முழு கதையும் சொல்லாமல் outline மட்டும் சொல்கிறேன். சோழ அரசில் அனைவரும் அழியும் போது ஒரு குழந்தை மட்டும் தப்பிக்கிறது. அதன் பின் பல நூறு ஆண்டுகள் ஆகியும் சோழ அரசு பற்றி தகவல் இல்லை. இதை கண்டு பிடிக்க போன தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆன பிரதாப் போத்தன் காணாமல் போகிறார். அவரையும் அந்த அரசையும் தேடி கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா கூட்டணி பயணிக்கிறது. இந்த பயணமே கதை.
செல்வ ராகவனை முதலில் சில விஷயங்குளுக்காக பாராட்டி விடலாம்:
1. தமிழில் ஒரு வித்யாசமான படம் - 5 பாட்டு, 5 பைட்டு பார்முலாவில் இல்லாமல் எடுத்ததுக்காக.
2 . கதையும் தமிழில் இது வரை தொடாத முயற்சி தான். அதற்காக.
3 . முக்கிய கேரக்டர்களிடம் நன்கு வேலை வாங்கியமைக்காக.
4. Heroism இல்லாமல் படம் எடுத்தமைக்காக (படம் நெடுகிலும் ஹீரோ கை பிள்ளையை விட மோசமாக அடி வாங்குகிறார்;கடைசி இரு சண்டைகள் தவிர )
நிற்க. அவரை சில விஷயங்களுக்காக கோபித்தும் தீர வேண்டும்.
1. வித்தியாச கதை என்பதால் லாஜிக் நாங்கள் எதிர் பார்க்க கூடாதா என்ன? திடீர் திடீர் என சிலருக்கு மந்திர சக்தி வருகிறது. சாதாரண மனிதர்களுக்கும் திடிரென எப்படி அது வருகிறது? அதற்கு விளக்கமும் இல்லை. Consistency- ம் இல்லை.
2. பின் பாதி முழுதும் பெரும்பாலும் யாரோ யாரையோ torture செய்து கொண்டே உள்ளனர். இது மிக அயர்ச்சியாக உள்ளது. சாதாரண மனிதர்கள் சினிமா செல்வது என்ஜாய் செய்ய. இந்த அளவு ரத்தம், இருட்டு, நெகடிவ் சமாச்சாரங்கள் நிச்சயம் average ரசிகன் ரசிப்பதில்லை.
3. செல்வா படத்தை குழந்தை, மனைவி உடன் பார்க்க முடிவதில்லை. இந்த படம் உட்பட.
4. பின் பாதியில் வரும் தமிழ் யாருக்கும் புரிய வில்லை.; தமிழ் முதுகலை படித்தவர்களுக்கே புரிந்திருக்குமா தெரிய வில்லை..
5. மேகனஸ் கோல்ட் உள்ளிட்ட பல படங்களின் தாக்கம் தெரிகிறது. ஏன் நம் டைரக்டர்கள் பிரம்மாண்டம் என்றாலே பிற நாட்டு படங்களையே நம்புகிறார்களோ?
சரி தனித்தனி performance -க்கு வருவோம்.
முதல் இடம் ரீமா சென். அசத்தி விட்டார்..அசத்தி. முதல் பாதியில் இவரது ஸ்டைல் & domination ரசித்து கொண்டிருந்தேன்.. பின் பாதியில் completely வேறு shade ..இதை விட சிறந்த கேரக்டர் ரீமா சென்னுக்கு கிடைக்க போவதில்லை. (ரீமா சென் பொதுவாக எனக்கு அதிகம் பிடிக்காது!! Still அவரை நான் ரசித்தேன்) .
கார்த்தி... முதல் பாதி அமர்க்களம். குறிப்பாய் B & C Centre மக்கள் முதல் பாதி கார்த்தியை மிக ரசிப்பார்கள். இடைவேளைக்கு பின் இவர் வேலை மிக குறைவு. அதுவும் இடைவேளைக்கு பின் 45 நிமிஷத்தில் கார்த்தி வருவது சில நிமிடம் இருந்தால் பெரிது.. கார்த்தி நல்ல நடிகர், நிலைக்க போகிறார் என்பது உறதியாக தெரிகிறது. ஆனால் second half-ல் இவருக்கு இருக்கும் scope பார்த்த போது இவர் இந்த படத்துக்காக இத்தனை வருடம் செலவிட்டாரே என வருத்தமாக இருந்தது.
