Thursday, February 25, 2010

வானவில் - OMR ரோடு ..சச்சின்!!

ஒரு நாள் கிரிக்கட்டில் ஒரு நாள் இருநூறு ரன் எடுப்பார் என்ற இமாலய எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் சச்சின்!! ஒரு quality opposition டீமுக்கு எதிரே இந்த சாதனை நிகழ்த்த பட்டுள்ளது. 147 பந்துகளில் சச்சினின் 200 ரன்கள் ஒரு chanceless இன்னிங்க்ஸ் !! பெண்கள் ஒரு நாள் கிரிக்கட்டில் பெலிண்டா கிளார்க் என்பவர் 229 ரன்கள் எடுத்துள்ளார்!! ஆனால் இந்த விஷயமே இப்போது தான் தெரிய வருகிறது!! ஆண்கள் கிரிக்கட்டும் பெண்கள் கிரிக்கட்டும் பொதுவாக ஒப்பீடு செய்ய படுவது இல்லை. எனவே சச்சினின் இந்த சாதனை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. இதே பிப்ரவரி 24 அன்று ("ஜெ" அம்மா பொறந்த நாளுப்பா இது!!) 22 ஆண்டுகளுக்கு முன் சச்சின் - காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் எடுத்து உலக சாதனை செய்தது!! இதன் மூலம் தான் சச்சின் முதலில் limelight-க்கு வந்தார்!! அதே பிப்ரவரி 24 இந்த உலக சாதனையும்!!
இந்தியன் என்றும் சச்சினின் fan என்றும் சொல்லி கொள்ள பெருமை படும் நிகழ்வு இது !!


படித்ததில் பிடித்தது


** I am the Master of my fate and
    I am the Captain of my soul. - W.C.Henley (English Poet)

**We are only responsible for our sufferings and ill feelings – Tagore

சென்னை ஸ்பெஷல்

சென்னையின் OMR ரோட்டில் சமீபத்தில் பயணித்தீர்களா ? வாவ்!! அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்!! அடையார் முதல் சிறுசேரி வரை Six way High Road அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் தற்சமயம் முக்கால் வாசி தூரம் முடிந்து விட்டது என நினைக்கிறேன். குறைந்தது மூன்று பேருந்துகள் ஒரே நேரத்தில் பக்கத்துக்கு பக்கத்தில் செல்லலாம். எதிர் பக்கமும் அதே போல் மூன்று பேருந்துகள் வரலாம். (அதானே Six way lane என்கிறீர்களா? சரிங்க சாமி!!) நடுவில் முழக்க அழகான செடிகள்.. பச்சை வண்ணம் நெஞ்சை அள்ளுகிறது. சிக்னல் தவிர மற்ற இடங்களில் நிற்கும் அல்லது ஸ்பீட் குறையும் அவசியம் இல்லை. இந்தியாவின் மிக சிறந்த IT கம்பனிகள் அனைத்தும் இந்த ரோட்டில் அலுவலகம் வைத்துள்ளது. Infosys, TCS, Cognizant.. You name it, we have it. சென்னையின் முகவரியாக OMR சாலை இருக்க போகிறது !! இந்த பக்கத்தில் காலி மனை ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் போய் விட்டது. இதற்கு முன் இந்த இடங்களை வைத்திருந்தவர்களில் பலர் விவசாயம் செய்தவர்கள்.. இன்றைக்கு கோடீஸ்வரர்கள் ஆகி அவ்வளவு பணம் என்ன செய்வது என்று குழம்பி, வேறு எங்கோ செட்டில் ஆகி விட்டனர் என்கிறார் என் நண்பர் ஒருவர் .!!.

இந்த வார சட்ட சொல்: Compoundable offence

சில குற்றங்கள் பெரிய அளவில் தீவிர தன்மை இல்லாத போது, தவறு செய்தவர் அதனை ஒப்பு கொண்டு பெனால்டி மட்டும் பணமாக கட்டி விட்டு வழக்கிலிருந்து விடு படலாம். இந்த வகை குற்றங்கள் Compoundable offence என அழைக்க படுகின்றன. நிறுவனம் செய்யும் தவறுகளுக்கு அதன் இயக்குனர்கள் அல்லது Company Secretary (என்னை போன்ற ஆட்கள்) மீது பொதுவாக வழக்கு தொடரப்படும். ஆயினும் இவற்றில் பெரும்பாலானவை Compoundable offence என்பது சற்றே ஆறுதலான விஷயம்!!

