மாற்றி குடுத்த ரூம் ஹோட்டல் வெளியே
கூர்க் என்ற சின்ன ஊரில் இவர்கள் வாங்கும் ரூம் வாடகையே அதிகம். இதில் செக் அவுட் 12 மணிக்கு; அதுக்கு மேல் கொஞ்சம் லேட் என்றாலும் முழு நாள் வாடகை தரனும் என்ற ரீதியில் பேசினார்கள். சாப்பாடும் சரியில்லை. மறு நாள் வேறு ரூம் மாத்திட வேண்டியது தான் என முடிவு செய்தேன்.
கூர்கில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் - காலை மற்றும் மாலை செம கூலாக உள்ளது. பகலில் வெயில் சற்று சுள்ளுன்னு தான் அடிக்கிறது. மைசூர் மற்றும் கூர்க் செல்ல செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தான் சிறந்தவையாம்.
மறு நாள் காலை ராஜாஸ் சீட் என்ற பார்க் சென்றோம். அந்த காலத்தில் ராஜா இங்கிருந்து அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பாராம். இப்போதும் மாலை வேளை தான் சூரிய அஸ்தமனம் பார்க்க பலர் இங்கு வருகின்றனர். ஆனால் நாங்கள் சென்ற போது, பனி (Mist) மாலையில் இருப்பதால் sunset பார்க்க முடியாது என்றனர். எனவே நாங்கள் பகலில் சென்றோம்.
ராஜாஸ் சீட் .. வியு ..
நிறைய மலர்கள்; நல்ல வியு பாயிண்ட்.. மேலும் ஒரு Toy train-ம் உள்ளது. கூர்கில் நிச்சயம் (மாலை நேரத்தில்) செல்ல வேண்டிய இடம் இது.
மதியம் அபே நீர் வீழ்ச்சி சென்றோம். கோடை என்பதால் தண்ணீர் அதிகம் கொட்டலை. அபே falls-ல் எப்போதுமே யாரையும் குளிக்க அனுமதிப்பதில்லை. தூரத்திலிருந்து அதன் அழகை மட்டும் பார்க்கலாம். அவ்ளோ தான்.
அங்குள்ள தொங்கு பாலத்தில் நடப்பது ஒரு ஜாலியான அனுபவமாக உள்ளது. அபே falls செல்ல முக்கிய காரணம் வழியில் நிறைய காபி தோட்டங்கள் இருக்கும் என்றனர். மூனார் சென்ற போது பார்த்த தேயிலை தோட்டம் போல் அழகாய் இருக்கும் என ஆசையாய் இருந்தேன். ஆனால் காபி இலைகள் சிறிய அளவில் உள்ளன. தேயிலை தோட்டங்கள் போல் பார்க்க பச்சை பசேலென இல்லை. இது ஏமாற்றமே.
கூர்கில் ஸ்பெஷல் அங்கு கிடைக்கும் தேன் மற்றும் காப்பி பௌடர். இவை வாங்கினோம். தேன் விற்க அரசு நடத்தும் சொசைட்டி உள்ளது, இங்கு வாங்குவது நல்லது. கணேஷ் காப்பி என்ற இடத்தில் காப்பி நன்கு உள்ளது, கண் முன் அரைத்து தருகின்றனர்.
கூர்க் அருகில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் : தலை காவிரி.இங்கிருந்து தான் காவிரி உருவாவதால் புனித இடம் என பலர் தேடி போய் வழிபட்டு வருகின்றனர். நமக்கு அப்படி சென்டிமன்ட் இல்லை. எனவே போகலை.
கூர்கிளிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஷால் நகரில் தான் பார்க்க மூன்று இடங்கள் உள்ளதால் மறு நாள் ரூம் காலி செய்து விட்டு குஷால் நகர் பயணமானோம். அங்கு கன்னிகா International என்ற ஹோட்டல் நன்றாயிருக்கும் என்றனர். உண்மை தான் 800 ருபாய் வாடகையில் டபிள் பெட் ரூம் நன்றாக உள்ளது, பேருந்து நிலையத்திலிருந்து ஒரு நிமிடம் நடந்தால் போதும். இங்கு ஒரே பிரச்சனை Restaurant -உடன் பாரும் சேர்ந்து உள்ளது. எனவே குடும்பத்துடன் Restaurant சென்று சாப்பிட முடியாது. ஒன்று ரூமுக்கு ஆர்டர் செய்து சாப்பிடனும். அல்லது வெளியே போய் சாப்பிடனும்.
அன்று இரவே குஷால் நகரில் உள்ள திபத் கோல்டன் டெம்பில் சென்று பார்த்தோம். ஆட்டோவிலேயே சென்று வரும் தூரம் தான். கோயில் ரொம்ப அழகாக உள்ளது. இங்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.
நூற்றுக்கணக்கான திபத்தியர்கள் இங்கு தங்கி புத்தம் பயில்கின்றனர். இவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லையாம்!! புத்தர் சிலை அருகே இரு புறமும் புத்தருக்கு பின் புத்த மதத்தை பரப்பிய இருவர் சிலைகள்..
மறு நாள் காலை துபாரே பாரஸ்ட் சென்றோம். இங்கு காட்டில் உள்ள யானைகள் தினம், காலை ஆற்றுக்கு அருகே கூட்டி வர படுகின்றன.
அங்கு அவை குளிப்பாட்டபட்டு, சாப்பாடும் தருகிறார்கள். நாமும் கூட அவற்றை குளிப்பாட்டலாம். காலை 9 முதல் 10 .30 வரை தினமும் இது நடப்பதால் இந்த நேரத்தில் சென்றால் தான் இந்த இடம் பார்க்கணும். இல்லையேல் waste.
குளிபாட்டுகிறார்கள் சாப்பாட்டுக்கு காத்திருக்கு...
துபாரே பாரஸ்ட்டில் யானைகளை குளிப்பாட்டி, அவை சாப்பிடுவது பார்த்து ரொம்ப என்ஜாய் செய்தோம். மைசூர் மற்றும் கூர்க் பெண்கள் பொதுவாகவே ரொம்ப அழகு!!
பின் அருகிலுள்ள நிசர்கதாமா என்ற இடம் சென்றோம். இதுவும் ஒரு காடு போன்ற இடம் தான். மூங்கில் காடுகள், நடுவே ஒரு ஆறு, ஆற்றில் தற்போது குறைவாக தண்ணீர் ஓடுகிறது. இருந்தும் நான் குளித்தேன்.
இவர் குளிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாரே குளிச்சிக்கிடே இருப்பாரே
குஷால் நகர், கூர்கிற்கும் மைசூருக்கும் இடையே உள்ளது. மைசூர் டு கூர்க் நிறைய பேருந்துகள் உள்ளன. மைசூர் முதல் குஷால் நகர் வரை ரோடு அருமை. ஆனால் அதன் பின் கூர்க் செல்லும் ரோடு கொடுமை. ஏறும் போதும் இறங்கும் போதும் நாங்கள் வாமிட் செய்து விட்டோம். இது தான் ஒரே குறை.
அன்று இரவு மைசூர் வந்து ரயில் ஏறினோம். திரும்பும் போது III AC என்பதால் இந்த முறை எந்த பிரச்னையும் இல்லை. IPL பைனல் நடக்கும் போது டிரைனில் இருந்தோம். சென்னை வந்து இறங்கியதும் கண்ணில் பட்டது " சென்னை சூப்பர் கிங்க்ஸ் பைனல் வென்றது" ..ஊர் திரும்பிய வருத்தத்தை இந்த செய்தி மறக்கடித்து. மீண்டும் இயந்திரமாக தயாரானோம்.