Monday, April 19, 2010

100-வது பதிவு: குடும்பம் Vs வேலை Vs பதிவுலகம்

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!


*******************************************

பதிவுலகில் எழுதும், வாசிக்கும் ஒவ்வொருவரும், குடும்பம், வேலை, பதிவு - மூன்றுக்கும் நேரம் ஒதுக்குவர். நான் இவற்றுக்கு எப்படி ஒதுக்குகிறேன் என்பது குறித்தே இப்பதிவு.

வேலை

ஒவ்வொரு மனிதரும் மிக அதிக நேரம் செலவழிப்பது அலுவலகத்தில்/ வேலையில் தான். நமது முக்கிய பொழுதுகள் அலுவலகத்தில் தான் கழிகிறது. நம்மில் எத்தனை பேர் அவரவருக்கு பிடித்த வேலை பார்க்கிறோம்? எனினும் சம்பளம் பெறும் போது அதற்கான உழைப்பை அவசியம் கொடுக்க தான் வேண்டும். நமது lifestyle, வளர்ச்சி, நமது குடும்பத்தினருக்கு நாம் செய்து தரும் வசதிகள்…. எல்லாம் தருவது நாம் பார்க்கும் வேலை; இதற்கான நியாயம் அவசியம் செய்ய வேண்டும்.

எனக்கு தெரிந்து வீட்டிலிருந்து ப்ளாக் வாசிப்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து வாசிப்போர் தான் அதிகம். பலருக்கும் முழு நேரம் (எட்டு அல்லது ஒன்பது மணி நேரமும்) வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே ஓய்வு நேரத்தில் ப்ளாக் வாசிக்கின்றனர். புதிதாக பதிவு - அலுவலகத்தில் இருந்து எழுதுவது கடினம்; வீட்டில் இருந்து தான் எழுதுகின்றனர். பிற ப்ளாக் வாசிப்பதும் பின்னூட்டம் போடுவதும் மட்டும் அலுவலகத்தில் இருந்து என எண்ணுகிறேன்.. நானும் இந்த கேஸ் தான்.

எனது வேலை சற்று சென்சிடிவ் ஆனது. Contract-கள், கடிதங்கள், Minutes , Notice என drafting -ல் தான் பெரும்பாலும் கழிக்க வேண்டும். சாதாரண நாட்களில் நான்கிலிருந்து ஆறு மணி நேரம் வேலை இருக்கலாம். Board Meeting/ Annual General Meeting நேரங்களில் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் அலுவல் வேலையில் பிஸி ஆகிடுவேன்.

வேலையில் என்னுடைய approach ரொம்ப சிம்பிள். பொதுவாக எதையும் pending வைக்க மாட்டேன், மிக மிக விரைவாய் clear செய்து விடுவேன். நான் ஒரு support function என்பதால் மற்ற department -க்கு இது உதவியாய் இருக்கும். அடுத்தது எந்த முடிவும் குறிப்பிட்ட department-இடமும், பாஸ் இடமும் பேசி விட்டு தான் collective-ஆக எடுப்பேன். இதில் பலரது Point of view-ம் சேர்ந்து நல்ல முடிவாக எடுக்க முடிகிறது

முன்பே சொன்னதை போல் வேலை என்பது நமது “அன்ன தாதா”; அதற்கான மரியாதை தனி; அது என்றும் உண்டு.

குடும்பம்

குடும்பம் Vs வேலை Vs பதிவுலகம்; இதில் ஒன்று மட்டும் தேர்வு செய்ய வேண்டும் எனில் பலரும் வேலையை சொல்ல கூடும் . என்னை கேட்டால் நான் முதலில் குடும்பத்தை தான் சொல்வேன்.

ஓர் முறை அலுவலகமா வீடா என ஒரு குழப்பம் வந்த போது ஒரே நாளில் முடிவெடுத்து வேலையை ரிசைன் செய்ததும் எனக்கு நடந்தது. (பின் அவ்வாறு ஒரே நாளில் அவசரமாய் ரிசைன் செய்தது தவறு என வருந்தியது தனி கதை)

நம்ம ஹவுஸ் பாசும் வேலைக்கு போவதால், அலுவலகத்தை விடவும் எனக்கு வீட்டில் வேலை அதிகம்; ஆனாலும் கூட மனைவிக்கு சமையலில் உதவுவதிலும், குழந்தைக்கு பாடம் சொல்லி தருவதிலும் கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் ரொம்ப நிறைவாக உள்ளது.

