*******************************************
முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உள்ளது. தற்போதுள்ள நிலையில் இருந்து இன்னும் மேலே செல்ல ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். தன் முன்னேற்றம் குறித்தான சிந்தனைகள் சிறு பொறியாக தன் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ கிடைத்தால் எடுத்து கொள்ள பலரும் தயாராக உள்ளனர்.
இந்த தொடரை வாசித்து பாருங்கள். நீங்கள் சுய முன்னேற்ற நூலே வாசிக்க பிடிக்காதவர் எனினும், இதில் உள்ள அடிப்படை உண்மை உங்களைக் கவரக்கூடும்.
முதலில் சில disclaimers சொல்லி விடுகிறேன்:
நான் வாசித்த பிற புத்தகங்களில் இருந்து சில எண்ணங்கள் எதிரொலிக்கலாம். ஆனால் எந்த புத்தகத்தையும் பக்கத்தில் வைத்துக் கொண்டோ, முதல் நாள் வாசித்து விட்டோ எழுத போவதில்லை. எப்போதோ படித்து, யார் சொன்னது என்று கூட மறந்து போய் சொன்ன கருத்து மட்டும் உள்ளே தங்கி, பின் அது என் அனுபவமாக, கருத்தாக வெளி வரலாம்.
நிச்சயம் என் மனதில், அனுபவத்தில் உணர்ந்தவை தான் எழுத போகிறேன். நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. ஆனால் ஒரு காலத்தில் எந்த பக்கம் செல்வது என்று குழம்பி, வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்வது என்று புரியாமல், பல்வேறு மன குழப்பங்களுக்கு ஆட்பட்டு வெளி வந்திருக்கிறேன். நான் அன்று இருந்த நிலையிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால், மிக அதிக குழப்பங்கள் இடையே ஒரு சுத்த useless person-ஆக இருந்தவன், இன்று நான்கு பேர் மதிக்கும் அளவு வந்துள்ளது புரிகிறது. எவ்வளவு தவறுகள், முட்டாள் தனங்கள் செய்துள்ளேன். இவ்வளவும் செய்து விட்டு இன்று மீண்டு வர என்னால் முடியும் போது, அது எல்லாருக்கும் முடியும் என்பதால் தான் இந்த தொடர் எழுத எண்ணுகிறேன். இது எனது சுய சரிதையாகவோ, சுய தம்பட்டம் பேசும் தொடராக இல்லாதிருக்க முடிந்த வரை முயல்கிறேன்.
"வாங்க.. முன்னேறி பாக்கலாம்" என்ற தலைப்பு, " வாங்க.. பழகி பாக்கலாம்" ரீதியில் வைத்துள்ளேன். தலைப்பு மாறினாலும் மாறலாம் :))
ஆங்கிலத்தில் "Small matter matters much " என்பார்கள். அது போல நான் பேச போவது பல சின்ன சின்ன விஷயங்களே. அவற்றில் சில உங்களுக்கு உதவலாம்.
முன்னேற்றம் என்கிற போது பல ஏற்ற இறக்கங்கள் (ups and downs) இருக்கவே செய்யும். சில குணங்கள் நம்மை மேலே கொண்டு செல்லும். சில நம்மை பரம பதம் போல் கீழிறக்கும். இப்படி ரெண்டு விதமான குணங்களையும் இந்த தொடரில் மாறி மாறி பார்க்க உள்ளோம்.
*******
ஒரு வீடு கட்டுவது முதலில் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? பில்டர் முடிவு செய்வதிலா, கல் சிமென்ட் வாங்குவதிலா, CMDA போன்ற நிறுவனத்திடம் வரைபட அனுமதி (Plan approval) வாங்கும் போதா? இவை எதுவும் இல்லை ! ஒரு வீடு முதலில் அந்த குடும்பத்தலைவன் அல்லது தலைவி மனதில் கட்டப்படுகிறது. முதலில் நமக்கென வீடு வேண்டும் என்ற எண்ணம். அது தான் விதை. முதலில் ஆசையாக இருந்து பின் இலக்காக மாறுகிறது. ஒரு காலிமனை அல்லது ப்ளாட் (flat) பார்க்க ஆரம்பிக்கின்றனர், அது முடிவாகிறது; அப்புறம் பேங்க் லோனில் ஆரம்பித்து க்ரஹபிரவேசம் வரை தொடர் ஓட்டம். கடைசியில் தனக்கென வீடு என்ற கனவு நனவாகிறது.
