Monday, August 27, 2012

சென்னை பதிவர் மாநாடு -குறிப்புகள்- படங்கள்- Part II


பதிவர் சந்திப்புக்கு ஹால் வெளியே வைத்த பேனர்

ருக்மணி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்  PKP

இதுவரை தன் பெயரோ முகமோ காட்டாத சேட்டைக்காரன் இதோ முதன் முதலாய் உங்கள் பார்வைக்கு

சுகுமார் சுவாமிநாதன். சுரேகா, மணிஜி, LK,   மோகன்குமார் 
நிகழ்ச்சி முடிந்ததும் தொகுப்புரை ஆற்றிய சுரேகாவை கட்டி பிடித்து "Outstanding ". :"Superb " இன்னும் எனக்கு தெரிந்த என்னென்ன சூபர்லேடிவ் வார்த்தைகள் இருக்கோ அனைத்தும் சொல்லி பாராட்டினேன். சான்சே இல்லை ! ஒவ்வொரு பதிவர் ப்ளாகும் படித்து அதில் சிறந்த படைப்பொன்றை அவரை மேடைக்கு அழைக்கும் போது வாசித்து அசத்தி விட்டார் ! என்ன மாதிரி ஹார்ட் வொர்க் ! ப்ளாகரில் மட்டுமல்ல, தமிழில் இன்றைக்கு இருக்கும் சிறந்த தொகுப்பாளர்களில் ஒருவர், அற்புதமான மனிதர் சுரேகா !

அகிலா வயதான பெற்றோர் குறித்த மிக நெகிழ்வான கவிதை வாசிக்கிறார்  
மிக அற்புத கவிதை வாசித்தார் அகிலா . வயதான கணவன் மனைவி படும் இன்னல்கள் குறித்தது. பெண் ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொருவரால் ஆளப்படுகிறாள் என வலியோடு சொன்னது. எனது பெற்றோரை கண் முன்னே கொண்டு வந்ததால், அழுகையை அடக்க மிக சிரமப்பட வேண்டியிருந்தது .

விழாவின் வெளியான தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகம் இதுவே 
கவிதை புத்தகம் வாசிக்க துவங்கி விட்டேன். விரைவில் புத்தக விமர்சனம் நம் வலையில் வெளியாகும் 
குஹன், மோகன்குமார், வேடியப்பன் ஆகியோருடன் பெயர் தெரியாத நண்பர் 
புத்தக சந்தை மிக விறுவிறுப்பாக நடந்தது. முடிவில் டிஸ்கவரி புக் பேலஸ் ஓனர் வேடியப்பனுடன் பேசும்போது அவருக்கு விற்பனையில் மிக மனநிறைவு என தெரிந்தது

தோழி சரளா கவிதை வாசிக்கிறார் 

பட்டர்பிளை சூரியா, சுகுமார் சாமிநாதன்,  மணிஜி , ஜாக்கி,மோகன்குமார், உண்மை தமிழன், ரோஸ்விக்   


காலை அனைத்து சேர்களும் எடுத்து போட்ட மூத்த பதிவர்கள்  பேருந்து ஓட்டுனர்   பரமேஷ்; நடன சபாபதி 
ஒரு அறையினுள் மலை போல் உயரமாய் அடுக்கப்பட்ட சேர்கள் மீது ஏறி அனாயாசமாய் அவற்றை எடுத்து தந்தார் பஸ் ஓட்டுனர் சக பதிவர் பரமேஷ் அவர்கள் ! மூத்த பதிவர்கள் தங்கள் வயதை பொருட்படுத்தாது உழைத்தனர்


மூத்த பதிவர்கள் ரமணி உள்ளிட்டோர் காலை சேர்களை தூசியாக உள்ளதே என சுத்தம் செய்கிறார்கள் 
அதோ அந்த மோகன்குமார் தான் உங்களை  கூலிங் கிளாஸ்  இல்லாம போட்டோ எடுத்தது; விடாதீங்க பிடிங்க என சிபி செந்தில்குமாரிடம் சொல்லும் வேடந்தாங்கல் கருண்  

