாயிம் ரூபாய் மட்டுமே வருமா வரியிலிருந்து மிச்சப் படும் அதிக சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே (எட்டு லட்சத்திற்கு மேலாக) வருமான வரி சலுகை கிடைக்கும். அதாவது இரண்டு லட்சத்திற்கு இருபதாயிரமும். அதற்கான கல்வி வரியும் முழுவதுமாக கிடைக்கும்.

சாமானிய மக்களுக்கு வரிச் சுமைதான்.ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்..

பதிவர்  அமைதி அப்பா.

மருத்துவக் காப்பீடுகளுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் வரிச் சலுகையுடன், இப்போது ரூ. 5 ஆயிரம் வரையிலான மருத்துவப் பரிசோதனைகளுக்கும் விலக்கு அளிக்கப்படுவது வரவேற்க வேண்டிய விஷயம். இதன் மூலம், நோய் வருமுன் காக்க வழிக் கிடைக்கும். மற்றபடி வழக்கமான பட்ஜெட்தான்.

பதிவர் ராமலட்சுமி

இந்த பட்ஜெட் எவரையும் சந்தோஷப்படுத்தவில்லை. அதே நேரம் ‘எக்ஸைஸ் வரி 2% அதிகரிப்பு தவிர்த்து’ அதிகமாக எவரையும் கோபப்படுத்தவில்லை. எந்தத் தாக்கத்தையும் உருவாக்காத நிதிநிலை அறிக்கை இது என்று தான் சொல்லவேண்டும் !

ஆங்கில பதிவர்/ கம்பனி செகரட்டரி ரெங்கராஜன்

சர்வீஸ் டாக்ஸ் யாருக்கு apply ஆகும் என்பதற்கு பத்து லட்சம் என ஒரு லிமிட் உள்ளது. இம்முறை பலருக்கும் சர்வீஸ் டாக்ஸ் apply ஆகும் என்று ஆக்கியவர்கள் அந்த லிமிட்டையாவது அதிக படுத்தியிருக்கலாம். TDS-லும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் செய்யாமல் அதே அளவை வைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது

 பதிவர் ஆதி மனிதன் (அமெரிக்க வாழ் இந்தியர்)

இங்கு (அமெரிக்காவில்) வருமான வரி தாக்கல் செய்ய எல்லோரும் ஆவலுடன் இருப்பார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? தாக்கல் செய்த பின் கிடைக்கும் வரி ரீ-பண்டடிற்கு தான். இந்தியாவில் தான் அது எப்போது கிடைக்கும் என்றே தெரியாதே. இங்கு ஆன்லைனில் செய்தால் அடுத்த இரு வாரங்களுக்குள் வந்துவிடும்.

# வளர்ந்த/வளரும் நாடுகள் எதுவாக இருந்தாலும் சாதாரண மக்கள்/எல்லோரும் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளின் விலை ஏறினாலும் அதன் பாதிப்பு அதிகம். குறிப்பாக பெட்ரோல். இங்கு (அமெரிக்காவில்) கூட ஐந்து சென்ட் பெட்ரோல் விலையை ஏற்றினால் போதும். குய்யோ முறையோ என குதிப்பார்கள். பெட்ரோல் விலை ஒன்றை கட்டு படுத்தினாலே பல பொருட்களின் விலையை கட்டு படுத்தி விடலாம்.


# அதே போல் பல கோடி விலை கொடுத்து வாங்கும் ஒரு வீட்டிற்கு கூட அதற்குரிய பதிவு கட்டணத்தை செலுத்த கூடாது என்பதற்காக விற்பனை விலையை குறைத்து காட்டுகிறார்கள். அரசு/தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் தான் ஒழுங்காக வருமான வரி செலுத்துகிறார்கள். அதுவும் TDS முறையில் வருவதால்.