இது வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, நீங்கள் அடைய விரும்பும் எந்த விஷயத்துக்கும் பொருந்தும்.
எதற்குமே துவக்கம் அதனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான். எந்த செயலும் இரு முறை செய்யபடுகிறது; முதலில் மனதில், பின்பு தான் அதே செயல் நிஜமாய் நடக்கிறது. (Everything is created twice; first in the minds of individual and then it actually happens).
தனக்கு என்ன தேவை என்பதை தன்னை தவிர யாரால் சொல்ல முடியும்? துரதிஷ்ட வசமாக நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதே தெரிய வில்லை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று தீவிரமாக யோசிப்பதும், அது குறித்து தெளிவான, தீர்க்கமான முடிவெடுப்பதும் இல்லை.
நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால் 9 out of 10 times அதனை அடையலாம். அதனை அடையும் வழியில் எத்தனையோ பிரச்சனைகள், தடைகள் வரலாம். ஆனால் நாம் உறுதியாய், பொறுமையாய் இருந்தால் நமக்கு தேவையானதை அடைய முடியும்.
வீடு கட்டும் உதாரணத்தையே எடுத்து பாருங்கள். கட்டி முடிப்பதற்குள் எத்தனை தடை வந்திருக்கும்? தேவையான நேரத்தில் பணம் கிடைக்காது; பிளான் மாறும் குழப்பங்கள்; கட்டும் போது அடுத்து பில்டிங் காரர் ஏதாவது தகராறு செய்வார்.. இப்படி எத்தனையோ.. அனைத்தையும் தாண்டி அந்த வீடு கட்டி முடிக்கபடுகிறது.
அதே போல் தான் ஒரு தேர்வாகட்டும்; நீங்கள் அடைய எண்ணும் எந்த விஷயமாகட்டும் எத்தனையோ தடை வந்தாலும் நீங்கள் உறுதியாய் இருந்தால் அந்த இலக்கை அடையலாம்.
“9 out of 10 times அடையலாம்” என்று ஏன் சொன்னேன் தெரியுமா? நமது எல்லா விருப்பங்களும் நியாயமாக இருக்கும் என சொல்ல முடியாது; பருவ வயதில் ஒருவன் ஒரு பெண்ணின் அன்பை, காதலைப் பெறுவதே தன் லட்சியம் என நினைக்கிறான்; அந்த பெண்ணுக்கு பல காரணங்களால் இவனை பிடிக்காமல் போகலாம். அவள் வேறு யாரையும் நேசிக்கலாம். அப்படியும் அவளை அடைவதே என் லட்சியம் என சொன்னால், அது நிச்சயம் நடக்கும் என எப்படி சொல்ல முடியும்? இலக்கு நியாயமானது எனில் அது நடக்கும். நாம் பேசுவது: ஒருவரை கொல்வது, குறுகிய நாளில் பணக்காரன் ஆவது போன்றவை பற்றி அல்ல.
*********
உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டால், அது நீங்கள் சென்று சேர வேண்டிய இடம் (destination) போல fix ஆகி விடுகிறது. அடுத்து அதனை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள். சேர வேண்டிய இடத்துக்கு எப்படியும் போகலாம்.. பேருந்தில், ரயிலில், ஆட்டோவில், அல்லது இவை அனைத்தையும் உபயோகித்து போகலாம். வழியில் சில நேரம் வண்டி பிரேக் டவுன் ஆகும்; தாமதமாகும், ஆனாலும் நீங்கள் அந்த இடத்தை சென்று அடைவீர்கள்! அதே போல் உங்கள் இலக்கு முடிவான பின், சில போராட்டங்கள் இருந்தாலும் நீங்கள் அதனை அடைவதும் நிச்சயமாகிறது.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது எங்கே போகிறோம் என்பது தெரியும் தானே. அதே போல் தான் வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்று அடைய வேண்டும் என்பதும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த பதிவு படித்த அரை மணியிலோ, அடுத்த நாளோ நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதில்லை. இத்தகைய பெரிய முடிவுகள் உங்கள் உள்ளே ரொம்ப நாளாக இருக்க கூடியவை. உள்ளுக்குள் பெரும் அலசல், கேள்விகளுக்கு பிறகே, உங்கள் "ஆசை", உங்கள் " இலக்கு " ஆக மாறும்.
