Wednesday, February 17, 2010

கேபிளின் ரெண்டு ஷாட் டகீலா: புத்தக விமர்சனம்

பதிவரும் நண்பருமான கேபிள் சங்கர் தன் முதல் சிறுகதை நூலை வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் மட்டுமின்றி ப்ளாகில் அவர் எழுதுவதும், சினிமா பார்ப்பது,  அதற்கான விமர்சனங்கள் எழுதுவது என அனைத்தும் அவர் இயக்க போகும் படத்துக்கான பயிற்சியாக தான் செய்கிறார் என நினைக்கிறேன்.


தொகுப்பில் மொத்தம் 13 கதைகள் உள்ளது. இயக்குனர் ஷண்முக பிரியன் முன்னுரை தந்துள்ளார். நூலை கேபிள் " பிரம்மாவும் குருவுமான தந்தைக்கு" சமர்பிக்கிறார்.

இனி சில கதைகள் பற்றி:

ஆண்டாள் கதை ரொம்ப அழகு. தல மூணாவதிலேயே தனது வேலைகளை ஆரம்பிச்சிருக்கார்!! ஒரு சின்ன பையன் ( Adolescent? ) சொல்கிற மாதிரி கதை சென்று அழகாய் முடிகிறது. எனக்கு பிடித்த ஓர் கதை.

ஒரு காதல் கதை இரண்டு க்ளைமாக்ஸ்.. குட்டி சினிமா காட்சி போல் உள்ளது.

ரெண்டு ஷாட் டகீலா கதையில் அந்த கடைசி வரி அதிர்ச்சி ஊட்டுகிறது. அது எப்படி அவ்ளோ தண்ணி அடிக்கும் நபருக்கு வயது அப்படி இருக்கும்?

திருமணமான பெண் இன்னொரு நபருடன் தகாத உறவு வைத்திருப்பது பற்றி ஓர் கதை (என்னை பிடிக்கலையா?). கதையின் இறுதியில் " உன் கணவன் இருக்கும் போது ஏன் என்னிடம் வந்தாய்" என அந்த நபர் கேட்க, அந்த பெண் சொல்லும் பதில் அனைத்து ஆண்களும் உணர வேண்டிய ஒரு விஷயம். ஆரம்பத்தில் மனைவியின் அழகு, ரசனை எல்லாம் ரசிக்கும் கணவன் பின் அவளை முழுதும் ignore செய்வதே இத்தகைய உறவுகளுக்கு காரணம் என சொல்லாமல் சொல்கிறார். உண்மையிலேயே இந்த கதையில் அனைவருக்கும் ஒரு மெசேஜ் இருக்கு.

நண்டு கதை நமக்கு இப்படி ஆனால் நம் குடும்பம்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி செல்கிறது.

ராமி சம்பத் துப்பாக்கி டிபிகல் விறு விறு கதை. “முத்தம்” ஆச்சரியமாய் உள்ளது இப்படியும் நடக்குமா என்று !

காமம் கொல் சர்வேசன் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது என நினைவு. செம வேகமான கதை.. சுஜாதா பாணி தெரிகிறது

துரை நான் ரமேஷ் சார் கதை திரை உலகில் பெண்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என அப்பட்டமாக காட்டுகிறது. அந்த பெண்ணின் மன வலி பாதியிலேயே நமக்கும் பரவுகிறது. (கடைசி பாராவில் ரமேஷ் சார் திடீரென சுந்தர் சார் ஆகியிருக்கிறார்..கவனிச்சி மாத்திருக்கலாமே கேபிள்? )

மொத்த கதைகளிலும் குறிப்பிடும் படியானது கதைகளில் உள்ள விறு விறுப்பும், சாதாரண வாசகனுக்கு எளிதில் புரிகிற விதம் உள்ளதும்!! பல கதைகளில் இறுதியில் ஒரு ட்விஸ்டும் வைத்துள்ளார்.

சில நேரம் வரிகள் ரொம்ப பெரிதாக எழுதி செல்கிறார்: " அவன் மிக கோபமாக துரத்த. இவள் வேகமாக ஓட, நடுவில் வந்த பைக் அவள் மேல் மோதும் படி வர, அதனை தாண்டி அவள் தப்பித்து செல்ல.. " என.. இது கேபிளின் எழுத்துகளில் எப்போதும் உள்ளது. எனது பத்திரிக்கை உலக நண்பர் செந்தில் சொல்லி தந்த விஷயம்: வாக்கியங்கள் சின்ன சின்னதாய் இருந்தால் தான் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும் என்பது. இது கேபிளின் கவனத்துக்கு!


கள்ள உறவுகளும், செக்சும் , விலை மகளிரும் பல கதைகளில் வருகின்றனர். ஏன் இப்படி என புரிய வில்லை. இவை இல்லாமல் எழுதியிருக்கும் கதைகளான ஆண்டாள், நண்டு போன்ற கதைகளும் நன்றாகவே உள்ளன. முதல் ரக கதைகள் இன்றி இத்தகைய கதைகள் கேபிள் நிறைய எழுத வேண்டும் என்பதே என் எதிர் பார்ப்பு.

