Friday, November 20, 2009

வாரம் ஒரு Blogger : இந்த வாரம்: ரேகா ராகவன்


இணையம் (Blog ) தரும் பல்வேறு இனிய அனுபவங்களில் முக்கியமானது அது அறிமுகப்படுத்தும் நட்புகள். பொதுவாய் தனது வேலையையே செய்யும் இன்னொரு நபரை நாம் போட்டியாளராக எண்ணுவோம். அதை விடுத்து, ஒருவருக்கொருவர் உதவும், உரிமையாய் கிண்டல் செய்யும் இந்த blog உலகம் அற்புதமாய் இருக்கிறது.

இந்த அழகிய நட்புகளை வாரம் ஒவ்வொன்றாய் எழுதும் எண்ணம்.

இந்த வாரம்: பதிவர் ரேகா ராகவன்.


ரேகா ராகவன் என்றதும் பெண் எழுத்தாளர் என எண்ணாதீர்கள். ராகவன் அரசு துறையில் (Fisheries Department) வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு காலத்தை பயனுள்ள வழியில் கழிக்க blog-ல் எழுத துவங்கினார். இதற்கு முன்பே இவரது கதைகள் விகடன் உள்ளிட்ட பல புத்தகங்களில் வந்துள்ளன. ரிஷபன், ரவி பிரகாஷ், சத்ய ராஜ் குமார், கே.பி.ஜனா, புதுவை சந்திர ஹரி போன்ற சிறு கதை எழுத்தாளர்கள் இவரது நண்பர்கள். (முழு லிஸ்ட் தர வில்லை. மன்னிக்க.) கவிதை, கதை, கட்டுரை என பல பாணிகளிலும் சரளமாக தனது 2 blogs-ல் எழுதி வருகிறார். வெங்கட் நாக ராஜ் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பல யோசனைகள் சொல்லி வருகிறார்.

அவரது Blog address-ம் அதில் எனக்கு பிடித்த கவிதை ஒன்றும்

http://rekharaghavan.blogspot.com/

http://anbesivam2009.blogspot.com/


மிச்சம்

வீட்டை பாகம் போட்டு
பிரித்துக் கொடுத்தவருக்கு
கடைசியில் கிடைத்தது
வீட்டுத் திண்ணையில் வாசம்.

- ரேகா ராகவன்


நிற்க. இவருடன் எனக்கு நிகழ்ந்த incident-க்கு வருவோம்.


இவருக்கு முதலில் நான் ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன். அடுத்த சில மணிகளில் எனக்கு தொலை பேசினார். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் நேரே மேட்டருக்கு வந்து விட்டார். எங்களது முதல் தொலைபேசி உரையாடலை கேளுங்க:


" உங்க blog-நிறைய மாத்தனும். போட்டோ கூட போடாம வச்சிருக்கீங்க. இப்படி எல்லாம் இருந்தா படிக்க இன்டரஸ்டா இருக்காது. முதல்ல போட்டோ போட கத்துக்குங்க!!". எப்படி போட்டோ போடுவது என உடனே சொல்லி தந்தார். பின் "என்னங்க நீங்க தமிழிஷில் இன்னுமா blog ஐ சேக்கல? " என்றார். "தமிழிஷா? அப்படின்னா?" என்றேன். நேரில் இருந்தால் ரெண்டு குடுத்திருப்பார் என நினைக்கிறேன். :) லைனிலேயே வைத்து கொண்டு தமிழிஷில் எப்படி இணைப்பது என்று சொன்னார். அவரும் அந்த பக்கம் online-ல் பார்த்து இணைத்தது கண்டு தான் நிம்மதி ஆனார்.

" ஹிட் கவுன்ட்டர் போடலை. கிளாக் வைக்கலை. என்ன பண்றீங்க நீங்க" என ஒவ்வொன்றாய் சொன்னார். நேரில் இருந்தால் மவுசும் கி போர்டும் என்னிடமிருந்து வாங்கி தானே செய்து முடித்திருப்பார் என நினைக்கிறேன். HTML -ல் எப்படி விளையாடலாம், அதன் பயன் என்ன என்று சொன்னார். நமக்கு இந்த ஹிட் கவுன்ட்டர் மட்டும் போடவே தெரியலை. (அதன் பின் பல முறை பேசும் போதெல்லாம் "என்ன ஹிட் கவுன்ட்டர் போடலை?" என சொல்லி கொண்டே இருந்தார்). இன்று தான் நம்ம அதி பிரதாபன் அந்த வேலையை செய்து தந்தார்.