ஏற்கனவே உங்கள் இலக்கை நிர்ணயம் செய்து விட்டாலோ, விரைவில் முடிவு செய்தாலோ நீங்கள் முன்னேற்ற படியில் முதல் சில அடிகள் ஏற ஆரம்பித்து விட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்த்துக்கள்
... (முன்னேறுவோம் )
அப்படியே கவிதையும் எழுதிட்டீங்கன்னா எல்லா ஏரியாவையும் டச் பண்ணிட்ட மாதிரி இருக்கும்
ReplyDelete:)
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் மோகன். தொடருங்கள்.
ReplyDeleteநல்லதொரு தொடக்கம். நன்றாக வந்துள்ளது இந்த பதிவு. தொடருங்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
@ அப்துல்லா
ReplyDeleteமோகன் கவிதை எழுதியிருக்கார். பழைய பதிவுகள பாருங்க :)
பதிவுலகம் இருக்கிற சூட்டுல...
ReplyDeleteமாறுதலான,ஆறுதலான தொடர்.
தொடருங்கள் மோகன்...
//பதிவுலகம் இருக்கிற சூட்டு//
ReplyDeleteஎன்ன ஆச்சு சார்? நான் கவனிக்கலையே!!!
சகா,
நானும் வறேன்..
இனிமே என்னத்த முன்னெறி...நல்லாதான் இருக்கு ஒரு பத்து வருடம் முன்னாடி இதை படிச்சிருக்கணும் நான்
ReplyDeleteஅப்துல்லா; பல விஷயம் எழுதுறேங்குறீங்க. மகிழ்ச்சி. ஆனா நான் கவிதை எழுதுறதை நீங்க கவனிக்கவே இல்லையே? இல்லாட்டி அதெல்லாம் கவிதை இல்லைன்குரீன்களா?? :))
ReplyDelete**
நன்றி ராம லக்ஷ்மி
**
நன்றி வெங்கட். மகிழ்ச்சி
**
ஆஹா அப்படி சொல்லுங்க சின்ன அம்மணி
**
ராஜாராம்; கார்க்கி சரியா கேக்குறார் பாருங்க; நன்றியும் மகிழ்ச்சியும் ராஜாராம்
**
சகா: ரைட்டு
**
அமுதா மேடம்: நன்றி! ஏன் அப்படி சொல்றீங்க. எப்ப நினைச்சாலும் சாதிக்கலாம்ங்க
அருமையான தொடக்கம். தொடருங்கள்
ReplyDelete:)
அருமையான துவக்கம்.
ReplyDeleteசிறு பொறிகளை தவற விட்டு, எங்கோ யாரோ பெரிதாக்கி, கொழுந்து விட்டு எரிய வைப்பதை வேடிக்கைப் பார்த்து, நமுத்துப்போயிருக்கும் யாருக்காவது உன்னிலும் உண்டு அந்தத் தீ என்று உணரச்செய்வதாய் இருக்கட்டும் உங்கள் தொடர்!!
வாழ்த்துகள்.
தொடருங்கள். :)
ஆரம்பமே அற்புதமா இருக்கு. தொடருங்க.
ReplyDeleteரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)
மோகன் சார்.....
ReplyDeleteமுன்னேற்த்தைப் பற்றிய அழகான பதிவு...
கலக்கலான ஆரம்பம்..! தொடருங்கள்!
ReplyDelete-
DREAMEr
எனக்கு இப்போ ரொம்ப அவசியமான டானிக் இந்த தொடர்!
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்!
உங்கள் இடுகையைப் படித்ததும் சின்ன வயதில் படித்த அப்துற் றஹீம் ஞாபகத்திற்கு வருகிறார். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது எங்கே போகிறோம் என்பது தெரியும் தானே. அதே போல் தான் வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்று அடைய வேண்டும் என்பதும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ReplyDelete...... பலருக்கும் பயன் தரும் பதிவு. அருமையாக எழுதி இருக்கீங்க.