ஆண்ட்ரியா.. ம்ம் நான் படம் பார்க்க ஒரு முக்கிய காரணம். முதல் பாதி ஓகே. ரெண்டாவது பாதியில் அவ்வபோது கூட்டத்தில் நின்று பரிதாபமாக பார்க்கிறார். அவ்வளவே.
பார்த்திபன் : Face expression & body language அருமை. இவர் பேசுவதையே, அவற்றை வைத்து தான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
பாடல்கள்: அனைத்தும் ஏற்கனவே செம ஹிட். உன் மேல ஆச தான் பாட்டு முதல் பெஞ்ச் மக்கள் ரசிக்கும் படி படமாக்க பட்டுள்ளது. ஈசா பாட்டில் ஆண்ட்ரியாவை திடீர் திடிரென பேய் போல காட்டுகிறார்கள் (ஏனோ?) மாலை நேரம் பாடல் படத்தில் இல்லை. பின்னணி இசை சில நேரம் நன்று. பல நேரம் இரைச்சல் மிக அதிகம்..
நிறைய பாராட்ட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜி & ஆர்ட் டைரக்டர் சந்தானம். கடும் உழைப்பு தெரிகிறது .....
இவர்கள் மட்டுமல்ல படம் முழுதும் உழைப்பு நிறையவே தெரிகிறது. ஆனால் செல்வா பின் பகுதியை புரிகிற மாதிரியும் சற்று லாஜிக் உடனும் எடுக்காததால் அந்த உழைப்பு முழு பலன் பெறாமல் போகிறது.
படம் ஓடுமா??
இந்த ஞாயிறு வரை எப்படியும் கூட்டம் இருக்கும்; அதன் பின் என்ன ஆகும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான்.. டிக்கட் வாங்க நின்ற போது தியட்டரில் இருந்து முதல் ஷோ பார்த்து விட்டு வந்தவர்கள் " போய்டாதீங்க; முடியல.. புரியல.." என எங்களை பார்த்து சொல்லியவாரே சென்றனர். இத்தனை இவர்கள் தமக்கு தெரிந்தவர்களிடமும் சொல்ல கூடும். நாங்கள் பார்க்கும் போதும் second half-லும், முடிந்து வெளியில் வரும் போதும் மோசமான கமேண்டுகளே வந்தன..
எனது ஊகம்: .. தயாரிப்பாளர் நல்ல விலைக்கு விற்றிருப்பார்.. அவருக்கு லாஸ் இருக்காது..ஆனால் படம் distributor-களுக்கு கையை கடிக்க போகிறது..
நல்ல கருவை இன்னும் சுவாரஸ்யமாய், புரிகிற விதம் கையாண்டிருக்கலாமே செல்வா?
its an irritating review , because not sharing that 2nd story. why the hell you want to keep secret confidence, suspense etc. I am going to watch in net tomorrow.
ReplyDeleteincomplete review.
இன்னைக்குதான் இங்க ரிலீஸ். பாக்கறதாதான் இருக்கோம்.
ReplyDeleteஇங்க போட்டா பாக்கலாம்னு இருக்கோம். ஏன்னா
ReplyDelete//முதல் நாள் தியேட்டருக்கு போகாத என்னை போன்ற ஆட்களை கூட போக வைக்கும் அளவு படத்துக்கு expectations.//
உங்கள் கருத்துக்களை தெளிவா சொல்லி இருக்கீங்களே. அதற்கே உங்களை பாராட்ட வேண்டும்.
ReplyDeleteமோகன் எனக்கு என்னவோ டிஸ்ட்ரீபூஷன் சைடுல கடிக்காதுன்னு தான் தோணுது. 30 நாள் ஓடுனாவே பணத்தை எடுத்துடுவாங்கன்னு நினைக்கிறன்.
ReplyDeleteஆர்பாட்டமில்லாம படம் வந்திருக்கு..பார்க்கலாம்..::)
ReplyDeleteவிமர்சனம் எல்லாம் படிச்சதுல இருந்து, ஒரு தடவை, குடும்பத்த வீட்டுல விட்டுட்டு, தனியா போய் பார்த்துட்டு வரலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//பின் பாதியில் வரும் தமிழ் யாருக்கும் புரிய வில்லை.; //
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்லை..+2 தமிழ் செய்யுள் வார்த்தைகள் தான் அதிகம் பயன்படுத்த பட்டிருக்கின்றன..புரிவதில் பெரிய கஷ்டம ஒண்ணுமில்லை..
//தமிழ் முதுகலை படித்தவர்களுக்கே புரிந்திருக்குமா தெரிய வில்லை..//
புரியவில்லைஎனில் அவர்கள் தமிழ் முதுகலை பட்டத்தை குப்பையில் போடலாம்..
