Sunday, September 25, 2016

வானவில் : ஆண்டவன் கட்டளை விமர்சனம்- சென்னை மெட்ரோ ரயில்

ஆண்டவன் கட்டளை 

காக்கா முட்டை, குற்றமே தண்டனை என பரீட்சார்த்த படங்கள் எடுத்த இயக்குனர் மணிகண்டனுக்கு முதல் கமர்ஷியல் படம். விஜய் சேதுபதி, ரித்திகா என இயல்பாக நடிக்க தெரிந்த ஹீரோ - ஹீரோயின் - வித்தியாச கதை களன் இவற்றின் பின்னணியில் நின்று ஆடியிருக்கிறார் மணிகண்டன்

வெளிநாடு செல்லும் ஆசை கொண்ட ஹீரோ - அதற்காக படும் சிரமங்களும் - அது நிறைவேறியதா என்பதும் தான் கதை.

இடையில் பாஸ்போர்ட் ஆபிஸ் துவங்கி, ப்ரோக்கர்கள் உள்ளிட்ட நமது சிஸ்டம் எப்படி இருக்கிறது என அங்கத்துடன் சொல்லி போகிறார்

விஜய் சேதுபதி - ஏமாற்றம், புன்னகை என அனைத்தையும் அளவோடு செய்துள்ளார் .ரித்திகாவிற்கு சென்று படத்திலிருந்து மிக வேறுபட்ட பாத்திரம்; வருகிற நேரம் குறைவு எனினும் - நடிக்க தெரிந்த நடிகை என நிரூபிக்கிறார்.

சின்ன பாத்திரங்களில் வரும் பலரும் இயல்பான நடிப்பை தருகின்றனர்

குறை என்று பார்த்தால் - பாடல்கள் சுமார்; மற்றும் படம் மெதுவாக (சில நேரம் இழுவை) யாக செல்கிறது

எல்லா பக்கமும் நல்ல ரிவியூ பெற்று கொண்டிருக்கும் இப்படம் கையை கடிக்காமல் ஓடி விடும்   !

அழகு கார்னர் 

Dhansika (aka) Dansika #1

மொபைலை மறந்த கதை 

அண்மையில் அலுவலகம் விட்டு ஒரு விழாவிற்கு கிளம்பினேன்; வாகனத்தை அலுவலகத்தில் விட்டுவிட்டு பஸ்ஸில்  செல்ல,  பாதி தூரம்  சென்ற பின்தான் மொபைல் - அலுவலகத்தில் வைத்து விட்டு வந்தேன் என  புரிந்தது;என்ன செய்வது !!

ஆபிசில் எனது டிப்பார்ட்மெண்ட் நண்பர்கள் கிளம்பியிருக்க மாட்டார்கள்.. ஆனால் ஒருவர் நம்பரும் நினைவுக்கு வரலை ! குடும்பத்தினர் தொலை பேசி எண் மட்டும் தான் நினைவில் இருக்கிறது; மற்றவர்களுக்கு போனில் இருந்து நேரே அடிப்பதால் நினைவே வரலை.

அருகில் இருப்பவரிடம் ரிக்வஸ்ட் செய்து அவர் போன் வாங்கி அலுவலகம் - லேண்ட் லைனுக்கு போன் செய்து, நண்பரை பிடித்தேன்..  போனை எடுத்து வைத்து கொள்ளுங்கள் என்று சொன்ன பின் தான் நிம்மதி.

இந்த சம்பவத்துக்கு பின் - அவசரமாய் தேவைப்படும் சில நம்பர்களை பேப்பரில் எழுதி பர்சில் வைத்து கொண்டேன்.. போன் எடுக்காமல் போவது  என்றில்லை;போன் சார்ஜ் காலியானால் கூட நம்பர்  வேண்டுமல்லவா?

பஸ்ஸில் இறங்கிய பின் வீட்டுக்கு P C O -வில் இருந்து போன் செய்யலாம் என பார்த்தால் ஒரு கடையும் இல்லை ! பஸ்ஸில் திரும்பி வரும்போதும் எந்த பப்லிக் பூத்தும் கண்ணில்  படவில்லை;எல்லோர் கையிலும் மொபைல் வந்த பின் P C O - என்பதே மிக மிக  அரிதாகவும்,ஏறக்குறைய வழக்கொழிந்தும் வருகிறது !

போஸ்டர் கார்னர் 



சென்னையில் இரண்டாவது மெட்ரோ ரயில் சர்வீஸ் 

சென்னையில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் மெட்ரோ ஒரு வருடமாக இயங்கி வருகிறது.

தற்போது மெட்ரோ சைதை - லிட்டில் மவுண்ட்டில் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கி உள்ளது. இது முதல் பாதைக்கு மாறானது.

முதல் பாதை ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல், அஷோக் நகர்,   வடபழனி வழியே கோயம்பேடு வரை செல்லும்.

தற்போது இயங்கும் இரண்டாம் ரயில் லிட்டில் மவுண்ட்டில் இருந்து கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர்  வழியே விமான நிலையத்துக்கு செல்கிறது.

இரண்டு இடங்களுக்கும் பொதுவான ஸ்டேஷன்  ஆலந்தூர் தான். சைதையில் இருந்து ஒருவர் கோயம்பேடு செல்ல வேணுமெனில் ஆலந்தூர் வரை ஒரு ரயில் - பின் அங்கிருந்து மாறி கோயம்பேடு செல்லவேண்டும்

இம்முறை நல்ல விஷயம் - டிக்கெட் கட்டணம் ஓரளவு கட்டு படுத்தி உள்ளனர். விமான நிலையம் முதல் கோயம்பேடு செல்ல 50 ரூபாய் கட்டணம். 50 ரூபாய் என்பதை அதிக பட்சமாக வைத்துள்ளது நல்ல விஷயம்.

முழு அளவு இயங்க துவங்கினால் - பெரும் பலன் கிடைக்கும் !

1 comment:

  1. , குற்றம் கடிதல்???? kindly check

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...