Sunday, August 19, 2012

தமிழக காவல்துறை...ஒரு நேரடி அனுபவம் !

ம்பியூட்டர் பொட்டி தட்டி களைப்படையும் பொழுதுகளில் அருகிலுள்ள நடைவண்டி கடையின் கையேந்தி பவனில் தஞ்சம் அடைவது எங்கள் வழக்கம். அப்படி சமீபத்தில் ஒரு நாள் சென்ற போது கடைக்கு அருகில் ஒரு போலிஸ் நின்று கொண்டு ஒரு இருபது வயது பையனை முகத்திலும் முதுகிலும் ஓங்கி ஓங்கி குத்தி கொண்டிருந்தார். கூடவே மோசமான கெட்ட வாரத்தைகளை உதிர்த்து கொண்டிருந்தார் போலிஸ்.

பையன் டீசன்ட் ஆக உடை அணிந்து காதில் கடுக்கன் (ஸ்டைல்) போட்டிருந்தான். " வேலை கிடைக்கிறதுக்குள்ளே இப்படி நடந்துகிட்டா, வேலை கிடைச்சப்பறம் எப்படி நடந்துக்குவே நீ? " என்றவாறு மீண்டும் சில குத்துகள். பின் அவனை அடித்து இழுத்து அதே சாலையில் இருக்கும் போலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டார்.

அருகில் இன்னொரு இளைஞன். அவனுக்கும் கொஞ்சம் திட்டு விழவே செய்தது. ஆனால் அவனுக்கு அடியோ போலிஸ் நிலையத்துக்கு இழுக்கவோ இல்லை.

போலிஸ் சென்ற பின் அந்த பையனிடமும், தள்ளு வண்டி காரரிடமும் பேசியதில் தெரிய வந்தது இது தான் :

அந்த இடத்தில் ஒரு பெரிய நிறுவனம் இயங்கி வருகிறது ( எங்க கம்பனி இல்லை !) அங்கு இன்டர்வியூவிற்கு வரும் இளைஞர்களின் வண்டி உள்ளே அனுமதி இல்லை. அலுவலகத்துக்கு வெளியே அவர்கள் வண்டியை நிறுத்தி செல்கிறார்கள். இப்படி நிறுத்தும் வண்டிகளை போலிஸ் செயின் போட்டு பூட்டி விடுகிறார்கள். இத்தனைக்கும் அந்த இடத்தில் " நோ பார்க்கிங்" போர்டோ "வண்டிகள் நிறுத்த கூடாது " என்பதற்கு எந்த அறிகுறியோ இல்லை.

Thanks: Google Images
அப்படி ஒரு பையனின் வண்டியை செயின் போட்டு பூட்டி விட, அந்த பையன் நைசாக செயினை கட் செய்து விட்டு, தன் வண்டியை எடுத்து செல்ல முயன்றுள்ளான். அதற்குள் போலிஸ் அந்த இடத்துக்கு வந்து விட, அடியுடன், கெட்ட வார்த்தை அர்ச்சனையும் கிடைத்தது. மேலும் போலிஸ் அவனை அரெஸ்ட் செய்து கொண்டு சென்றது. அந்த போலிஸ் காரர் " வா ....ஸ்டேஷனுக்கு ! இன்னிக்கு நீ செத்தே " என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.

வண்டிகளை நிறுத்த கூடாது என்று சொல்லும் அதே இடத்தை ஒட்டி தான் நம் தள்ளு வண்டி ஆள் ஜம்மென்று வியாபாரம் செய்கிறார். இது மட்டும் எப்படி என அவரிடம் நாம் கேட்க, தினமும் நாற்பது ரூபாய் மாமூல் தருவதாக சொன்னார் அந்த வட இந்தியர். அடடா ! போலிஸ் காரரின் கடமை உணர்ச்சியை என்ன சொல்லி பாராட்டுவது !

