Saturday, February 20, 2010

பிடித்த புத்தகம்-ராபின் சர்மாவின் The Monk who sold his Ferrari

ராபின் ஷர்மா எழுதிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வாசித்துள்ளீர்களா? அவரது bestseller புத்தகம் " The Monk who sold his Ferrari". இது நாவல் வடிவில் வெளி வந்த ஒரு சுய முன்னேற்ற நூல்.

ஜூலியன் என்ற பிரபலமான வழக்கறிஞர் ஒரு நாள் கோர்ட்டில் ஹார்ட் அட்டாக் வந்து சரிகிறான். அதன் பின் சில மாதங்கள் கழித்து ஜூலியனை சந்திக்கும் கதை சொல்லி ஆச்சரிய பட்டு போகிறான். தற்போது மிக தெளிவாக, fresh ஆக உள்ளான் ஜூலியன். இது எப்படி என ஆச்சரியப்பட்டு கேட்கிறான். தன்னுள் வந்த மாற்றத்தை ஜூலியன் ஒரு நாள் இரவு முழக்க கதை சொல்லியிடம் பகிர்கிறான். இது தான் கதை.

ஜூலியன் தான் முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்கும் தற்போது ஒரு புரிதல் வந்த பின் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்யாசத்தையும், தான் புரிந்த விஷயங்களையும் சொல்லிச்செல்லும் போது நாமும் அறிய பல விஷயங்கள் உண்டு. இந்த புத்தகத்தில் நான் ரசித்த சில கருத்துகளை இப்போது பகிர்கிறேன். தமிழில் மொழி மாற்றம் செய்வது சிரமம் ஆகும் போது, மேஜர் சுந்தர் ராஜன் பாணியில் தமிழ் + ஆங்கிலத்தில் சொல்லி செல்வேன். பொருத்தருள்க.

**************************

** வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. ஒவ்வொரு பின்னடைவும் சில படிப் பினைகளை தருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, அலுவலக வாழ்விலோ நாம் காணும் ஒவ்வொரு தோல்வியும் நாம் மேலும் முன்னேற உதவவே செய்கிறது.

** உங்கள் கடந்த காலத்தை எக்காரணம் கொண்டும் வெறுக்காதீர்கள். அதனை ஒரு ஆசிரியராக இணைத்து அரவணையுங்கள் (Never regret your past. Rather, embrace it as the teacher that it is")

** உங்கள் மனதில் கெட்ட, தீய எண்ணங்களுக்கு முடிந்த வரை இடம் தராதீர்கள். அவை வந்தாலும் உடனே துரத்தி விடுங்கள். ஒரு சாதாரண மனிதன் மனதில் ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் வருகின்றன. இதில் 95% ஏற்கனவே வந்த சிந்தனைகளே!! இதில் எதிர் மறை சிந்தனைகள் திரும்ப திரும்ப வந்தால் அதனால் அவர்கள் வாழ்க்கை முறை நிச்சயம் பாதிக்க படும்.

** வாழ்க்கையில் தவறுகள் என்றே ஏதும் கிடையாது. அனைத்தும் பாடங்களே!! நெகடிவ் அனுபவம் என்று ஏதுமில்லை. ஒவ்வொன்றும் நாம் கற்று கொள்ளவும் மேலும் பலம் பெறவும் உதவுபவையே. வலியை விட சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது.

** உலகில் எந்த விஷயமும் இரு முறை உருவாகிறது. முதலில் மனிதனின் மனதில் அடுத்து நிஜத்தில். (Things are created twice, first in the workshop of the mind and then only then in the reality).

** நீங்கள் ஒரு மிக பெரிய லட்சியம் அல்லது ப்ராஜக்ட்டுக்காக ஈடுபடும் போது உங்கள் மனம் தன் எல்லைகளை தாண்டி பயணிக்கிறது. அனைத்து சக்திகளும் ஒரு முக பட, பல விஷயங்களும் உங்களுக்கு உதவ, உங்களை பற்றி, உங்கள் திறன் பற்றி நீங்கள் அப்போது தான் உணர்கிறீர்கள்.


** உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து மீண்டும் உங்கள் இளமை காலத்தை இன்னொரு முறை வாழுங்கள். வாழ்க்கையில் என்ன தான் சாதித்திருந்தாலும் உங்கள் குடும்பத்தாரோடு நீங்கள் போதுமான நேரம் செலவழிக்கா விட்டால் நீங்கள் என்ன சாதித்தும் பயன் இல்லை

** ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது நீங்கள் அன்று செய்தது என்ன, உங்கள் இலக்கு நோக்கி சரியாக செல்கிறீர்களா என்று யோசியுங்கள். இந்த நேரம் நீங்கள் கற்கும் விஷயம் நிறையவே இருக்கும்.

** சிலர் குறைவாக வேலை செய்து பிற நேரம் ஓய்வு எடுப்பதே சந்தோஷமாக இருக்கும் வழி என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான சந்தோசம் ஒரு விஷயத்தை நாம் achieve செய்வதில் தான் உள்ளது. தொடர் மகிழ்ச்சி உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் விடாமல் பயணிப்பதில் தான் கிடைக்கும்.

