Wednesday, June 13, 2012

வானவில்-92-மனம்கொத்தி பறவை-விஜய் டிவி

சென்னை ஸ்பெஷல் : இப்படியும் நடக்குது !

எங்கள் தெருவில் ஒருவர், வாடகைக்கு விட்டிருந்த சொந்த வீட்டை இடித்து விட்டு கட்டினார். பின் தானே குடி வந்தார்.ஆறு மாதத்தில் இங்கு பிடிக்கலை என விற்க முயற்சி செய்து ஒருவரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு விற்றும் விட்டார். புதிதாய் வீடு வாங்கியவர் (??) வந்து க்ரகப்ரவேசம் எல்லாம் முடித்தார். அப்புறமும் வீடு பூட்டியே கிடந்தது. இந்த வாரம் இன்னொருவர் அதே வீட்டுக்கு க்ரகப்ரவேசம் செய்ய, என்ன என்று விசாரித்தால், முதலில் வாங்கியவரால் பணம் முழுசும் தர முடியலையாம். எனவே இன்னொருவர் வீட்டை வாங்கி விட்டாராம்  !

ஒரு வருஷத்தில் இந்த வீட்டுக்கு மூணு பேர் க்ரகப்ரவேசம் பண்ணியிருக்காங்க. (வாடகைக்கு அல்ல, மூவரும் வீட்டை வாங்கியவர்கள் என்பது தான் முக்கியம் !) ராசியில்லை என்கிற செண்டிமெண்டுக்குள் எல்லாம் போக விரும்பலை, அதில் நம்பிக்கையும் இல்லை. எனக்கு அதிக ஆச்சரியம் தந்தது ஒரு முறை பால் காய்ச்சி க்ரகப்ரவேசம் செய்தவர், மீதம் பணம் தர முடியாமல் வீட்டுக்கு வராமலே போனது தான் ! நகர வாழ்வில் இதெல்லாம் சாதரணமப்பா என்கிறார் சென்னையில் பிறந்து வளர்ந்த என் வீட்டம்மா ! கிராமத்தில் வளர்ந்த எனக்கு தான் ஆச்சரியமா இருக்கு !

போஸ்டர் கார்னர்

தமிழில் ஒழுங்கா தான் எழுதிருக்காங்க. இங்க்லிஷில் படிச்சா, நாம படிச்ச இங்கிலீஷ் மறந்துடும் போல இருக்கு.. "Theft are missing" என எழுதிய மகானுபாவன் யாருப்பா? Brilliant !


என்ன்ன்னா பாட்டுப்பா இது !

ராஜாவின் இன்னொரு ஆள் டைம் பெஸ்ட் நிழல்களில் இடம் பெற்ற " பூங்கதவே தாழ் திறவாய்". ஒரு பாட்டுக்கு மெட்டு எப்படி போடவேண்டும் என்பதையும், சினிமா பாடல்களில் வயலின் எப்படி பயன்படுத்தணும் என்பதையும் புது இசை அமைப்பாளர்கள் இந்த பாட்டை பார்த்து கற்று கொள்ளலாம்.

இந்த பட நாயகி செம அழகு. அவர் நடித்த படம் ஏதும் ஓடாததால் அதிகம் பிரபலம் ஆகாமல் பீல்டை விட்டு போனார்.

சரணத்தில் ஆண் குரல் ஒவ்வொரு வரி பாடி முடிக்கும் போது பெண் குரல் "" ம்ம்ம்ம் " என்பதும், பெண் பாடும் போது ஆண் அதே போல் " ம்ம்ம்ம் " என்பதும் தான் இந்த பாட்டின் ஹை லைட். Simply superb.

பாரதிராஜா பாடல்களை படமாக்குவதில் எக்ஸ்பர்ட். ஆனால் இந்த பாட்டை அவர் இன்னும் கூட சிறப்பாக படமாக்கியிருக்கலாம்.
சிறுவயது முதல் இன்று வரை இந்த பாட்டின் மீதான காதல் குறைய வில்லை. ராஜா யூ ஆர் கிரேட் !
அய்யாசாமி கார்னர்

" Excuse me" இந்த வார்த்தை உச்சரிப்பது அய்யாசாமிக்கு மிக கஷ்டமான விஷயம். எக்ஸ் -சுடன் கியூசும் உடனே சேர்த்து சொல்ல முடியாத படி நாக்கு சுழற்றி கொள்ளும். இது ரொம்ப நாள் அவருக்கு பெரிய பிரச்சனையாய் இருந்தது.