"இது வரை உங்க க்ளோஸ் பிரண்ட்ஸ் தான் படிச்சாங்க. இப்போ தமிழிஷில் சேத்துட்டீங்க இல்ல? என்ன ஆகுதுன்னு பாருங்க" என்றார். உடனே அடுத்த மேட்டருக்கு வந்தார். " சர்வேசன் கதை போட்டியில கலந்துக்குங்க. இன்னும் மூனு நாள் தான் இருக்கு. உடனே எழுதி அனுப்புங்க" என்றார். அந்த 15 நிமிடங்களில் நான் அதிகம் பேசியது "சரி சார்" தான்.

அவரது நண்பர்கள் மின் அஞ்சல் முகவரி எல்லாம் தந்து தான் எப்படி அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பதிவு வந்ததும் தெரிய படுத்துவேன் என மாதிரி மெயிலும் அனுப்பினார்.

நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? இது அனைத்தும் அவருடன் நான் பேசிய முதல் Telephone call-ல் நிகழ்ந்தது !


அதன் பின் பல நாட்கள் தினம் ஒரு முறையாவது பேசுவோம். தனது பையன் திருமண வேலையாக வெளியூர் சென்றவர் அங்கிருந்து call செய்து, "நான் மெயிலே பார்க்கலை. உங்க கதைக்கு எத்தனை ஓட்டு விழுந்தது?" என்று நியாபகமாக கேட்டார். நான் குழந்தையின் குதுகலத்துடன் " சார் பத்து ஓட்டுக்கு மேலே விழுந்துடுச்சு " என்றேன். " Very Good. 9 -க்கு மேலே விழுந்தா தான் Popular article- ஆகும்" என திருப்தி ஆனார்.


" எல்லாரோடதும் படிக்கணும். எல்லாருக்கும் ஓட்டு போடணும்" என சொல்லி தந்தார். இன்று வரை நான் படிப்பதில் பெரும்பாலானவற்றிற்கு ஓட்டு போட்டு வருகிறேன். ரொம்ப controversial matters தவிர. (பின்ன நமக்குன்னு ஒரு image இருக்குல்ல; அது கெட்டு போக கூடாதுல்ல:) )


நமது படைப்புகள் படித்து விட்டு மிக encourage -செய்து பதிவிடுவார். யூத் விகடனில் வந்த கவிதைகள் வாசித்து விட்டு " ஆறு கவிதையும் அழகாய் தர வேறு யாரால் முடியும்" என comment போட்டு எனக்கே அதிர்ச்சி ஊட்டினார்.

எனது அலுவலக நண்பரிடம் ரேகா ராகவன் பற்றி சொன்னேன். உடனே ஒரு அழகான கருத்தை சொன்னார். " நீங்க ஒரு நாளைக்கு 10 மணி நேரம் computer-ல் இருக்கிறவர். உங்களுக்கு தெரியாததை கவர்மேண்டில் இருந்து ரிட்டையர் ஆனவர் சொல்லி தரார் பாருங்க. ரொம்ப net savvy -ஆ இருக்காரே! ஆச்சரியம் தான்" என்றார். உண்மையான மதிப்பீடு இது! எனக்கு தெரிந்து கவர்மேண்டில் வயதான பலர் இன்னும் கணினி பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

அவரது blog-ஒரு முறை பாருங்கள். தினம் ஒரு மிக நல்ல saying போடுகிறார். தற்சமயம் பையன் திருமண வேலைகளில் ரொம்ப busy -ஆக உள்ளார். அவரது பழைய பதிவுகள் படித்து பாருங்கள். குறிப்பாக விகடன் போன்றவற்றில் வெளியான அவரது கதைகள்.

ராகவன் சார்.. உங்களோட சேவை தமிழ் நாட்டுக்கு தேவை ; நிறைய எழுதுங்க. இன்னும் நிறைய பேரை உருவாக்குங்க.

