Saturday, June 16, 2012

சாலைகளில் குழந்தைகள் - ஜாக்கிரதை !

மீபத்தில் வாசித்த செய்தி ஒன்று: கணவன் , மனைவி,  இரண்டு வயது சிறு குழந்தை மூவரும் எங்கோ சேர்ந்து சென்றுள்ளனர். மனைவி கடையில் இறங்கி ஏதோ வாங்க, கணவன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு அதன் மேல் குழந்தையை வைத்து விட்டு அருகில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்திருக்கிறார். அங்கு வந்த கார் ஒன்று வண்டி மீது மோத, குழந்தை கீழே விழுந்து வண்டியின் பின் சக்கரம் மேலே ஏறி குழந்தை அந்த இடத்திலேயே இறந்து விட்டது. அம்மா- அப்பா அருகில் இருக்கும் போதே அவர்கள் கண் முன்பே இந்த கொடுமை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

இந்த செய்தி வாசித்த பிறகு ஆங்காங்கு நிறுத்த பட்ட வண்டியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளும், அருகில் உள்ள கடையில் சென்று பொருள் வாங்கும் தந்தையரையும் அடிக்கடி பார்த்தேன். அது தான் இந்த கட்டுரை எழுத வைத்தது.

குழந்தைகளை கையில் தூக்கி போகாமல் வண்டியிலேயே வைத்து விட்டு போவது என்ன விதமான அலட்சியம் ! முதல் சம்பவத்தில் சொன்னது போல் கார் வந்து மோத வேண்டாம். பையன் தானாகவே கீழே விழுந்து அடிபட நிறையவே வாய்ப்பு உண்டு. ஏன் இந்த அலட்சியம் பெற்றோருக்கு?

என் வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்கிறேன். எங்கள் குழந்தை மூன்று வயது சிறுமியாக இருக்கும் போது கட்டி முடிக்க படாத ஒரு வீட்டிற்கு குடி போனோம். ஆங்காங்கு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு சனிக்கிழமை குழந்தையை என்னிடம் விட்டு விட்டு மனைவி அலுவலகம் சென்று விட்டார். பெண் அருகில் இருக்கும் இன்னும் சில குழந்தைகளிடம் விளையாடுகிறேன் என்று சொல்லி போனாள்.

வீட்டை ஒட்டி ஒரு சந்து. அதற்கு போக வீட்டிலிருந்து இறங்கலாம். எங்கள் பில்டிங் சற்று உயரமாக இருந்ததால் கால் வைத்து இறங்க ஒரு பெரிய பாறாங்கல் போட்டு வைத்திருந்தனர். எங்கள் பெண் இறங்கும் போது, கீழே விழுந்து விட பாறாங்கல்லில் முகம் போய் மோதி முன்பற்கள் இரண்டும் உடைந்து விட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தால், முகம் மற்றும் உடை முழுக்க ரத்தமாக நிற்கிறாள்.பல் டாக்டரிடம் அழைத்து சென்று காட்டி, பின் வீட்டிற்கு கூட்டி வந்து தூங்க வைத்தேன். மாலை அலுவலகம் முடிந்து வந்து பார்த்து விட்டு என் மனைவி கண்ணீர் விட்டார்.

எட்டு வயதில் மற்ற பற்கள் விழுந்து முளைக்கும் வரை, நான்கைந்து வருடம் முன் பல் இன்றி இருந்தாள். பார்க்கும் போதெல்லாம் நான் தவறு செய்த மாதிரி மனம் உறுத்தும்.

வீட்டிலிருந்து அந்த சந்தில் இறங்குவது நமக்கு சாதாரணம். ஆனால் அதுவே சிறு குழந்தைக்கு எத்தனை பெரிய ரிஸ்க் ஆக உள்ளது பாருங்கள் ! அந்த இடத்தை பார்த்தால் நமக்கு அவ்வளவு பெரிய ரிஸ்க் ஒளிந்திருப்பதே தெரியாது. "சிறு குழந்தைகளை கண் பார்வையிலேயே வைத்து வளர்க்கணும்" என்று பெரியவர்கள் இதனால் தான் கூறினர் !

சாலைகளில் செல்லும் போது பார்க்கும் பெற்றோரின் இன்னொரு அஜாக்கிரதையை பகிர்கிறேன்.