மனதை வருத்திய விஷயம்

கம்யுனிஸ்ட் தலைவர் திரு வரதராஜன் அவர்கள் மரணம் பல அதிர்ச்சி அலைகளையும் கேள்விகளையும் எழுப்பி செல்கிறது. இவர் பற்றி பதிவுலகிலும் பலர் எழுதி இருந்தனர். குறிப்பாய் மாதவராஜ் மற்றும் உண்மை தமிழன் ஆகியோரின் இடுகைகள் மிக உணர்ச்சி கரமாய் இவருடன் நேரில் பழகிய அனுபவங்களை பகிரும் வண்ணம் இருந்தன. திரு வரதராஜன் போன்ற highly matured person ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் என்பது மனதை உறுத்துகிறது. இந்த சம்பவத்தில் திரு வரதராஜன், அவர் குடும்பத்தினர், கம்யுனிஸ்ட் கட்சி என அனைவர் மீதும் கோபமும் வருகிறது. பரிதாபமாகவும் உள்ளது. எனக்கு கம்யுனிச சித்தாந்தத்தில் பெரும் ஈடு பாடு இல்லா விட்டாலும், கம்யுனிஸ்ட் தலைவர்கள் பலர் வாழும் எளிமையான வாழ்க்கை ஆச்சரியம் தரும் விதத்தில் இருக்கும். திரு வரதராஜன் ஒரு மிக சிறந்த மனிதராகவும் எளிமையான தலைவராகவும் இருந்திருக்கிறார். ஆழ்ந்த இரங்கல்களும், வருத்தங்களும்..

இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வேர்ல்ட் கப் ஆட்டங்கள்

அடுத்த மாதம் துவங்கும் IPL-ஐ நாம் சப்போர்ட் செய்வது இருக்கட்டும்; இன்னும் சில நாட்களில் இந்தியாவில் துவங்கும் ஹாக்கி World cup -ஐயும் ஆதரிப்போம். இது நடக்க போவதே டிவியில் சேவாக் மற்றும் பிரியங்கா சோப்ரா விளம்பரத்தில் வந்து சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டு உள்ளது.. ம்ம்...

அய்யா சாமி

பெட்ரோல் பங்கில் காத்து அடிச்சிருக்கீங்களா நீங்க? இதென்ன கேள்வி? யார்தான் அடிக்காம இருப்பா? பொதுவா டூ வீலரில் ரெண்டு பேருக்கு ஒரே நேரத்தில காத்து அடிப்பாங்க. இதில் ரெண்டாவது ஆள் ஓசி காஜ் மாதிரி முதல் ஆளோட சேர்ந்து சீக்கிரம் அடிச்சிட்டு போய்டுவார். நம்ம அய்யா சாமிக்கு எப்பவும் இந்த முதல் ஆளா தான் வாய்க்குது.. லேட் ஆகுது !!

இதில் ரெண்டாவது ஆள் வண்டியில் சில நேரம் சரியா காத்து வேற ஏறாம சதி பண்ணும். அய்யா சாமிக்கு இன்னும் லேட் ஆகும். என்னிக்குமே அவருக்கு இந்த ரெண்டாவது ஓசி காஜ் ஆளா இருக்க சான்ஸ் கிடைப்பதே இல்லை..

18 comments:

 1. Anonymous7:40:00 AM

  சச்சின் தி க்ரேட்.

  ReplyDelete
 2. சச்சின் கிரிக்கெட் கடவுள்...

  ReplyDelete
 3. இதே பிப்ரவரி 24 அன்று ("ஜெ" அம்மா பொறந்த நாளுப்பா இது!!) 22 ஆண்டுகளுக்கு முன் சச்சின் - காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் எடுத்து உலக சாதனை செய்தது!! இதன் மூலம் தான் சச்சின் முதலில் limelight-க்கு வந்தார்!! அதே பிப்ரவரி 24 இந்த உலக சாதனையும்!!


  ............Feb.24th - interesting coincidence!

  ReplyDelete
 4. //ஒரு நாள் கிரிக்கட்டில் ஒரு நாள் இருநூறு ரன் எடுப்பார் என்ற இமாலய எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் சச்சின்!! //
  எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று நிறைவேற்றினார் காட் ஆஃப் கிரிக்கெட்.