இந்த விஷயத்தில் மனதில் எழுந்த சில கேள்விகள்:

சாலையின் மிக ஓரத்தில் வண்டியை நிறுத்துவது நிச்சயம் தவறு என தோன்ற வில்லை. பார்க்கிங் செய்ய கூடாது எனில் அது சம்பந்தமான எச்சரிக்கை எதுவும் இல்லை. "நோ பார்கிங்" எச்சரிக்கை இல்லாமல் அங்கு வண்டி நிறுத்த கூடாது என மக்களுக்கு எப்படி தெரியும்? போலிஸ் வேண்டுமென்றே எச்சரிக்கை பலகை வைக்காமல் உள்ளதா? அப்போது தான் வண்டி நிறுத்துவார்கள், அதை வைத்து பணம் செய்யலாம் என்று !

அந்த இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த கூடாது என்றால் அதிலிருந்து இரண்டு அடி தூரத்தில் தள்ளு வண்டி கடை எப்போதும் நிற்கிறதே  அதற்கு எப்படி அனுமதி கிடைக்கிறது?

இந்த அலுவலகம் வெளியே தினம் வண்டிகள் நிறுத்துவது இடைஞ்சலாக உள்ளது எனில் அந்த நிறுவனத்திடம் இது சம்பந்தமாக பேசி வாகனங்களை உள்ளே அனுமதிக்க சொல்லலாம். அல்லது இன்டர்வியூவிற்கு வருவோர் வண்டி நிறுத்த மாற்று ஏற்பாடு செய்ய சொல்லி வற்புருத்தலாம். அது தானே நிரந்தர தீர்வாய் இருக்கும்? அப்படி போலிஸ் செய்வதை தடுப்பது எது?
அந்த பையன் பூட்டை உடைத்து நிச்சயம் தவறு தான். அதற்காக போலிஸ் நிலையம் அழைத்து போவது கூட ஓகே. ஆனால் நடு ரோடில் அருகில் பார்த்து கொண்டிருக்கும், ஆண் மற்றும் பெண்கள் ஊழியர் முன்னே பிறப்புறுப்புகளை வைத்து கெட்ட வார்த்தையால் ஒரு போலிஸ் பேசுவது தவறு இல்லையா? இப்படி பலர் முன்னே கெட்ட வார்த்தை பேசும் அந்த போலிஸ் செய்யும் தவறுக்கு யார் தண்டனை தருவது?

அந்த பையன் அன்று ஸ்டேஷனில் செம அடி வாங்கியிருப்பான். அப்படி சொல்லி சொல்லி தான் அவனை இழுத்து சென்றார் போலிஸ். அவன் செய்தது தவறு எனினும் அப்படி அடிக்க போலிசுக்கு யார் உரிமை தந்தது? அவனை கோர்ட் முன்னே ஆஜர் செய்து தண்டனை வாங்கி தருவது தானே போலிசின் வேலை?

***
மனதில் இந்த கேள்விகளுடன் அலுவலகத்துக்கு திரும்ப நடக்கும் போது ஒரு போலிஸ் ஜீப் எங்களை கடந்து சென்றது....." காவல்துறை உங்கள் நண்பன்" என்கிற வாசகத்தோடு !
**********


      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-08-19      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்

இடம் : 1


தொடர்ந்து பத்தாவது வாரம் ! நெகிழ்வான நன்றி !

38 comments:

 1. //தொடர்ந்து பத்தாவது வாரம் //
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருவருக்கத்தக்க வார்த்தைகள். அந்த காவலர் வேறெங்கோ இருந்த கோபத்தை அந்த பையனிடம் காட்டியதாக தோன்றுகிறது எனக்கு.

  // இந்த அலுவலகம் வெளியே தினம் வண்டிகள் நிறுத்துவது இடைஞ்சலாக உள்ளது எனில் அந்த நிறுவனத்திடம் இது சம்பந்தமாக பேசி வாகனங்களை உள்ளே அனுமதிக்க சொல்லலாம். //

  கண்டிப்பாக, இந்த நிறுவனம் மீதும் தவறு இருக்கிறது. இன்டர்வியூவிற்கு வருகிறவர்கள், ஐம்பதாயிரம் மதிப்புள்ள வண்டியை சாலையில் எங்கேயாவது நிறுத்திவிட்டு வரட்டும் என நினைப்பது கண்டிப்பாக தவறான மனப்பான்மை.

