Sunday, August 26, 2012

மாபெரும் வெற்றி : சென்னை பதிவர் மாநாடு அசத்தல் படங்கள்

நண்பர்களே

சென்னை பதிவர் மாநாடு -
மிக அற்புதமாய்
ஒரு சிறு குறையோ சண்டையோ சச்சரவோ இன்றி
மிக மகிழ்வாய்
பல இனிய நினைவுகளை என்றும் சுமக்கும் வண்ணம்
நடந்து முடிந்தது

விழாவில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு 

துவக்க விழா .. ராமானுசம் ஐயா, சீனா  ஐயா,  சென்னைப்பித்தன்  ஐயா


துவக்க உரை ஆற்றுகிறார் மதுமதி வரவேற்புரை மற்றும் விழா குழுவை அறிமுகம் செய்கிறார் வீடுதிரும்பல் மோகன்குமார் 

வரவேற்பு/ Registration  குழு   -  சீனு மற்றும் நண்பர்கள் 
புதிய தலைமுறை டிவி குழுவிற்கு பேட்டி தருகிறார்  முக்கிய பொறுப்பாளர் மதுமதி 

ப்ளாகில்  பெண்களின் பங்கு பற்றி  புதிய தலைமுறை டிவி க்கு   பேசுகிறார் தென்றல் சசிகலா 

புதிய தலைமுறை டிவி குழு வீடுதிரும்பல் மோகன்குமாரிடம் பேசுகிறது 
***
புதிய தலைமுறை டிவி யில் நாங்கள் பேசியது நாளை ஒவ்வொரு செய்திகளிலும்   ஐந்து நிமிடம் ஒளிபரப்பாகும். முடிந்தால் பாருங்கள் 

கரை சேரா அலை அரசன் அறிமுகம் செய்து கொள்கிறார் 

இளம் ஆளுமை மெட்ராஸ் பவன் சிவகுமார் 

மூத்த பதிவர் வல்லிசிம்ஹன் .... மேடையில் பிரபல பதிவர்கள் கேபிளும் சிபி செந்தில் குமாரும் 

கேட்டால் கிடைக்கும்னு நாங்க இயக்கமே வச்சிருக்கோம் ; நான் கேட்டும் கூட எனக்கு ரெண்டாவது சுவீட் தர மாட்டீங்களா? - இப்படி கேட்கிறாரோ  கவிஞர் கேபிள் சங்கர் 

சங்கவி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் 

ரஹீம் ஹசாலி சுய அறிமுகம்  (தம்பி ரெண்டு போட்டோ எடுத்தேன். ரெண்டிலும் கண்ணை மூடி கிட்டு தான் இருக்கீங்க) 

விழா முடிந்த பின் மேடையில்  விழா குழுவினர் 
****
விழாவில் மிக அதிக படங்கள் எடுத்த வீடுதிரும்பல் மோகன்குமார் அவற்றை ஒரே மூச்சாய் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த இரு நாளில் போடபோறாராம் ! ஏன்னு கேட்டால் நூறு படத்தை ஒண்ணா போட்டா மக்கள் படிக்க மாட்டாங்க என்கிறார். 

சரி அடுத்த ரெண்டு நாளுக்கு ஏகப்பட்ட பதிவு தேத்திட்டார்..  நடக்கட்டும்.  நடக்கட்டும். 

நீங்க பின்னூட்டத்தில் அவரை கும்மிடுங்க :)
 
பதிவர் சந்திப்பு: முந்தைய பதிவுகள் :

சென்னை பதிவர் மாநாடு பின்னே இருந்தது யார்?  இங்கே வாசிங்க : 

பதிவர் சந்திப்பு மாபெரும் வெற்றி : படங்கள் : இங்கே

பதிவர் சந்திப்பு படங்கள் பார்ட் டூ : இங்கே

சென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி : இங்கே

பட்டுகோட்டை பிரபாகர் பேசியது என்ன? : இங்கே

சாப்பாட்டு பந்தியும் பிரபல பதிவர்களும் : இங்கே


 
****
நாளை காலை வெளியாக உள்ள  அடுத்த பதிவில்

## இதுவரை பதிவிலேயே தன் பெயர்/ முகம் காட்டாத மிக பிரபல பதிவர் படம் முதன்முறையாய் ...

@@ இரட்டை பின்னூட்ட பீரங்கிகள் தந்த ஸ்பெஷல் போஸ்

*** காமெடி/ ஜாலி/ சீரியஸ் படங்கள்

67 comments:

 1. Anonymous10:14:00 PM

  கலக்கல் படங்கள் !!! நேரஞ்சலிப் பார்த்தேன். இடையில் நள்ளிரவாகி விட்டதால் தூங்கிவிட்டேன். அவற்றையும் யுடுயுப்பில் பகிர்ந்தால் நல்லாருக்கும் ...