# சாமானியரை பாதிக்காத வகையில் போடும் எந்த பட்ஜெட்டும் நல்ல பட்ஜெட் தான். ஆனால் அது என்றுமே கனவுதான். நாம் எல்லோரும் ஒழுங்காக நம்முடைய வரிகளை கட்டினாலே போதும். இந்திய ஒரு முன்னேறிய நாடாகி விடும்.

# எதிர் கட்சியாக இருக்கும் எல்லா கட்சிகளும் இது மக்கள் விரோத பட்ஜெட் என்பதும், ஆளும் கட்சி இது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதும் கேட்டு கேட்டு புளித்து போன ஒன்று.

பதிவர் RVS

பர்ஸுக்கு வேட்டு வைக்கும் பொருட்களாக சோப்பு, லிப்ஸ்டிக் போன்ற அழகுசாதனப் பொருட்கள் என்று தீட்டி பெண்களின் சாபத்திற்கு ஆளாக வைத்திருக்கிரார் பிரணாப். தாய்க்குலங்களின் பேராதவரை இழக்க நேரிடும் என்று தெரியாதா? ஏசி, ஃப்ரிட்ஜ், உணவு விடுதிகளில் போஜனம் செய்வது, விமான பயணம், டிஜிடல் கேமரா, சிகரெட், குட்கா வாஷிங் மெஷின் என்று பர்ஸ் பழுக்கும் பட்டியல் நீளுகிறது. ஏதோ கொஞ்சம் காசு சம்பாதித்து குடிசைக்குள் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று எண்ணுவர்கள் எண்ணங்களில் எல்லாம் மண். இதற்கு பிரணாப்பின் பொன்மொழி “AS HAMLET SAID, ‘I MUST BE CRUEL ONLY TO BE KIND’. MAY BE PAINFUL IN SHORT TERM BUT GOOD IN LOGN RUN”. பப்ளிக்காக நாடகத்திலிருந்து மேற்கோள் காட்டி நடிக்கிறார் மனுஷன்.

இருபது இன்ச்சுக்கு குறைவாக உள்ள எல்சிடி, எல்ஈடி டீவிக்களை விலை உயர்த்தி இருபதுக்கு மேல் இருப்பவைகளுக்கு குறைத்திருக்கும் பிரணாப் எல்லோர் வீட்டிலும் பெரிசாக பொட்டி வாங்கி மாட்டி ஹோம் தியேட்டர் வைக்கத் தூண்டுகிறார். இதன் மூலமும் பர்ஸ் பதம் பார்க்கப்படும் என்று தெரியாதவரா அவர். நிறைய பொருட்களுக்கு விலையேற்றி எங்கே சாதாரண குடிமகன் கோமணத்தோடு போய்விடுவானோ என்றஞ்சி தரமான கம்பெனி தயாரிப்பு ஆடைகளுக்கு தள்ளுபடி தருகிறார். தீப்பெட்டிகளுக்கு விலையை குறைத்து சிகரெட்டுக்கு விலையேற்றி ஸ்மோக்கர்ஸ் வயிற்றில் பாலை வார்த்தார் என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. குண்டு பல்பு எரியவிட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தவிர்க்க CFL பல்புகளுக்கு சலுகை தருகிறார். சூரிய சக்தியில் இயங்கும் பொருட்களுக்கும் விசேஷ கவனிப்பு இருக்கிறது. மின்சாரம் எங்கே என்று கடவுள் போல தேடும் தேசத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கிறாராம். சரி சைக்கிளில் காலம் தள்ளலாம் என்றால் இறக்குமதி செய்யப்படும் சைக்கிள் மற்றும் உதிரி பாகங்களுக்கு வரி ஏற்றப்படுகிறது.

வருமான வரி உச்சவரம்பை(1,80,000லிருந்து 2,00,000) கொஞ்சம் உசர்த்தி ஆறுதல் அளித்திருக்கிறார் என்றாலும் பொதுஜனங்களின் பார்வையில்……… பட்ஜெட்…. படா ஜெட்…ஜெட்…..
*********** 
பதிவு ஏற்கனவே பெரிதாகி விட்டது. பதிவர்கள் கருத்தை அடுத்து பட்ஜெட் குறித்து வேறெங்கும் வெளியாகாத எக்ஸ்பெர்ட் கருத்துகள்/ பட்ஜெட் குறித்த ஒரு விரிவான பார்வையுடன் அடுத்த பதிவாக மிக விரைவில் வெளியாகும் !