  //ஒரு quality opposition டீமுக்கு எதிரே இந்த சாதனை நிகழ்த்த பட்டுள்ளது. //
  அது

  //இதே பிப்ரவரி 24 அன்று ("ஜெ" அம்மா பொறந்த நாளுப்பா இது!!) 22 ஆண்டுகளுக்கு முன் சச்சின் - காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் எடுத்து உலக சாதனை செய்தது!! இதன் மூலம் தான் சச்சின் முதலில் limelight-க்கு வந்தார்!! அதே பிப்ரவரி 24 இந்த உலக சாதனையும்!! //

  :-)

  //இந்தியன் என்றும் சச்சினின் fan என்றும் சொல்லி கொள்ள பெருமை படும் நிகழ்வு இது !!
  //

  ரிப்பீட்டேய்

  //இது நடக்க போவதே டிவியில் சேவாக் மற்றும் பிரியங்கா சோப்ரா விளம்பரத்தில் வந்து சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டு உள்ளது.. ம்ம்...//

  :(

  ReplyDelete
 5. //147 பந்துகளில் சச்சினின் 200 ரன்கள்//

  இத கேட்டிங்களா, ஷேன்வார்னே ”நல்ல வேளை நான் பவுலிங் போடலை” அப்படின்னிட்டு சந்தோஷபட்டுருக்கார் நேத்து.

  ReplyDelete
 6. அய்யா சாமி... ஆகட்டும் சாமி

  ReplyDelete
 7. //சென்னையின் OMR ரோட்டில் சமீபத்தில் பயணித்தீர்களா ? வாவ்!! அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்!! //

  அதே ரோட்டில் பைக்கில், பின்னாடி ஒரு பிகரை வைத்து பயணித்தது உண்டா? அதைவிட இனிமையா இருக்கும்.
  :)

  ReplyDelete
 8. /**We are only responsible for our sufferings and ill feelings – Tagore//

  பூங்குன்றனார் சொன்ன, “தீதும் நன்றும் பிறர் தர வாரா” - அதானே?

  பெண்கள் கிரிக்கெட் சாதனை தகவல் - நன்றி.

  ReplyDelete
 9. நேற்றைய சச்சின் ஆட்டத்தை டிவியில் பார்க்கக் கொடுத்து வைக்கல.. (ஆபீஸ்'ல நெறைய ஆணி..)
  இருந்தாலும் அப்பப்போ லைவ் ஸ்கோர் போர்டு பார்த்து சந்தோஷப் பட்டேன்..

  தாகூர் ஒன்னு சொன்னாலும் சும்மா நச்'சுனு சொல்லியிருக்கார்..

  OMR ரோடு மெய்யாலுமே சூப்பர் தான்...

  அய்யாசாமி'க்கு மட்டும் அப்படி ஆவறதில்லீங்க :)

  ReplyDelete
 10. 200லாம் அடிக்க‌ணும்னா சேவாக்கால‌தான் முடியும்னு எல்லோரும் (நான் உட்ப‌ட‌) சொல்லிட்டிருக்க‌, ஏன் என்னால‌ முடியாதான்னு ஒரு ஆட்ட‌ம் ஆடுனாரே சச்சின்! ப்ச்...ப்ராட்மேன் இருந்து பாத்துருக்க‌ணும்:(

  வ‌ர‌த‌ராஜ‌ன் ‍ என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌:(

  ஹாக்கி இன்னும் இந்த‌ விள‌ம்ப‌ர‌ம் பாக்க‌ல‌, சேவாகை விடுங்க‌, ந‌ம்ம‌ க்காக‌ ஒரு த‌ட‌வை பாக்க‌ணும்:)

  இவ்வ‌ள‌வு பிர‌ச்னைக‌ளையும் ஹாயா தாங்க‌ற‌துனால‌ நீங்க‌ அவ‌ர‌ ஹாய்யாசாமின்னே சொல்ல‌லாம் போல‌:)

  ReplyDelete
 11. sachin - sachin ..
  tok
  tok
  tok...:))

  ---
  அதே ரோட்டில் பைக்கில், பின்னாடி ஒரு பிகரை வைத்து பயணித்தது உண்டா? அதைவிட இனிமையா இருக்கும்.//

  கீழ விழுந்ததுண்டா சாமி..:)