  இரண்டு வருடங்களுக்கு முன், நுங்கம்பாக்கத்தில் ஒரு இன்டர்வியூ போயிருந்தேன். இன்டர்வியூ போயிருந்த அலுவலகத்திலிருந்து, நான்கு பில்டிங் தள்ளி ஒரு சின்ன ஓட்டலுக்கு முன் வண்டியை பார்க் பண்ண வேண்டியதாயிற்று. இதுவே எனக்கு செம கடுப்பு!

  இன்டர்வியூ முடிந்தவுடன் சொன்னேன்.

  I've a small request. Please let the candidates park their vehicles inside the facility. I had to spend some time before I come here because it was really tough to park my bike in this surrounding. Please consider this as a humble request.

  பின் எனக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இதை கேட்டதற்கும், அவர்களுக்கு என் attitude குறித்தான கேள்விகள் எழுந்திருக்கலாம். No worries...I did what I wanted to do!

  ReplyDelete
 3. பொதுவிடத்தில் தங்கள் அதிகாரத்தை சாதாரணர்களிடம் மட்டுமே பெரும்பாலான காவல் துறையினர் காட்டுகின்றனர்,புதிதாக பார்ப்பவர்களிடம் பேச ஆரம்பிக்கும் போது கூட ஒருமையில் தான் ஆம்பிக்கின்றனர் இந்த நண்பர்கள்.

  ReplyDelete
 4. இந்த பார்க்கிங் பற்றி சென்னை போக்குவரத்து Facebook யில் கேள்வி எழுந்த போது...எந்த சாலையின் ஓரமும் வண்டி நிறுத்ததுக்கு கொடுக்கப்பட்வில்லை என்றும் நிறுத்தம் என்றால் மட்டுமே அறிவிப்பு இருக்கும் என்று பதில் கொடுக்கப்பட்டது.

  ReplyDelete
 5. யார் சிறந்த குற்றவாளி? 1. அந்த அலுவலகம்
  2. அந்த பையன்
  3. அந்த காவ(ள்)லர்

  ReplyDelete
 6. காவல் துறையினருக்கு நாம் தான் என்ற அகந்தை அதிகம்! அருமையான பகிர்வு! முதலிடம் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete
 7. //1) ஒரு பெரிய நிறுவனம் இயங்கி வருகிறது

  2) ( எங்க கம்பனி இல்லை !) //

  சார்.. கொஞ்சம் சிக்கனமா இருங்க ப்ளீஸ்..
  மொதல்லையே சொல்லிட்டீங்களே(1), எதுக்கு பிராக்கெட்(2) மேட்டர்.

  போலீசப் பத்தி மேட்டரா.. ?
  பாத்து.... வீட்டுக்கு ஆட்டோ வந்திடப் போகுது..! .  ReplyDelete
 8. சொல்ல மறந்துட்டேன்...ஃபினிஷிங் டச்....நச்!

  ////தொடர்ந்து பத்தாவது வாரம் //

  You deserve it Mohan..Keep going!

  ReplyDelete
 9. Dear Mohan,

  As a lawyer, what is your opinion on this. If Police is beating you, can the victim object and ask for FIR and production before the court. How the public can avoid this atrocity from police?

  Please include such legal tips in your blogs rather than just reporting the incidents came to your attention.

  Regards,

  R Venkat

  ReplyDelete
 10. நம்முடைய காவல்துறையில் சிலர் இது போன்ற காரியங்களில் அடாவடியாக மக்களிடம் நடப்பது வேதனையான உண்மை.. காவல்துறை உங்கள் நண்பன் என்கிற வாசகம் எதற்காக...ஏன்?

  ரமலான் சிறப்பு கவிதை படிக்க உங்களை அழைக்கிறேன்!

