சினிமா பட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண்களை தொடர்ந்து கொல்கிறார்கள்.. அவர்கள் வளர்ந்து சினிமாவில் நடிக்க போவதால்!! இதில் தப்பி பறவை முனியம்மாவால் வளர்க்கபடுகிறார் ஹீரோ சிவா. பெரியவராகி, மர்மமான முறையில் பலரை கொலை செய்கிறார். தன் "இளம்" நண்பர்களுடன் சுற்றுகிறார்.. இறுதியில் அவர் கொலை செய்தது ஏன், வில்லன்களுக்கெல்லாம் வில்லனாக இருந்தது யார் என்ற கேள்விகளுக்கு சிரிப்போடு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்..
படம் மீது நமது எதிர் பார்ப்பு நன்கு சிரிக்க வைப்பார்கள் என்பதே. அதற்கு வஞ்சனை இல்லாமல் செய்துள்ளனர். தியேட்டர் சிரிப்பு சத்தத்தில் இப்படி நிறைந்து நெடு நாளாகிறது. சில நேரம் வசனம் ஆரம்பித்ததும் சிரிப்பு சத்தம் ஆரம்பிக்க, மீதம் வசனம் கேட்க முடிய வில்லை.
ரன், சிவாஜி, மொழி, காக்க காக்க என பல காட்சிகளில் இருந்து ஒவ்வொரு சீனும் உருவி உள்ளனர். ஆனால் தொடர்ந்து செல்லும் flow-வில் ஒட்டு போல் இல்லாமல், சரளமாய் செல்வது ஆச்சரியம்!! இங்கு தான் இயக்குனர் ஜெயிக்கிறார்.
ஹீரோவின் இளம் நண்பர்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி, MS பாஸ்கர், மனோ பாலா!! இவர்கள் பெயர் பரத். சித்தார்த் இப்படி போகிறது !!
ஹீரோ சிவா இந்த கேரக்டரக்கு மிக சரியாக பொருந்துகிறார். அவரது body language & மேனரிசம் very apt!! ஹீரோ introduction scene - சிரித்து முடியலை. ஹீரோ காலை தூக்கி கொண்டு நிற்க, கேமரா முழுதும் சுற்றி முடிக்கிறது. பின் பக்கம் பார்த்தால் ஹீரோ பேன்ட் கிழிந்திருக்கிறது !!
ஹீரோயின் ஓரளவு அழகு. தமிழ் படங்களில் normal என்ன பங்கிருக்குமோ அதே..
ஆரம்பத்தில் வரும் மம்மூட்டி போன்ற வில்லன் காட்சிகள் கலக்கல். அதை விட தியேட்டர் அதிருவது டெல்லி கணேஷ் கொலை செய்யப்படும் அபூர்வ சகோதரர்கள் type காட்சியில்! மேலும் பல காட்சிகள் குறிப்பிடலாம். ஆனால் சொன்னால் நீங்கள் பார்க்கும் போது ரசிக்க முடியாது என்பதால் குறிப்பிடாமல் விடுகிறேன்.
முடியும் முன் கொஞ்சம் தொய்வடைவது போல் தெரிகிறது; ஆனாலும் தியேட்டர் சிரிப்பு சத்தம் non stop தான் !!
பாடல்கள் ஜாலியாக பார்க்க முடிகிறது. இசை அறிமுகம் கண்ணன்.
இயக்குனர் மிக வித்யாசமான concept தேர்வால் நிச்சயம் இந்த படம் success ஆகி விடும். அடுத்து எந்த வித கதை செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது. சுஜாதா சொல்வது போல் எல்லா இயக்குனருக்கும் நிஜ டெஸ்ட் ரெண்டாம் படம் தான்!!
இந்த அளவு கிண்டல் செய்ய தைரியமும் கூட தயாரிப்பு வலுவான background உள்ள மக்களாய் இருப்பதால் தான் சாத்தியம். இது போல தமிழில் இன்னொரு spoof படம் வருமா தெரிய வில்லை.
கதை, நடிப்பு இப்படி ஏதும் எதிர் பார்க்காதீர்கள், சிரிப்பு மட்டுமே ஒரே எண்ணத்துடன் சென்றால் நன்றாக சிரித்து விட்டு வர ஓர் படம் தமிழ் படம் !!
//அந்த ஒரு வரி சொல்லிட்டு போங்க!!//
ReplyDeleteவரிக்கு வரி அருமை
:)
எல்லாருமே படம் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ்படத்துல ஒரு நகைச்சுவை படம்.
ReplyDeleteதலைவா......
ReplyDeleteஓப்பனிங் சீன்ல ஹீரோவோட பாண்ட் மட்டுமா கிழிச்சாங்க...
படம் ஃபுல்லா எல்லாரையும் இல்ல கிழிச்சு தொங்க விட்டு இருக்காங்க...
தயாரிப்பாளர் பெரிய இடம்... ஸோ, இந்த முறை இவர்கள் “பருப்பு” வெந்து விட்டது.... இனிமேல்....
This comment has been removed by the author.
ReplyDeleteநகைச்சுவையாக உள்ளதாக எல்லோரும் சொல்றாங்க..!
ReplyDeleteஉங்க விமர்சனமும் நல்லாதான் இருக்கு... அதனால
கூடிய சீக்கிரம் பார்க்கணும்.
பகிர்வுக்கு நன்றி..!
நல்ல விமர்சனம் மோகன்!!!
