Tuesday, October 4, 2016

வானவில் :தொடரி-டிவியில் சீட்டாட்ட விளம்பரம்-எதிர்பார்ப்பில் ரெமோ

தொடரி

சம்பூர்ண ராமாயணம் என்று ஒரு பழைய காலப் படம்-  இராமாயண கதை தான்- சுமார் 4 மணி நேரம் ஓடும்.. ! இரண்டு இடைவேளை விடலாமா என்றெல்லாம் குழம்பினர் அப்படத்துக்கு..

அப்படி 4 மணி நேர படம் பார்த்த மாதிரி ஒரு அனுபவம் - தொடரி பார்த்த போது..  இத்தனைக்கும் படம் ரெண்டே கால் மணி நேரம் தான்..



ஆரம்பிக்கும் போது தம்பி ராமையா- கருணாகரன் காமெடிஎன  நல்லா தான் போச்சு; ஆனால் இடைவேளைக்கு பின் இழுத்துட்டாங்க ! இரண்டாம் பகுதியில் சுவாரஸ்யமான விஷயம் மீடியாக்களை துவைத்து காயப்போட்டது தான் !

டிரைவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட - தறி கெட்டு ஓடும் ரயில்.. ரயில்வே நிர்வாகத்தின் பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் கடைசியில் ஹீரோ தனுஷ் எப்படி ரயிலை காப்பாற்றினார் என்பதே கதை..

இடையில் தனுஷ்- கீர்த்தி சுரேஷ் காதல்...

முதல் நாள் பார்த்த பெண்ணை -  மறு -நாளே  "அவள் தான் உயிர் - அவ இல்லாம நான் இல்லை; செத்தாலும் அவளோடு தான் சாவேன்" என சொல்வதெல்லாம் இந்திய திரை உலகில் - பிரபு சாலமன் படத்தில் மட்டும் தான் நடக்கும் !

பிற்பகுதியில் தனுஷுக்கு வேலை அதிகமில்லை; திடீரென ஓரிரு சண்டை போடுறார். ரயில் முழுக்க மேலே நடக்கிறார்; தாவி குதிக்கிறார்.. ஆனா எஞ்சின் உள்ள இடத்துக்கு மட்டும் தாவி குதிக்க மாட்டேன் என்கிறார் ! என்ன லாஜிக்கோ ?

வித்தியாச கதை களன்.. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் - நல்ல படமாய் வந்திருக்கும்,  ஹூம் :(

டிவியில்  சீட்டாட்ட விளம்பரம்

அண்மை காலமாக சீட்டாடும் நிறுவனம் ரம்மி. காம் பேப்பர், புத்தகம் டிவி இவற்றில் விளம்பரம் செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்து எந்த சூதாட்ட நிகழ்வுக்கும் இப்படி விளம்பரங்கள் வருவதில்லை; அது எப்படி இவர்களை மட்டும் அனுமதிக்கிறார்களோ தெரிய வில்லை; நிச்சயம் தடை செய்ய படவேண்டிய விளம்பரம் இது !

கிரிக்கெட் பக்கம் 

நியூசிலாந்து அணியை முதல் 2 டெஸ்டிலும் இந்தியா எளிதில்  வென்றுள்ளது ; அஸ்வின் 200 விக்கெட்டுகளை கடந்து - 300ஐ நோக்கி செல்கிறார்.. அடுத்த வருடம் அதனை  அடையும் போது அவருக்கு முன்னே கும்ப்ளே, கபில் மற்றும் ஹர்பஜன் மட்டுமே இருப்பர்; இந்தியா கண்டெடுத்த சிறந்த 5 பவுலர்களில் ஒருவராக அஸ்வின் வர இருப்பது பெரும் மகிழ்ச்சி.

தோணி ரிட்டையர் மென்ட் க்கு பிறகு இன்னொரு CSK  வீரரான- சாஹா அட்டகாசமாக கீப்பிங் + பேட்டிங் செய்கிறார்;  புவனேஸ்வர், முகமது சமி, ஜடேஜா என எல்லா பவுலர்களும் அசத்துகிறார்கள்.

கோலியின் பாட்டிங் தான் சற்று  ஏமாற்றம்.விரைவில் அவரும் பார்முக்கு வந்தால் இந்தியா தற்போது அடைந்துள்ள முதல் இடத்தை தொடர்ந்து காப்பாற்றும் !

எதிர்பார்ப்பில் : ரெமோ

வருகிற வாரம் - ஆயுத பூஜையை முன்னிட்டு -லாங் வீக் எண்டு.. எனவே ரெமோ, ரெக்க போன்ற படங்கள்  வெளியாகிறது. மகள் சிவகார்த்திகேயன் விசிறி- எனவே - நிச்சயம் முதல் நாளே ரெமோ பார்க்க வேண்டுமென சொல்லி வருகிறாள்... வெள்ளி -தவறினால்  சனிக்கிழமையாவது பார்த்து விடுவோம்.. விரைவில் வீடுதிரும்பலில் ரெமோ விமர்சனம் வாசிக்கலாம் !

போஸ்டர் கார்னர்



டை-யும் , கோட்டும் 

முகநூலில் என்னுடன் நண்பர்களாய் இருக்கும் பலருக்கு ACS இன்ஸ்டிடியூட்- மீட்டிங் குறித்த புகைப்படங்கள் பகிர்வது தெரியும். அதிலும் அடிக்கடி நான் டை கட்டி படங்கள் பகிர்கிறேன் என நண்பர்கள் கிண்டல்  செய்வதுண்டு.

 நிற்க. ACS இன்ஸ்டிடியூட்டை  நாம் ரெப்ரெசென்ட்  செய்கிறோம் என்பதால் - மீட்டிங்களில் டை + கோட் இரண்டும் அணிந்தால் தான் கண்ணியமாக இருப்பதாக பல CS நண்பர்கள்  கூறுகிறார்கள்.

இங்கு சொல்ல வந்தது வேறு ஒரு  விஷயம்.

டை-யும் , கோட்டும் அணிவதில் சில வரைமுறைகள் இருக்கிறது; எனக்கு ரொம்ப தாமதமாக தான் இது  தெரிந்தது.

டை-யை பொறுத்தவரை - அது உங்கள் பேண்ட் பெல்ட்டுக்கு நேராகவோ அல்லது அதற்கு சற்று பெரிதாகவோ இருக்க வேண்டும்.

பேண்ட்- பெல்ட்டிற்கு மேல் - அதாவது வயிற்றின் பாதியிலேயே டை முடிந்து விடுவது தவறான பயன்பாடு !

கோட்- இதை பொறுத்தவரை நீங்கள் அமரும்போது நிச்சயம் கோட் பட்டனை கழற்றி விட வேண்டும். எந்த கோட் பட்டனும் அமர்ந்திருக்கும்போது  போட்டிருக்க கூடாது ! நிற்கும் போதோ, நடக்கும் போதோ அவசியம் கோட் பட்டன் போட்டிருக்க வேண்டும்; குறைந்தது கடைசி பட்டன் மட்டுமாவது !

டை மற்றும் கோட் - விஷயத்தில் இவை அவசியம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் !

2 comments:

  1. டை-கோட் விளக்கம் அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...