குப்பன்: நேற்று இரவு நான் விமர்சனம் எழுதும் முன் மற்ற சில நண்பர்களின் விமர்சனம் படிதேன். அதில் பலர் பின்னூட்டத்தில் ஏன் முழு கதை சொன்னாய்; படம் பார்க்கும் முன் முழு கதை தெரிந்தால் எப்படி பார்ப்பது என அவர்களை திட்டி தீர்த்தனர். இங்கு நீங்கள் ஒருவர் ஏன் முழு கதை சொல்லலை என கேட்கிறீர்கள். சொன்னாலும் கேட்பார்கள். சொல்லா விட்டாலும் கேட்பார்கள். I prefer not to tell the full story. If you still want, you can get it from the net.
ReplyDeleteசின்ன அம்மணி, சுசி, சித்ரா நன்றி.. வருகைக்கும் கருத்துகளுக்கும்.
ரோமியோ பாய் பார்க்கலாம் படத்தை இனி trim செய்வார்கள் அதன் பின் எப்படி உள்ளதென..
பலா பட்டறை & பின்னோக்கி : ஆம் ஒரு முறை பாருங்கள்.
வெற்றி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ் படித்தவர்களுக்கு மட்டும் தான் புரிய கூடியது எனில் எப்படி? தூய தமிழில் ( செய்யுள் பாணியில் இல்லாமல்) வைத்திருக்கலாமே? செல்வாவின் இத்தனை உழைப்பு சில சின்ன விஷயங்களால் வீணாகிறதே என்ற வருத்தமே..
excellent... i like ur blog ... nice review .. i saw tis movie at trichy ... huge crowd at theatres ,,, expectation turned sour ....
ReplyDeleteமோகன்குமார்
ReplyDeleteதமிழ் அத்தனை குழப்பமாகவா இருந்தது முதுகலை படித்தவர்களுக்கே புரியாது எனக் குறிப்பிட்டது எல்லாம் ஓவர்
//பின் பாதி முழுதும் பெரும்பாலும் யாரோ யாரையோ torture செய்து கொண்டே உள்ளனர். இது மிக அயர்ச்சியாக உள்ளது. சாதாரண மனிதர்கள் சினிமா செல்வது என்ஜாய் செய்ய. இந்த அளவு ரத்தம், இருட்டு, நெகடிவ் சமாச்சாரங்கள் நிச்சயம் average ரசிகன் ரசிப்பதில்லை.//
உண்மை ஆனால் இந்தப் படம் சராசரி ரசிகனுக்கானது இல்லை அல்லவா
//(ஏனோ?) மாலை நேரம் பாடல் படத்தில் இல்லை.//
இந்தப் பாட்டு மலை நேரத்து மயக்கம் படத்துக்காக கம்போஸ் செய்தது என நினைக்கிறேன் படம் கை விடப்பட்டதால் இந்த அல்பத்தில் பாட்டு இடம் பெற்றது.
ஐயோ, நான் படம் பார்க்க நினைச்சேன். எல்லாரும் இப்படி பயமுறுத்துறீங்களே...
ReplyDeleteகண்டிப்பாக பார்க்க வேண்டும்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
நன்றி எம்பரிக்.. நீங்க திருச்சியா? மகிழ்ச்சி. நான் ஏழு வருடம் அங்கு படித்தேன்.
ReplyDeleteநன்றி தர்ஷன்; நீங்கள் பகிர்ந்த மாலை நேரம் பாடல் பற்றிய தகவல்களுக்கும்..
நன்றி விக்கி
சூர்யா நன்றி ஒரு முறை பாருங்கள்.
ithu விமர்சனம்!
ReplyDeleteபுரியுது தலைவா,
ReplyDeleteநானும் பாத்துட்டு வந்து கருத்து சொல்றேன்.
நன்றி Rajaaram & அதி பிரதாபன்
ReplyDeleteஅடுத்த மாசம் ஊருக்கு வந்துதான் பார்க்கனும். (ஆமா! அதுவரை இருக்குமா?
ReplyDelete"ஆயிரத்தில் ஒருவன் - வலியுடன் ஒரு விமர்சனம்"
ReplyDeleteவலி சரி ஆயிடிச்சா ?
:)
உங்களுடையப் பதிவுகள் பலராலும் விரும்பிப் படிக்ககப்படுவது பின்னூட்டங்களின்
ReplyDeleteவழியாக அறிகிறேன். என்னப் படிக்கலாம்...! என்ற தலைப்பில் தாங்கள் ஓர் பதிவைத் தொடர்ந்துப் போடலாமே...?!
