Thursday, May 4, 2017

பாஷன் டிசைன் படிப்பு + வேலை வாய்ப்பு - ஒரு அறிமுகம்

ன்ன படிக்கலாம் வரிசையில் பல்வேறு துறைகள் பற்றி வீடுதிரும்பலில் எழுதி வருகிறோம்.

அவ்வரிசையில் இம்முறை - பேஷன் டிசைனிங் துறை பற்றி சற்று அறியலாம்.

ஆர்த்தி சுவாமிநாதன் இத்துறையில் 10 வருடத்திற்கும் மேல்  பணியாற்றுபவர். மாரத்தான்  ரன்னர்,சைக்கிளிஸ்ட், நீச்சல் வீரர், புகைப்படக்காரர் என பன்முகம் கொண்டவர்.

இவரிடம் பேஷன் டிசைனிங் துறை குறித்து கேட்டறிந்தது.. இதோ உங்கள் பார்வைக்காக...

Image may contain: 1 person, standing and outdoor

பாஷன் டிசைன் படிப்பில் எப்போது சேரலாம் ?

பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக பாஷைன் டிசைன் படிப்பில் சேரலாம். வெவ்வேறு கல்லூரியில் அட்மிஷன் முறைகள் மாறுபடுகின்றன. சில கல்லூரிகள் எண்ட்ரன்ஸ் தேர்வும் நடத்துகின்றன. +2 இறுதி ஆண்டுக்கு முன்னதாகவே கல்லூரியில் அப்ளிகேஷன் வழங்கப்படும். மார்ச் 17ல் +2 தேர்வு எழுதுகிறார்கள் எனில்,  செப்டம்பர் 16-ல் கல்லூரிகளில் அப்ளிகேஷன் வழங்கப்படும்.

+ 2 முடித்தவர்கள் மட்டும் தான் இந்த படிப்பில் சேரலாமா? Bsc,  B com போன்ற டிகிரி முடித்தவர்களும் சேரலாமா?

நிச்சயமாக. டிகிரி முடித்தவர்களும் இந்த படிப்பில் சேரலாம். பேஷன் டிசைனிங் மற்றும் இவை இரண்டில் விரும்பிமிருந்தால் டிகிரி முடித்தபின்னும் கூட இந்த துறைக்குள் நுழையலாம்

டிகிரி முடித்தவர்கள் MSc, PG Diploma in Fashion designing போன்ற படிப்புகளை படிக்கலாம்

சென்னை மற்றும் இந்தியாவில் இந்த துறையில் சிறந்த சில கல்லூரிகள் பற்றி கூறுங்கள் 

சிறந்த கல்லூரிகள் ஏராளமாக உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது - NIFT (Nation Institute of Fashion technology); மேலும் பேர்ல் அகாடெமி போல - பல நல்ல நிறுவனங்கள் தமிழகத்திலும், இந்தியாவின் பிற இடங்களிலும் உள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார்  பல்கலைக்கழகம், பாரதி தாசன் பல்கலைக்கழகம் என பல்வேறு யூனிவர்சிட்டிகளும் இந்த படிப்பை நடத்துகின்றன.

இந்த கோர்ஸ் படிக்க பொதுவாக என்ன செலவு ஆகும்?

கல்லூரிகளின் பீஸ் - அது தனியார் கல்லூரியா, அரசு கல்லூரியா என்பதை பொறுத்து பெரிதும் மாறுபடும்.

அரசு கல்லூரியில் ஒரு செமெஸ்டருக்கு 20 முதல் 35 ஆயிரம் வரை பீஸ் இருக்க கூடும். (வருடத்திற்கு எனில் இந்த பணத்தை இரண்டால் பெருக்கி கொள்ளுங்கள்)

இதுவே தனியார் கல்லூரி என்றால்  வருடத்திற்கு 2 முதல் 3 லட்சம் ஆகலாம்.

படிக்கும் போது என்ன விதமான பயிற்சி (Training ) கிடைக்கிறது? படித்து முடித்தபின் எடுக்க வேண்டிய பயிற்சி என்ன?

