Monday, September 5, 2016

ஆந்திரா கோதாவரி ஆற்று படுகையில் ஒரு பயணம்

ண்மையில் ஆகஸ்ட் 15 லீவை ஒட்டி நண்பர்களுடன் - ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்று படுகையில் ஒரு ரிசார்ட்டில் சென்று தங்கி வந்தோம். இது பற்றி ஒரு சிறு தொகுப்பு


நாங்கள் சென்ற படகு 
சென்னையில் இருந்து ஆந்திரா - ராஜ முந்திரிக்கு பல ரயில்கள் செல்கின்றன. கோதாவரி ஆற்று படுகையில் உள்ள பல ரிசார்ட்களும் - ரயில் நிலையத்தில் இருந்தே படகில் செல்ல அழைத்து செல்ல வந்து விடுகிறார்கள். நாங்கள் சென்றது புனாமி ரிசார்ட். போலவே இன்னும் பல ரிசார்ட்களும் உண்டு.

கிளம்பிய நாளன்று எனது பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் கேக் கொண்டு வந்திருந்தனர்.  கேக் வெட்டி ரயிலில் பிறந்த நாள் கொண்டாடினோம் !

ஆகஸ்ட் 15, 2016 - ஒட்டி 3 நாள் லீவ் என்பதால் பலரும் எங்காவது பயணம் சென்றனர்.. எனவே ரயில் டிக்கெட்கள் ரொம்ப முன்னரே பல ஊர்களுக்கும் புக் ஆகி விட்டது; நாங்கள் ஒண்ணரை மாதம் முன்பு திட்டமிட்டோம். 5 குடும்பங்கள் சேர்ந்து சென்றோம். சற்று சுற்றி போகும் ரயில் தான் இருந்தது; சரி எப்படியும் அரட்டை அடித்த படி செல்ல போகிறோம் -பிரச்சனை இருக்காது என நினைத்தோம் 

 நீங்கள் செல்வதாய் இருந்தால் - சுற்றி போகும் ரயிலை விடுத்து சரியான ரூட்டில் செல்லும் ரயிலை தேர்வு செய்தல் நலம். மேலும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் மட்டுமே இங்கு செல்ல பிளான் செய்யவும். காரணம் அப்போது தான் கிளைமேட்  மிக நன்றாக இருக்கும். நாங்கள் சென்ற போது வெய்யில் மற்றும் மழை கலந்து இருந்தது. நிச்சயம் நவம்பர், டிசம்பர் எனில் இன்னும் அதிகம் என்ஜாய் செய்யலாம் 


உங்கள் ரயில் ராஜமுந்திரிக்கு காலை ஏழு மணிக்குள் சென்று விட்டால் - அங்கேயே குளித்து உடை மாற்றி விட்டு பின் படகிற்கு அழைத்து போகிறார்கள். தாமதமாக செல்லும் ரயில் என்றால் குளிக்காமல் நேரே படகிற்கு செல்ல வேண்டி உள்ளது. ரயிலில் 12 மணி நேரம் - பின் தொடர்ந்து படகில் 7 மணி நேரம் எனில் டயர்ட் ஆகி விடுகிறது. இதுவும் - நீங்கள் சீக்கிரம் செல்லும் ரயிலில் செல்ல ஒரு அவசிய காரணம் 

ராஜ முந்திரியில் இருந்து படகு துறைக்கு - ஒரு மணி நேர பயணம்.. வேனில் அழைத்து போகிறார்கள். பின் படகில் மாலை வரை பயணம்; அருகில் சிற்சில கோயில்களில் நிறுத்தி விட்டு தரிசனம்.. 

கோதாவரி ஆறு மிக பெரியதாக இருக்கிறது; கடலா - ஆறா என வியக்கும் வண்ணம் பெரிது. இவ்வளவு அகண்ட ஆறுகள் நாம் தமிழகத்தில் பார்க்க முடியாது 

படகு பயணத்தின் போது நம்மை entertain  செய்ய டான்ஸ் - பாட்டு - சின்ன சின்ன போட்டிகள் என நடத்துகிறார்கள் 

படகில் நண்பர்கள் குழுவுடன் ஒரு டான்ஸ் 
மாலை நாம் தங்குமிடம் சென்று சேர்கிறோம். தங்குமிடம் பல வகைகளில் உள்ளது. கரண்ட் கூட இல்லாத ரூம்  துவங்கி - ஏசி வசதியுடன் உள்ள ரூம் வரை;  நவ ம்பர் டிசம்பர் தவிர மற்ற மாதங்கள் எனில் ஏசி அரை தேர்ந்தெடுக்கவும். டிசம்பர் எனில் தேவை இருக்காது 


ஆற்று படுகையில் நமது தங்கும் இடம்  இருக்கிறது. அகன்ற பெரிய ஆறு, மலை என இயற்கையான சூழல்.. 