ReplyDeleteபடம் போலவே சரளமாக செல்லுகிறது உங்கள் விமர்சனம். எல்லாவற்றையும் சொல்லி விட்டால் படம் சுவாரசியம் குறைந்து விடும் என்று குறைத்து கொண்டது போல் தெரிகிறது. நன்றாக சொல்லி இருக்கீங்க மோகன்.
ReplyDeleteநல்ல விமர்சனம் சார். படம் பார்க்கும் ஆவல் எழுகிறது.
ReplyDeleteதல நீங்களும் அந்த ரேப் சீனை பத்தி ஒண்ணுமே சொல்லலை?
ReplyDelete:-)
//அடுத்து எந்த வித கதை செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது//
ReplyDeleteதமிழ்ப்படங்கள் அனைத்தையும் கிண்டல் பண்ணும் இயக்குனர் தன் அடுத்த படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போது "பாதிக்கப்பட்டவர்களின்" எதிர்பார்ப்பாக இருக்கும். நீயும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான் என் சொல்வதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள்.
நன்றி எறும்பு. ரொம்ப சந்தோசம்
ReplyDeleteநன்றி பின்நோக்கி ; ஆம் நீங்க சொல்றது சரி; ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஓர் படம்
கோபி ஆம் பலரை துவைசுட்டாங்க; அதிகம் விஜய்யை தான்னு நினைக்கிறேன்
நன்றிக்கு நன்றி பிரவீன்
நன்றி வெயிலான் அவர்களே; முதல் வருகைக்கு நன்றி
ReplyDeleteகாவிரி கரையான் நன்றி; ஆம்; கொஞ்ச நாள் கழிச்சு பல காட்சி பத்தி எழுதலாம் பேசலாம்; இப்ப வேண்டாம்; படிப்பவர்கள் பார்க்கும் போது குறையும். தங்கள் வார்த்தை மகிழ்வுட்டியது
சரவணா நன்றி நேரம் கிடைக்கும் போது பாருங்க
முரளி.. நன்றி குறிப்பா எந்த காட்சியும் பத்தி அதிகம் பேசலை; காரணம் மேலே சொன்னது தான்
ReplyDeleteஜெய மார்த்தாண்டன் நன்றி! நீங்க சொல்வது சரி தான் ..பார்க்கலாம் எப்படி வருது அவர் அடுத்த படம் என
பார்த்துட்டு சொல்றேன்!!
ReplyDeleteஇன்னும் படம் பார்க்கவில்லை .. நேத்து இந்த படத்துக்கு போறம்னு சொல்லி "கோவா" போய் ரெம்ப நொந்து போய்ட்டேன் ..
ReplyDeleteபார்த்துவிட்டு பகிர்ந்து கொள்ளுகிறேன்
சரியா சொன்னிங்க பாஸ்.. சிரிக்க வைக்க மட்டுமே எடுத்திருக்கிறார்கள்.. அதில் மாபெரும் வெற்ரி. அவ்வளவுதான்..
ReplyDeleteமுரளி,
அந்த ரேப் சீன் எனக்கு புடிக்கல. உங்களுக்கு பிடிச்சா உடனே கோவா பாருங்க :)))
நானும் பாத்துட்டேன், நிறைய சீன்ஸ் இப்போ நினைச்சாகூட சிரிப்பு வருது, கலக்கியிருக்காங்க. படத்தை பத்தி எல்லாத்தையும் சொல்லாம சுருக்கமா சொல்லியிருக்கீங்க, சூப்பர்:)
ReplyDelete// முரளிகுமார் பத்மநாபன் said...
ReplyDeleteதல நீங்களும் அந்த ரேப் சீனை பத்தி ஒண்ணுமே சொல்லலை?
:-)//
எல்லா இடத்துலயும் நம்மாளு இதையே கேட்டுட்டு இருக்காரு. இவருக்கு ரேப்னா அவ்ளோ இஷ்டமா?
பார்க்கணுமே மோகன் சீக்கிரம்.நல்ல விமர்சனம் மோகன்.
ReplyDelete//இந்த அளவு கிண்டல் செய்ய தைரியமும் கூட தயாரிப்பு வலுவான background உள்ள மக்களாய் இருப்பதால் தான் சாத்தியம். //
ReplyDeleteவக்கீல் கரெக்கிட்டா பாய்ண்ட்டப் புடுச்சீக ஹி..ஹி..ஹி..
விமர்சனம் அருமையா இருக்கு மோஹன்
ReplyDeleteபடம் பார்த்துடலாம்னு இருக்கேன்
நன்றி ஜெட் லி. இன்னுமா பாக்களை? ஆச்சரியமா இருக்கு!!
ReplyDeleteமீன் துல்லியான்: நன்றி. கோவாவிற்கு review சரியில்லை தான்.
கார்க்கி: உங்கள் வழக்கமான குறும்பு உங்கள் பின்னூட்டத்திலும்
நன்றி குறும்பன். உங்க review படிச்சேன்
பரிசல், நீங்க நம்ம பக்கம் வர்றதே ஆச்சரியம்; வந்துட்டு முரளி பத்தி மட்டும் பேசிட்டு போறீங்க.. ம்ம்ம்
ReplyDeleteபாருங்க பா. ரா; நீங்க CD-யில் தான் பார்பீங்கன்னு நினைக்கிறேன்
அட அப்துல்லாஜி: வாங்க. வருகைக்கு நன்றி
நன்றி தேனம்மை மேடம்
அன்பின் மோகன்குமார்
ReplyDeleteபட விமர்சனம் அருமை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா