Wednesday, June 1, 2016

வானவில்: Two Countries- தஞ்சாவூர் மக்களின் கோபம்- சுகா

பார்த்த படம் - Two Countries - மலையாளம் 

திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்த பாமிலி+ காமெடி திரைப்படம்..



கேரளாவில் வாழும் திலீப்  சில சில்லறை கோல்மால்களில் ஈடுபடுபவர். பணத்துக்காக ஒரு பணக்கார ஊனமுற்ற பெண்ணை மணமுடிக்க சம்மதிக்கிறார். பின் அதை விட பணக்கார வெளிநாட்டு பெண் (மம்தா) கிடைக்க - அவரை திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு பின் தன் மனைவி மம்தா ஒரு அல்க்கஹாலிக் என்பது தெரிய வருகிறது. மம்தா பெயரில் இருக்கும் சொத்து அவர் கணவர் வசம் வரும் என்கிற நிலையில் - திலீப் மம்தா சொத்தை அபகரித்தாரா, மம்தாவை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டாரா என்பது இறுதி பகுதி..

திலீப் படங்கள் பலவும் - இதே மாதிரி தான் உள்ளன. கிச்சு கிச்சு மூட்டுகிற மாதிரி லைட்டான காமெடி; இங்கும் சில காட்சிகள் மட்டும் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது.

குடிகார மனைவி என்கிற மம்தா பாத்திரம் தான் மிக வித்யாசமான ஒன்று..

ஆஹோ ஓஹோ இல்லை.. மலையாள சினிமா விரும்புவோர் - ஜஸ்ட் டைம் பாசுக்கு பார்க்கலாம் !

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைப்பு - சில கேள்விகள்

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது பற்றி தஞ்சாவூர் மக்களை ஒரு சானல் பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் அவர்கள் கேட்ட சில கேள்விகள் முக்கியமானவை.

* தேர்தலில் பணம் விளையாடியது என்கிறீர்கள்; பணம் தந்தது யார் வேட்பாளர்கள் தானே? அவர்களுக்கு என்ன தண்டனை ? அவர்களுக்கு தண்டனை தராமால்  தேர்தலை ரத்து செய்து என்ன புண்ணியம்?

* மே 13 தேர்தல் என்றதும் வெளியூரில் வேலை செய்யும் ஆயிரக்கனக்கான தஞ்சை மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க முடியவில்லை என்றதும் மிக ஏமாந்தனர்..

* வேட்பாளர்கள் செய்த தவறுக்கு வாக்காளர்களின் உரிமையை பறிப்பது ஏன்? மேலும் எதோ இந்த 2 ஊர் மக்கள் தான் பணம் வாங்கினர் என்கிற ரீதியில் வெளியூரில் இருக்கும் சொந்தக்காரர்கள்/ தெரிந்தவர்கள் - அனைவரும் பேசுவதும், விசாரிப்பதும் இன்னும் வருத்தத்தை தருகிறது

புது ரிலீஸ்: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர் நடிக்கும் புது படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.. முழு நீள காமெடி  படமாய் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.. எந்த அளவு வொர்க் அவுட் ஆகிறது என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும்...படத்தின் ட்ரைலர் இதோ:



ரசித்த பதிவு.. சுகாவின் சாப்பாட்டு கடை 

சொல்வனத்தில் சுகாவின் சாப்பாட்டு கடை  அண்மையில் கண்ணில் நீர் வர ரசித்து படித்தேன். மனுஷன் என்னமா எழுதுறார்.. சான்சே இல்லை ! திருநெல்வேலி காரர்கள் குணாதிசயம், அவர்கள் பேச்சு அப்படியே எழுத்தில் தெரிவது.. அழகு !

 "2 மாசம் லீவு கிடைச்சா தான் ஊருக்கு போகணும்" என்று சொல்கிற சரவணபவன் சப்ளையர், அதற்கு சுகாவின் மைண்ட் வாய்ஸ், முழுக்கை சட்டை எடுக்கணும்னா 3 கிலோ மீட்டர் துணி தேவை என்கிற குசும்பு.. கு.ஞான சம்பந்தத்தை மக்கள் பலரும் அடையாளம்  காண, அவர் அதற்கு சொல்லும் விளக்கம் என - செம ரகளை.. அவசியம் வாசியுங்கள் !

