Saturday, June 2, 2012

சென்னையை சுற்றி பார்க்க.. சில டிப்ஸ்

மீபத்தில் நாளிதழில் செய்தி ஒன்று படித்தேன். சென்னையில் மட்டுமே இரண்டு மணி நேர மின்தடை. தமிழகத்தின் மற்ற ஊர்களில் குறைந்தது பத்து மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. இதனால் சென்னையில் உள்ளோர் வெளியூர் உறவினர் வீட்டுக்கு செல்வதை தவிர்க்க, அவர்கள் கிளம்பி சென்னை வருகிறார்களாம் !

கோடை விடுமுறையில் சென்னையை சுற்றி பார்க்கும் அனைவருக்கும் பயன்படும் என சில டிப்ஸ்கள் இதோ :

எந்த இடத்துக்கு போனாலும் காலையில் சீக்கிரம் கிளம்புவது நல்லது ! சனி, ஞாயிறில் கூட்டம் எங்கும் மிக அதிகமாக இருக்கும். நமக்கோ அந்த நாட்களில் தான் போக முடியும். விடுமுறை தினம் என்று மக்கள் சற்று மெதுவாக எழுந்து பதினோரு மணி போல் தான் இந்த இடங்களை அடைவார்கள். நீங்கள் ஒன்பது முதல் பத்துக்குள் பார்க்க வேண்டிய இடத்தை அடைந்து விட்டால் அனைத்து இடங்களிலும் சற்று கூட்டமின்றி பார்க்கலாம்.

அடுத்த விஷயம் எந்த வாகனத்தில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பது. நிச்சயம் மூன்று அல்லது நான்கு பேராய் போவதால் டூ வீலர் முடியாது. கார் என்றால் ஓகே. டூ வீலர், கார் இரண்டும் இல்லை என்றால், முடிந்த வரை ரயிலில் பயணம் செய்யுங்கள். சென்னையில் இப்போது பீச் டு தாம்பரம் ஒரு வழியிலும் , வேளச்சேரி டு பீச் இன்னொரு வழியிலும் ரயில் இயங்குவதால் உங்கள் வீடும், நீங்கள் செல்ல வேண்டிய இடமும் ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருக்க வாய்ப்புண்டு. ரயிலை விட வேகமாகவும், குறைவான பணத்திலும் பிரயாணிக்க சிறந்த வழி வேறு இல்லை. வீடு to ரயில்வே ஸ்டேஷன் அல்லது வேறு தேவைப்படும் இடங்களில் ஆட்டோ வைத்து கொண்டாலும், முடிந்தவரை ரயிலை பயன்படுத்துவது புத்தி சாலி தனம் !


தீம் பார்க்குகள் சென்றால் அங்குள்ள ராட்டினம் போன்ற விஷயங்களில் எடுத்த உடன் ஏறி விடாதீர்கள். ராட்டினம் ஒத்து கொள்ளாமல் புரட்ட ஆரம்பித்தால் பின் நாள் முழுதும் என்ஜாய் செய்ய முடியாமல் போய் விடும். என்னை பொறுத்தவரை ராட்டினம் வகை ஐட்டங்களை முழுவதும் தவிர்த்து விட்டு மற்றவை மட்டுமே என்ஜாய் செய்வேன்.

வாட்டர் கேம்ஸ் இருந்தால் குழந்தைகளுக்கு அதில் போடப்பட்டுள்ள க்ளோரின் காரணமாக நிறம் மாறும் வாய்ப்பு உண்டு. இதை நினைவில் கொள்க. எங்கள் பெண்ணுக்கெல்லாம் சில இடங்களில் வாட்டர் கேம்ஸ் ஆடி விட்டு, மாறிய உடல் நிறம் மீண்டும் பழைய படி வர பல மாதங்கள் ஆனது !