அதிலும் குறிப்பாக தாங்கள் படித்த சட்டப்படிப்பு குறித்த மக்களின் அறியாமையை போக்க முயற்சி செய்யலாமே...?
அதற்க்கு தாங்கள் தான் சரியான நபர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
கீழ்க் கண்ட கேள்விகளுக்கு உரியமுறையில் விளக்கமிருந்தால் மிகசிறப்பாக இருக்கும்...
1 . சட்டப்படிப்பு படிக்க என்ன தகுதி வேண்டும்?
2 . எவ்வளவு செலவாகும்?
3 . எங்கு படிக்கலாம்?
4 . வேலை வைப்பு எப்படி உள்ளது?
5 . அதிகப்பட்சமாக படித்தவுடன் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
6 . மதிப்பெண்ணைத் தவிர்த்து சிறந்த லாயராக வர, மாணவனிடம் என்ன தகுதி இருக்க வேண்டும்?
7 . கோர்ட்டிற்கு செல்லாமல் , வேறு வேலை பார்க்கலாமா?
பதிலளிக்க வேண்டிய அவசியாமான கேள்விகள்....
1. சட்டப்படிப்பு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சரிப்படாதா?
2. அடாவடியான மாணவனாக இருக்கவேண்டுமா?
3. வாய் அடிக்கும் மாணவன் மட்டுமே தகுதியானவனா?
4. அரியர்ஸ் வைத்து பாஸ் செய்திருக்கவேண்டுமா?
5. குடும்பத்தில் ஏற்கனவே வழக்கறிஞர்கள் இருக்கவேண்டுமா?
6. ஏழைக் குடும்பத்து மாணவனுக்கு ஒத்து வராதா?
7. படித்துவிட்டு ஜூனியராக பணிபுரிந்தால் சீனியர்கள் கேவலமாக நடத்துவார்களா?
8. சட்டப் படிப்பு படித்தால் பல ஆண்டுகள் ஜூனியராக இருந்தால் தான் சிறப்படைய முடியுமா?
9. பொய் சொல்லத் தெரிந்திருக்கவேண்டுமா?
அவசியம் உங்கள் பதிவை எதிர் பார்க்கிறேன்....!
மாயாஜால்ல (டிக்கெட் 230 ரூபாய்) போய் பாக்கலாமான்னு வேற யோசிச்சுட்டிருந்தேன், நல்லவேளை நான் எஸ்கேப்பு! ஆனா ரொம்பவும் எதிர்பார்த்த படம்:(
ReplyDeleteநன்றி நவாஸ். ஏதாவது தியேட்டரில் அடுத்த மாதம் கூட ஓடும் என்று தான் நினைக்கிறேன்.
ReplyDeleteஎறும்பு. வலி சரி ஆய்டுச்சு. நன்றி
வள்ளுவன், தங்கள் கேள்விகளுக்கு நன்றி. விடை அளிக்க முயல்கிறேன்.. தனி பதிவாக...
குறும்பன்:Second half பார்த்தால் வெறுத்து போய்டும். மாயாஜாலில் அவ்ளோ செலவு செய்து பார்த்தால் இன்னும் ஆவீங்க. சாதா தியேட்டரில் முதல் பாதிக்காக ஒரு முறை பாருங்க
என்னால முடியலங்க. படத்தை சொல்லல.. முதல் கமெண்ட்ட போட்டு இருக்காரே ஒரு புன்ணியவான்.அவர சொன்னேன்
ReplyDeleteஎன்னுடைய சட்டப்படிப்பு குறித்த கேள்விகளுக்கு தனிப் பதிவு போட சம்மதித்த உங்களுக்கு நன்றி. மேலும் சில கேள்விகள்...!
ReplyDelete1. தமிழ் நாட்டில் படித்துவிட்டு வெளிநாட்டில் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா?
2. கம்பெனிகளுக்கு வழக்கறிஞர்களாக பணிபுரிய, என்ன மாதிரி தகுதிகள் கூடுதலாக தேவைப்படும்?
3. இந்திய அளவில் சிறந்த வழக்கறிஞர்கள் தமிழகத்திலிருந்து உருவாவதில்லையே, ஏன்?
4.law firm என்றால் என்ன? அதன் பணியாது?
5.சிவில் சர்வீஸ் தேர்வு எழுத உதவிகரமாக இருக்குமா?
.
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். விமர்சனம் ஓகே...!
ReplyDelete.