ராகவன் பற்றி அறிந்த அவரது நண்பர்கள், அவரை பற்றி மேலும் சுவாரஸ்யமான தகவல் பின்னூட்டத்தில் தந்தால் மிகவும் மகிழ்வோம்.


அடுத்த வாரம்: பா. ரா

ராகவன் சாருக்காக ஒரு வோட்டு எனக்காக ஒரு வோட்டு போடுங்கள் பார்க்கலாம்...

32 comments:

  1. ஒரு நல்ல மனிதரை பற்றிய உங்கள் பதிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.ஓட்டை பதிவு செய்து விட்டேன் பாஸ் !!!

    ReplyDelete
  2. இரண்டு ஓட்டும் போட்டாச்சு!

    ReplyDelete
  3. நல்ல அறிமுகம் ஒரு நல்ல நண்பரைப் பற்றி.
    நட்புகள் தானே நம்மை வளர்ப்பவை. வாழ்த்துக்கள், உங்கள் நட்பிற்கு.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ரேகா ராகவன் எனக்கும் பிடித்த பதிவர்

    ReplyDelete
  6. Thank you very much Vedhanayagam, Devan Maayam, Vigneshwari and Kathir... for your comments and vote.

    ReplyDelete
  7. நான் தொடரும் பதிவர் அவர்.

    ReplyDelete
  8. Anonymous2:07:00 PM

    ரேகா ராகவன்னதும் பெண்பதிவர்னு நினைச்சேன். :)

    ReplyDelete
  9. நல்ல அறிமுகம்! :-)

    ReplyDelete
  10. எனக்கு மிகபிடித்த பதிவர்...

    ReplyDelete
  11. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது பாருங்கள் அது பணம் கொடுத்து வாங்கும் எதையும் விட எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. என் அரசுப் பனி முழுவதிலும் இதை செய்ததுடன் கூடவே எல்லோருக்கும் அவர்கள் கேட்கும் உதவிகளை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி செய்து கொடுத்து நல்ல ஆபிசர் என்ற நற் சான்றுடன் பணியிலிருந்து சந்தோஷத்துடன் ஓய்வு பெற்றுள்ளேன். அது எனக்கு போதும். என்னை பற்றி பிறர் அறியக் கொடுத்தமைக்கு நன்றி மோகன்குமார்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  12. ரேகா ராகவன் அவர்கள் பதிவு அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி மோகன்.
    நல்லா கோர்வையா எழுதறிங்க. உங்க நச் கதையை இதோ போய் படிக்கிறேன். :)

    "Knowledge Shared is Knowledge Gained"nu சோக்கா சொல்லி இருக்கான்யா இங்க்லீசுல. :))

    ReplyDelete
  13. அருமையான அறிமுகம் மோகன்!ராதா மோகன் சார்,இதோ வாரேன்.ஐயோ...நானுமா?அன்பே பிரதானம்!

    நன்றி மோகன்!

    ReplyDelete
  14. இந்தப் பெயரில் ஒரு பதிவர் இருப்பதே இந்த நாலு வருஷத்தில் இப்போத் தான் தெரிந்து கொண்டேன். அவரோட பதிவுக்குப் போய்ப் பார்க்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. அட??? ராகவனும் அம்பத்தூரில் தான் இருக்காராம்,:D

    ReplyDelete
  16. ஒட்டு போட்டாச்சி.

    //எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது பாருங்கள் அது பணம் கொடுத்து வாங்கும் எதையும் விட எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது.//

    நிஜம் திரு ரேகா ராகவன். நானும் இப்படி சந்தோஷபடுபவன்தான்.

    ReplyDelete
  17. நண்பர்களின் நண்பர் ரேகா ராகவன்!
    அற்புதமாகக் கவிதை எழுதி அசத்தும் ஆகா ராகவன்!
    ஐடியாக்களை வாகாக எடுத்துக் கொடுக்கும் வாகா ராகவன்!
    எதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் நோகா ராகவன்!
    ஒருமுறை புகுந்துவிட்டால் நம் நெஞ்சைவிட்டுப் போகா ராகவன்!
    நாம் சிறப்பாகப் பதிவிட, வேண்டிய உதவிசெய்யும் அவர் 'பதிவிடவேண்டியவர்'! பதிவிட்டமைக்கு நன்றி!
    --கே.பி.ஜனா