  அடுத்து ஒரு வாரத்துக்கு இது தான் பேச்சாக இருக்கும் என்று தோன்றுகின்றது ..

  புதிய தலைமுறை தொலைக்காட்சி இணையத்தில் வருவதால் --- அவற்றைப் பார்க்கலாம் !!!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! வரமுடியவில்லை என்ற சிறு ஆதங்கம் இருந்தாலும், படங்களும், காணொளிகளும் அதனை நீக்கிவிடும் என்பதில் ஐயமில்லை !

  ReplyDelete
 2. பதிவர் மாநாடு முடிந்த உடனே செய்தியையும் புகைப்படத்தையும் வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். நன்றி!

  ReplyDelete
 3. உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மோகன்! :)

  காலையில் 11.15 மணியிலிருந்து தான் என்னால் பார்க்க முடிந்தது. மதியம் அவசர வேலையாக அலுவலகம் சென்று விட்டதால் பார்க்க முடியவில்லை. உங்கள் பக்கங்களில் புகைப்படங்கள் பார்த்து தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நாளை புதிய தலைமுறை சேனல் பார்க்கிறேன்.

  மிகச் சிறப்பாக நடத்திய உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்....

  த.ம. 2

  ReplyDelete
 4. Anonymous10:21:00 PM


  நான் பேசும்போது என்னை வணங்கும் அந்த சகோதரியின் அன்பிற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 5. //நான் பேசும்போது என்னை வணங்கும் அந்த சகோதரியின் அன்பிற்கு நன்றிகள் பல. //

  பாத்தா வேற மாதிரி இருக்கு தல :)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. படங்கள் சூப்பர்.... இன்னும் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 7. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்:)!

  தொடருங்கள். வாசிக்கவும் மேலும் படங்களைக் காணவும் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 8. மோகன்குமார் உங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. உங்கள் தயவில் நான் இணையத்தில் நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன்.

  ReplyDelete
 9. ஆரம்பிங்க தினமும் மொய் எழுதிட்டு போறம்.. ஒவ்வொரு போட்டோ கீழும் ஒரு மொக்கை கமென்ட் போட்டிங்க என்றா இன்னும் சுவாரசியமா இருக்கும்..

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்,

  ம்ம்ம்ம்....நடத்துங்க :-) :-)

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 11. அனைவருக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. தங்கள் இடுகை நேரில் கண்டதைப் போன்ற உணர்வைத் தந்தது. விளக்கங்களும் சிறப்பு.

  ஸ்ரீ....

  ReplyDelete
 13. அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. Super. My site : http://newsigaram.blogspot.com

  ReplyDelete
 16. சந்திப்பு இனிமையாய் முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. போட்டோக்கள் அனைத்தும் தெளிவாக உள்ளது.

  //இதுவரை பதிவிலேயே தன் பெயர்/ முகம் காட்டாத மிக பிரபல பதிவர் படம் முதன்முறையாய் .//

  அந்த சேட்டைக்கார பதிவரை வீடியோவில் இன்னும் பார்க்கவில்லை. நாளை போட்டோவிலேயே பார்க்கிறேன்.

  :D :D :D

  ReplyDelete
 17. மிக நன்றி மோகன்குமார். உங்களை எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது (கொஞ்சம் பொறாமையும்).
  படங்கள் படு ஷார்ப்.
  நேரடி ஒளிபரப்பு வேலை செய்யவில்லையோ. அல்லது விழா தொடங்க நேரமானதா? காத்திருந்து காத்திருந்து கடைசியில் மீனவர் பிரச்கினை பற்றி யாரோ (அழகாக) பேசினதைக் கேட்டுக் கண் மூடினேன்.

  ReplyDelete
 18. புதிய தலைமுறை என்பது சேனலா?

