டேங்கர் பவுண்டேஷன் பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? கிட்னி failure ஆன நோயாளிகளுக்கு ஆபரேஷனுக்கு பண உதவி தரும் அமைப்பு. இவர்கள் சமீபத்தில் சென்னையில் நடத்திய விழாவில் Dr ராபின் கலந்து கொண்டு பேசியுள்ளார். இவர் தனது 21 வயதில் கிட்னி failure ஆல் பாதிக்கப்பட்டவராம். தற்போது வயது 69 ! கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேல் கிட்னி failure உடன் வாழும் இவர் மூலம் இந்த நோய் பற்றிய பயம் ஒரளவு குறையட்டும்!! மேல் விபரங்களுக்கு ஜனவரி 26 - Times of India பேப்பர், முடிந்தால் வாசிக்கவும்.
வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Contempt of Court
Contempt of Court என்றால் கோர்ட்டை அவமதித்த குற்றம் என்று பொருள். கோர்ட் பிறப்பித்த உத்தரவை மீறுதல் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். சில வழக்குகளில் கோர்ட்டின் உத்தரவை சிலர் obey செய்யாமல் இருப்பார். அப்போது Contempt of Court, file செய்து வழக்கை துரித படுத்துவர்.தவிர கோர்ட் நடக்கும் போது அங்கு அமர்ந்திருப்போர் அருகில் அல்லது செல் போனில் பேசுவது போன்றவையும் Contempt of Court -ல் அடங்கும்.
அய்யா சாமி
அய்யா சாமிக்கு எப்பவும் ஏதாவது கவலை லைவா இருக்கணும். கவலை உண்மையா இல்லாட்டி தானே கவலையை கற்பனை பண்ணிப்பார் !! உக்காந்து யோசிச்சு பார்த்ததில் நிஜ கவலையை விட " தானே கற்பனை" செய்து கொண்ட கவலைகளே அதிகம் என உணர்ந்தார். ஆனால் அதுக்காகவெல்லாம் கவலை படுவதை மாத்திக்கலை !!
சென்னை ஸ்பெஷல்
சிட்டி சென்டரின் உள்ளே இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டர் சென்றுள்ளீர்களா? அருமையான தியேட்டர் இது!! டிக்கட் விலை கொஞ்சம் தான் அதிகம். (ரூ. 120). Cleanliness, seats & Effects என எல்லாமே அற்புதம். ஒரு நல்ல படமாக சென்று பாருங்கள். என்ன…. ஸ்நேகேஸ் தான் விலை ரொம்ப அதிகம். நாம் வெளியிலிருந்தும் உள்ளே எடுத்து போக முடியாது. அதே போல் கார் பார்க்கிங் ஒரு மணிக்கு என்று சார்ஜ் செய்கிறார்கள். மூன்று மணி நேர படத்துக்கு அறுபது ருபாய் போல் கட்ட நேரலாம் !! ஒரு முறை நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று..
ரசித்த SMS
நாம் எப்போது தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை என்பது பற்றிய ஒரு SMS (இப்படி பட்ட SMS-ம் வரத்தான் செய்கிறது!!)
* சாப்பிடும் முன் ரெண்டு டம்ளர் நீர் குடிப்பது ஜீரணத்துக்கு உதவுகிறது.
* தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் நீர் உள் உறுப்புகள் -active ஆக உதவுகிறது.
* தூங்கும் முன் ஒரு டம்ளர் நீர் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க உதவுகிறது
* குளித்து முடித்தபின் ஒரு டம்ளர் நீர் ரத்தஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது
கிசு கிசு
வெளி நாட்டிலிருந்து பதிவர்கள் சென்னை வந்தால் " பாட்டிலுடன்" தான் வரணும் என்பது எழுத படாத விதி. அதிசயமாய் அப்படி வாங்காமல், சமீபத்தில் சென்னை வந்த ஒரு பதிவரை லோக்கல் சரக்கு வாங்கி குடுத்து மட்டையாக வைத்துள்ளனர். பின் அவர், “என்னங்க…சரக்கு சரியில்லை” என்று சொல்ல, " இதுக்கு தான் அங்கேயே வாங்கிட்டு வரணும்" என குமுறி விட்டனர் குமுறி..
ஒரு விளக்கம்
அலுவலகத்திலும் வீட்டிலும் ஆணி அதிகம். எனவே தான் பதிவுகளும், பிற blog புகுதலும் சற்று குறைவு. என்றாலும் கடமை உணர்ச்சியுடன் வானவில் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டது...
வானவில் வர்ணஜாலம். sms குறிப்புக்கு நன்றி.:)
ReplyDelete//ஒரு முறை நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று//.
ReplyDelete"ஒரு முறை" என்பதை போல்ட் லெட்டரில் போடவேண்டியது தானே?
காலையில் தண்ணீர் குடிப்பது பற்றி குறிப்பு இருக்கிறதா?
சிம்ப்ளி சூப்பர்.....!
if u dont have a problem, create a problem and solve it..::))
ReplyDelete----
வானவில் சரமாரியா தொடுக்குதுங்கோ..:))
வானவில் வர்ணஜாலம் காட்டுகிறது நண்பரே. சென்னையில உங்களைப் பார்க்க வரும்போது பாட்டிலோடுதான் வரணுமா?? இங்க சவுதியில பாட்டில் கிடையாதே.. அப்ப மீட்டிங் கிடையாதா?