மூத்த பதிவர் நடன சபாபதி நினைவு பரிசு பெறுகிறார் 
வீடுதிரும்பல் இந்த அளவு பிரபலமாக காரணமான எனது குரு ரேகா ராகவனுடன் 
****
பதிவர் சந்திப்பு குறித்த பிற பதிவுகள் :

பதிவர் சந்திப்பு மாபெரும் வெற்றி : படங்கள் : இங்கே
பதிவர் சந்திப்பு படங்கள் பார்ட் டூ : இங்கே
சென்னை பதிவர் சந்திப்புக்கு பின்னே இருந்தது யார்? : இங்கே
சென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி : இங்கே
 பட்டுகோட்டை பிரபாகர் பேசியது என்ன? : இங்கே
சாப்பாட்டு பந்தியும் பிரபல பதிவர்களும் : இங்கே

51 comments:

 1. Anonymous7:49:00 AM

  இவர் தானா அந்த சேட்டைக்காரனா ? பார்க்க அப்படித் தெரியவே இல்லையே !!!

  படங்கள் அனைத்து மிக அருமை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !!!

  ReplyDelete
 2. கடைசி போட்டோவுக்கு கமென்ட் தப்பா வந்திருக்கு பாருங்க. அது ரேகா ராகவன்

  ReplyDelete
 3. படங்கள்.. தகவல்கள்.. என அசத்தல் பதிவுகள்.. ரேகாராகவன் ஸாரைப் பார்க்க ஆனந்தம். இதுவரை முகமறியா சேட்டைக்காரன் இப்போது பார்த்ததும் டபுள் மகிழ்ச்சி.. சிறப்பான தொகுப்பிற்கு நன்றி..

  ReplyDelete
 4. மோகன் ஆன்லைன்ல இருக்கறது தெரியாது. தெரிந்திருந்தால் அங்கேயே சொல்லி இருப்பேன்.

  ரிஷபன் சார் நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். அடுத்தமாதம் திருச்சி வருவேன்னு நினைக்கிறேன். அப்ப சந்திக்கிறேன்

  ReplyDelete
 5. விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து மிக சிறப்பாக அனைவரும் மகிழும் வண்ணம் நெகிழும் வண்ணம் நடத்தி முடித்து,இதற்காக சிரத்தை எடுத்து உழைத்து பதிவுலகில் பெரும் சாதனை புரிந்த சகோக்களுக்கு ராயல் சல்யூட்.படங்களும் விளக்கமும் அருமை சகோ.

  ReplyDelete
 6. சிறப்பான படங்கள்....

  உடனுக்குடன் படங்கள் வெளியிட்டு என்னைப் போன்ற வர இயலாத பதிவர்களுக்கு விருந்து படைப்பதற்கு நன்றி மோகன்.

  //வீடுதிரும்பல் இந்த அளவு பிரபலமாக காரணமான எனது குரு ரேகா ராகவனுடன் //

  உங்கள் குரு எனக்கும் குரு என்பதில் மனதில் ஒரு மகிழ்ச்சி....

  அடுத்த பதிவுகளையும் படிக்கும் ஆர்வத்துடன்....

  வெங்கட்.
  புது தில்லி.

  ReplyDelete
 7. என் படம் போடாதற்கு கடும் கண்டனங்கள்..

  இப்படிக்கு,
  அப்பாவி பட்டிக்காட்டான்.

  ReplyDelete
 8. பட்டிகாட்டான் Jey said...
  என் படம் போடாதற்கு கடும் கண்டனங்கள்..

  இப்படிக்கு,
  அப்பாவி பட்டிக்காட்டான்.
  *****
  இன்னும் பத்து பார்ட் இருக்கே அவசரபட்டா எப்புடி ? :))

  ReplyDelete
 9. அருமை...

  என்ன சார் லேட்... அடுத்த பதிவு எப்போ...?

  நன்றி... (TM 4)

  ReplyDelete
 10. படமும் குறிப்பும் அருமை. எந்தப் படத்திலும் காணோமே என்று கவனித்த போது ஒரு படத்தில் தெரிந்தார். நிம்மதி. (கணேஷைச் சொல்கிறேன்)
  ரேகா ராகவனைச் சந்திக்க வேண்டும் என்று எனக்கும் நெடு நாளாய் ஆசையுண்டு. சென்னையிலா இருக்கிறார்?

  ReplyDelete
 11. Anonymous9:07:00 AM

  சிறப்பாக உள்ளன.

  ReplyDelete
 12. அனைத்து படங்களும் மிக அருமை நன்றிகள் !!!

  ReplyDelete

 13. கருண், சிபி போட்டோ கமன்ட்:

  சிபி: "வளச்சி வளச்சி போட்டோ எடுக்கறதுல மோகன்குமார் என்ன மிஞ்சிடுவார்னு திகிலா இருக்கே"

  கருண்: "அதோ அங்க ஒரு குட்டி பல்லி செவுத்துல இருக்கே. அதை மட்டும் அவர் படம் எடுக்கல. நீங்க போயி எடுங்க. ஹிட்ஸ் அள்ளும்".

  ReplyDelete
 14. அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete

 15. //பட்டிகாட்டான் Jey said...
  என் படம் போடாதற்கு கடும் கண்டனங்கள்..

  இப்படிக்கு,
  அப்பாவி பட்டிக்காட்டான்.//

  பொய். நேற்றே உங்கள் படங்களை பேரீச்சம் பழ கடைக்கு போட்டு விட்டோமே.

  ReplyDelete

 16. //திண்டுக்கல் தனபாலன் said...
  அருமை...

  என்ன சார் லேட்... அடுத்த பதிவு எப்போ...?

  நன்றி... (TM 4)//

  பதிவர் சந்திப்பு பதிவுகளே பற்பல நாட்கள் ஓடும். :))

  ReplyDelete
 17. பதிவர் திருவிழா மிகச்சிறப்பாக நடந்து குறித்து மிகுந்த மகிழ்ச்சி!

  உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 18. வணக்கம் நண்பரே! உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ! நிகழ்ச்சியை நடத்தி ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்பர்களுக்கும் பாராட்டுக்கள் !


  வானவில் மாடசாமி

  ReplyDelete
 19. சிவா

  //"அதோ அங்க ஒரு குட்டி பல்லி செவுத்துல இருக்கே. அதை மட்டும் அவர் படம் எடுக்கல. நீங்க போயி எடுங்க. ஹிட்ஸ் அள்ளும்".// ஏன் சிவா ஏன் இப்புடி....


  சார் படங்களைப் பார்க்கும் பொழுது மீண்டும் மீண்டும் நிகச்சி நியாபகம் வருகிறது... அணைத்து போடோக்களையும் எதிர்பார்த்து

  ReplyDelete
 20. // எல் கே said...

  கடைசி போட்டோவுக்கு கமென்ட் தப்பா வந்திருக்கு பாருங்க. அது ரேகா ராகவன் //

  போட்டோக்கள் தனியே இருந்தது; கமென்ட் தனியே இருந்தது. கடைசி போட்டோ கீழே ஒரு கமன்ட் டெலிட் செய்யாமல் இருந்து விட்டது. மற்றபடி ரேகா ராகவன் சாரை எனக்கு தெரியாமல் இருக்குமா? நன்றி LK

  ReplyDelete
 21. சிறப்பான தொகுப்பு.

  நன்றி. தொடருங்கள்:)!

  ReplyDelete
 22. இவர் தானா அந்த சேட்டைக்காரர்? நம்பவே முடியவில்லை.

  :D :D :D

  ReplyDelete
 23. தெளிவான புகைப்படங்கள்.
  பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 24. படங்கள் தொகுப்பு அருமை

  ReplyDelete
 25. தொடருங்க ரெண்டாவது மொய்

  ReplyDelete
 26. அறிமுகங்களுக்கும்,கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 28. "நகைச்சுவை மன்னன்" சேட்டைக்காரனை உங்கள் பதிவின் மூலம் கண்டதில் மகிழ்ச்சி..!!

  ReplyDelete
 29. அழகான புகைப்படங்கள். பதிவிட்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 30. விழாவில் கலந்துகொண்டதால் நான் பல நண்பர்களை பெற்றேன்... குறிப்பாக ரஞ்சனி நாராயணன் அம்மா, வல்லி சிம்ஹன் அம்மா, லஷ்மி அம்மா, ருக்மணி அம்மா, தூயா மற்றும் சசிகலா அக்கா, தேவாதிதேவன் சார்...

  முக்கியமாக உங்கள் அறிமுகம் மற்றும் கணேஷ் சார் அறிமுகம்.....

  வெகு நாட்களாக என்னை குழப்பிக்கொண்டு இருந்த சேட்டைக்காரன் சார் அறிமுகம்.... விழாவில் நான் கண்ட அனைவரும் இன்முகத்துடன் குதூகலத்துடன் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது!!!!

  சொந்த குடும்ப விழாவில் கூட காணக்கிடைக்காத ஒரு நல்லுணர்வு ஒற்றுமை மகிழ்ச்சியை கண்டு அனுபவித்து வியந்தேன்...

  ReplyDelete
 31. என்னால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை, என்றாலும், தங்கள் பதிவின் மூலம் முகமறியா பல பதிவுலக நண்பர்களின் முகங்களைப் பார்த்துக் கொண்டேன். நன்றி!

  ReplyDelete
 32. பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 33. மோகன் குமார் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 34. சேட்டைக்காரன் அவர்களைக் காட்டியதற்கு நன்றி!

  ReplyDelete
 35. பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. படங்கள் அருமை, பகிர்வுக்கு நன்றி ... நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு.. அனைவருக்கும் பாராட்டுக்கள்!

  என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..

  ReplyDelete
 36. தங்களை சந்தித்ததில் மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 37. சிறப்பான புகைப்படங்களுடன் அறிமுகம் அருமை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 38. Anonymous6:31:00 PM

  பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தேன்

  ReplyDelete
 39. சிறப்பான படங்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 40. சேட்டைக் காரனைப் பார்க்க வேண்டும் என்கிற தாபம் தீர்ந்தது!

  ReplyDelete
 41. அருமை..

  பகிர்வுக்கு நன்றி சார்..

  ReplyDelete
 42. ஆஹா. அருமை. திரு மோகன் குமார். வாழ்த்துகள்.

  ReplyDelete
 43. நன்றி மோகன், படங்களும் பதிவும் சூப்பர்....ஏன்னா நானும் அதிலே இருக்கேனே...

  ReplyDelete
 44. நல்ல பகிர்வு.. நாங்களும் கலந்துக்கிட்ட உணர்வைத்தந்தது படங்கள்.

  ReplyDelete
 45. என்னைப்பற்றிய உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றி அண்ணே!!

  ReplyDelete
 46. படங்களும், பதிவர்களின் தகவலும் சிறப்பு. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய அனைத்துப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 47. நண்பருக்கு நிகழ்வுகள் இன்னும் அகலவில்லை நெஞ்சில் இருந்து அதை மீள் பிரசுரம் செய்கிறது உங்கள் படைப்பும் படங்களும் அருமை

  ReplyDelete
 48. பிரபல பதிவர்கள் புகைப்படங்களை அருமையாக தொகுத்து இருக்கின்றீர்கள்.
  அதிலும் சேட்டைக்காரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..
  http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

  ReplyDelete
 49. மிகவும் அருமையான படங்கள்....சென்ற வாரத்திற்கு சென்றே விட்டேன் நான். பாராட்டுக்கள் மோகன் குமார்!
  உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.பேச முடியவில்லை...அடுத்த முறை...
  அன்புடன்,
  ரஞ்ஜனி
  ranjaninarayanan.wordpress.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...