நமது சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் இடப்பக்கமாக ( " Keep left ") செல்லும். குழந்தைகளை நடக்க வைத்து அழைத்து செல்லும் அம்மா அல்லது தாத்தா - தங்கள் வலக்கையில் குழந்தையை பிடித்து நடக்க வைத்து செல்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்லும் பக்கம் குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகள் நேரே நடப்பதே இல்லை. திடீர் என்று ஓடுகிறார்கள். வெவ்வேறு புறம் நகர்கிறார்கள். வண்டியில் வருவோர் மிக அருகில் இருக்கும் போது இப்படி சிறு குழந்தைகள் திடீரென நகர்ந்து வண்டி முன் வந்து விடுகின்றனர். உடனே பிரேக் போட்டால் சரி. இல்லாவிடில் குழந்தை மேல் மோதவும் வாய்ப்புண்டு.

இதற்கு ஒரு எளிய தீர்வு. ரோடின் இடப்புறம் செல்லும் போது நமக்கு இடப்புறம் குழந்தைகளை வைத்து கொள்ள வேண்டும். இதனால் வாகனங்கள் செல்லும் பக்கம் நாம் இருப்போம். நம்மை தாண்டி சிறுவர்கள் ஓட முடியாது. அவர்கள் கவனம் ரோடின் (பிரச்சனை இல்லாத) அடுத்த பக்கம் தான் இருக்கும். எனது வண்டியில் யாராவது சிறுவன் மோத வந்தால், உடன் இருக்கும் பெரியவர்களிடம் இதனை சொல்லி விட்டு செல்வது வழக்கம்.

குழந்தை இல்லை என்று ஒரு புறம் நம் நாட்டில் எத்தனையோ பேர் வருத்தத்தில் இருக்க, இன்னொரு புறம், வாராது வந்த மாமணியாய் வந்த குழந்தைகளை வளர்ப்பதில் அலட்சியம் காட்டுவது சரியா?

*********
அதீதம் ஜூன் 15 இதழில் வெளியானது .

35 comments:

 1. இதற்கு ஒரு எளிய தீர்வு. ரோடின் இடப்புறம் செல்லும் போது நமக்கு இடப்புறம் குழந்தைகளை வைத்து கொள்ள வேண்டும்.//

  நான் சாலைகளில் செல்லும் பெற்றோர்களிடம்
  வலுக்கட்டாயமாக இதை வலியுறுத்தியபடிச் செல்வேன்
  அனைவருக்குமான அருமையான எச்சரிக்கைப் பதிவு
  .தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. மிகவும் அவசியமான பகிர்வு. நிறைய பேருக்கு குழந்தைகளை இடப்பக்கம் தான் அழைத்துச் செல்ல வேண்டும். நான் எப்போதும் தொடரும் ஒரு வாடிக்கை இது.

  ReplyDelete
 4. விழிப்புணர்வைக் கோரும் நல்ல பகிர்வு.

  ReplyDelete
 5. அருமையான கட்டுரை., அவசியமானதும் கூட.!

  வண்டி ஓட்டுபவர்கள் main road-களில் அல்லாது வேறு இடங்களில் ஓட்டும் போது குறைந்த வேகத்தில் பயணித்தால் இதுபோன்ற விபத்துகளை இயன்ற அளவு தவிர்க்கலாம்.

  மனித உயிர் விலை மதிக்க இயலாதது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.!

  ReplyDelete
 6. அவசியமான பதிவு...

  ReplyDelete
 7. குழந்தைகளை பூங்காவிற்கு கூட்டி செல்லும் பெற்றோர் அது பாட்டுக்கு விளையாடட்டும் என்று விட்டுவிட்டு பேசிக்கொண்டிருக்கின்றனர், அடிபட்ட பின் அந்த குழந்தையை அடிப்பது தவறானது. வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் பெற்றோர் கவனமுடன் இருப்பது அவசியமே யார் கற்றுக்கொடுப்பது. உபயோகமான பதிவு.

  ReplyDelete
 8. மோகன்,

  நல்ல விழிப்புணர்வு பதிவு.த.ம-2012!

  :-))

  நடைப்பாதைனு ஒன்று இருக்காமே :-)) கடைக்கு தான் அதுவா?

  ReplyDelete
 9. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. குழந்தைகள் என்றில்லை, வயதானவர்களுடனும் அதிக கவனமில்லாத நம் நட்பு உறவினர்களுடனும் செல்லும்போது கூட அவர்களை இடப் பக்கம் விட்டு நான் வலப் பக்கம் நடந்திருக்கிறேன்!

  ReplyDelete
 10. என்னதான் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் குழந்தைகள் எதிர்ப்பார்க்காத தருணத்தில் ஏதாவது அசாதரணமாக செய்து வைத்துவிடுகின்றன. எப்படித்தான் சமாளிப்பது என்று புரியாமல் பைத்தியமே பிடிக்கிறது.

  ReplyDelete
 11. right point..

