Wednesday, June 8, 2016

வானவில்: இறைவி சர்ச்சை- வேலைன்னு வந்துட்டா & மருது விமர்சனம்

பார்த்த படம்-1 வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 

ஒரே வார்த்தை... கொடுமை !! நம்ம இயக்குனர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் எவ்ளோ நம்பிக்கை.. !! சிரிப்புங்கற பேர்ல என்ன மொக்கையா இருந்தாலும் ரசிப்பாங்கன்னு...!!

முழு நீள சிரிப்பு படமா எடுக்க முயற்சி பண்ணிருக்காங்க.. ஆனா சிரிப்பு எப்பவாவது தான் வருது..

போலிசாக நிக்கி கல்ராணி சரியாக பொருந்துகிறார். ரோபோ ஷங்கர் நடிப்பு பெரும்பாலும் செயற்கை; இறுதி பகுதியில் சொன்னதையே திருப்பி சொல்லும் 10 நிமிடம் சிரிக்க வைக்கிறது

சூரியின் புஷ்பா புருஷன் காமெடி சுத்தமா எடுபடலை.. (இதுக்கு எவ்ளோ பில்ட் அப்பு !!)

கதை இல்லை; திரைக்கதை சுத்தமா சரியில்லை.. என்னமோ எடுத்து வைப்போம்னு செஞ்சிருக்காங்க...Pathetic !!

இறைவி- கார்த்திக் சுப்புராஜ் பிரச்சனை 

இறைவி படம் இருவேறு விமர்சனங்களை ஒரே நேரத்தில் பெற்றிருக்கிறது. அற்புதம் என்று சிலரும், படு மோசம் என இன்னொரு பக்கமும் விமர்சிக்கிறார்கள். வழக்கமாய் செல்வராகவனின் சில படங்களுக்கு தான் (உதாரணம்: ஆயிரத்தில் ஒருவன்) இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம் விமர்சனங்கள் வரும்.. !!

இதற்கிடையில் படத்தில் தயாரிப்பாளர்களை மோசமாக காட்டி விட்டார்; கார்த்திக் சுப்புராஜை அழைத்து விசாரிக்கணும்; அவருக்கு ரெட் கார்ட் போட தயாரிப்பாளர் சங்கம் முடிவு என ரூமர் ஓடி கொண்டிருக்கிறது.

ரெட் கார்ட் போடுவது அவ்வளவு சுலபம் இல்லை.. நிச்சயம் அழைத்து விசாரிப்பார்கள் என நினைக்கிறேன்.

போலிஸ், வக்கீல் இவ்வளவு ஏன்.. முதல்வரை கூட வில்லனாக.. காட்டி விட்டார்கள்.. ஆனால் முதல்முறை ஒரு தயாரிப்பாளரை வில்லனாய் காட்டினால் இப்படி கொதிக்கிறார்கள்..

இந்தியன் கான்ஸ்டிடியூஷனில் " Freedom of speech and Expression " எதற்கு தான் வைத்திருக்கிறார்கள்?? கார்த்திக் சுப்புராஜை இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்கள் நோண்டினால், அவர் உயர் நீதி மன்றம் செல்லும் பட்சம், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தான் நீதிபதியின் குட்டு கிடைக்கும்.. ஆனால் அப்படி கோர்ட் போனால்- ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களை பகைப்போம்;அடுத்த பட வாய்ப்பு போகும் என்பதால் கார்த்திக் சுப்புராஜ் செல்ல மாட்டார்

இந்த விஷயம் (அவசியமே இல்லை என்றாலும் கூட) கார்த்திக் சுப்புராஜ் மன்னிப்பு கேட்டார் என முடிய கூடும் !!

அழகு கார்னர்


கெளதம் மேனன் ரசனைக்கார மனுஷன்..இவர் படத்தில் ஹீரோயின்கள் எல்லாருமே செம அழகாய் தோன்றுவர்.. காஸ்டியூம்களும் கூட ரசிக்கும் படி இருக்கும்..

மஞ்சிமா மோகன் எனும் இந்த அம்மணி - கெளதம் மேனனின் அடுத்த படம் அச்சம் என்பது மடமையடாவில் ஹீரோயின்!!


மலரும் நினைவுகள் : டி வி எஸ் பெட்ரோல் பங்க் 

சென்னையில் சிறந்த பெட்ரோல் பங்கு என்றதும் சில வருடங்கள் முன் வரை நினைவுக்கு வருவது டி வி எஸ் பெட்ரோல் பங்க் தான். இங்கு பெட்ரோல் போடுவதே மிக வித்தியாச அனுபவம். வண்டியை பெட்ரோல் பங்குக்கு வெளியில் நிறுத்தி விட்டு கியூவில் நின்று பணம் கட்டி டோக்கன் வாங்க வேண்டும். பின் மீண்டும் வண்டியை எடுத்து பெட்ரோல் போடும் கியூவில் நிற்க வேண்டும். இரண்டு இடத்திலும் குறைந்தது ஐந்து நிமிடமாவது நின்று ஆக வேண்டும். அவ்வளவு கூட்டம் எப்போதும் இருக்கும்! டி வி எஸ் நிறுவனமே நடத்தும் இந்த பங்க் - அளவிற்கும் பெட்ரோல் தரத்துக்கும் மிக சிறந்த இடமாக இருந்தது !