** வாழ்கையில் முன்னேற தூங்கும் நேரத்தை குறைக்க வேண்டும். சராசரி மனிதனுக்கு ஆறு மணி நேர தூக்கம் போதுமானது.

** எந்த விஷயங்கள் செய்ய பயமும் தயக்கமும் கொள்கிறீர்களோ, அந்த விஷயங்களை தைரியமாக செய்ய துவங்குங்கள். கொஞ்ச காலத்தில் அந்த வேலை நன்றாகவே செய்ய துவங்கவதுடன், உங்கள் தன்னம்பிக்கையும் அதிகமாகியிருக்கும்.

************

ராபின் சர்மாவே இன்னொரு புத்தகத்தில் சொல்வது போல் சுய முன்னேற்ற புத்தகத்தில் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் நாம் பின் பற்ற வேண்டும் என்பது இல்லை. ஒரு புத்தகத்தில் ஒரே ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ப கிடைத்தால், அதுவே கூட போதும்.

ராபின் சர்மாவின் இந்த புத்தகத்தில் ஒன்றல்ல, பல விஷயங்கள் அவ்வாறு உண்டு. Personally சொல்ல வேண்டுமெனில் இந்த புத்தகம் படிக்கும் முன் சில கடந்த கால நிகழ்வுகளுக்காக என் மீதே எனக்கு நிறைய கோபம் இருந்தது.
ஆனால் "Never regret your past. Rather, embrace it as the teacher that it is" என்ற வரிகள் படித்த பின் எனது குற்ற உணர்ச்சி பெரிதும் குறைந்தது; கடந்த காலம் என்பது ஒரு ஆசிரியர் என உணர்ந்தது இந்த புத்தகம் வாசித்த பின் தான்!!

அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இயலும் போது வாசியுங்கள்!!

13 comments:

  1. நல்ல புத்தகம் மோகன். நம் அட்டமாயோகத்தை மிக நவீனபடுத்தி நம்மையும் ஏற்றுக்கொள்ளவைத்த ராபினின் சாதுர்யத்தை படிக்கும்பொழுதே ரசித்தேன்.மிகவும் புத்துணர்வை தரக்கூடிய புத்தகம்.தமிழில் ஜெய்கோ பதிப்பகம்"தன் பொக்கிஷத்தை விற்ற துறவி" என வெளியிட்டு இருக்கிறது. நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள். புத்தகங்கள் பற்றிய உங்கள் பகிர்தல் தொடருட்டும்.

    ReplyDelete
  2. thanks for sharing. PLease try Stephen Covey's, the 7 habits of highly effective people too.

    ReplyDelete
  3. அருமையான பதிவு மோகன். இந்த புத்தகம் வெளி வந்த புதிதில் என்னடா இது, பெயரே நன்றாக இருக்கிறதே என்று நினைத்து வாங்கி படித்த புத்தகம். அற்புதமாய் நகர்த்தி இருப்பார் கருத்துக்களை ராபின் ஷர்மா, நீங்கள் இங்கே சொல்லியது போலவே. தொடரட்டும் உங்கள் விமர்சனங்கள்!!!

    ReplyDelete
  4. ஒரு அருமையான புத்தகத்துக்கு, அருமையான விமர்சனம். :-)

    ReplyDelete
  5. //வலியை விட சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது//

    ந‌ச்னு ஒரு வ‌ரி, சூப்ப‌ர்:)

    ReplyDelete
  6. //உங்கள் கடந்த காலத்தை எக்காரணம் கொண்டும் வெறுக்காதீர்கள். அதனை ஒரு ஆசிரியராக இணைத்து அரவணையுங்கள் (Never regret your past. Rather, embrace it as the teacher that it is")
    //

    இது சிம்பிள் but சூப்பர்.. ;)

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம் என்பதை விட நல்ல அறிமுகம்னுதன் சொல்வேன்...எனக்கு இது புதுசு..படிக்கனும்

    ReplyDelete
  8. நன்றி ஜெய மார்த்தாண்டன். நிச்சயம் எழுத முயல்கிறேன்.
    ----------
    குப்பன்.. மிக்க நன்றி. நல்ல புத்தகம் பரிந்துரிதமைக்கும்
    ----------
    காவிரி கரையான்.. ஆம் தலைப்பு மட்டுமல்ல புத்தகமே அருமை
    ----------
    நன்றி சித்ரா

    ReplyDelete
  9. ஆம் ரகு நல்ல வரி.
    ----------
    மணி நன்றி நான் ரசித்த வரிதான் இதுவும்.
    ----------
    நன்றி புலிகேசி அவசியம் படியுங்கள்

    ReplyDelete
  10. nalla puththakam . naanum padiththullen. avarin marra puththakangkalum padiththu oru idukai potungkal. anaivarum padikka vendiyathu. thamililum tharpothu kidaikirathu.nanri. arumaiyaaka eluthi ulleerkal.

    ReplyDelete
  11. என்னுடையது மாற்றுக் கருத்து:)

    ReplyDelete
  12. நல்ல புத்தகம் மோகன். Will try to get a one. :)

    ReplyDelete
  13. நன்றி வித்யா; மாற்று கருத்து என்று கூறி விட்டு, எந்த விஷயத்தில் என்று சொல்லாமல் சென்று விட்டீர்கள். :))
    *********
    அம்பி: நன்றி; அவசியம் வாசியுங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...