பதிவுலகம் வந்த புதிதில் வீட்டில் இரவு, அதி காலை, விடுமுறை நாட்கள் என ப்ளாகே கதி என கிடந்ததும் உண்டு. இப்போது சற்று 'தெளிந்து' விட்டேன்.

ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலை மாறுவோம் ; எழுத்து என்பது பொழுது போக்கு; ஆனால் குடும்பம் மட்டும் என்றும் நம்மோடு உடன் வரும்; செலவிடும் நேரம், முக்கியத்துவம் எல்லாவற்றிலும் முதலிடம் சந்தேகமே இல்லாமல் குடும்பத்திற்கு தான்.

பதிவுலகம்

சுகாசினி ஜெயா டிவியில் சினிமா விமர்சனம் செய்வது போல, ஒரு பிளஸ் ஒரு மைனஸ் என ப்ளாக் பத்தி சொல்ல முயற்சி பண்றேன்….

பிளஸ்: எழுதி முடித்தவுடன் சுட சுட feedback கிடைப்பது

மைனஸ்: இதே பிளஸ், ஆரம்ப கட்டத்தில் எழுதுபவர்களை கொஞ்சம் addict ஆகிடுது; ப்ளாகே கதியா கிடப்பது பலருக்கும் ஆரம்பத்தில் நிகழ்கிறது ; இதில் இருந்து வெளியே வந்து இது ஒரு ஹாபி தான்; முழு நேர வேலை இல்லை என புரிய நேரம் ஆகிடுது.

பிளஸ்: இந்த ப்ளாக் உலகம் அறிமுகபடுத்தும் பன்முகமான (Varied people) நட்பு; அதில் பெரும்பாலானோர் நல்லவர்களாக உள்ளனர்.

மைனஸ்: எப்பவும் மனசு " போதுமான அளவு பின்னூட்டம் வரலை; Followers கொஞ்சமா இருக்காங்க" என நினைக்கிறது; ஒரு saying சொல்வது போல் " பணமும் புகழும் எவ்வளவு கிடைத்தாலும், மனிதன் இரண்டும் போதும் என திருப்தி அடைவதில்லை"

பிளஸ் & மைனஸ்: “ எதுக்கு எழுதணும்; தொடர்ந்து எழுதணுமா? எழுதி என்ன பண்ண போறோம்? இது time waste செய்ற வேலையா?” போன்ற கேள்விகள் அவ்வபோது வரும். என்னை பொறுத்த வரை வேண்டிய போது எழுதலாம்; இல்லாவிடில் சும்மா இருக்கலாம்; முழுக்க ப்ளாகே வேண்டாம் என வெளியே போக வேண்டாம் என நினைக்கிறேன்; காரணம்: இது ஒரு நல்ல outlet ; மேலும் நமது வாழ்க்கை &; சிந்தனை மாறி கொண்டே இருக்கும்; நமது சிந்தனை முன்பு எப்படி இருந்தது என நாமே பின்னர் வாசித்து பார்க்க இது உதவும்; ஒரு டைரி போல... ஒவ்வொரு ப்ளாகரின் ஒவ்வொரு பதிவும், நம்மை சுற்றியள்ள இன்றைய வாழ்க்கை முறையை அவரது பார்வையில் இருந்து பதிவு செய்கிறது..