பின் இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். "எக்ஸ் கியூஸ் " என்பதை தன் வசதிக்கேற்ப இப்படி மாற்றி விட்டார். "எஸ் கியூஸ் மீ" (Escuse me ) ! இப்படி கொஞ்ச நாள் ஓட்டினாலும் உங்களை மாதிரி நல்ல நண்பர்கள் அதை கண்டுபிடித்து கலாய்க்க மறுபடி பிரச்சனை. இம்முறை இன்னொரு வழி.

"எக்ஸ் என்று சொல்வதிலும் பிரச்சனை இல்லை. கியூஸ் என்பதிலும் பிரச்சனை இல்லை. ரெண்டையும் சேர்த்து சொல்வது தான் பிரச்சனை" என ஆய்ந்தறிந்த அய்யாசாமி இரண்டுக்கும் இடையே ஒரு நொடி கேப் விட்டு சொல்ல ஆரம்பித்தார். "எக்ஸ்........கியூஸ் மீ " !!

இன்னமும் கூட இந்த வார்த்தை சொல்வதென்றால் அவருக்கு உதறல் தான் ! நேரில் பார்த்தால் அவரை உச்சரிக்க சொல்லி கேளுங்கள் செம காமெடியாய் இருக்கும் !

கேள்வி தாளில் சினிமா கேள்விகள்


இந்த கேள்வி தாளை கூகிள் பஸ்ஸில் பார்க்க முடிந்தது. SRM யூனிவர்சிட்டி கேள்விதாளில் ‘ நாயகன் சினிமா பற்றியும், வெய்யில் மற்றும் த்ரீ இடியட் பற்றியும் தான் கேள்விகள் முழுக்க இருக்கு. அப்புறம் தான் கோர்சை பார்த்தால் B.S c Film Technology என்று இருந்தது.
ஹும் நானெல்லாம் இந்த பரிட்சை எழுதினா பின்னி எடுத்திருப்பேனாக்கும் !

அண்ண்ண்ண்ணா - தங்கச்ச்ச்ச்ச்சி

விஜய் டிவி நீயா நானாவில் அண்ணன் தங்கை பற்றி Promo போட்டு காண்பித்த அழுகை காட்சிகள் நிகழ்ச்சியை பார்க்க வைத்தது. முதல் ரெண்டு ரவுண்டில் தங்கள் இளமை கால நினைவுகளையும் அப்போது அண்ணன் எப்படி எல்லாம் உதவினார் என்றும் அழுது கொண்டே சொல்லிய அதே பெண்கள், அண்ணி வந்த பிறகு எல்லாமே மாறி போனதாக தவறாமல் கூறினர். நிகழ்ச்சி முழுதுமே அனைவரும் அண்ணி என்கிற பெண்ணை வில்லியாக்கி விட்டனர். இது நேரடியே திட்டாமல்,. " கல்யாணத்துக்கு பிறகு" " அவர் பிள்ளைங்க வந்தப்புறம்" " இப்போல்லாம்" என்று அண்ணி பேரை சொல்லாமல் சொல்லினர். கோபிநாத் நீங்கள் மறைமுகமாய் அண்ணியை தான் சொல்கிறீர்கள் என்று சொல்லியதற்கு யாரும் எதிர்க்கலை.

பவர் ஸ்டார் பற்றி போட்டு வாங்கி கட்டி கொண்டதை உடனே மறக்க விஜய் டிவிக்கு இந்த நிகழ்ச்சி உதவி இருக்கும் !

முகநூல் கிறுக்கல்கள்

** முதல்வர் அம்மா இடை தேர்தலில் காட்டும் ஆர்வத்தையும் முனைப்பையும் தமிழக மக்கள் நலனில் காட்டினால் தமிழ் நாடு எங்கேயோ போயிடும் !

** மனம் கொத்தி பறவை படத்தில் மூணு பாட்டுகள் செம அட்டகாசமா இருக்கு. மியூசிக் இமானாம் .. ஆச்சரியம் ! (மைனா படத்திலும் நல்ல மியூசிக் போட்டிருந்தார். ) இந்த படத்தில் மூணு பாட்டும் குத்து பாட்டுகள் .. ஆனா மிக மிக ரசிக்கும் படி இருக்கு. எளிதாக நடனம் ஆடும் படி மியூசிக். வெல் டன் இமான் !