இங்கு தங்கும் இடம் எதிலும் செலபோன் டவர் எதுவுமே வேலை செய்யாது.. BSNL உட்பட !

எப்போதோ சென்று ஒரு நாள் தங்கும் நம்மை விடுங்கள்.. இங்கேயே உள்ள யாருக்கும் செல் மற்றும் லேண்ட் லைன்  தொலை பேசி கூட கிடையாது !! நம்பவே சிரமமான விஷயமாய் இருந்தது.. 
நாங்கள் தங்கிய அறைகள் 
ரிசார்ட்டில் விளையாட்டு, நல்ல சாப்பாடு , ஆற்றில் குளியல் என பொழுது கழிந்தது. சாப்பாடு சற்று காரம் எனினும் - சிக்கன், மீன் என அட்டகாசமாய் இருந்தது. ஆற்று குளியல் அனைவரும் ரொம்ப என்ஜாய் செய்தனர் 



காலை ஒரு மணி நேரம் அருகிலுள்ள கிராமத்தில் நடந்து வந்தோம்.  தெலுகு மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது; ஆங்கிலம் அநேகமாய் தெரியாது; நண்பர்களில் ஒரு சிலருக்கு தெலுகு தெரியும் என்பதால் சமாளிக்க முடிந்தது 


திரும்பும் போது படகு பயணம் இல்லை; வேனில் 2 மணி நேர பயணத்தில் ரயில் நிலையம் அழைத்து வருகிறார்கள் 

மிக குறைந்த செலவில் (வேன் - படகு சவாரி, சாப்பாடு, தங்கும் இடம் என அனைத்திற்கும் சேர்த்து செலவுகள் சில ஆயிரம் மட்டுமே) - தங்கும் இடம் - வசதிகள் [பற்றி முன்பே கேட்டு - உங்களுக்கு வேண்டியபடி புக் செய்வது அவசியம் !

நாங்கள் எடுத்த சில புகைப்படங்கள் (பெரும்பாலானவை நண்பன் பாலா மகன் - நவீன் எடுத்தவை) 














இறுதியாக சில வரிகள் :

1. நவம்பர், டிசம்பர் மாதங்கள் மட்டுமே - பயணம் திட்டமிடவும். மிக குளிரான சூழலில் நன்கு என்ஜாய் செய்யலாம்

2. காலை சீக்கிரம் செல்லும் ரயிலில் செல்க. குளித்து உடை மாற்றி விட்டு - படகு பயணம் துவங்கவும்

3. ஒரே குடும்பம் மட்டும் சென்றால் - நிச்சயம் போர் அடிக்கும்; சில நண்பர்கள் அல்லது உறவினர் குடும்பங்கள் சேர்ந்து சென்றால் மட்டுமே சிறப்பாக இருக்கும்

4. தங்குமிடத்தில் உள்ள வசதிகள் - உங்கள் தேவைக்கேற்ப பார்த்து - முன்பே கேட்டு தேர்வு செய்வது அவசியம்.

4 comments:

  1. அழகான சுற்றுலா...அருமையான இடம்

    ReplyDelete
  2. சமீபத்தில்தான் கோதாவரி ஆற்றுப் பயணம் பற்றி ஜெயமோகன் அனுபவித்து எழுதி இருந்தார். உங்கள் பயணப் பதிவு வழக்கம் போல சுவாரசியம் பார்க்க வேண்டிய இடம்

    ReplyDelete
  3. yes. It is very nice. It is pappikondulu. From there u can rach badrachalam also. Very nice place to enjoy. Also u have to try bamboo chicken(chicken pieces stuffed inside a bamboo and grill it). And u can get lot of handcraft items made of Bamboo's.

    ReplyDelete
  4. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    Datain
    Mktyping

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...