  ReplyDelete
 19. பதிவர் மாநாடு படங்கள் அருமை வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. Nice pictures. Thanks for sharing.

  ReplyDelete
 21. பதிவர் மாநாடு படங்கள் அருமை வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. அயல் மண்ணில் வசிக்கும் என்னை போன்றோர்களுக்கும் நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க உழைத்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி!

  75% நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தேன்! மீதியை இனி ஒவ்வொருவரும் புகைப்படங்களோடு எழுதும் பதிவுகளில் காணக் காத்திருக்கிறேன்!

  எத்தனையோ தடைகளை தாண்டி வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திக்காட்டிய விழா குழுவினருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள்!

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் !!! பாராட்டுக்கள் .அனைவரும் ஆற்றிய பங்கு Fantabulous!!!!.இன்னும் எவ்வளவோ சொல்லிட்டே போகலாம் ..அத்தனை அருமையாக இருந்தது ..ஒளிபரப்பையும் பார்த்தேன் மிக்க நன்றி .அடுத்தது படங்களுக்கு நாளை வருவேன் ...

  ReplyDelete
 24. அருமை அருமை!

  கலக்கிட்டீங்க!!!!!

  ReplyDelete
 25. படங்களுக்கு நன்றி!
  பொறுப்பை உணர்ந்து, சிறப்புற நடத்தி முடித்த அனைவருக்கும்
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 26. புதிய தலைமுறை என்பது சேனலா?

  அப்பாதுரை இது தான் குசும்பா?

  ReplyDelete
 27. பதிவர் மாநாடு படங்கள் அருமை வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. //அப்பாதுரை இது தான் குசும்பா?
  ஐயோ.. உண்மையிலேயே தெரியாதுங்க..

  ReplyDelete
 29. அருமை. படங்களும் விவரங்களும் அருமை. வெகு நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்...

  அப்பாஜி... பதிவிலேயே புதிய தலைமுறை டிவிக்கு பேட்டி தருகிறார் என்றெல்லாம் எழுதி இருக்கிறாரே மோகன், படிக்கவில்லையா?!

  ReplyDelete
 30. அப்பாதுரை: ஸ்ரீராம் சொன்னது போல் புதிய தலைமுறை டிவி சேனல். தமிழில் தற்போது நம்பர் ஒன் நியூஸ் சானல் இது

  ReplyDelete
 31. ! சிவகுமார் ! said...

  நான் பேசும்போது என்னை வணங்கும் அந்த சகோதரியின் அன்பிற்கு நன்றிகள் பல.

  ***********

  மொத நாள் அந்த போஸ்டரையே சுத்தி சுத்தி வந்து பார்த்தது நீர் தானே? :))

  ReplyDelete
 32. Aashiq Ahamed said...
  அஸ்ஸலாமு அலைக்கும்,

  ம்ம்ம்ம்....நடத்துங்க :-) :-)

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ###########

  உங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி ஆஷிக். நல்ல விஷயங்களில் எங்கள் பதிவர் நண்பர்களுடன் இணைந்து செயல்படுங்கள் மிக மகிழ்ச்சியும் நன்றியும்

  ReplyDelete
 33. அப்பாதுரை said...
  மிக நன்றி மோகன்குமார். உங்களை எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது (கொஞ்சம் பொறாமையும்).
  படங்கள் படு ஷார்ப்.
  நேரடி ஒளிபரப்பு வேலை செய்யவில்லையோ

  ####

  பொறாமை சரி. பெருமை எப்படி? :))

  நேரடி ஒளிபரப்பை பலரும் பார்த்தாய் சொல்கிறார்கள் சிலர் மட்டும் தெரியலை என்கிறார்கள் ஏன் என தெரியலை

  ReplyDelete
 34. வெங்கட் நாகராஜ் said...
  உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மோகன்! :)

  முதல் ஆளா உங்கள் எல்லோருக்கும் நிகழ்ச்சி பற்றி பகிரும் ஆர்வம் தான். ஈரோடாய் இருந்தால் நான் பதிவு போடும் முன்பே போட்டிருப்பார்கள். நம் நண்பர்கள் டயர்ட் ஆகி தூங்க போய் விட்டனர்

