Sunday, February 28, 2010

சுஜாதா அவார்ட்ஸ்- அறிமுக விழா

கவிஞர் மனுஷ்ய புத்திரன் சுஜாதா அவார்ட்ஸ் தர போவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிமுக விழா நியூ வூட்லண்ட்ஸ் ஹோட்டலில் சுஜாதா நினைவு நாளான பிப்ரவரி 27, சனி கிழமை மாலை நடந்தது. பல வி. ஐ. பி கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு மினி தொகுப்பு இதோ:

மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசினார். ஆறு பிரிவுகளில் சுஜாதா விருதுகள் தர போவதாக சொன்னார்: அவை:

சிறந்த சிறுகதை நூல்
சிறந்த கவிதை நூல்
சிறந்த கட்டுரை நூல்
சிறந்த ப்ளாக்
சிறந்த நாவல்
சிறந்த சிறு பத்திரிக்கை

மார்ச் 31, 2010 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மே மாதம் மூன்றாம் தேதி சுஜாதா பிறந்த நாள் அன்று விருதுகள் வழங்க படும் என்றும் சொன்னார். விருதுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000 பரிசு என்று சொன்னதாக நினைவு (தவறு எனில் பின்னூட்டத்தில் கூறுங்கள்)

அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். .. மனுஷ்ய புத்திரன் விருது, விழா, சாப்பாடு என நிரம்பவே செலவும் மெனக்கெடவும் செய்கிறார்!! பெரிய விஷயம் இது!!

பதிவர்கள் தங்கள் கவிதை தொகுப்பையும் ப்ளாக் பற்றிய தகவல்களையும் மார்ச் 31-க்குள் மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்பி வையுங்கள்..

இனி விழாவில் மற்றவர்கள் பேசியது குறித்து..

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராசன்

"நான் வெளி நாடு சென்றிருந்த போது , அங்கிருந்த ஒரு புகழ் பெற்ற புத்தக கடையில் இருந்து என்ன புத்தகம் வாங்கலாம் என சுஜாதாவிற்கு தொலை பேசி மூலம் கேட்டேன்.சுஜாதா அங்கு மட்டும் கிடைக்கும் புத்தகத்தை சரியாக சொன்னார். அவற்றை வாங்கினேன். சுஜாதா குடும்பத்துடன் நான் நீண்ட கால நண்பன். சுஜாதா கிட்ட தட்ட எனது சகோதரர் போல.."


ராஜீவ் மேனன்:

"கண்டு கொண்டேன் படம் டிசம்பரில் வசனம் எழுத ஆரம்பித்தோம். காலை முழுதும் வசனம் எழுதிட்டு மாலை கர்நாடக சங்கீதம் கேட்போம். ஜனவரி மாதம் வந்ததும் சேப்பாக்கம் ஸ்டேடியம் போய் கிரிக்கெட் மேட்ச் பார்ப்போம்; பின் வசனம் எழுதுவோம்; இப்படி இயக்குனர்- வசன கர்த்தா என்றில்லாமல் ஒரு அப்பா- மகன் போல இருந்தோம்; இப்போது கூட நல்ல ராகம் கேட்கும் போது சுஜாதாவிடம் பகிர தோன்றுகிறது; சச்சின் 200 ரன் அடித்த போது சுஜாதாவிற்கு போன் செய்து பேச தோன்றுகிறது".

சந்திர சேகர் ( பெண்டா மீடியா இயக்குனர்)

"நான் கம்பெனி ஆரம்பித்த போது சுஜாதா அவசியம் அதில் இருக்க வேண்டும் என நினைத்தேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான விஷயங்களை மிக எளிதாக எழுத அவர் தான் சரியான நபர் என நினைத்தேன். எங்கள் அனைத்து அனிமேஷன் படங்களுக்கும் தமிழுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்துக்கும் அவர் தான் வசனம் எழுதினார். ஆங்கிலம் கூட மிக அற்புதமாக எழுதினார். நான் சினிமா, தியட்டேர் என ஆரம்பித்த போது வீட்டார் உட்பட யாரும் ஆதரிக்கலை; ஆனால் சுஜாதா மட்டும் இவ்ளோ பேர் எதிர்த்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என encourage செய்தார்"