  ----

  வானவில் -colour FULLLLLLLL

  ReplyDelete
 12. //இதற்கு முன் இந்த இடங்களை வைத்திருந்தவர்களில் பலர் விவசாயம் செய்தவர்கள்.. இன்றைக்கு கோடீஸ்வரர்கள் ஆகி அவ்வளவு பணம் என்ன செய்வது என்று குழம்பி, வேறு எங்கோ செட்டில் ஆகி விட்டனர் என்கிறார் என் நண்பர் ஒருவர் .!!.//

  எனக்கு தெரிந்து அவர்களில் பெரும்பாலும் வேறு எங்கும் சென்று விடவில்லை. சிறுசேரி "சிப்காட் IT பார்க்" பின்புறம் உள்ள சிறுசேரி கிராமத்தில்(?) பிரமாண்ட பங்களா டைப் வீடுகள் கட்டி முன்னே குறைந்தது ஒரு மெகா சைஸ் வாகனம் நிறுத்தப் பட்டிருந்தால் அது சிப்காட் IT Park -க்கு நிலம் கொடுத்த ஒருவரின் வீடாக இருக்கும். நீங்கள் நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று பாருங்கள். கிராம சூழ்நிலையில் பெரும் பங்களாக்கள். வித்தியாசமான ஒரு சூழ்நிலையை காண்பீர்கள்.

  //சென்னையின் OMR ரோட்டில் சமீபத்தில் பயணித்தீர்களா ? வாவ்!! அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்!!//

  பெருமையான அனுபவம் கூட.

  //எனக்கு கம்யுனிச சித்தாந்தத்தில் பெரும் ஈடு பாடு இல்லா விட்டாலும், //

  தஞ்சை மாவட்டத்தில், அதுவும் நீடாமங்கலத்தில்(கம்யுனிச கோட்டை) பிறந்தவருக்கு இது நிறைய இருக்கும் என எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
 13. ம், சச்சின் இஸ் கிரேட்.

  ஓ, அப்போ ட்ரெய்ன்ல செய்ன் பிடிச்சு இழுக்குறதெல்லாம் Compoundable Offence தானா மோகன்?

  ம், நான் அவசியம் ஹாக்கிப் போட்டிகள் பார்ப்பேன். I love hockey too. :)

  உண்மையை சொல்லுங்க, நீங்க தான் அந்த அய்யா சாமியா... ;)

  ReplyDelete
 14. சின்ன அம்மணி, புலிகேசி, சித்ரா நன்றிகள் பல
  **********
  வரதராஜலு சார்: நீங்க இந்த இன்னிங்க்ஸ் நல்ல என்ஜாய் செஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்..
  ********
  எறும்பு: ஷங்கர் சொன்னதை கேட்டீங்களா? :))
  *********
  ஹுசைனம்மா.. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” - சரியா சொன்னீங்க. அருமையான வாசகம் அது
  *********

  ReplyDelete
 15. மணி நன்றி நானும் பின்னர் தான் டிவியில் பார்த்தேன். நீங்களும் ஐயா சாமி மாதிரியா? சொல்லிடுறேன் அவர் கிட்டே
  *********
  ரகு "ஹாயா சாமி" ஹா ஹா ..
  *********
  ஷங்கர் வானவில் பற்றி நீங்கள் சொன்னது மிக ரசித்தேன்;
  *********
  ஆதி மனிதன்: OMR ரோட்டில் இருந்தவர்கள் பற்றிய தகவல் மிக சுவாரஸ்யம். நீடாவை பற்றி நீங்கள் அறிந்துள்ளது ஆச்சரியம் ஆக உள்ளது!! அது கம்யுனிச கோட்டை எல்லாம் இல்லை. தி. மு. க, அ. தி. மு.க ரெண்டும் சமமா உள்ள ஊர். கமுநிஸ்டுகள் கணிசமாக உண்டு
  *********
  விக்கி நன்றி. உங்கள் கேள்விக்கு பதில் சபையில் சொல்ல முடியாது :))

  ReplyDelete
 16. வாழ்த்துகள் சச்சின்:)

  ReplyDelete
 17. //வரதராஜலு சார்: நீங்க இந்த இன்னிங்க்ஸ் நல்ல என்ஜாய் செஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்.. //

  பின்ன, செம ட்ரீட்டு இல்ல

  ReplyDelete
 18. நல்ல கருத்து... பகிர்ந்தமைக்கு நன்றி..

  Tamil Boy baby Names

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...