** பத்து வயசான போது அம்மா- அப்பா திட்டுவதை நிறுத்திட்டாங்க
பள்ளி முடிக்கும் போது அண்ணன்கள் திட்டுவதை விட்டுட்டாங்க
மனைவி திட்டுவது மட்டும் எத்தனை வயசானாலும் நிக்க மாட்டேங்குது :((

29 comments:

 1. Fantastic வானவில்! சென்னையில் இப்படியான நிகழ்வுகள் எனக்கும ஆச்சரியமே... நிழல்கள் ஹீரோயின் செம அழகா... நல்ல கிண்டல்! கடைசியில் முடிச்சிருக்கற பஞ்ச் சூப்பர்ப்.

  ReplyDelete
 2. போஸ்டர் கார்னர் பேஸ் புக்கிலிருந்து சுட்டதாக தெரிகிறது. எனக்கு என்னமோ, ஏதோ எடிட் செய்திருப்பது போல் தெரிகிறது. வாக்கியத்திற்கு வாக்கியம் இப்படி தவறாக எழுத வாய்ப்பில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.

  //ராஜா யூ ஆர் கிரேட் !//

  ராஜா ராஜா தான்.

  எக்ஸ்கியூஸ் மீ என்ன சொல்றீங்க? எனக்கும் அப்படிதான். ஆங்கில வரத்தை 'A' நாம் உச்சரிப்பதற்கும் இங்கு உச்சரிக்கப்படுவதற்கும் வித்தாயசம் உண்டு. கடைசிவரை எனக்கு இவர்களின் 'A' உச்சரிப்பு வராது. நான் 'A' என்றால் இவர்கள் அதை 'E' ஆக தான் எடுத்துக் கொள்வார்கள்.

  //பவர் ஸ்டார் பற்றி போட்டு வாங்கி கட்டி கொண்டதை //

  ஓ, அப்ப எல்லோருக்கும் பவர் ஸ்டாரிடம் கோபிநாத் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை தானோ.

  //மனைவி திட்டுவது மட்டும் எத்தனை வயசானாலும் நிக்க மாட்டேங்குது :((//

  இதை அவசியம் படிக்க சொல்லுங்கள் உங்கள் வீட்டு பாஸை. இன்னும் பத்து வருடங்கள் கழித்து. அப்போதும் நிச்சயம் உங்களை திட்டுவார்கள் என நம்புவோமாக.

  ReplyDelete
 3. //ஒரு முறை பால் காய்ச்சி க்ரகப்ரவேசம் செய்தவர், மீதம் பணம் தர முடியாமல்//

  மொத்தப் பணம் தரும்முன்பே வீட்டைக் கொடுத்தது எப்படி?

  //Theft are missing"//

  அது மட்டுமா? Dont parking - என்று தொடங்கி மொத்த வாக்கியமுமே நம்மை சீத்தலைச் சாத்தனார் ஆக்கிவிடும்போல!!

  உங்களுக்கு Excuse me-ஆ? எனக்கு "Rural"!! தனியாச் சொல்லும்போது சொல்லிடுவேன். வாக்கியத்துல வாசிக்கும்போதுதான்... (யாருக்கும் தெரியாது. சொல்லிடாதீங்க!!) :-)))

  //அண்ணன் தங்கை//
  அண்ணன் தனக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் சகோதரிகள் எத்தனை பேர் தம் நாத்தனார்களுக்கு உதவியிருப்பார்கள்/ உதவ விட்டிருப்பார்கள்?

  திருமணம் முடிந்த பின் கணவனின் வருமானத்திற்குள்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது (பல) இந்தியப் பெண்களுக்கு புரிவதே இல்லை. உடன்பிறந்தவன் என்றாலே தன் சுமைகளை(யும்) சுமக்கப் பிறந்தவன் என்று நினைக்கும் காலம் எப்போதான் மாறுமோ!!