  ReplyDelete
 11. இந்த அராஜகங்கள் வேதனையானவை. இவர்களை யார் தட்டிக் கேட்பது? ஒன்றும் செய்ய முடியாத, செல்லாக் கோபம் வருகிறது!
  நூறாவது நாளை நோக்கி விரையும் முதலிடத்துக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 12. வேதனையாகத் தான் இருக்கிறது.

  ReplyDelete
 13. பெரும்பாலான போலீஸ்காரர்கள் தகாத வார்த்தைகளை பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்

  ReplyDelete
 14. ஒரு தடவை நான் நேரில் கண்டது ,மதுரை ராஜ்மகால் கடை வாசலில் பூ விற்ற ஒருவரை காவலர் ஒருவர் திட்டியதை ,எவ்வளவு கேவலமாக மோசமாக.... அவர்களுக்கு அதற்கும் பயிற்சி கொடுப்பார்களோ !!!!!!!!!!!!!!

  ReplyDelete
 15. ஒரு தடவை நான் நேரில் கண்டது ,மதுரை ராஜ்மகால் கடை வாசலில் பூ விற்ற ஒருவரை காவலர் ஒருவர் திட்டியதை ,எவ்வளவு கேவலமாக மோசமாக.... அவர்களுக்கு அதற்கும் பயிற்சி கொடுப்பார்களோ !!!!!!!!!!!!!!

  ReplyDelete
 16. Mohan Sir,

  I have something to say here.
  There is a page at Facebook for Chennai Traffic Police.

  You may raise a complaint just by adding photos of chained vehicles and that food stall.

  either one will stop from then.

  Regards
  -Kannan S

  ReplyDelete
 17. நன்றி ராஜசேகர்

  ReplyDelete
 18. உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி ரகு; இன்டர்வியூவில் சரியாக தான் சொல்லி உள்ளீர்கள்

  ReplyDelete
 19. கோகுல் said...
  பொதுவிடத்தில் தங்கள் அதிகாரத்தை சாதாரணர்களிடம் மட்டுமே பெரும்பாலான காவல் துறையினர் காட்டுகின்றனர்,புதிதாக பார்ப்பவர்களிடம் பேச ஆரம்பிக்கும் போது கூட ஒருமையில் தான் ஆம்பிக்கின்றனர் இந்த நண்பர்கள்.
  ****
  ஆம் சரியாக சொன்னீர்கள் கோகுல்

  ReplyDelete
 20. வடுவூர் குமார்

  //எந்த சாலையின் ஓரமும் வண்டி நிறுத்ததுக்கு கொடுக்கப்பட்வில்லை என்றும் நிறுத்தம் என்றால் மட்டுமே அறிவிப்பு இருக்கும் என்று பதில் கொடுக்கப்பட்டது.//

  என்னங்க இது ! இது எப்படி சரியாகும் ?

  ReplyDelete
 21. நிசாமுடீன்: சரியான கேள்வி !

  ReplyDelete

 22. நன்றி சுரேஷ்

  ReplyDelete

 23. மாதவா: நீ சொல்வதும் (Auto) யோசிக்க வேண்டிய ஒன்று தான்

  ReplyDelete
 24. வெங்கட்: மருத்துவத்தில் Gynacology,Ortho , eye doctor என specialities இருப்பது போல சட்டத்திலும் specialities உண்டு ; எனது ஸ்பெஷாலிட்டி கம்பனி லா தான். மேலும் மருத்துவர்களும் சரி வக்கீல்களும் சரி கேட்காமல் தாங்களாக அறிவுரை சொல்ல கூடாது என்று சொல்வார்கள். பதிவர் என்ற முறையில் பிரச்னையை பதிவு செய்வதே பலரை யோசிக்க வைக்கும் இல்லையா?