தொடருங்கள்
ReplyDeleteதொடர் ஆதரவுக்கு நன்றி கண்ணா
ReplyDelete****
ஷங்கர்: நன்றி. தொடர்கிறேன்
***
ராகவன் சார் மகிழ்ச்சி நன்றி
***
வாங்க சங்கவி.. நன்றி
***
நன்றி Dreamer; தொடர்கிறேன்
***
NRCP: ஆஹா இதுவல்லவோ ஊக்கம் தருது; உங்களை போன்றோருக்காக நன்றி நிச்சயம் தொடர்கிறேன்
***
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி: சார் புல்லரிக்க வைக்கிறீங்க நன்றி சார்
***
ஜனா சார்: மிக்க நன்றி
****
நன்றி சித்ரா
****
நன்றி ராதாக்ருஷ்ணன்
***
அன்பிற்கு நன்றி நண்பர்களே .. வெளியூரில் உள்ளதால் தொடர்ந்து மெயில் பார்க்க, பதில் தர முடியலை; உங்கள் அன்பில் மகிழ்கிறேன்.
நான் பெரும்பாலும் சுய முன்னேற்ற புத்தகங்களை விரும்பி படிப்பதில்லை. ஆனால் நீங்கள் இப்பதிவை ஆரம்பித்த விதமே இத்தொடரின் மேல் எனக்கு ஒர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. உங்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் :)
ReplyDeleteதலைவர் கவுண்டமணி ஸ்டைலில் சொல்வதானால் "அய்ய்யோ ஆரம்பமே அசத்தலா இருக்கே"....;)
//முன்னேற்றம் என்கிற போது பல ups & downs இருக்கவே செய்யும். சில குணங்கள் நம்மை மேலே கொண்டு செல்லும். சில நம்மை பரம பதம் போல் கீழிறக்கும்.//
ReplyDeleteஉண்மைதான் சார்.
ஒரு குறிப்பிட்ட கிழமையில் மட்டும் இந்த தொடரை வெளியிட்டால், எப்போதாவது கணினி பக்கம் வரும் எனக்கு, சுடசுட படித்து பின்னூட்டமிட வசதியாக இருக்கும்.
//நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. //
யார் சொன்னது?
உயர்ந்தநிலை என்பது இங்கு பணம் மட்டுமாக இருந்தால், அதில் நான் மாறுபடுகிறேன்.
உயர்ந்த நிலை என்பது பணத்தை வைத்துமட்டும் பார்ப்பதாக நான் கருதவில்லை.
நாம் வைத்திருக்கும் ஒரு பொருள் அடுத்தவர் வீட்டில் இருந்தாலோ, நமது பிள்ளையைவிட அடுத்த வீட்டுப்பிள்ளை கூடுதல் மதிப்பெண் பெற்றாலோ, நம்மால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. நாம் வேலைபார்க்கும் கம்பெனியில் பக்கத்து வீட்டுப் பையன், வேலையில்
சேர்வதைகூட நம்மால் ரசிக்க முடிவதில்லை.
இந்தமாதிரி சூழ்நிலையில்,
நான் கிழே விழுந்தேன் நீ விழாதே, இது நான் வந்த பாதுகாப்பான வழி நீயும் செல், இதை சொல்வதற்கு யார்யாருக்கு மனது இருக்கிறதோ, அவர்களெல்லாம் உயர்ந்தவர்களே!
\\ஆனாலும் நீங்கள் அந்த இடத்தை சென்று அடைவீர்கள்! அதே போல் உங்கள் இலக்கு முடிவான பின், சில போராட்டங்கள் இருந்தாலும் நீங்கள் அதனை அடைவதும் நிச்சயமாகிறது.//
ReplyDeleteஇது தான் பாஸ் என்னை இன்னும் அதிகமாக ஊக்க படுத்துகிறது.
இத்தனை பாகங்கள் போயிருக்கு நான் இப்பதாங்க பாக்கறேன்.. தோ நானும் வந்துட்டேன்.. எனக்கும் முன்னேறனும்னு ஆசையா இருக்கு... தேர்ந்த சுயமுன்னேற்ற எழுத்தாளர் போலவே எழுதியிருக்கிறீர்கள்... அதுக்கு ஒரு ஸ்பெசல் பூங்கொத்து...
ReplyDeleteA very excellent post....Really inspirational...Thank you so much for sharing ur thoughts...
ReplyDelete