திருமலை (சுஜாதாவின் தம்பி)

வெளி நாடுகளில் கூட பல எழுத்தாளர்கள் இருந்தாலும் சுஜாதா போல் சிறுகதை, நாவல், வசனம் என பல பிரிவுகளில் அசத்தியவர் யாரும் இருந்ததாக எனக்கு தெரியலை; அத்தோடு பல விதமாய் எழுதினால் ஆழமாய் எழுத முடியாது என்பார்கள்; ஆனால் சுஜாதா பல பிரிவுகளில் ஆழமாய் எழுதினார்; அப்படி பட்ட மனிதரை நம் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாதது எனக்கு வருத்தமே; குறைந்தது அந்த மூளையை எடுத்து preserve செய்திருக்க வேண்டும்!

நடிகர்/ இயக்குனர் பார்த்திபன்:

"பல பிரச்சனைகளை சுஜாதாவிடம் தான் அட்வைஸ் கேட்பேன்; கிறுக்கல்கள் புத்தகம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பிரச்சனை ஆனபோது கூட பேச சுஜாதா இல்லையே என feel செய்தேன். இந்த விருதுகளுக்கு ஆகும் செலவில் மனுஷ்ய புத்திரனுக்கு தேவையான உதவிகள் (sponsor) செய்ய தயார்"

இயக்குனர் ஷங்கர் பேசும் போது தனது படங்களில் அவர் எழுதிய வசனங்களில் தனக்கு பிடித்த வசனங்களை ( அந்நியன், இந்தியன், சிவாஜி) பற்றி பேசினார். மேலும் ஸ்டோரி டிஸ்கஷனில் பல முறை எப்படி எடுத்து செல்வது என தடுமாறிய போது சுஜாதா எப்படி உதவினார்; எப்படி motivate செய்தார் என கூறினார். எந்திரனுக்கும் சுஜாதா வசனம் எழுதி தந்ததாகவும் அதிலிருந்து ஒரு காட்சியும் சொன்னார். ரஜினி வேலை வேலை என வீட்டை மறந்து இருப்பாராம். ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு தாடியுடன் வர, அவர் அம்மா " என்னடா லீவில வந்த ரிஷி மாதிரி இருக்கே" என்பாராம் !

இயக்குனர் வசந்த் சுஜாதாவை தான் சந்தித்து பேச பல முறை முயன்று தோற்று, கடைசியில் பெங்களூரில் பார்த்து, ஒன்னரை மணி நேரம் பேசியதை நகைச்சுவையாக ஒரு சினிமா போல், சஸ்பென்ஸ் உடன் பேசினார்.

மதன் விழா இன்னும் பெரிய அளவில் நடத்தலாம் என்றும் மனுஷ்ய புத்திரன் மற்ற பிரபலங்களிடம் இதற்கான உதவிகள் கேட்டு பெறலாம் என்றார். ஜூனியர் விகடன் புத்தகத்தில் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" வர துவங்கிய கதையை பகிர்ந்து கொண்டார்.

மேலும் எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி, கவிஞர் ஞான கூத்தன் போன்றோரும் பேசினர்.

விழாவில் பார்த்த பதிவர்கள் :

டோண்டு ராகவன் (பெரிய சைஸ் நோட்டு வச்சி எழுதிட்டு இருந்தார்; இங்கு இல்லாத மற்ற தகவல் அங்கு நீங்கள் பாக்கலாம்)

கேபிள் (எப்படிய்யா சுஜாதாவை சீரியஸ் ரைட்டர் இல்லைன்னு சொல்லலாம் என என் சட்டையை பிடிச்சு உலுக்காத குறை தான்)

நரசிம் (நாலு நாள் தாடியில் தல வித்யாசமா இருந்தார்; கேட்டா Month end; வேலை அதிகம் என்றார்)

புது மாப்பிள்ளை அதிஷா மற்றும் லக்கி

பைத்திய காரன் (மிக சீரியஸா கவனிச்சார்)

சங்கர் (நானும் இவரும் விழா முடிந்து திரும்ப வர, வண்டி பங்கசர்; இனிமே என்னை வண்டியில் ஏத்துவார்ங்குறீங்க ?)