  ReplyDelete
 35. இங்கு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி ! அடுத்த பதிவை வலையேற்றும் பொறுப்பு இருப்பதால் ( டேய் !- மனசாட்சி ) அனைவருக்கும் தற்போது தனித்தனியே பதில் சொல்லலை கேள்வி
  கேட்டோருக்கு மட்டும் பதில் தந்துள்ளேன் தவறாய் எண்ண வேண்டாம்

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. http://bhageerathi.in/?p=1014

  ReplyDelete
 38. மிகச்சிறப்பான பதிவர் சந்திப்பு..!உங்கள் புகைப்படம் நல்லாயிருக்கு..!சிவக்குமாருக்கு அவசரம் போல....!(சுன்டுவிரல்)

  ReplyDelete
 39. முதலில் நன்றி மோகன்குமார். அபரிமிதமான உழைப்பு, கட்டுக் கோப்பு,நேரம் வீணாக்காமல் நடந்தேறிய நிகழ்ச்சிகள் பிரமிக்க வைத்தன.

  உடனுக்குடன் பதிவேற்றிவிட்டீர்களே.
  மனம் நிறைந்த வாழ்த்துகள்.அசத்தல் விழா.

  ReplyDelete
 40. வெயிடிங்...:)

  ReplyDelete
 41. நல்ல படங்கள்... அசத்துங்க...

  படங்கள் & தொகுப்புகள் தொடரட்டும் ...

  நன்றி சார் (TM 14)

  ReplyDelete
 42. எப்படி எல்லா நிகழ்வுகளையும்
  முன்னின்று நடத்திக்கொண்டு
  படமும் எடுத்தீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது
  படங்களும் அதற்கான கமெண்டுகளும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. அனைவருக்கும் வாழ்த்துகள்

  உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மோகன் சார் விழாவை பற்றி என் பார்வையில் ஒரு இடுகை வெளியிட இருக்கிறேன்

  ReplyDelete
 44. பம்பரமாய் விழா வேலைகளையும் பார்த்து பதிவும் வேகமாய் போட்டதுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 45. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.என்னங்க இது? என்னையுமா இந்த அளவு பாராட்டுவது!?!?!?நன்றிகள் பல.என PARAMES DRIVER // konguthendral.blogspot.com - Thalavady

  ReplyDelete
 46. மோகன் அண்ணணை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  அருமையான விழா அற்புதமான பங்களிப்பு, நண்பர்களின் பம்பரமாம வேலை என களை கட்டியது சந்திப்பு...

  ReplyDelete
 47. படங்கள் சூப்பர்...அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 48. கடைசி குரூப் போட்டோவில் இருந்து சசிய யாரு கட் பண்ணது எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

  ReplyDelete
 49. விழாவில் கலந்துகொண்டது மிக மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது... உங்களின் ஒவ்வொருவரின் உழைப்பும் பாராட்டத்தக்கது!!! புகைப்படங்களுக்கு நன்றி சார்...
  விழாவினையும் ரசித்து அதே நேரத்தில் புகைப்படங்களையும் எடுத்து அசத்திடீங்க....

  ReplyDelete
 50. மோகன் சார்...

  புகைப்படங்கள் அருமை... பகிர்விற்கு நன்றி..

  கஸாலிய 2 போட்டோ இல்ல... 200 போட்டோ எடுத்தாலும் தூங்கிகிட்டு தான் இருப்பான்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 51. சிலர் செய்திகளில் கலக்குவார்கள். நீங்கள் போட்டோ ஸ்பெஷலிஸ்ட் போலிருகிறது. படங்கள் அருமை.

  பதிவர் சந்திப்புக்கு வரமுடியாத குறையை இந்த படங்கள் தீர்கிறது.

  ReplyDelete
 52. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 53. நேரடி ஒளி பரப்பு கொஞ்சம் தான் பார்க்க முடிந்தத்து, பதிவர் சந்திப்பு விழா சிறப்பாக் அமைந்தது குறித்து மகிழ்சி

  ReplyDelete
 54. பதிவர் சந்திப்பில் தங்களை சந்திக்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி சகோ. விழா பிசில நீங்க இருந்ததால அதிகம் உங்களோடு பேச முடியலை. மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 55. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

  புகைப்படங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 56. ஸலாம் சகோ.மோகன் குமார்.
  நேரலையில் நேற்றே பார்த்தேன். மிகச்சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு பாராட்டுக்கள். பதிவில் படங்கள் அனைத்தும் துல்லியம். அருமை.
  பகிர்வுக்கும் மேலும் பகிர இருப்பதற்கும் மிக்க நன்றி சகோ..!