ReplyDeleteஅந்த SMS குறிப்பு உபயோகமான ஒன்று.
ReplyDeleteஅய்யா சாமிக்கு எப்பவும் ஏதாவது கவலை லைவா இருக்கணும். கவலை உண்மையா இல்லாட்டி தானே கவலையை கற்பனை பண்ணிப்பார் !! உக்காந்து யோசிச்சு பார்த்ததில் நிஜ கவலையை விட " தானே கற்பனை" செய்து கொண்ட கவலைகளே அதிகம் என உணர்ந்தார். ஆனால் அதுக்காகவெல்லாம் கவலை படுவதை மாத்திக்கலை !!
ReplyDelete................. ha,ha,ha,ha,......அவருக்கு கவலை, நமக்கு காமெடி. ஹா,ஹா,ஹா....
சரக்குக்கும் , பதிவர்களும் பிரிக்க முடியாது சகா ..
ReplyDeleteஉங்கள் வானவில் வண்ணங்களில் ரசித்தது SMS ஜோக், டேங்கர் பவுண்டேஷன், மற்றும் ஆணிகளின் விளக்கமும்.
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
//அங்கு அமர்ந்திருப்போர் அருகில் அல்லது செல் போனில் பேசுவது போன்றவையும் Contempt of Court -ல் அடங்கும்.//
ReplyDeleteஅப்ப அங்க மட்டும் தான் செல்போன் சத்தம் கேட்காத ஒரே இடம் நம்ம நாட்டுலன்னு சொல்லுங்க.
நாட்டு நடப்பு நல்ல சேதி.
ReplyDeleteSMS பயனுள்ளது.
என்னா கடமை உணர்ச்சி, விளக்கத்துடன். :)
வானம்பாடிகள் ஐயா : நன்றிக்கு நன்றி :)))
ReplyDeleteஅமைதி அப்பா: வரவுக்கும் கமண்டுக்கும் மிக்க நன்றி
பலா பட்டறை ஆங்கிலத்தில் சொன்னாலும் சரியா சொன்னீங்க
சரவண குமார்; பயம் வேண்டாம் கொஞ்சம் "சேர்த்து" எழுதிருக்கேன்
நன்றி சின்ன அம்மணி
வானவில் வழக்கம்போல் நன்று.
ReplyDeleteஜனவரி-26 எல்லா பேப்பரிலும் வந்திருக்கா?
எஸ்.எம்.எஸ் குறிப்பு நல்ல விஷயம்.
அய்யாசாமி - அய்யோசாமி.
நன்றி சித்ரா.
ReplyDeleteவணக்கம் ராதா கிருஷ்ணன் ஐயா
ரோமியோ பாய்: கரீட்டு தான் தல
மதி சூடி முதல் முறை வந்துல்லீங்க நன்றி
ஆதி மனிதன்: பேசினா போலீஸ் வந்து போனை பிடுங்கி வச்சிப்பாங்க. முழு நாள் முடிஞ்சதும் கெஞ்சி வாங்கணும்
நன்றி விக்கி நீங்கல்லாம் குடுத்த சாபம் காரணமா ஆணி அதிகமாய்டுச்சு
நன்றி நவாஸ். Times of India-ல் வந்தது குறிப்பிட மறந்தமைக்கு மன்னிக்க
ReplyDeleteநாட்டு நடப்பு & Contempt of Court - வெரி நைஸ். செந்தில் சொன்னது போல் Information is wealth!
ReplyDeleteஐநாக்ஸ் சூப்பர்தான், ஆனா ஸ்க்ரீன் சின்னதா இருக்கறதால, ஏதோ பெரிய சைஸ் ஹோம் தியேட்டர்ல பாக்கற மாதிரி இருக்கு.
ஆனா சத்யம்ல கிடைக்கலன்னா, என்னோட செகண்ட் சாய்ஸ் கண்டிப்பா ஐநாக்ஸ்தான்:)
எனக்கென்னவோ, அலுவலகம் முடிந்து எப்படா 'வீடு திரும்புவோம்'னு இருக்கற பதிவர்தான் அய்யாசாமின்னு தோணுது, நான் சொல்றது சரியான்னு சொல்லுங்க:)))
சேர்ந்தே இருப்பது பதிவர்களும் சரக்கும்
ReplyDeleteநன்றி குறும்பன். ஐயா சாமி பற்றிய தங்களின் கமெண்டை ரசித்தேன். அதுக்காக அவர் யாருங்கர ரகசியத்தை சொல்ல முடியுமா? (ஆமா இது பெரிய தேவ ரகசியம்..)
ReplyDeleteஅட கேபிள் வாங்க.. ரொம்ப நாள் கழிச்சு வருகை!! நன்றி !
நாட்டில் நல்லவா நடக்குது நடப்பு
ReplyDeleteஅய்யாவுக்கு கவலை படுவதில் மட்டும் கவலையில்லை
இரசித்த குறுஞ்செய்தி அருமை.
வானவில் அழகாய்
எனக்கு ஜநாக்ஸ் தியேட்டர் கட்டுமானம் நடைபெற்றுகொண்டு இருக்கும் போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.ஊருக்கு வரும்போது இந்த முறை பார்க்கவேண்டும்
ReplyDelete