பட்ஜெட் குறித்தும், இப்பதிவு குறித்தும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாம் ! 

17 comments:

 1. இங்கு வெளியிடப் பட்டுள்ள மற்றவர்கள் கருத்துக்களுடன் எனது கருத்து ஓரளவிற்கு ஒத்திருப்பது .. --- நன்று.

  ReplyDelete
 2. மிகச் சரியான அலசல்
  வித்தியாசமான சிந்தனை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தற்போதைய சூழலில் மிக நீண்ட பார்வையுடன் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட் இது என்பதே எனது கருத்து

  ReplyDelete
 4. //Madhavan Srinivasagopalan said...
  இங்கு வெளியிடப் பட்டுள்ள மற்றவர்கள் கருத்துக்களுடன் எனது கருத்து ஓரளவிற்கு ஒத்திருப்பது .. --- நன்று.//

  **********
  குறுகிய நேரத்தில் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மாதவா !

  ReplyDelete
 5. ரமணி: தங்கள் வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 6. இருதயம்: தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. பலரின் கருத்துகளை அறியத் தந்தமைக்கு நன்றி. நிபுணர்கள் கருத்தை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 8. இந்திய பட்ஜெட்டை அலசும் அந்தஸ்த்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி மோகன்! :-)

  ReplyDelete
 9. பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பப் படும் கதைகள் திருப்பி அனுப்பப் படுவது போன்ற நிலைமைதான் என் கருத்துக்கும் என நினைத்தேன். ஆனால், நீங்கள் 'ரொம்ப' நல்லவர் போல!

  நான் இங்கு (அமெரிக்காவில்) இருப்பதால் இந்திய பட்ஜெட்டின் தாக்கம்/பாதிப்பை பெருமளவில் உணர முடியவில்லை. என்னுடைய பொதுவான ஆதங்கங்களை தான் சொல்லி இருந்தேன். அதை பிரசுரித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. ராமலக்ஷ்மி said...
  பலரின் கருத்துகளை அறியத் தந்தமைக்கு நன்றி. நிபுணர்கள் கருத்தை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

  ***

  நன்றி மேடம்

  ReplyDelete
 11. RVS said...
  இந்திய பட்ஜெட்டை அலசும் அந்தஸ்த்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி மோகன்! :-)

  **

  அலோ ! பெரிய நாளிதழில் உள்ளவர்; சிறுகதை எழுத்தாளர். நீங்க எழுத சொல்லி தரணுமா என்ன ?

  ReplyDelete
 12. உங்கள் மெயில் பார்த்தப் பிறகுதான் பட்ஜெட் பற்றிப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். பதிவர்களின் கருத்துக்கள் ஒரே மாதிரி இருப்பது மகிழியளிக்கிறது. என்னுடைய கருத்தைக் கேட்டு அதனை வெளியிட்ட தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 13. Anonymous1:41:00 AM

  Thanks for sharing my thoughts!!

  ReplyDelete
 14. அமைதி அப்பா: நன்றி. குறைவான நேரத்திற்குள் தங்கள் பதில் தந்தமைக்கும் சேர்த்து தான் !

  ReplyDelete
 15. நன்றி சிவா !

  ReplyDelete
 16. அருமையான பதிவு.
  அருமையான கருத்துகள்.
  வருமான வரம்பு ஐந்து லட்சமாக வைக்கலாம். மாத சம்பளம் வாங்குபவர்கள் தான் கட்டுகிறார்கள். தொழில் வைத்திருப்பவர்கள் எழுதிக் காண்பித்து விடுகிறார்கள்.
  நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...