படிக்கும் போது பேஷன் டிசைனில் உள்ள அடிப்படைகளாக Designing, pattern making, Stitching உள்ளிட்ட விஷயங்களை கற்று தருவார்கள். ஆனால் பிராக்டிகல் அறிவு- படிப்பு முடிந்த பிறகு intern ஆக வேலை பார்க்க துவங்கிய பின்பு தான் நிறைய கிடைக்கும். இத்துறை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று என்பதால் - கற்பது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடக்கும் ஒன்று.. அது வேலைக்கு சேர்ந்த பின்னும் தொடர வேண்டும் ..

இத்துறைக்கு பெண்கள் தான் அதிகம் வருகிறார்கள் என நம்பப்படுகிறது. அப்படியா என்ன?

இல்லை. இரு பாலாருமே இத்துறையை விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். துறையை பொறுத்தவரை அது ஆண் - பெண் என்ற பாரபட்சம் இன்றி இருவரையும் ஒருங்கே வரவேற்கிறது

துறையில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி கூறுங்கள் 

மிக பெரிய வேலை வாய்ப்பு தரும் துறை இது. தற்சமயம் ஆன்லைன் மார்க்கெட்டிங் நன்கு வளர்ந்து வருவதால் அதிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்க துவங்கி உள்ளது.

துணி வியாபாரம் செய்வோருக்கு ஆண்டு முழுதும், உலகம் முழுதும் வேலையும், வியாபாரமும் இருக்கும். எனவே துறை சார்ந்து வேலை செய்வோருக்கும் வேலை இருக்கும்

இத்துறையில் துவக்க சம்பளம் என்னவாக உள்ளது? 

அது அவர்கள் எந்த கல்லூரி/  யூனிவர்சிட்டியில் படிக்கிறார்கள்..  அவர்களின் அறிவு மற்றும் திறமையை பொறுத்தது. சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் டிகிரி முடித்து விட்டு நுழையும்  பிரெஷர்- க்கு   கல்லூரியை பொறுத்து 10,000 முதல் 20,000 வரை மாத சம்பளம் கிடைக்க கூடும்

பேஷன் டிசைனர் என்பது   ஓரளவு அனைவருக்கும் தெரிந்த ஒரு வேலை; இது தவிர  வேறு என்ன வித வேலைகள் இத்துறை மூலம் கிடைக்கும்?

பேஷன் டிசைனிங் துறையை 3 வகையாக  பிரிக்கலாம்.

1. Designer module
2. Manufacturer module
3. Retail module

1. Designer module- இதை பொறுத்த வரை ஒரு தனியார் நிறுவனத்தில் நீங்கள் டிசைனர் ஆக பணி  புரிவீர்கள். அல்லது சொந்தமாய் ஒரு டிசைன் ஹவுஸ் துவங்கி நீங்களே புது வித டிசைனில் துணிகள் தயாரிப்பீர்கள். ரித்து  குமார், மனிஷ் மல்ஹோட்ரா   ஆகியோரை இதற்கு உதாரணமாய் .சொல்லலாம்.

2. Manufacturer module- இங்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் Product development teamல் நீங்கள் பணியாற்றுவீர்கள். இதன் கீழ் merchandiser, sourcing, fabric , trims, production planning என பல கிளைகள்/ துறைகள்  உண்டு.

3. Retail module- இது துணிகளை விற்பனை செய்யும் துறை - இங்கு விற்பனை பிரிவிலோ, அதனை தயாரிக்கும் பிரிவிலோ நீங்கள் பணி  புரியலாம்.

இப்படி பேஷன் டிசைனிங் கீழ் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது

சொந்தமாக தொழில் துவங்குவது சாத்தியமா?ஆம் எனில் எப்போது துவங்க முடியும்?

இப்படிப்பை படித்தோருக்கு - அவர்கள் குடும்பத்தில் ஏற்கனவே வியாபாரத்தில் இருந்தால் அல்லது வியாபாரம் குறித்த ஆர்வம் மிக அதிகமாக இருந்தால் - படித்து முடித்த பின் கூட சொந்த தொழில் துவங்கலாம்.