    ReplyDelete
  18. ரேகா ராகவன் அவர்களை எனக்கு சுமார் பதினைந்து வருடங்களாக தெரியும். அமுதகுமார் என்ற எழுத்தாள நண்பர் மூலமாய் அறிமுகமானார். அதன் பின் நாங்கள் ஒரே குடும்பம் போல் ஆகி விட்டோம். அப்பழுக்கில்லாத, குழந்தை உள்ளம் கொண்ட, மிக நல்ல, அபூர்வமான மனிதர். அவரை நண்பராய் அடைந்ததற்கு நான் என்றென்றும் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.

    [சத்யராஜ்குமார்]

    ReplyDelete
  19. வசந்த், வானம்பாடிகள் சார், கதிர் உங்களுக்கு பிடித்த blogger பற்றி எழுதியது தங்களுக்கு மகிழ்வை தந்திருக்கும் என நம்புகிறேன். வரவுக்கும், பதிவுக்கும் நன்றி.

    சந்தன முல்லை, கீதா மேடம், சின்ன அம்மணி வரவுக்கும் comment-க்கும் நன்றி. (கீதா மேடம் -ஒரு
    நாள் உங்களையும் பத்தி இந்த பகுதியில் எழுதலாம்!! ஜாக்கிரதை)

    அம்பி: Famous பதிவர் நீங்கள். முதல் முறை கமெண்ட் போடுறீங்க. நன்றிங்கோ.

    ஜனா சார்.. உங்க நண்பரை பற்றி சிறு கவிதையே எழுதி அசத்தீடீங்க. ரொம்ப நன்றி.

    பா. ரா. ஒரு வாரம் தூக்கத்தில் எல்லாம் வந்து மிரட்ட போறேன் பாருங்க. நம்மை பத்தி என்ன எழுத போறானோன்னு நீங்க நினைக்கணும் :)

    வரதராஜ் சார்: நீங்களும் இவர் மாதிரி தானா? ம்..நம்ம ஊரில் இல்லாம போய்டீங்க.

    ஆச்சரியம் ஆனால் உண்மை: சத்ய ராஜ் குமார் சார் கமெண்ட் போட்டது. அவர் blog எல்லாம் படித்து விட்டு தனியே தான் மெயில் அனுப்புவார். நண்பர் பற்றி என்றதும் protocol எல்லாம் தள்ளி வைத்து விட்டு நேரே comment எழுதி விட்டார்.

    ராகவன் சார் : உங்கள் மெயில் நெகிழ்துகிறது. சிலர் தனியே மெயிலில் உங்களுடனான அனுபவங்களை எனக்கு எழுதுகிறார்கள். சரியான நபரை பற்றி சரியாக (may be குறைவாக?) எழுதியதாக தோன்றுகிறது. You deserve all these praises.

    ReplyDelete
  20. நண்பர்கள் கவனத்திற்கு

    தமிழர்ஸ் தளத்தில் உங்கள் இணைக்கலாம் வாங்க...

    ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
    காணொளி தேடல் | வலைப்பூக்கள்

    ReplyDelete
  21. நண்பர்கள் கவனத்திற்கு

    தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

    ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
    காணொளி தேடல் | வலைப்பூக்கள்

    ReplyDelete
  22. அட எனக்கு இப்போதான் அறிமுகம்!படிக்கிறேன்....

    ReplyDelete
  23. தானே ஒரு பதிவராக இருந்துகொண்டு வாரம் ஒரு பதிவரை அறிமுகப்படுத்துவதற்கு மிக உயர்ந்த உள்ளமும் பெருந்தன்மையும் வேண்டும். அந்த இரண்டும் உங்களிடம் பரிபூரணமாக இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். நிற்க. தாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் வலைப் பதிவர் ரேகா ராகவனின் நண்பர்கள் லிஸ்ட்டில் என் பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால், அவருக்கும் எனக்குமான தொடர்பு ஒரு எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்குமான உறவாக மட்டுமே இத்தனை நாள் இருந்தது. சமீபத்தில் நானும் அவரும் வலைப்பூக்களை ஆரம்பித்துப் பதிவிடத் தொடங்கிய பிறகுதான் என் நண்பர்களில் ஒருவராக அவரும், அவரின் நண்பர்களில் ஒருவராக நானும் ஆனோம். நாங்கள் இருவருமே விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்கள் நட்புக் கயிற்றில் மேலும் ஒரு அழுத்தமான முடிச்சு!