  //மனைவி திட்டுவது மட்டும் எத்தனை வயசானாலும்//

  எத்தனை வயசானாலும் சின்னப்புள்ளைத்தனமாவே இருந்தா??!! :-D

  ReplyDelete
 4. பாடிய ஆண்குரல் சுரேந்தர் என நினைக்கிறேன்...இந்த பாடலின் ரிதம் மற்றும் மெலடி...காற்றில் மிதந்துவரும் தென்றல் போன்ற சுகம் இசையில் ஒரு வித சிலிர்ப்பு ....

  ReplyDelete
 5. பூங்கதவே தாழ் திறவாய்....அந்தப் பாடல் பாடியது சுரேந்தர் இல்லை தீபன் சக்கரவர்த்தி. இன்னும் சில நல்ல பாடல்கள் பாடியிருக்கிறார். திருச்சி லோகநாதன் மகன் என்று ஞாபகம். டி எல் மகராஜன் இன்னொரு மகன்.

  வீடு பற்றி நீங்கள்தான் எழுதணும் வீடுதிரும்பல் மோகன் ஆச்சே...!

  ReplyDelete
 6. // மனைவி திட்டுவது மட்டும் எத்தனை வயசானாலும் நிக்க மாட்டேங்குது//

  அடி இந்த முறை கொஞ்சம் அதிகம் போலிருக்கு.

  ReplyDelete
 7. அப்பாடா,, நாங்கள் தூத்துக்குடியில் புதிதாக வாங்கியுள்ள வீட்டுக்கு கிரகபிரவேசமே பண்ணவில்லை... பழைய ஓனர் புதுவீடுவாங்கி ஓகோன்னு கிரகபிரவேசம் பண்ணி ஒருவருடத்தில் எங்களுக்கு விற்றுவிட்டார்...

  நீயா நானாவில் அந்த பாசமலர்களின் அழுகாச்சி கொஞ்சம் அதிகம்தான்.

  எக்ஸ்கியூஸ்மீயில் யூவை கொஞ்சம் இழுத்து விடுங்கள் (எக்ஸ்கியூ....ஸ்மீ ன்னு) பொண்ணுங்கல்லாம் திரும்பி பார்ப்பாங்க

  ReplyDelete
 8. //போஸ்டர் கார்னர்//

  ஆதி மனிதன் அவர்கள் சொல்லியிருப்பது சரியென்றே நினைக்கிறேன். இந்தளவிற்கு தவறாக எழுதியிருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை.

  //விஜய் டிவி நீயா நானாவில் அண்ணன் தங்கை பற்றி Promo போட்டு காண்பித்த அழுகை காட்சிகள் நிகழ்ச்சியை பார்க்க வைத்தது//

  பல வாரமா ரொம்பவே ரசிச்சு பார்த்த நிகழ்ச்சி இது. இப்பல்லாம் செம மொக்கை.

  தமிழ் மக்களின் சென்டிமெண்ட்டை நம்பியே பல நிகழச்சிகளை ஓட்டுகிறார்கள். இதென்ன 'விஜய்' டிவியா, இல்லை 'விக்ரமன்' டிவியா?

  ReplyDelete
 9. என்னென்ன கற்பனைகளுடன் பால் காய்ச்சினார்களோ?
  --

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 10. தமிழை கொலை செய்கிறவர்கள் ஆங்கிலம் பக்கம் மாறி விட்டார்களோ போஸ்டரில் ஆங்கிலம் கிழிந்து தொங்குகிறதே

  ReplyDelete
 11. கணேஷ் சார்: நிழல்கள் ஹீரோயின் அழகாய் இல்லை என்கிறீர்களா? நல்லா தானே இருக்கார்? ஒவ்வொருத்தருக்கும்
  ஒவ்வொரு டேஸ்ட். தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. ஆதி மனிதன்

  //ஓ, அப்ப எல்லோருக்கும் பவர் ஸ்டாரிடம் கோபிநாத் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை தானோ.//

  என்னங்க இணையத்தில் ஒரு புயலே அடிச்சு ஓய்ந்திருக்கு இப்படி கேட்குறீங்க !

  //என்னமோ, ஏதோ எடிட் செய்திருப்பது போல் தெரிகிறது. //

  நீங்கள் சொன்ன பிறகு லைட்டா சந்தேகம் வருது

  நீண்ட நாள் கழித்து இணையம் பக்கம் நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 13. ஹுஸைனம்மா said...

  //மொத்தப் பணம் தரும்முன்பே வீட்டைக் கொடுத்தது எப்படி?//

  எனக்கும் அதே டவுட் உண்டு !