அல்லது அவர்களது ஆர்வம், உழைப்பு  மற்றும் எந்த பிரிவில் சுய தொழில் துவங்க உள்ளார்கள் என்பதை பொறுத்து மாறும். சுய தொழில் செய்யலாம் என்பது நிச்சயம் சாத்தியமே !

இத்துறையில் உங்களது பயணம் பற்றிக் கூறுங்கள் 

நான் வழக்கமான படிப்பு/ துறை இல்லாமல் - சற்று வித்யாசமாக செய்ய நினைத்தேன். என்னிடம் கிரியேட்டிவிட்டி இருக்கிறது என உறுதியாக நம்பியதால் இத்துறையை தேர்ந்தெடுத்தேன்.  BSc  - Fashion Technology and costume designing - திருச்சியில் படித்தேன். அதில் அதிகம் டிசைனிங் பற்றி தெரிந்து கொண்டேன்.

சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமிருந்ததால் துறை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.  எனவே பேர்ல் அகாடெமி சென்னையில் போஸ்ட் கிராடுவேஷன் படித்தேன் ( Fashion Merchandising)

கடந்த பத்து வருடங்களாக வெவ்வேறு பிரிவில்/ நிறுவனங்களில் பணி புரிந்து வருகிறேன். சுய தொழில்  துவங்கும் எண்ணம் இன்னமும் தீவிரமாக உள்ளது. விரைவில் துவங்குவேன் என நம்புகிறேன்.

இப்பத்து வருடத்தில் வெற்றி, தோல்வி இரண்டுமிருந்தாலும் இரண்டையும் சரி சமமாக எடுத்து கொண்டு அதிலிருந்து என்ன கற்று கொள்ள முடியும் என்பதையே அதிகம் சிந்தித்துள்ளேன்.

ஏற்ற இறக்கங்கள் சில இருந்தாலும் இன்றைக்கு சீனியர் பொசிஷனில் இருப்பது நிச்சயம் மகிழ்ச்சியும் மன நிறைவும் தருகிறது

இப்படிப்பிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எப்படி?

பேஷன் டிசைனிங் படிப்பிற்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நல்ல மதிப்பு உள்ளது. இப்படிப்பு முடித்தவர்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் மேற்சொன்ன நாடுகளை தேர்ந்தெடுக்கலாம்

இத்துறையில் வணிகம் தற்போது எப்படி உள்ளது? 

உள்நாட்டு வியாபாரம் மிக நன்றாக உள்ளது; ஆன்லைன் துறை நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது

இத்துறையில் work culture மற்றும் stress level எப்படி உள்ளது?

சற்று கஷ்டமான கேள்வி. stress level என்பது அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும். நான் அதனை ஒரு learning experience ஆகத்தான் எப்போதும் பார்க்கின்றேன்

துறை பெருமளவில் disorganized ஆக உள்ளதால் தங்களை adopt செய்துகொள்ள சிலர் சிரமப்படுகின்றனர். ஆனால் அவை பற்றி பெரிதும் கவலை கொள்ளாது, அவற்றை ஒரு சாலஞ்ச் ஆக எடுத்து கொண்டு முயலுவோர் துறையில் நன்கு முன்னேறுகின்றனர்

இத்துறையை தேர்ந்தெடுக்க விரும்புவோருக்கு வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


பேஷன் டிசைனிங் என்பது ஒரு தனி உலகம். அதனுள் வரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இதன் உள்ளே வரும்போது தான் - நீங்கள் அணியும் உடைக்கு பின் இருக்கும் பல்வேறு விஷயங்களும் உழைப்பும் உங்களுக்கு தெரியும். ஆல் தி பெஸ்ட் !

*****
தொடர்புடைய பதிவுகள்:

கம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்

காஸ்ட் அக்கவுன்ட்டசி கோர்ஸ் - ஒரு பார்வை

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

5 comments:

  1. நல்லதோர் பகிர்வு. நண்பரின் மகள் NIFT Delhi இல் படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு சார்.. தமிழகத்தில் இதற்கான நல்ல கல்லூரி எது என்று கூற முடியுமா?

    ReplyDelete
  4. வெங்கட், ராஜ்கண்ணன் & தேவதை : மிக்க நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...