  ReplyDelete
 25. ஆயிஷா: நன்றி

  ReplyDelete

 26. ஆம் ஸ்ரீராம் நன்றி

  ReplyDelete

 27. வணக்கம் ரத்னவேல் ஐயா

  ReplyDelete
 28. நன்றி முரளி சார்

  ReplyDelete
 29. Unknown : ம் ஒவ்வொருத்தருக்கும் இத்தகைய அனுபவம் உண்டு :(

  ReplyDelete

 30. அட கண்ணன் வாங்க. பதிவுலகில் நம்மோட ஆரம்ப கால நண்பர்ஆச்சே நீங்க. தகவல் மிக பயனுள்ளது நன்றி நண்பா

  ReplyDelete
 31. நான் போலீஸ் இல்லை பொறுக்கின்னு சொல்வாரா இருக்கும்!

  ரெண்டு சக்கர வண்டிக்குத்தான் தடை.

  தீனிவண்டிக்கு நாலு சக்கரம் இருந்துருக்குமே!

  இதையெல்லாம் பார்த்தால்...எங்கூர் போலீஸுக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாம்:-)

  போலீஸ் செல்லில் நான் இருந்துருக்கேன்!

  ReplyDelete
 32. உங்கள் பார்வைக்கு:

  http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_03.html

  ReplyDelete
 33. //பையன் டீசன்ட் ஆக உடை அணிந்து காதில் கடுக்கன் (ஸ்டைல்) போட்டிருந்தான்//

  காதில் கடுக்கன் என்றாலே அவர்கள் ஏதோ வித்தியாசமானவர்கள் என்கிற சிந்தனை சமூகத்தில் உள்ளது. அது, அவர்கள் சுதந்திரம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. வித்தியாசமாகப் பார்ப்பதும், வித்தியாசப்படுத்தி கொள்வதிலும் கொஞ்சம் தடுமாறினாலும் ஆபத்து!

  ************
  படிப்பவர்களை யோசிக்க வைத்துள்ளீர்கள். நன்றி.
  ***********

  //பின் எனக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இதை கேட்டதற்கும், அவர்களுக்கு என் attitude குறித்தான கேள்விகள் எழுந்திருக்கலாம். No worries...I did what I wanted to do!//

  பாராட்டுகள் ரகு சார்.

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. துளசி கோபால் said...
  ரெண்டு சக்கர வண்டிக்குத்தான் தடை.தீனிவண்டிக்கு நாலு சக்கரம் இருந்துருக்குமே!

  இதையெல்லாம் பார்த்தால்...எங்கூர் போலீஸுக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாம்:-)

  ****
  மேடம் உங்கள் பதிவும் வாசித்தேன் செம சுவாரஸ்யம்

  ReplyDelete

 36. நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 37. தொடர்ந்து பத்தாவது வாரம் தமிழ்மணத்தில் முதலிடம்.... முதலில் அதற்கு வாழ்த்துகள்....

  போலீஸ் அடித்த விவரம் - இது ரொம்பவே ஓவர்....

  ReplyDelete
 38. நம்ம ஊரில் காவல்துறை பொதுமக்களுக்கு மரியாதை தருவதேயில்லை.. நமக்கெல்லாம் காவல்துறை என்றாலே ஒரு பயமாகத்தான் உள்ளது, இதில் பொதுமக்களின் நண்பனாவது, புண்ணாக்காவது :))

  வெளிநாடுகளில் இப்படி இல்லை. மரியாதையாக, நட்பாக நடத்துவார்கள். உதாரணத்திற்கு இங்கே அமெரிக்காவில் ஏதேனும் சாலை விதிமுறைகளை மீறி பின்னால் வரும் போலிஸ் பேட்ரோல் காரிடம் சிக்கி விட்டால், போலிஸ்காரர் இறங்கி வந்து நம்மை விசாரிக்கும் போது வரும் முதல் வாக்கியம் "ஹவ் ஆர் யூ டூயிங் டுடே?". பைன் எல்லாம் போட்டு டிக்கெட் கொடுத்து விட்டு செல்லும் போது சொல்வது "ஹேவ் அ நைஸ் டே"!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...