Monday, January 11, 2010

ராஜாராமின் கருவேல நிழல்- புத்தக விமர்சனம்

கவிஞர் ராஜா ராமின் "கருவேல நிழல்" கவிதை தொகுப்பு நண்பர் பொன். வாசுதேவன் மூலம் கிடைக்க பெற்றேன். நேசமித்ரனின் அடர்த்தியான முன்னுரையுடன் வந்துள்ளது தொகுப்பு.


பெரும்பாலான கவிதைகள் இணையத்தில் நாம் வாசித்தது தான், எனினும் மொத்தமாய் படிக்கும் போது வேறு உணர்வை தருகிறது.
நமக்கு நன்கு அறிமுகமான தகப்பனாய் இருப்பது கவிதையுடன் புத்தகம் துவங்குகிறது. (“கடன்காரனாக இருப்பதையும் விட கொடுமையானது சில நேரம்... தகப்பனாய் இருப்பது.”)


அம்மா, அப்பா, மகள், மகன், ஆத்தா, அண்ணன், அத்தை என அனைத்து உறவுகளும் கவிதைகளில் ஆஜர். மிகவும் குடும்பம் சார்ந்த மனிதராக கவிஞர் தெரிகிறார். குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதாலேயே கவிதைகள் அன்பும் பிரிவும் பேசுகிறதா என தெரிய வில்லை

 ஒரு மாஜி காதலி அவ்வப்போது சில கவிதைகளில் எட்டி பார்த்து கொண்டே இருக்கிறார்.


உன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.


உன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்.

மேலும் ஞாபகங்கள் என்று ஒரு கவிதை.. இதுவும் பழைய காதலி பற்றியே.. இது ஒரு சிறு கதை போல் சுவாரஸ்யமாய் உள்ளது

** தொகுப்பாய் வரும் போது சுய இரக்கம் மிக அதிகம் தெரியும் சில கவிதைகளை தவிர்த்திருக்கலாம் ..

** ஆற்றங்கரையில் எடுத்த கல், தச்சன், மஞ்சு விரட்டு, முடி வெட்டுபவர் என பாடு பொருள்கள் பல இருக்கின்றன கவிதைகளில்.. ஆனாலும் அன்பும், பிரிவும் தான் பல கவிதைகளில் திரும்ப திரும்ப எதிரொலிக்கிறது.


"நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்…”

**********
" புகைவண்டி நாதம்
தேய்ந்து மறைகிற தருணம்
விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்
உதிரும்
உண்மையும் அன்பும்!

இலையுதிர்காலம் என்று ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது .. வெளி நாடு சென்று விட்டு திரும்பும் போது, ஊர் எப்படி எல்லாம் மாறி போய் விட்டது என வரிசையாய் சொல்லி சென்று இப்படி முடிக்கிறார்:

அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும்
நாங்கள்.


**அப்பத்தா பற்றிய கவிதையில்,


"அப்பத்தா செத்த போது
எடுத்துப்போட்டோம். .
சும்மா
எடுத்துப்போட்டோம்".

இதில் சும்மா என்ற வார்த்தை பிரயோகம் அதிர வைக்கிறது.

எனக்கு பிடித்த கவிதைகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவரவர்க்கு தம் அனுபவம், வாழ்க்கை பொறுத்து சிற்சில கவிதைகள் பிடிக்க கூடும்.
ராஜாராமின் கவிதைகளையும், அவரையும் காட்டும் விதமான ஒரு கவிதை வரிகளுடன் நிறைவு செய்கிறேன்:


நடுவழி மைல் கல்
சொல்கிறதெப்போதும்...
புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.

27 comments:

 1. நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்..!

  ReplyDelete
 2. நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 3. அழகான கவிதை...

  உங்களுக்கும் உங்கள் குடும்த்திற்கும் எனது இனிய பொங்கல் நல்லாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மோகன்குமார்.

  ReplyDelete
 5. நன்றி ராஜு

  நன்றி பலா பட்டறை

  நன்றி வரதராஜலு ஐயா

  நன்றி சங்கவி தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  நன்றி நவாசுதீன்; நண்பர் பற்றி என்றதும் வந்தீர்கள்; அடிக்கடி வர பார்க்கவும்

  ReplyDelete
 6. ///நன்றி நவாசுதீன்; நண்பர் பற்றி என்றதும் வந்தீர்கள்; அடிக்கடி வர பார்க்கவும்///

  ஹா ஹா ஹ. இனிமே நீங்க போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வரேன் மோகன்.

  ReplyDelete
 7. நல்ல அறிமுகம் மோகன்குமார். வாழ்த்துகளும் நன்றியும்.

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 8. ‘கருவேல நிழல்‘ புத்தகத்தை வாங்க
  aganazhigai@gmail.com தொடர்பு கொள்ளலாம்.

