Wednesday, August 22, 2012

சென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்

சென்னையில் ஆகஸ்ட் 26 நடக்கவுள்ள பதிவர் மாநாட்டுக்காக ஒவ்வொரு வாரமும் பதிவர்கள் கூடி கும்மி அடித்த போது எடுத்த புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக.

முன்குறிப்பு: இந்த படங்கள் வெவ்வேறு ப்ளாகுகளில் இருந்து சுடப்பட்டவை !

கும்புட சொல்லி போட்டோ புடிக்கிறாங்க. நம்மளை வச்சு என்னென்ன காமெடி பண்ண 
போறாய்ங்களோ? 

இதுவரை பேசுனதை வச்சு ஏதாவது கேள்வி கேட்டுப்புடாதீங்க.  நான் நாளைக்கு பதிவுக்கு டெர்ரர் தலைப்பு யோசிச்சிங் -கவிதை வீதி சவுந்தர்  


" பதிவர் எனப்படுவது யாதெனின்"னு குங்குமம் புக்கிலே கட்டுரை எழுதிடலாமா? - லதானந்த்
"பின்னாடி முடி விட்டுருக்கவர் என் தம்பி பிலாசபி பிரபாகர் ; நான் அவரு அண்ணன் . முன்பக்கம் முடி வளப்பேன்". -மெட்ராஸ்பவன் சிவகுமார்
"கல்யாணம் நிச்சயம் ஆனவுடனே என் கிட்டே வா;  மனைவியை  சமாளிக்க  நூறு  வழின்னு  என்கிட்டே புக்கிருக்கு; சொல்லி தாரேன்"-   சீனுவுக்கு அட்வைஸ்  செய்யும் பாலகணேஷ்

ஒரு பதிவர் வந்து பார்த்தாலே நாலு பக்கத்துக்கு  எழுதுவாங்க. நூறு பேருக்கு மேலே வர்றாங்களாம். நம்ம பத்தி என்னென்ன எழுதுவானுங்களோ? ஆகஸ்ட் 26 -க்காக காத்திருக்கும் மண்டபம்

"அனுஷ்காவுக்கு நீங்க தான் ஜோடி" -ன்னு ஜெயகுமார் சென்னைபித்தன் ஐயாவிடம் சொல்லிருப்பாரோ?!
முக்கியப்புள்ளி,முக்கியப்புள்ளின்னு சொல்றாங்களே இந்த மூணு பேருதாங்க அது !
"வெயிட்டான பதவி தர்றேன்னு சொல்லி கூட்டி வந்தாங்க. சீட்  தான் வெயிட்டா கிடைச்சுது"
- ஆரூர் மூனா செந்தில் 
###############
ஆகஸ்ட் 26 விழாவிற்கு வருவோர் பட்டியல் இங்கே காணலாம் 
###############

பெங்களூரிலிருந்து : மோகன் குமார் 

40 comments:

 1. சொந்த படம் எதுவும் comment பண்ணும் படி இல்லையா? இல்லை அது மற்றவர்களிடம் சிக்கியுள்ளதா?

  ReplyDelete
 2. படங்களுக்கு ஏற்ப கமெண்ட் அசத்திட்டீங்க.

  ReplyDelete
 3. Anonymous1:34:00 PM

  மண்டபம் ரொம்ப அழகாக இருக்கு ...

  ReplyDelete
 4. //"கல்யாணம் நிச்சயம் ஆனவுடனே என் கிட்டே வா; மனைவியை சமாளிக்க நூறு வழின்னு என்கிட்டே புக்கிருக்கு; சொல்லி தாரேன்"- சீனுவுக்கு அட்வைஸ் செய்யும் பாலகணேஷ்//

  HI HI

  ReplyDelete
 5. படங்கள் அருமை அதற்க்கு பொருத்தமான நகை அலங்காரமிக்க கருத்துக்கள் மகுடம் போல மின்னுது

  ReplyDelete
 6. படங்களுக்கான கருத்துக்கள் ஜோரா இருக்கு அதிலும் மண்டபம் சொல்வதாக வரும் கமெண்ட் ஓகே

  ReplyDelete
 7. சிவகுமார் இந்த போட்டோவைப் பாத்து ஒரு முடிவெடுக்கணும்.சாரி முடி எடுக்கணும்.

  ReplyDelete
 8. இவ்வளவு பிஸியிலும் பெண்களூருக்குப் போயிட்டீங்க போல!!!!

  ReplyDelete
 9. பதிவர் சந்திப்பு களைகட்டத் தொடங்கி விட்டது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஓகே.ஓகே.நீங்க பெங்களூர் ல தான் இருக்கீங்க...