மொத்தத்தில் ரெண்டு ஷாட் டகீலா .. சுவாரஸ்யம் + விறுவிறுப்பு கலந்த ஒரு மசாலா மிக்ஸ் !!

********
நூல் பெயர்: லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டகீலாவும்
ஆசிரியர்: சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)
வெளியீடு: நாக ரத்னா பதிப்பகம் ( Nagarathna_publication@yahoo.in)
விலை: ரூ. 50.

இந்த புத்தகம் ஆன்லைனில் வாங்க : இங்கே செல்லவும்

23 comments:

 1. கிட்டத்தட்ட நான் என் எண்ணங்களை பிரதிபலிக்கிறது உங்கள் விமரிசனம்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. கதைகளை பற்றி நீங்கள் விளக்கியவிதம் மிக அருமை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நன்றி தலைவரே

  ReplyDelete
 5. விமர்சனமும் கதைகளை போலவே

  ReplyDelete
 6. விமர்ச்சனம் அருமை... சீக்கிரம் புக் வாங்கி படிக்கனும்...

  ReplyDelete
 7. மொத்தத்தில் ரெண்டு ஷாட் டகீலா .. சுவாரஸ்யம் + விறுவிறுப்பு கலந்த ஒரு மசாலா மிக்ஸ் !!

  .......... உங்கள் விமர்சனமும் அது போலவே. :-)

  ReplyDelete
 8. நன்றி TVR ஐயா; வருகைக்கும் கருத்துக்கும்!
  -----
  சசிகுமார்: முதல் வருகை என நினைக்கிறேன். நன்றி
  -----
  கேபிள் நன்றிக்கு நன்றி
  -----
  பேனா மூடி: ரொம்ப புகழ்றீங்க; ஹி ஹி
  -----

  ReplyDelete
 9. சங்கவி: நன்றி அவசியம் படிங்க
  -------
  நன்றி ஜெரி அவர்களே
  -------
  சித்ரா: நன்றி வணக்கம்

  ReplyDelete
 10. நடுநிலையான உங்கள் விமர்சனம் பிடித்திருக்கிறது மோகன் சார்.

  ReplyDelete
 11. விமர்சனம் அருமை நண்பரே.

  ReplyDelete
 12. நிறைகுறைக‌ளை வெளிப்ப‌டையா சொல்லியிருக்கீங்க‌, நைஸ்

  //கள்ள உறவுகளும், செக்சும் , விலை மகளிரும் பல கதைகளில் வருகின்றனர். ஏன் இப்படி என புரிய வில்லை//

  ச‌ரி விடுங்க‌, யூத் எழுத்தாள‌ர் க‌தைன்னா இப்ப‌டித்தான் இருக்குமோ என்ன‌மோ...:)))

  ReplyDelete
 13. அருமையா எழுதியிருக்கீங்க மோகன்..
  எனது விமர்சனம் இங்கே:
  http://anbudan-mani.blogspot.com/2010/02/blog-post_17.html

  ReplyDelete
 14. அருமையாகவே விமர்சனம் செய்து இருக்கீங்க உங்க பார்வையில், திரைப்படங்கள் மட்டுமல்ல, எழுத்துகளும் விமர்சிக்கப்படும் எனும் பல பதிவர்களின் விமர்சனம் அழகுதான்.

  ReplyDelete
 15. நன்றி சரவண குமார்
  -----
  நன்றி குறும்பன்; ஓஹோ யூதுன்னு நிரூபிக்க இப்படி எழுதுறாரா?
  -----
  மணி பார்த்தேன்; ஒரே நேரத்தில் 3 புக்கு விமர்சனம் எழுதி அசத்திடீங்க
  ----
  நன்றி ராதா கிருஷ்ணன்

  ReplyDelete
 16. ரைட்டு .. கூடிய விரைவில் நானும்..:))

  ReplyDelete
 17. படிச்சு கிட்டே இருக்கேன்...வெள்ளிக்கிழமை என் விமர்சனம்

  ReplyDelete
 18. முக்கால் வாசி படிச்சிட்டேன் தலைவரே . நல்லா இருக்கு .

  ReplyDelete
 19. நான் நினைத்து குறிப்பிட மறந்த நான்கு விஷயங்களை உங்க விமர்சனத்துல குறீப்பிட்டு இருக்கிங்க மோகன்
  முதல்ல ஷண்முகப் பிரியன் முன்னுரை
  இரண்டாவது தந்தைக்கு சமர்ப்பணம் மூன்றாவது ரமேஷ் சுந்தர் பெயர் மாற்றம்
  நாலாவது முக்கியமானது //கள்ள உறவுகளும், செக்சும் , விலை மகளிரும் பல கதைகளில் வருகின்றனர். ஏன் இப்படி என புரிய வில்லை//
  இதுதான் ...

  நல்ல விமர்சனம் ..வாழ்த்துக்கள் மோகன்...

  ReplyDelete
 20. நீடாமங்கலமா நீங்க? நமக்குக் கும்பகோணம்.

  ReplyDelete
 21. நல்லதொரு விமர்சனம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 22. பெங்களுருவில் உங்கள் புத்தகங்களை எங்கு வாங்கலாம்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...