  ReplyDelete
 9. தேர்ந்த வாசகனாக நண்பர் ராஜாராமின் நூலை அணுகியிருக்கிறீர்கள்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 10. அந்த தகப்பனாய் இருப்பது கவிதை இருகிறதே நண்பரே
  அதே எதனை முறை அணுகினாலும் உடையாமல் திரும்ப முடிவதில்லை

  ReplyDelete
 11. அருமையான நூல் விமரிசனம். படித்ததுமே, புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.
  உன் திறமைக்கு என் வாழ்த்துகள், நண்பா!

  ReplyDelete
 12. உம்..........மா.
  பிடிச்சிருக்கு நமக்குத்தான் வாசிக்க முடியல. நம்ம பக்கம் இது கிடைப்பது அரிது. எப்படியாவது வாங்க முயற்சிக்கிறேன் நண்பர்கள் மூலம்..

  ReplyDelete
 13. நல்ல விமர்சனம். வாங்கிவிட்டேன். படிக்கனும்.

  ReplyDelete
 14. நன்றி நவாசுதீன்; தங்கள் வரவு நல் வரவாகட்டும்.

  அட பப்ளிஷர் சார் வாங்க வாங்க நன்றி

  வாங்க சிவ ராமன்.. நன்றி. நீங்கள் பாராட்டுவது ரொம்ப மகிழ்ச்சி

  ஆம் பாலா. நான் மட்டுமே அந்த கவிதையை பற்றி மூன்று முறை எழுதி விட்டேன்.

  நன்றி பெயர் சொல்ல.. பொங்கலுக்கு ஊருக்கு போகிறாயா?

  ரமேஷ்..அட உம்மால்லாம் தர்றீங்க. செல்ல வேண்டியது கவிதை எழுதிய ராஜாராமுக்கு.. நன்றி ரமேஷ்

  ReplyDelete
 15. நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 16. பின்னோக்கி..& வானம்பாடிகள் சார் நன்றிகள் பல

  ReplyDelete
 17. அருமையான அளவான விமர்சனம் மோகன். பா.ராவின் கவிதைகள் அனைத்தும் எளிமை. அதை கொண்டு வந்து உலகத்துக்கு சேர்த்த அகநாழிகை பதிப்பகத்துக்கு நன்றி. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பொன்.வாசுதேவன் அளித்த முகவரிக்கு!!!!

  ReplyDelete
 18. நல்ல விமர்சனம்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. thanyanaanen மோகன்.

  திருப்பி திருப்பி நன்றி சொல்வதுகூட சிலநேரங்களில் கூச்சமாகத்தான் இருக்கு.இருந்தாலும் சொல்லாமல் முடிவதில்லை.மிக்க நன்றி மக்கா!

  ராஜூ,
  ஷங்கர்,
  வரதராஜலு,
  சங்கவி,
  நவாஸ் மக்கா,
  வாசு,
  சிவராமன்,
  பாலா மாப்ள,
  பெயர் சொல்ல விருப்பமில்லை,
  ரமேஸ்,
  பின்னோக்கி,
  பாலா சார்,
  காவேரிக் கரையோன்,

  மிகுந்த அன்பும் நன்றியும்!

  ReplyDelete
 20. தன்யனானேன் மோகன்.

  திருப்பி திருப்பி நன்றி சொல்வதுகூட சிலநேரங்களில் கூச்சமாகத்தான் இருக்கு.இருந்தாலும் சொல்லாமல் முடிவதில்லை.மிக்க நன்றி மக்கா!

  ராஜூ,
  ஷங்கர்,
  வரதராஜலு,
  சங்கவி,
  நவாஸ் மக்கா,
  வாசு,
  சிவராமன்,
  பாலா மாப்ள,
  பெயர் சொல்ல விருப்பமில்லை,
  ரமேஸ்,
  பின்னோக்கி,
  பாலா சார்,
  காவேரிக் கரையோன்,

  மிகுந்த அன்பும் நன்றியும்!

  ReplyDelete
 21. ரொம்ப நன்றி கேபில்ஜி!

  ReplyDelete
 22. கருத்துள்ள கவிதைகளை நன்கு ரசித்து எழுதி இருக்கீங்க. எங்களுக்கும் ஒரு நல்ல இடுகை கிடைத்தது. ரொம்ப நன்றி.

  ReplyDelete
 23. நல்லா எழுதியிருக்கீங்க நண்பா.

  ReplyDelete
 24. பா.ரா. மீதும் மோகன் மீதும் மரியாதை கூடிக் கொண்டே போகிறதெனக்கு.

  ReplyDelete
 25. காவிரிக்கரையோன்
  கேபிள்
  சித்ரா
  சரவணா குமார்
  விக்னேஸ்வரி
  அனைவருக்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 26. அன்பின் மோகன்குமார்

  அறிமுகம் அருமை - கவிதைகளை இரசித்த விதம் அருமை. அப்பத்தா கவிதையும் மூவாயிரம் மைல் நனைக்கும் மொபைலும் - நெஞ்சை உலுக்குகிறது.

  நல்வாழ்த்துகள் மோகன்
  நட்புடன் சீனா

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...