  ReplyDelete
 11. படங்களும், கருத்துக்களும் அருமை... நன்றி... (TM 4)

  ReplyDelete
 12. அருமையான புகைப்பட பகிர்வு! கமெண்ட்கள் நச்!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 13. அனைவரும் ஒன்று கூடி ஒரு குடும்பமாக நடத்தும் விழா ..ஹப்பப்பா
  நினைத்து பார்க்கவே சந்தோஷமா இருக்கு ,என்னை போன்ற வெளிநாட்டில் இருப்போருக்காக நீங்க முழு விழா சந்திப்பையும் போட்டோ மட்டுமல்லாமல் வீடியோ வும் எடுத்து பதிவில் இடுங்களேன் ..

  கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் இனிய அன்பான வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ஏஞ்சலின்
  வார்த்தையையே நானும் முன் மொழிகிறேன்.
  நன்றிங்க...

  ReplyDelete
 15. படங்களும் கமெண்டுகளும் சூப்பர்... பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துகள்....

  த.ம. 6

  ReplyDelete
 16. படங்கள் அருமை. TNM பின்னூட்டம் புன்னகைக்க வைத்தது. :)))

  ReplyDelete
 17. மோகன்குமார், படங்களுக்கு எழுதியிருக்கும் கமெண்ட்ஸ் கலக்கல்! பெங்களூர் போனாலும் பதிவுலகை விட மாட்டிங்க போலிருக்கே :)

  பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்! தமிழ்நாட்டில் இல்லையே என்று ஏங்க இன்னொரு காரணம் உருவாகி விட்டது!!

  ReplyDelete
 18. வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  சொந்த படம் எதுவும் comment பண்ணும் படி இல்லையா? இல்லை அது மற்றவர்களிடம் சிக்கியுள்ளதா?

  ***
  நான் எடுத்த படங்களும் இதில் இருக்கு. சில வாரங்கள் ஞாயிறு கூட்டத்துக்கு நான் போகலை. அதான் மற்ற ப்ளாகிலிருந்து படங்கள் எடுக்க வேண்டியதா ஆச்சு

  ReplyDelete
 19. நன்றி சசிகலா

  ReplyDelete
 20. நன்றி ஸ்ரவாணி மேடம்

  ReplyDelete
 21. ஹாரி பாட்டர் : ஹிஹி நன்றிங்க

  ReplyDelete
 22. நன்றிங்க சரளா. ஞாயிறு சந்திப்போம்

  ReplyDelete
 23. சரவணன் சார்: ரைட்டு ஜமாய்ச்சுடுவோம்

  ReplyDelete
 24. முரளி சார்: உங்க கமன்ட் மிக ரசித்தேன்

  ReplyDelete
 25. துளசி மேடம்: வீட்டம்மா சைடு கல்யாணம் போகாம இருக்க முடியுமா?

  ReplyDelete
 26. நன்றி மாதேவி

  ReplyDelete
 27. கோவை நேரம் said...

  ஓகே.ஓகே.நீங்க பெங்களூர் ல தான் இருக்கீங்க...

  ஏனுங்க டவுட்டா சொல்றீங்க!!

  ReplyDelete
 28. நன்றி தனபாலன் சார்

  ReplyDelete
 29. நன்றி சுரேஷ்

  ReplyDelete

 30. சென்னை பித்தன் சார்: நீங்க எப்படி எடுதுக்குவீங்கலோன்னு தயக்கம் இருந்தது நன்றி சார்

  ReplyDelete
 31. ஏஞ்சலின்: நிச்சயம் Video முடிந்த விதத்தில் செய்கிறோம் நன்றி

  ReplyDelete
 32. நன்றி அருணா மேடம்

  ReplyDelete
 33. வெங்கட்: நன்றி

  ReplyDelete
 34. பதிவர்களுக்கு மட்டும்தானா அல்லது எங்களைப்போல வாசகர்களுக்கும் அனுமதி உண்டா? -மோகன்

  ReplyDelete
 35. ஸ்ரீராம்: நீங்க வருவது பற்றி பேச்சு மூச்சே காணும்

  ReplyDelete
 36. கார்த்தி: நன்றி

  ReplyDelete
 37. வரலாம் மோகன். உங்கள் வருகையை உறுதி செய்து மெயில் அனுப்பவும்

  ReplyDelete
 38. படங்களுக்கு உங்களின் கமெண்ட்டுகள் புன்னகையை வரவழைததன. அருமை. நான் மற்றும் சீனு இருக்கும் படத்தில் நிஜத்தில் நடந்த உரையாடல் இது :

  நான் : சீனு... ஒரு டவுட்டு!

  சீனு : என்ன ஸார்?

  நான் : இல்ல... உன் 25வது பிறந்த நாள் அன்னிக்கு 25வது பதிவை வெளியிட்டிருக்க.. அப்ப, 50வது பிறந்த நாள் அன்னிக்கு உன் 50வது பதிவை வெளியிடுவியா?

  சீனு : அவ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 39. பாலகணேஷ்: நீங்கள் பேசியது அப்பவே காதில் விழுந்தது. இருந்தாலும் கலாய்க்க எங்களுக்கு உரிமை இருக்கு இல்லையா?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...