எனக்கு எழுத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. எனது Draft folder-ல் பல ஐடியாக்கள் உள்ளன. மிக முனைப்போடு எழுதுவதில்லை; வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்ற ரீதியில் எழுதுகிறேன்; சனி, ஞாயிறு எழுதினால் கூட, பெரும்பாலும் பல காரணங்களுக்காக சனி, ஞாயிறு publish செய்வதில்லை. மேலும் ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் இடையே குறைந்தது 48 மணி நேர இடைவெளியாவது இருக்கும் படி பார்த்து கொள்கிறேன் :))

சுய முன்னேற்றம், புத்தகங்கள், கிரிகெட், ரொம்ப கொஞ்சமாய் சினிமா, டிவி, இவை பற்றிய என் எண்ணங்கள் தொடர்ந்து எழுதுவேன். குறிப்பாய் வாழ்க்கையில் முன்னேற தேவையான குணங்கள் எவை, விலக்க வேண்டிய குணங்கள் எவை என அனுபவத்திலிருந்து ஒரு தொடர் போல் எழுதலாமா என ஓர் யோசனை உள்ளது; (அந்த அளவு சாதிக்கலை என்பது வேறு விஷயம்; சுய முன்னேற்ற நூல் எழுதியவர்கள் எல்லோரும் சாதிதவர்களா என்ன?) இது எழுதலாமா அல்லது அட்வைஸ் போல் இருக்கும், பலர் ரசிக்க மாட்டார்களா என தெரியலை. உங்கள் கருத்துக்களை இது பற்றி(யும்) சொல்லுங்கள்..

***********

நூறு பதிவுகளுக்கு காரணமாய் இருக்கும் "தொடர்பவர்களுக்கும்" (Followers), பின்னூட்ட ஊக்கம் தரும் அன்பு நண்பர்களுக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி....

52 comments:

 1. முதலில் வாழ்த்துகள் சார்..

  ReplyDelete
 2. 100க்கு வாழ்த்துகள்!

  நீங்க சொன்ன ப்ளஸ் தாங்க ஊக்கமே ...

  ReplyDelete
 3. நூறுக்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவும் கூட.:)

  வானவில் - கிராமத்து பொங்கலில் ஒரு Affidavit (கிராமத்து பொங்கல் நினைவுகள் ) நான் ரொம்ப விரும்பிப் படித்த பதிவு. வாழ்த்துக்கள் மோகன். தொடர்ந்து எழுதுங்கள்.:)

  ReplyDelete
 4. வாழ்த்துகள், அருமையான அலசல்.

  ReplyDelete
 5. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்

  பதிவுலக ப்ளஸ் மைனஸாக நீங்கள் சொன்னவற்றில் பல உணர்ந்திருக்கிறேன். சில இன்னும் உணரவேண்டியிருக்கிறது

  அருமையான பகிர்வு

  ReplyDelete
 6. நன்றி சகா
  ***
  நன்றி ஜமால்; நீங்க சொல்வது சரியே
  *****
  வித்யா: நன்றி; நீங்களும் தஞ்சை/ திருச்சியில் வளர்ந்தவர் என்பதால் கிராமத்து பொங்கல் பிடித்திருக்கலாம்; அப்போது எழுதாமல் இப்போது எழுதுவது ஆச்சரியமாக உள்ளது; இவ்ளோ நாள் கழித்தும் அந்த பதிவு உங்க நினைவில் உள்ளது மகிழ்ச்சி
  ***
  நன்றி ராதா கிருஷ்ணன் சார்

  ReplyDelete
 7. தொடர்வதற்கும் பின்னூட்டதிர்க்கும் நன்றி கண்ணா

  ReplyDelete
 8. நூறுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அருமையான அலசல்.

  அனுபவத் தொடரை சீக்கிரம் ஆரம்பியுங்கள்.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு. நன்றி.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 10. இந்த பின்னூட்டம் அலுவலகத்திலிருந்து தான்.....