  *****
  //எத்தனை வயசானாலும் சின்னப்புள்ளைத்தனமாவே இருந்தா??!! :-D

  இப்படி :D எல்லாம் போட்டு எழுதினா என்னா அர்த்தம் ? ஸ்மைலி தானே? வேறு அர்த்தம் உண்டா? சொல்லி தரவும்

  ReplyDelete
 14. கலா குமரன்: பாடியவர் தீபன் சக்கரவர்த்தி ; பெண் குரல் உமா ரமணன்

  ReplyDelete
 15. ஸ்ரீராம்: பாடகர் குறித்த தகவல்கள் சரியாய் சொன்னீர்கள் ; நன்றி

  ReplyDelete
 16. விஸ்வநாத்: நீங்களும் அய்யாசாமி மாதிரி அனுபவஸ்தர் போல.. :))

  ReplyDelete
 17. உமா மேடம்: எக்ஸ்கியூஸ்மீக்கு தந்த ஐடியா நன்று . நன்றி

  ReplyDelete
 18. மாதவி: நன்றி

  ReplyDelete
 19. ர‌கு said...


  //பல வாரமா ரொம்பவே ரசிச்சு பார்த்த நிகழ்ச்சி இது. இப்பல்லாம் செம மொக்கை.//


  முழுக்க அப்படி சொல்ல முடியலை. நம்ம வீட்டம்மா தொடர்ந்து பார்க்கிறார். நானும்.

  ReplyDelete
 20. தனபாலன் சார்: நீயா நானா உங்கள் வீட்டில் விளைவித்த நிகழ்வுகளை சுவையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி :))

  ReplyDelete
 21. ராமலக்ஷ்மி said...


  என்னென்ன கற்பனைகளுடன் பால் காய்ச்சினார்களோ?
  **

  உண்மை தான். நன்றி

  ReplyDelete
 22. பிரேம்: அந்த போஸ்டர் படிக்கும்போது செம காமெடியா இருக்கு ! நன்றி !

  ReplyDelete
 23. \\தமிழில் ஒழுங்கா தான் எழுதிருக்காங்க. இங்க்லிஷில் படிச்சா, நாம படிச்ச இங்கிலீஷ் மறந்துடும் போல இருக்கு..\\ அதுசரி, இந்த ஸ்டேண்டுக்கு தமிழே தெரியாம வந்து பைக்கை நிறுத்தும் வெள்ளைக்கார துரை யாரோ!!

  ReplyDelete
 24. \\" Excuse me" \\ இதை ஒரு பொண்ணு சொல்லும் போதெல்லாம் "Yes, kiss me!" என்று சொல்வது போலவே இருக்கு -ன்னு டிவிடர்ல யாரோ எழுதியிருந்தாங்கலாம்!!

  ReplyDelete
 25. \\அண்ண்ண்ண்ணா - தங்கச்ச்ச்ச்ச்சி \\ சின்ன வயசில் அவங்க எப்படி கூப்பிடுவாங்க என்று கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்களைக் கேட்டு விட்டு மூடி விட்டேன் சகிக்கலை.

  ReplyDelete
 26. \\மனைவி திட்டுவது மட்டும் எத்தனை வயசானாலும் நிக்க மாட்டேங்குது :((\\ திருமணத்துக்குப் பின் மனைவிதான் ஒருத்தனுக்கு தாய், தந்தை இடத்தை நிரப்புகிறாள் என்று இதைத்தான் சொன்னார்களோ!!

  ReplyDelete
 27. \\அப்போது அண்ணன் எப்படி எல்லாம் உதவினார் என்றும் அழுது கொண்டே சொல்லிய அதே பெண்கள், அண்ணி வந்த பிறகு எல்லாமே மாறி போனதாக தவறாமல் கூறினர். நிகழ்ச்சி முழுதுமே அனைவரும் அண்ணி என்கிற பெண்ணை வில்லியாக்கி விட்டனர். \\
  பாஸ் இது காமடியா இருக்கு. ஏன்னா, இந்தப் பெண்களுக்கும் தற்போது திருமணமாகியிருக்கும். இவங்களோட கணவர்களின் சகோதரிகளுக்கு இவங்களும் வில்லிகள் தானே!! ஹா....ஹா....ஹா....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...