Monday, January 9, 2017

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

மூன்று மாதங்களுக்கு முன் விப்ரோ மாரத்தானை மனதில் வைத்து தான் முதன்முதலாக ஓட துவங்கினோம்.. நான் மட்டுமல்ல இன்னும் பல நண்பர்களும். ஆயினும் இந்நாள் வரும் முன் சின்ன சின்னதாய் பல  மாரத்தான்கள்  ஓடி விட்டோம். ஜனவரி 8 அன்று நடந்த விப்ரோ மாரத்தான் பற்றிய ஒரு அலசல்..



பாராட்டத்தக்க அம்சங்கள்
- - - -
* 4 ஆண்டுகளுக்கு முன் 3000 பேருடன் ஆரம்பித்த விப்ரோ மாரத்தான் இன்று 20000 பேருக்கும் மேல் ஓடுமளவு வளர்ந்துள்ளது; இது ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே செய்கிறது; இப்படி ஏராளம் பேரை ஓட்டம் நோக்கி இழுக்கும் சக்தி இத்தகைய மாபெரும் அளவில் நடத்தப்படும், பெரும் விளம்பரம் செய்யப்படும் மாரத்தான்களில் மட்டுமே சாத்தியம் !

Image may contain: 5 people, people smiling, people standing

* ஜனவரி 8 ஓட்டம் என்றால் - அதற்கு முதல் இரு நாட்களும் நமது டீ ஷர்ட், நமது ஓட்ட நேரத்தை  கணக்கெடுக்கும் சிப் உள்ளிட்டவை வாங்கி கொள்ளும் நாள்.. இம்முறை சென்னை டிரேட் சென்டரில் இந்த கண்காட்சி நடந்தது; தொடர்ந்து அங்கு அன்று பல நிகழ்ச்சிகள்...அனைத்தும் ஓட்டம் சார்ந்து. ஏராள கவுண்டர்கள் வைத்து கியூ அதிகமின்றி மிக விரைவில் நமது டி ஷர்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடிந்தது; இந்த நாளிலேயே நண்பர்கள் பலர் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவும் கண்காட்சி உதவியாய் இருந்தது

Image may contain: 15 people, people smiling, people standing and indoor

* 20000 பேருக்கு மேல் ஓடும் - இந்த ஓட்டத்திற்கு முன்னேற்பாடு, ஓட்டம் துவங்கும் இடம், அங்கு மக்களை சரியான வேகப்படி பிரித்து வைப்பது, ஓடி முடித்ததும் உணவு பெறுவது, வழியெங்கும் பாரம்பரிய இசை கருவிகளை வைத்து பெரும் இசை எழுப்பியது.. என பல விஷயங்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தது.

Image may contain: 1 person, standing and outdoor

* மரத்தானில் வீல் சேரில்  இருந்த படியும் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உதவ அந்த வீல் சேரை தள்ளியபடி இன்னொரு வாலன்டியர் ஓடிவந்தார். வீல் சேரில் அமர்ந்திருக்கும் நண்பரும் தனது கையால் தள்ளியபடி செல்ல, பின்னால் வரும் நண்பரும் வீல் சேரை தள்ளியபடி ஓடிவருவார். இதனை பார்க்கும் போது மிக நெகிழ்ச்சியாய் இருந்தது. இப்படி வீல் சேரில் சென்றபடி  Shailesh Kumar Sinha 21 கிலோ மீட்டரை 2 மணி நேரம் 17 நிமிடத்தில் ஒரு நண்பர் நேற்று முடித்திருக்கிறார்  ! இது ஒரு இந்திய சாதனையாகும் !

Image may contain: 2 people, outdoor


Image may contain: 14 people, outdoor



* சில நண்பர்கள் காலில் விபத்திலோ அல்லது வேறு காரணத்தாலோ சில பாதிப்புகள் வந்தபோதும், விந்தி விந்தி 10 கிலோ மீட்டர் நடந்ததையும் காண முடிந்தது; அவர்கள் மன உறுதி வியக்க வைத்தது.

சில சங்கடங்கள்..

10 கி. மீ ஓட்டம் துவங்கியது அண்ணா- MGR சமாதிக்கு முன்புள்ள நேப்பியர் பாலம் அருகே. முடிந்தது தரமணி C P T பாலிடெக்னீக் அருகே. பொதுவாய் துவங்கும் இடத்திலேயே ஓட்டம் முடிந்தால் தான் நமது வாகனங்கள் வைத்து விட்டு எடுக்க வசதியாய் இருக்கும். இப்படி இரண்டும் வெவ்வேறு இடம் என்பதால் பங்கேற்பாளர்கள் சிரமப்பட்டனர்.