சாப்பாடு : பல தீம் பார்க்குகளில் சாப்பாடு உள்ளே அனுமதி இல்லை. அங்கு கிடைக்கும் சாப்பாடு மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதுவும் மிக சுமாராக தான் இருக்கும். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து போவதை பொதுவாய் தவிர்த்து விடுவது நல்லது. அவர்கள் சாப்பாட்டை உள்ளே விடாவிடில் அது வேஸ்ட் ஆகும். நீங்கள் வீணாய் வாக்கு வாதத்தில் இறங்குவீர்கள். அவரோ அது தான் ரூல்; மாற்ற முடியாது என்பார். அதை விட முக்கியமாக நாள் முழுதும் வெளியே சுத்த போகும் போது பெண்களுக்கு சமையல் என்று இன்னும் சிரமபடுதுவது தவறு. காலை அடுப்படியில், அனலில் சமைத்து விட்டு வந்து, பகலில் அவர்களால் என்ஜாய் செய்ய முடியாமல் போகலாம். வெளியில் சாப்பிடும் போது செலவானாலும் சரி என நல்ல ஹோட்டலில் சாப்பிடுவதும் சுத்தமான தண்ணீர் குடிப்பதும் அவசியம்

காமிரா எடுத்து போனால் அந்த இடங்கள் + நினைவுகளை பதிவு செய்து வரலாம். குழந்தைகள் பின் அவற்றை பார்த்து மிக மகிழ்வார்கள்.

இப்படி லோக்கல் ட்ரிப் போகும் போது அநேகமாய் சொந்த கார சிறுவர்களும் நம்முடன் வருவார்கள். அவர்களை நம் கண் பார்வையில் வைத்து, எங்கும் தொலைந்து விடாமல் சமாளிப்பதே பெரிய வேலை. இதை எப்போதும் சர்வ ஜாக்கிரதையுடன் செய்யும் போதும், இன்னொரு எளிய வழி வைத்துள்ளேன். சிறுவர்கள் அனைவரிடமும் பத்து ரூபாய் சில்லறையாக தந்து விடுவேன். எங்காவது மிஸ் ஆகி விட்டால், அந்த காசை வைத்து எனது மொபைல் எண்ணுக்கு போன் செய்யுங்கள் என எனது போன் நம்பரை ஒரு தாளில் குறித்து தந்து விடுவேன். கிராமத்தில் குடை எடுத்து போனால் மழை வராது என்பார்கள். அதை போல, என்னுடன் வரும் சிறுவர்கள் அந்த பணத்தை உபயோகம் செய்ய சந்தர்ப்பம் இதுவரை வரவில்லை !

தலைவலி, வாந்தி இவற்றுக்கான மாத்திரை எடுத்து செல்வது நல்லது.

நீங்கள் பதிவராய் இருந்தால் சென்று வந்த கையோடு அந்த அனுபவங்களை ஒரு பதிவாக எழுதி விடுங்கள். அந்த இடங்களுக்கு செல்வோருக்கு அது உதவ கூடும் !

அதீதம் மே 5 இதழில் வெளியானது .
***********
சமீபத்திய பதிவுகள்:

ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும

குளு-மணாலி பயணம் -படங்கள் டிரைலர்

சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை

25 comments:

  1. நல்ல குறிப்புகள் மோகன். மொபைல் நம்பர் கொடுக்கும் ஐடியா நல்ல விஷயம். டென்ஷன் ஆக வேண்டாமே.....

    ReplyDelete
  2. நல்ல குறிப்புகள்.. மொபைல் நம்பர் ஐடியாவை நாங்களும் பின்பற்றுவதுண்டு. அதேமாதிரி தீம் பார்க்குகள் போனாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி வெச்சுக்கிட்டு, எங்கே சுத்தினாலும் அங்கே எல்லோரும் இத்தனை மணிக்கு சேர்ந்துக்கணும்ன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்குவோம்.

    ReplyDelete
  3. அருமையான யோசனைகள், குறிப்புகள் ..!

    ReplyDelete
  4. நல்ல யோசனைகள். நன்றி!

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வுகள் ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  6. அனுபவக் குறிப்புகள் அனைத்தும் நன்று. பலருக்கும் பயனாகும்.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  8. -நீங்கள் சொன்ன நேரம் சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர் கட் என்று மாறி விட்டது! மற்ற ஊரிலும் குறைந்து விட்டதாம்!
    -மின் வண்டியை விட சிறந்த நண்பன் வேறு இல்லை.... குறைந்த பயணக் கட்டணத்துக்கும்!
    -தொலைந்து போகும் சிறுவர்களைக் கண்டு பிடிக்க நல்ல டிப்ஸ்...!
    -கடைசி டிப்ஸ் உட்பட...(அது சொல்லவே வேண்டாமல....செஞ்சுடுவோம்ல...!) எல்லாமே நல்ல டிப்ஸ்.