டம்பி மேவி (ரொம்ப சீக்கிரமே எஸ்கேப்)

சுரேஷ் கண்ணன் (முதல் தடவை பார்த்தேன் இந்த சிநேகமான மனிதரை)

மேலும் அதியமான், டாக்டர் ப்ருனோ மற்றும் பலர். அட சொல்லலையே சாரு கூட வந்திருந்தார்!!

திருமதி சுஜாதாவிடமும் , அவர் மூத்த மகனிடமும் சற்று நேரம் பேசி விட்டு நானும் சங்கரும் விடை பெற்றோம்.

ஒரு எழுத்தாளர் இறந்து இரண்டு வருடம் ஆன பின்னும் இத்தனை பேர் அவர் நினைவாக குழுமி அவரது நினைவுகளை பகிர்ந்தது, மிக நெகிழ்வான உணர்வுகளை தந்தது!!

26 comments:

 1. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. நெகிழ்வான தருணத்தை அப்படியே படம் பிடித்து தந்தமைக்கு மிக்க நன்றி.....

  இப்போ “எந்திரன்” படத்திற்காக வெயிட்டிங்....

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு.நன்றி மோகன்!

  ReplyDelete
 5. " டம்பி மேவி (ரொம்ப சீக்கிரமே எஸ்கேப்)"

  அதற்க்கான காரணத்தை மேவியின் பகிர்வில் சொல்லி இருக்கிறேன் தல ...


  நல்ல பதிவுங்க

  ReplyDelete
 6. neenga unmaiyilaiye youth thaan

  ReplyDelete
 7. இத்தனை பேர் போயிருக்கீங்களே.. யாராச்சும் என்கிட்டயும் சொல்லியிருக்கலாமே.. :)

  ReplyDelete
 8. நானும் வந்திருந்தேன். விழாவின் துவக்கத்திலிருந்து கிட்டத்தட்ட முடியும் வரை (பார்த்திபன் பேசும்வரை) இருந்தேன். அதற்கப்புறம் யாராவது பேசினார்களா?

  நிறைய புகைப்படங்களும் எடுத்தேன். பதிவு போடும் எண்ணம் இல்லாததால் புகைப்படங்களை டோண்டு அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவரது பதிவில் பார்க்கலாம்.

  - சிமுலேஷன்

  ReplyDelete
 9. அடடே தெரியாமபோச்சே! நல்லதொரு மீட்டிங்கை மிஸ் பண்ணிட்டேனே! கூட்டத்தில் பேசியதை உங்கள் மூலம் அறிந்துகொண்டதில் சற்றே ஆறுதல். பகிர்வுக்கு நன்றி மோகன்.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. இன்னும் எனக்கு சரியான பதில் சொல்லலை.

  ReplyDelete
 12. மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசினார். ஆறு பிரிவுகளில் சுஜாதா விருதுகள் தர போவதாக சொன்னார்: அவை:

  சிறந்த சிறுகதை நூல்
  சிறந்த கவிதை நூல்
  சிறந்த கட்டுரை நூல்
  சிறந்த ப்ளாக்
  சிறந்த நாவல்
  சிறந்த சிறு பத்திரிக்கை //

  உங்களுக்கு சிறந்த ப்ளாக் விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். விண்ணப்பிக்கவும்.

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு மோகன். நன்றி. அப்படியே “சுஜாதா” என வரும் இடங்களில் இனிமேல் “திரு.சுஜாதா” அல்லது “எழுத்தாளர்.சுஜாதா” எனப் போட்டுக் கொள்ளுங்களேன். அவருக்கு நம்மால் முடிந்த சிறு மரியாதை.

  ReplyDelete
 14. பயனுள்ள பகிர்வு

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு நன்றி மோகன்

  ReplyDelete
 16. சொல்லிருந்தா நானும் வந்திருப்பேன்....