  We shoud keep in our mind.

  :-)

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 13. அருமையான, பயனுள்ள பதிவு.
  குழந்தைகளின் மேல் ஒரு கண் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  தொடர்ந்து அருமையாக எழுதுங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. அவசியமான எச்சரிக்கை. பாராட்டுகள்!

  ReplyDelete
 15. அருமையான பதிவு..

  ReplyDelete
 16. // குழந்தைகளை கையில் தூக்கி போகாமல் வண்டியிலேயே வைத்து விட்டு போவது என்ன விதமான அலட்சியம்//

  இப்படி கூடவா இருக்காங்க?!

  ReplyDelete
 17. ரமணி சார்: உண்மை தான் நன்றி
  **

  ReplyDelete
 18. வெங்கட்: நன்றி உண்மை
  **

  ReplyDelete
 19. ராமலட்சுமி : நன்றி

  **

  ReplyDelete
 20. வரலாற்று சுவடுகள் said...
  வண்டி ஓட்டுபவர்கள் main road-களில் அல்லாது வேறு இடங்களில் ஓட்டும் போது குறைந்த வேகத்தில் பயணித்தால் இதுபோன்ற விபத்துகளை இயன்ற அளவு தவிர்க்கலாம்.

  **

  சரியாக சொன்னீர்கள் நன்றி

  ReplyDelete
 21. நன்றி கோவை நேரம்
  ***

  ReplyDelete
 22. கலாகுமரன் said...
  வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் பெற்றோர் கவனமுடன் இருப்பது அவசியமே

  **

  பூங்கா பற்றி நீங்கள் சொன்னது மிக சரி நன்றி

  ReplyDelete
 23. வவ்வால் said...
  மோகன்,

  நல்ல விழிப்புணர்வு பதிவு.த.ம-2012!

  **

  த.ம 2012-க்கு பதிலா தமிழ் மணத்தில் ஒரு ஓட்டு போடலாம். முன்னணி பதிவாவது வரும் :))

  நடைபாதைகள் நிறைய இடத்தில் இல்லை. நான் இருக்கும் மடிப்பாக்கத்தில் நடை பாதை என்ற ஒன்றே இல்லை. இருக்கும் இடத்தில் நிறைய கடைகள் போட்டு ஆக்கிரமித்து விடுவது தனி சோகம்

  ReplyDelete
 24. ஸ்ரீராம்: வயதானவர்களும் குழந்தை போல் ஆகி, ரோடில் நிறைய குளறுபடி செய்கிறார்கள் !
  ***

  ReplyDelete
 25. யுவா: உண்மை தான். குறிப்பாய் பைக்கில் செல்லும் போது குழந்தைகள் செய்யும் சேஷ்டையில் நிறைய விபத்துகள் சிறியதும் பெரியதுமாய் நடந்திருக்கு
  **

  ReplyDelete
 26. அட மாதவா: உன்னிடம் இருந்து நேராக நல்ல கட்டுரை என்று சொல்ல நான் பாக்கியம் செய்திருக்கணும் !
  நன்றி காஞ்சனா மேடம்

  ReplyDelete
 27. திண்டுக்கல் தனபாலன் : மிக நன்றி

  ReplyDelete
 28. ரத்னவேல் நடராசன் ஐயா : முக நூலில் பகிர்ந்தமைக்கு நன்றி சார்

  ReplyDelete
 29. தாமோதர் சந்துரு ஐயா : சார் நீங்கள் என் ப்ளாகுக்கு வந்தது மிக மகிழ்ச்சி. தங்கள் நல் வார்த்தைகள் நிறைய எழுது தூண்டும்

  ReplyDelete
 30. அமைதி அப்பா : நன்றி. தங்கள் தொடர் ஆதரவுக்கு

  ReplyDelete
 31. ரகு : ஆம். அது தான் வலியே!

  ReplyDelete
 32. ப்ரியாராஜன்: நல்லது. ப்ளாகர் ஆக எங்களிடம் உதவி தேவையெனில் சொல்லுங்கள்

  ReplyDelete
 33. நல்லதொரு பகிர்வு..

  ReplyDelete
 34. சில மாதங்கள் முன்பு ஏசி காரில் உள்ளேயே 3 வயது குழந்தையினை தூங்க விட்டு விட்டு பெற்றோர் ஒரு உறவினரின் இறந்த வீட்டுக்கு சென்று விட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால் குழந்தை காரிலேயே இறந்து இருந்தாதாம். வட சென்னையில் ஒரு இடத்தில் நடந்ததாய் பேப்பரில் படித்தேன். குழந்தைகள் வளர்ப்பது மிக பெரிய கலை.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...