Monday, June 13, 2016

தொல்லை காட்சி: கலக்கபோவது யாரு செமி பைனல்: அச்சம் தவிர் இன்ன பிற

அச்சம் தவிர்

அச்சம் தவிர்  ஒரே நாள் தான் பார்த்தேன்.. பார்த்தவுடன் தோன்றியது .. "இந்நிகழ்ச்சியை தவிர்" !!

போட்டி ஆரம்பித்து அது தான் ரெண்டாவது நாளாம்.. அதற்குள் 2 டீமும் ஒருவருக்கொருவர் ஜென்ம எதிரி போல சண்டை போட்டு கொண்டார்கள்.. போட்டியை விட - இந்த சண்டையை தான் முக்கால்வாசி நேரம் காட்டி வெறுப்பேற்றினார்கள்  !

சினிமாவில் பார்த்ததை விட 2 மடங்கு பருமனான காயத்ரி ரகுராம், என்ன காரணத்தாலோ தொண்டை பாழாகி கர்ண  கொடூரமாக பேசும்  பிரியங்கா, வெறும் சட்டை போன்ற உடை மட்டுமே (கீழே... முழு விடுதலை) அணிந்த DD .. என எல்லா பக்கமும் கொடுமையாய் இருந்தது.. வேறு சானல் எகிறி விட்டேன்..

நிகழ்ச்சி விரைவில் நிறுத்தப்படும் என நிச்சயம் நம்பலாம்  !

ஜீ  தமிழ் டாப் 10 செய்திகள்

செய்திகளில் சற்று சுவாரஸ்யம் + நிறைய வெரைட்டியுடன் பார்க்க வேண்டுமெனில் ஜீ  தமிழில் டாப் 10 செய்திகள் நிச்சயம் பார்க்கலாம். அரசியல், தமிழ்நாடு, இந்தியா, சினிமா என எல்லாற்றிலும் முக்கிய செய்திகளை டாப் 10 என தருகிறார்கள். ரசிக்கும் விதம் உள்ளது.. இயலும் போது அவசியம் பார்க்கும் செய்திகள் இது..

ஆதித்யாவில் குறும்படம் 

சில நேரம் குறும்படங்களில் என்னமாய் சிந்திக்கிறார்கள் ! ஆதித்யாவில் குறும்படங்கள் பற்றிய நிகழ்ச்சி பாப்கார்ன் டைம்ஸ் என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது.. ஒரு பெண் பின்னே சுற்றும் இளைஞன்.. திடீரென ஒரு சக்தி மூலம்.. இருவர் உடலும் மாறி விடுகிறது..

ஆண் உடலில் அந்த பெண்ணின் மனது.. பெண்ணின் உடலுக்குள் ஆணின் மனம்..

இருவரும் ஒரு வாரம் - மறு பாலினத்தவராக வாழ, அப்போது நிகழும் சம்பவங்கள் தான் கதை..

சுவாரஸ்ய பிளாட்.. ஓரளவு நன்கு எடுத்திருந்தனர்.. கடைசியில் ஆண்கள் பெண்ணை மதிக்க கத்துக்கணும்; பெண்கள் ஆணின் கஷ்டம் புரிஞ்சுக்கணும் என மெசேஜ் சொல்லி முடித்ததை தவர்த்திருக்கலாம் !

டிவியில் பார்த்த படம் - சண்டமாருதம் 

நோ.. நோ.. அப்படி ஒரு படம் வந்ததா அப்படின்னு கேட்க கூடாது.. 

நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் நடிச்சு அநேகன் ரிலீஸ் ஆன அதே நேரம் இந்த படமும் 2015ல் தான் வந்துருக்கு.. அதக்குள் சன் டிவியில் போட்டு முடித்து - கே டிவியில் ஓடி கொண்டிருந்தது.. 

ஹீரோ மட்டுமல்ல - மோசமான வில்லனும் சரத் குமார் தான்.. ! கெமிக்கல் பாம் கண்டு பிடித்து நாசவேலை செய்யும் வில்லன் சரத்தை - போலிஸ் சரத் போட்டு தள்ளும் ஹைதர் கால கதை.. 


பொழுது போகாமல் 15 நிமிடம் பார்த்து கொண்டிருக்க, மிக சரியாக ஓவியா வரும் நேரம் - எனது மகள்  " சரத் குமார் நடிக்கிற படத்தையெல்லாம் பாக்குறியே.. ச்சே !!" என சானல் மாற்றி விட்டாள் !

கலக்க போவது யாரு 

கலக்க போவது யாரு சீசன் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று திருச்சியில் பைனல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் விஜய் டிவியில் இப்போது தான் செமி பைனல் நடக்கிறது.. அப்புறம் ...வொயில்ட் கார்ட் ரவுண்ட் வேறு சில வாரம் நடக்கும்...வாரா வாரம் கலகலக்க வைக்கும் பலர் செமி பைனலில் மிக சுமாராய் செய்து வெளியேறினர்... செமி பைனல் நிகழ்ச்சி போலவே இல்லை.. சொல்ல போனால் சாதாரண வாரங்களே நன்றாக இருக்கும் !! வொயில்ட் கார்ட் ரவுண்ட்டை சுவாரஸ்யமாக்க திட்டமிட்டு  ஏதும் செய்தனரா என தெரிய வில்லை..

இதில் ஓகே ஓகே மற்றும் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாராவில் காமெடி நடிகையாய் நடித்த மதுமிதா ஜட்ஜாய் வந்து ஊர்பட்ட அலம்பல் செய்து கொண்டிருந்தது.. !

ஒரு வரி விமர்சனம்....

விஜய் டிவி நிகழ்சிகள் பலவும் போர் அடிக்கும் நிலையில் கிங்க்ஸ் ஆப் டான்ஸ் மட்டும் நன்றாகவே செல்கிறது.. நிஜமாக நடன திறன் உள்ளோர் கலக்குகின்றனர்.

ஜெகன் தொகுத்து வழங்கும் கனக்ஷன்ஸ்  நிகழ்ச்சி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு டீமாக கலந்து கொள்கிறார்கள்; சுவாரஸ்யம் குறைவே !

மாலை நேரம் நியூஸ் பார்க்கலாம் என டிவி போட்டால் பல சானல்களும் விவாதம் என வெறுப்பேத்துறாங்க ! எத்தனை மணிக்கு தான் நியூஸ் போடுவாங்களோ தெரியலை.. 

5 comments:

 1. சுவாரஸ்யமான டீ வி விமர்சனம் நன்றி!

  ReplyDelete
 2. Oru warthai Kalakka Povathu yaru Jackulinei parri ezhudi irukkalam
  (Might have mentioned about Jackulin who is doing outstanding)

  ReplyDelete
 3. அருமையான விமர்சனம்..நன்றி அண்ணா

  ReplyDelete
 4. 1000 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. 1000 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...