  ReplyDelete
 17. கடைசில டியூப் மாத்த வேண்டியதாப் போச்சி :)

  May-3 பிறந்தநாள் விழாவுக்குப் போகலாம் வாங்க :)

  ReplyDelete
 18. //வெளி நாடுகளில் கூட பல எழுத்தாளர்கள் இருந்தாலும் சுஜாதா போல் சிறுகதை, நாவல், வசனம் என பல பிரிவுகளில் அசத்தியவர் யாரும் இருந்ததாக எனக்கு தெரியலை//

  இதுக்கு, நானும் நர்சிமும் குடுத்த ரியாக்க்ஷனை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க போலருக்கே :))

  ReplyDelete
 19. @ விக்னேஷ்வரி

  அக்கா, மனதிற்கு நெருங்கிய நண்பருக்கு அப்படி மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம் தானா?

  'மச்சி' என்று சொன்னால் கூட அவர ரசிப்பார் என்றே நினைக்கிறேன்

  ReplyDelete
 20. சுஜாதா பற்றி எழுதிய இரண்டு பதிவுகளும் அருமை தலைவரே.

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு நண்பா...

  ReplyDelete
 22. மிக்க நன்றி.. ராம லக்ஷ்மி, கோபி, TVR சார், ராஜாராம்.

  நன்றி டம்பி மேவி.. தங்கள் பதிவு பார்த்தேன்

  மணி: தங்கள் தொலை பேசி எண்ணை எனது மெயில் முகவரிக்கு (எனது profile-ல் உள்ளது) அனுப்புங்கள்; இனி இது போன்ற சந்திப்புகளை தெரிவிக்கிறேன்.

  சிமுலேஷன்: நன்றி; தங்களை சந்தித்திருக்கலாம்!! படங்களை டோண்டு பதிவில் பார்த்தேன்

  ReplyDelete
 23. ராகவன் சார்: உங்களுக்கு ஆர்வம் உண்டு என எனக்கு தெரியாது; தெரிந்தால் சொல்லியிருப்பேன். நானே கடைசி நிமிட அழைப்பில் தான் சென்றேன்!

  வெற்றி: நன்றி

  கேபில்ஜி: போன பதிவின் கமேண்டுகளில் பதில் சொல்லிருக்கேன்; மீ தி எஸ்கேப் :))

  ReplyDelete
 24. அமைதி அப்பா: என மேல் உள்ள அதீத அன்பால் அப்படி சொல்கிறீர்கள். நான் நிச்சயம் apply செய்கிறேன். ஆனால் என்னை விட சிறந்த பதிவர்கள் உள்ளனர். தங்கள் எண்ணத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!
  ******
  விக்கி: நன்றி. நம்ம வாத்தியார் என்ற உரிமை தான் காரணம். ஒவ்வொரு முறையும் திரு சொல்வது அவரிடமிருந்து தள்ளி வைக்குமோ என்று ஐயம்..
  ********
  நன்றி Dreamer & தேனம்மை மேடம்
  *******
  அப்படியா புலி கேசி? எனக்கே கடைசி நிமிடம் தான் தெரிந்தது
  ********
  சங்கர்.. அடடா !! Tube மாத்த வேண்டியதா போச்சா!! வருத்தமா இருக்கு. மே 3 அன்று நான் ஊரில் இருக்க மாட்டேன். நன்றி தங்கள் அன்புக்கும் கருத்துகளுக்கும்
  ********
  நன்றி ரோமியோ.. நீங்களும் சுஜாதா ரசிகரா?
  ********
  நன்றி ஜாக்கி சேகர் .. தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

  ReplyDelete
 25. அற்புத‌மான‌ ப‌கிர்வு:) இவ‌ருடைய‌ ஒவ்வொரு க‌தையையும் ப‌டிக்க‌ ப‌டிக்க‌, இவ‌ர் இன்னும் கொஞ்ச‌ வ‌ருஷ‌ம் இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றுகிற‌து..ப்ச்...என்ன‌ செய்ய‌:(

  ReplyDelete
 26. நல்ல பகிர்வு:)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...