    ReplyDelete
  9. நன்றி வெங்கட்

    ReplyDelete
  10. அமைதிச்சாரல் said...
    தீம் பார்க்குகள் போனாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி வெச்சுக்கிட்டு, எங்கே சுத்தினாலும் அங்கே எல்லோரும் இத்தனை மணிக்கு சேர்ந்துக்கணும்ன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்குவோம்.//

    **********

    நல்ல ஐடியா நன்றி

    ReplyDelete
  11. நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  12. நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  13. நன்றி ராஜ ராஜேஸ்வரி

    ReplyDelete
  14. மகிழ்ச்சி நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  15. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  16. விரிவான கருத்துக்கு மிக நன்றி மகிழ்ச்சி ஸ்ரீராம்

    ReplyDelete
  17. அந்தக் கடைசி வரி.. உங்க டச்.
    சென்னை வரப்போ உங்களைத் தேடி வரலாம்னு நெனச்சிட்டிருந்தேன்..:)

    ReplyDelete
  18. வவ்வால்!பதிவு போட மோகன்குமார் உங்களைத்தான் கூப்பிடுகிறார்!

    ReplyDelete
  19. மோகன்,

    //கோடை விடுமுறையில் சென்னையை சுற்றி பார்க்கும் அனைவருக்கும் பயன்படும் என சில டிப்ஸ்கள் இதோ :
    //

    கோடை விடுமுறை முடிஞ்சுப்போச்சுங்க்ணா :-))

    இது அடுத்த கோடை விடுமுறைக்கான முன் கூட்டிய டிப்ஸ் ஆ :-))

    ராஜ் ,இந்த பதிவுக்கும் ஒரு பதிவு போட சொல்றார் பாருங்க :-))

    பதிவு போட நிறைய ஸ்கோப் இருக்கு ஆனால் இப்போ வேண்டாம் அடுத்த கோடை விடுமுறைக்கு முன்னர் போடுகிறேன்,

    ஏன் எனில் இந்த பதிவில் சென்னையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கல் எவைனு குறிப்பிடப்படவே இல்லை. எந்த இடத்திற்கு எந்த மார்க்கமாக செல்ல வேண்டும் என்றெல்லாம் விவரம் கொடுக்கணும்.

    ஹி..ஹி எப்பூடி ,நாம எல்லாவற்றிலும் கண்டுப்பிடிப்போம்ல என்ன விட்டுப்போச்சுனு!

    ReplyDelete
  20. நன்றி அப்பா துரை

    ReplyDelete
  21. ராஜ நடராசன் தான் வவ்வாலா? சொல்லி வைத்த மாதிரி அடுத்தடுத்து வர்றீங்களே ? :))

    ReplyDelete
  22. அதீதம் இதழில் வெளிவந்து ஒரு மாசம் ஆகிடுச்சு ! இங்கு பகிரத்தான் லேட். சென்னையின் இடங்களை சனி, ஞாயிறில் சுற்றி பார்ப்போருக்கும் இது பொருந்தும் !

    ReplyDelete
  23. nan chennai ku puthusaa padikka varen . suthi pakka enna area la irukku nu ful new post potta nalla irukkum . sir . thanks

    ReplyDelete
  24. Just back from VGP... and seeing your post on a similar topic... good Ideas.. Thanks

    ReplyDelete
  25. அனைத்தும் நல்ல டிப்ஸ்...... நீங்கள் மறந்து போன ஒரு டிப்ஸ் உங்கள் வாசகர்களுக்காக இதோ சென்னையை சுற்றி பார்க்க வருகீறீர்களா மறக்காம மோகன் குமார் சார் வீட்டுக்கு வந்துடுங்கோ அவரே உங்களை எல்லாம் இடத்திற்கும் கூப்பிட்டு போய் உங்களை மிக அழகாக போட்டோவும் எடுத்து தருவார் என்பதுதான் அது. மோகன் சார் நான் சொன்ன டிப்ஸ் சரிதானா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...