அழகு கார்னர் 



ரசித்த கவிதை 

கடல்

  ஒரு தாயைப்போல கடல்
  எனக்கு
  மீன்களை உணவாய் தந்தது
  ஒரு தந்தையைப்போல் கடல்
  கட்டுமரத்தில்
  பயணிக்க கற்றுத்தந்தது
  ஒரு நண்பனைப் போல கடல்
  கார்முகிலிருளிலும்
  திசைகளறியச் செய்தது
  ஒரு கயவனைப்போல கடல்
  என் மனைவி மக்களை
  மூசசுத்திணறக் கொன்றது.- லாவண்யா

கார் விபத்து  - ஒரு அனுபவம் 

அண்மையில் எங்களுக்கு தெரிந்த ஒருவர் தனக்கு நிகழ்ந்த Sternum fracture  பற்றி கூறினார்; நண்பர்களுக்கு உதவும் என்பதால் பகிர்கிறேன்

ECR சாலையில் காரில் பயணிக்கும் போது  எதிர் பக்கம் வேகமாய் இன்னொரு கார் வந்துள்ளது. அந்த காரின் வேகம் பாரத்து பயந்து - இவர் தனது காரை ஓரமாய் நிறுத்தி விட்டார்; இருந்தும் எதிர் திசையில் வந்து - இவரது காரை மோதி விட்டு  அந்த கார் 3 முறை சாலையில் பல்டி அடித்துள்ளது.

நமக்கு தெரிந்தவருக்கு உடனே ஏதும் தெரியவில்லை; பின் வாமிட்டிங் வருவது போல இருக்க, அப்போலோ ஆஸ்பத்திரி சென்றிருக்கிறார்; எக்ஸ்ரே யில் நெஞ்செலும்பு முறிவு  (Sternum fracture ) தெரிய வந்துள்ளது. சீட் பெல்ட் போட்டிருந்தும் -எதிர் பக்க வண்டி  மிக வேகமாய் மோதியதில் சீட் பெல்ட் அழுத்தி இப்படி ஆகியுள்ளது (போடாவிடில் ஸ்டியரிங்கில் மோதி ஆபத்து இன்னும் அதிகமாய் வந்திருக்கும்)

Sternum fracture  க்கு எந்த வித சிகிச்சையும் கிடையாதாம் ! வலி குறைய மட்டுமே கொஞ்ச நாள் மாத்திரை; மற்றபடி fracture   தானாகவே கூடி வர வேண்டும். அதுவரை பல வாரங்கள் முழு ஓய்வு மட்டுமே சிகிச்சை!! குப்புறவோ, ஒருக்களித்தோ  படுக்க முடியாதாம்; நிற்கவும் முடியாதாம். வீட்டிலேயே படுத்தே இருக்க வேண்டியது தான். தற்போது ஓரளவு தேறி விட்டார்.

60 வயதாகி, பணியில் ஓய்வு  பெற்ற பின்னும் பல நிறுவனகளுக்கு (40-50 Companies !!) கன்சல்டன்ட் ஆக பணியாற்றியவர் - இந்த விபத்துக்கு பின் முழு ஓய்வு என அறிவித்து விட்டார் !

சாலைகளில் வண்டி ஓட்டும் போது நம் மேல் தவறே இல்லா விடினும் எப்படிப்பட்ட விபத்துகள் நடக்கின்றன !!

*****
அண்மை பதிவுகள்:

சென்னையில் பி.காம் அட்மிஷன் + சிறந்த 10 கல்லூரிகள்.

தொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர் 

இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்

2 comments:

  1. உண்மைதான்! சாலையில் நாம் கவனமாக வண்டி ஓட்டினாலும் தமிழ்க் ”குடி”மகன்களின் தொல்லை தாள முடியவில்லை!

    ReplyDelete
  2. ஈ. சி. ஆர். போன்ற சாலைகளில் மிக வேகப் பயணம் ஆபத்தானது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...