Image may contain: 1 person
* மேற்சொன்ன காரணத்தால் பறக்கும் ரயிலில் செல்லலாம் என 15 நண்பர்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்க்கு 5 மணிக்கு  சென்றால் அடுத்த ரயில் 6.15க்கு தான் என்றனர். இதை பிடித்தால் மாராத்தானுக்கு நேரத்திற்கு செல்ல முடியாது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டு பின் ஆட்டோ, கார் என அவசரமாய் பிடித்து செல்வதை காண முடிந்தது.

Image may contain: 2 people, outdoor

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது நள்ளிரவு ஸ்பெஷல் ட்ரெயின் விடும் ரயில்வே துறை - மாரத்தான் அன்று வழக்கமான 2 காலை ரயில்களும் கான்சல் செய்தது கொடுமை !

மொத்த ரன்னர்களில் 70 % க்கும் மேல் 10 கி. மீ ஓடுவோர் தான். இதனால் சாலை முழுதும் நிரம்பி வழிந்தது. பலரும் மெதுவாய் நடப்போராய் இருந்தனர். இவர்கள் முழு கும்பலாய் சேர்ந்து சாலையை மறைத்தபடி நடந்து செல்ல -ஓடுவோர் அவர்களை சுற்றி கொண்டு - அல்லது வழி விடுங்கள் என சொல்லி கொண்டு ஓட வேண்டி இருந்தது. இதனால் வழக்கமான நேரத்தை விட நிச்சயம் சற்று கூடுதல் நேரம் ஆனது.

Image may contain: 5 people, people smiling, outdoor

10 கி. மீ, அரை மாரத்தான் மற்றும் முழு மராத்தான் மூன்றும் ஒரே ரூட் .. எனவே 7 மணி முதல் 9 மணி வரை அந்த ரூட்டில் 3 வித மாரத்தான் ஓடுவோரும் ஓடி கொண்டிருந்தனர். குறிப்பாக மிக வேகமாய் ஓடும் நண்பர்களுக்கு கூட்டத்தில் புகுந்து ஓடுவது சிரமமாக இருந்தது.

10 கி. மீ ஓட்டம் காலை 7 மணிக்கு தான் துவங்கியது; நல்ல வெய்யில் அடிக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக அடுத்த அரை மணியில் செம வெய்யில்.. பெரும்பகுதி ஓட்டம் வெய்யிலில் ஓட வேண்டியிருந்தது; பல மாரத்தான்களில்  7 மணிக்கு ஓட்டத்தை முழுவதும் முடித்திருப்போம். வெய்யில் ஓட்டத்தை பாதித்தது என நண்பர்கள் பலர் கூறினர் !

இறுதியாக....

ஏராளம் பேரை இழுக்கும் மெகா மராத்தானின் முக்கிய நோக்கம் அத்துடன் முடிகிறது. சில நூறு அல்லது அதிகபட்சம் ஆயிரம் பேர் ஓடும் மராத்தான்களில் ஓடுவதே மகிழ்ச்சியும் இனிய அனுபவமும் தருகிறது. அத்தகைய ஓட்டங்களை தான் அதிகம் தொடர வேண்டும் என நண்பர்கள் பேசிக்கொண்டோம்..

Image may contain: 1 person, standing and text

உங்களுக்கு உடல் குண்டாய் இல்லாமல் பார்க்க  fit ஆக இருக்கணும் என ஆசையா? அதே நேரம் சாப்பாடு  விஷயத்தில் எதையும் விட்டு கொடுக்க கூடாது; வழக்கம் போல் பிடித்ததை சாப்பிடணும், நோயும் வர கூடாது என நினைக்கிறீர்களா?

ஒரே வழி தான்..

வாங்க .. ஓடலாம் !
****
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்


3 comments:

  1. Yesterday , I ran on 8.9 KM marathon in Madurai :)
    I felt very happy when I ran along with my friends...
    Also this is my first marathon run.

    ReplyDelete
  2. உங்கள் பதிவின் கடைசி வரியை (வாங்க ஓடலாம்) மிகவும் ரசித்தேன் !!! உங்கள் பயணங்கள் பற்றிய பதிவுகள் பயணங்களைத் திட்டமிடுவதிலும் இடங்களைக் கூர்ந்து கவனித்து ரசிப்பதற்கும் உதவுகின்றன....உலக வாழ்க்கையில் உள்ள ரசிக்கத்தக்க இடங்களையும் அம்சங்களையும் மிகச் சரியாகப் படம் பிடிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... மு.பழனியப்பன் DE Retired , BSNL MADURAI

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...