  ReplyDelete
 57. அருமை திரு மோகன் குமார்.
  நேரில் பார்த்தாற் போன்ற உணர்வு.
  மின் வெட்டு, வேலைப்பளு போன்ற காரணங்களால் உங்கள் பதிவுகள் எல்லாம் வீட்டுப் பாடங்களாக இருக்கின்றன. சீக்கிரம் முடித்து விடுகிறேன்.
  முகநூலும் ஒரு காரணம்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 58. \\சண்டையோ சச்சரவோ இன்றி மிக மகிழ்வாய.\\ பதிவர் நண்பர்கள் ஒன்று கூடி நடத்திய சந்திப்பு, எப்படி சண்டை சச்சரவு வரும்? முன்னாடி யாரும் தண்ணி போட்டுக்கிட்டு வந்துடாதீங்கன்னு எச்சரிக்கை வேறு குடுத்திருந்தீங்க. இந்த இடத்துக்கு ஊத்திகிட்டு வரும் பார்ட்டிகள் யாரு? எனக்கு ஒன்னும் புரியல.............

  ReplyDelete
 59. This kind of meetings, certainly takes the "blog world" to the next level. It motivates the bloggers as it makes them feel like they are future "celebrities"!

  Very nice to see photographs of the event and "real faces" of some bloggers. Thanks, M.K, for sharing! :-)

  ReplyDelete
 60. This comment has been removed by the author.

  ReplyDelete
 61. ராஜி said...

  பதிவர் சந்திப்பில் தங்களை சந்திக்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி சகோ. விழா பிசில நீங்க இருந்ததால அதிகம் உங்களோடு பேச முடியலை. மீண்டும் சந்திப்போம்.
  **
  உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்த்தது மிக மிக மகிழ்ச்சி ராஜி. மூத்தவர்கள் அனைவர் காலில் விழுந்து நீங்கள் ஆசி வாங்கியதை காண நெகிழ்ச்சியாய் இருந்தது. இணையம் உங்களை போன்ற நல்ல மனிதர்களை அறிமுகம் செய்கிறது

  ReplyDelete
 62. yadev Das said...


  பதிவர் நண்பர்கள் ஒன்று கூடி நடத்திய சந்திப்பு, எப்படி சண்டை சச்சரவு வரும்? முன்னாடி யாரும் தண்ணி போட்டுக்கிட்டு வந்துடாதீங்கன்னு எச்சரிக்கை வேறு குடுத்திருந்தீங்க. இந்த இடத்துக்கு ஊத்திகிட்டு வரும் பார்ட்டிகள் யாரு? எனக்கு ஒன்னும் புரியல.............

  **

  ஒன்னுமே தெரியாத அப்பாவியா இருக்கீங்க. பதிவர் சந்திப்புகளுக்கு போய் பாருங்க. பொது வெளியில் வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

  ReplyDelete
 63. முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  நேரலையில் நேற்றே பார்த்தேன். மிகச்சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு பாராட்டுக்கள். பதிவில் படங்கள் அனைத்தும் துல்லியம். அருமை

  ***

  நட்பான, அன்பான வார்த்தைகளுக்கு நன்றி முஹம்மது ஆஷிக்

  ReplyDelete

 64. வருண் said...

  This kind of meetings, certainly takes the "blog world" to the next level. It motivates the bloggers as it makes them feel like they are future "celebrities"!

  **
  வருண்: இத்தகைய நிகழ்வுகள் பதிவுகளை வாசிக்க மட்டும் செய்யும் இன்னும் பல நண்பர்களை எழுத வைக்கும் என்றும், எழுதாமல் சற்று தேங்கியிருப்போரை எழுதவைக்கும் என்றும் சங்கவி போனில் சொன்னார் அது உண்மை தான் !

  ReplyDelete
 65. நண்பர்களே பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்

  பதிவர் மாநாட்டு பதிவுகளுக்கு மட்டும் அனைவருக்கும் தனித்தனியே பதில் சொல்லலை; அடுத்தடுத்த பதிவுகளில் அதை தொடரலாம் தவறாய் எண்ண வேண்டாம் !

  ReplyDelete
 66. aduththa manadu eppothu?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...