    ReplyDelete
  24. //அம்பி: Famous பதிவர் நீங்கள். முதல் முறை கமெண்ட் போடுறீங்க. நன்றிங்கோ

    நேரம், அம்பிக்கு,:P:P:P famous blogger????க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  25. ரேகா ராகவனுக்கும் அவரைபற்றி பதிந்த உங்களுக்கும் நன்றி." சேவை செய்வதே ஆனந்தம்" ரேகா ராகவன் சாருக்கு மிகபொருத்தமானது.

    ReplyDelete
  26. எங்க அப்பா கணிப்பொறி கத்துகிட்ட கதை எழுத சொல்லுங்க. பயங்கர சுவாரஸ்யமா இருக்கும். ஏன் என்றால், கத்து குடுக்க எனக்கு பொறுமை இருந்தது இல்லை. தினமும் போராட்டம் தான் வீட்டில். இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. இப்போது அவரை பற்றி இவ்வளவு பின்னூட்டங்கள் பார்க்கும் பொழுது இவ்வளவு நல்ல நண்பர்களா என்று மனது சந்தோசம் அடைகிறது. பதிவு செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  27. கொஞ்சம் நாள்களுக்கு முன்பு தான் அவரின் புகை என்னும் கதையைப் படித்தேன். தங்களின் இடுகையின் வாயிலாக இந்தக் கவிதையை வாசித்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றிங்க‌

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  28. ரவி பிரகாஷ் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு உண்மையை சொல்லட்டுமா? ஒவ்வொரு பதிவருக்கும் குறைந்தது 10 நண்பர்களாவது உள்ளனர். அவர்கள் அனைவரும் தன நண்பர் பற்றிய பதிவு என்பதால் மகிழ்வுடன் படிப்பர். இப்படியே பலரும் நம்ம blog பக்கம் வர வைக்க இதுவும் ஒரு வழி. ( மீடியாவில் இருக்கும் தாங்கள் அறியாததா?) மேலும் மனிதர்கள் ஒவ்வொருவரும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர். அவற்றை பதிவு செய்ய இது நல்ல வழி. மீண்டும் நன்றிகள்

    ReplyDelete
  29. கார்த்திக் நல்ல தந்தை கிடைக்க பெற்ற அதிர்ஷ்ட சாலி நீங்கள். உங்களை பற்றி அடிக்கடி சார் பேசுவார். Advance wishes for a happy married life Karthick.

    கீதா மேடம் : அம்பியை சான்ஸ் கிடைச்சா கலாய்ச்சுடுவீங்க நீங்க :)

    அன்புடன் அருணா, நிலா மதி, திகழ் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  30. முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ் !
    சரியான வேலையை சரியான சமயத்தில் செய்ததற்கு !
    " ரேகா ராகவன் " உங்களுக்கு மட்டுமல்ல .. அவருக்கு தெரிய வருகிற அத்தனை நபர்களிடமும் சாதனைகளைக் கொண்டு வந்து விடுவார்
    எக்ஸ் ரே கண் அவரிடம் இருக்கிறது கிரியா ஊக்கி !

    ReplyDelete
  31. ராகவன் ஸாருடன் இப்போது தான் பேசினேன்.பேசிய பிறகு இதைப் படித்துப் பார்த்தேன்.ஏற்கனவே இந்த பதிவைப் படித்து இருந்தாலும்,இப்போது படிக்கும் போது ஒரு வித்யாசம். ஒரு ஃபோட்டோவை வார்த்தைகளால் வடித்து விட்டார் மோஹன். KUDOS TO SRI MOHAN KUMAR!! அதற்கு நம்ம அண்ணா எழுதிய REPLY படு சூப்பர்!!

    ReplyDelete
  32. ராகவன் சார் அறிமுகம் அண்மையில் தான் கிட்டினாலும் நீண்டகால அறிமுகமாகப் பழகக் கூடிய பண்பாளர், சிறந்ததொரு பதிவர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...