ஞாயிறுகளில் லீவு. மதியம் சாப்பாட்டுக்கு சில மணி நேரங்கள் பூட்டி விடுவார்கள். இப்படி சில இடைஞ்சல்கள் இருந்தாலும் மக்கள் பெரும் அளவில் இங்கு கியூவில் நின்று பெட்ரோல் போடுவார்கள்

என்ன காரணமோ தெரியவில்லை.. பெட்ரோல் பாங்க்கை மூடிவிட்டார்கள்.. சென்னையின் ஒரு பழம் பெரும் அடையாளம் மூடப்பட்ட வருத்தம் இந்த இடத்தை கடக்கும்போது வந்து போகிறது !

பார்த்த படம் 2 : மருது

1990 களில் வந்திருக்க வேண்டிய படம். .......2016ல் எப்படி வந்தது !

அம்மா செண்டிமெண்ட்- அப்பா செண்டிமெண்ட் .....ஏற்கனவே பலர் எடுத்து விட்டதால், இங்கே ஆத்தா செண்டிமெண்ட்..

விஷால், சூரி, அப்பத்தா என அனைவரும் அடுத்து வர போவதை முன் கூட்டியே சொல்லி விடுகிறார்கள் " நான் வேண்ணா சொல்றேன்.. அவ இப்ப இங்கே வருவா பாரு" !

இவர்கள் என்ன சொல்வது,, நாலைந்து தமிழ் சினிமா பார்த்த யார் வேண்ணா அடுத்தடுத்த சீனை சொல்லி விடலாம்.. இதில் இவங்க வேற முன்னாடி சொல்றோம்னு செமையா வெறுப்பேத்துறாங்க.. !!


படத்தின் மிக முக்கிய பாத்திரத்துக்கு நடிக்க வைத்த அப்பத்தா செலக்ஷனில் படத்தின்  தோல்வி பாதி உறுதியாகி விட்டது. மனோரமா அல்லது வடிவுக்கரசி நடிக்க வேண்டிய பாத்திரம்.. அந்த மலையாள பாட்டிக்கு பாஷையும் புரியலை; நடிப்பும், வாயசைப்பும் ஒட்டவே ஒட்டலை  !!

பிளாஷ் பேக் ...பிளாஷ் பேக் ...பிளாஷ் பேக் ...யார் யாருக்கு பிளாஷ் பேக்  வைப்பது என வரைமுறை வேண்டாமா? ஸ்ரீ திவ்யா அம்மா பாத்திரத்துக்கு  ஒரு பிளாஷ் பேக் ...கிளை மாக்ஸ்சில் பாட்டிக்கு ஒரு பிளாஷ் பேக் ...முடியல... !

ஹீரோ மற்றும் வில்லன் ரெண்டு பேரும் படம் துவங்கி இறுதி வரை ஆளுக்கு 40-50 பேரை கொல்கிறார்கள் ! நல்ல ஊர் .. நல்ல போலிஸ் ஸ்டேஷன்.. !! அம்மா ஆட்சியின் சட்டம் ஒழுங்கை இப்படி காய்ச்சியிருக்க வேண்டாம் :)

இரண்டே ஆறுதல்.. துவக்க காட்சியில் தைரியமான பெண்ணாக காட்டப்படும் ஸ்ரீ திவ்யா மற்றும்.......

அற்புதமான பிரிண்ட் !!

போஸ்ட்டர் கார்னர் 


ஆ.......யிரம் !!

வீடுதிரும்பலில் சில வாரங்களாக தொடர்ந்து பதிவுகள் வருகிறதே. என்ன காரணம் என கேட்ட இரு நண்பர்களுக்கு நன்றி..

பதிவுகளின் எண்ணிக்கை 1000த்தை எட்ட உள்ளது ! (தற்போது 983 ) ஆயிரத்தை தொடப்போகிறோம் எனும்  எண்ணமே ஓட வைக்கிறது.. ஓரிரு மாதத்தில் அந்த எண்ணிக்கை தொட்ட பின் வாரம் 2 பதிவு மட்டுமே வெளியிட எண்ணியுள்ளேன்.. தொடர் ஆதரவுக்கு நன்றி !

2 comments:

  1. ஒரெயொரு திருத்தம். அஎம படத்தின் நாயகியின் பெயர் மஞ்சிமா, not மஞ்சுமா. :)

    ReplyDelete
  2. சுவையான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...