  ReplyDelete
 11. ப்ளாகொமேனியா

  ReplyDelete
 12. நூறுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. வாழ்த்துகள் மோகன்ஜி! இங்கே எனக்குக் கிடைத்த அருமையான நண்பர்களில் நீங்களும் ஒருவர். :))

  ReplyDelete
 14. வாழ்த்துகள்


  //இந்த ப்ளாக் உலகம் அறிமுகபடுத்தும் பன்முகமான (Varied people) நட்பு; அதில் பெரும்பாலானோர் நல்லவர்களாக உள்ளனர்//

  ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டருப்பா :)))

  ReplyDelete
 15. நன்றி ராமலக்ஷ்மி; ஆரம்பிக்கலாம்கிறீங்க ?? ம்ம்
  ****
  சூர்யா: நன்றி.. ரெண்டாவது கமெண்ட் ரசித்தேன் :))
  ****
  மணிஜி: ம்ம்ம்.. ரொம்ப நாள் ஆச்சு உங்க கிட்டே பேசி..
  ****
  நன்றி வித்யா
  ****
  ஷங்கர்: நன்றி நானும் அவ்வாறே உணர்கிறேன்
  ****
  சங்கர்: //ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டருப்பா :))) அப்படியா? சொல்லவே இல்ல?

  ReplyDelete
 16. 100 வது பதிவு நச்...
  நூறு ஆயிரமாக -வளர
  ஆயிரத்தில் ஒருவனின்
  அன்பு வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 17. பதிவர்களில் பெரும்பாலோருக்கு நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் பொருந்தும். இடுகை பயனுள்ளது என்பதுடன் சுவாரஸ்யமாகவும் இருக்கு மோகன்.

  நூறு இடுகைகளுக்கு வாழ்த்துகள். இதே போல தொடர்ந்து முன்னேறுங்கள்.

  பொதுவாக நான் சுயமுனேற்ற புத்தகங்கள் எல்லாம் படிக்க மாட்டேன். அவற்றில் அபார அவநம்பிக்கை அல்லது என் மேல் அபார சுய நம்பிக்கை :). ஆனாலும், எழுதுங்களேன். தைரியமாக ஒருவரைக் கலாய்க்கலாம்னு ஆசையா இருக்கு :)

  அனுஜன்யா

  ReplyDelete
 18. சென்சரி வாழ்த்துக்கள் குமார் தொடருங்கள்
  பதிவுலகம் = சேம் பீலிங்..

  ReplyDelete
 19. 100க்குப் பூங்கொத்து!
  ரொம்ப நல்லா விபரமா சொல்லிருக்கீங்க!தொடருங்கள்.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் அன்பரே

  ReplyDelete
 21. அனு: நன்றி கலாய்க்க தயாராகிக்குங்க :))
  *****
  நன்றி லக்கி (யுவக்ரிஷ்ணா)
  *****
  நன்றி ரமேஷ்; அப்படியா? சாம் ப்ளட் :))
  *****
  நன்றி அருணா; மகிழ்ச்சி
  *****
  நன்றி எட்வின்

  ReplyDelete
 22. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

  ரேகா ராகவன்.
  (சிகாகோவிலிருந்து)

  ReplyDelete
 23. 100க்கு வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 24. Anonymous8:31:00 PM

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. தங்களது 100வது பதிவிற்றகு என் இனிய வாழ்த்துக்கள்....

  உங்கள் வீடு, வேலை, பதிவுலகம் மிகவும் அருமை............

  அலுவலகத்திலேயே படித்து விட்டேன்... வீட்டில் வந்து தான் பின்னூட்டம் போட முடிந்தது....

  ReplyDelete
 26. ராகவன் சார்: ரொம்ப நன்றி; US போயிருக்கீங்களா? ரொம்ப மகிழ்ச்சி. Have a nice time there.
  *****
  நன்றி உலகநாதன்
  ***
  அபராசிதன் : நன்றி முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
  ****
  ஹா ஹா நன்றி சங்கவி
  ****

  ReplyDelete
 27. நூறுக்கு வாழ்த்து(க்)கள்.

  ஸ்லோ & ஸ்டடியா தோணும்போதெல்லாம் எழுதிக்கிட்டே இருங்க.

  ReplyDelete
 28. well written. best wishes for more.

  ReplyDelete
 29. 100 க்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. 100......... Congratulations.
  பயனுள்ள கருத்துக்கள்.

  ReplyDelete
 31. நூறுக்கு வாழ்த்துகள். then write tht post soon so tht let us learn sumthing

  ReplyDelete
 32. நூறுக்கு வாழ்த்துக்கள் தல...எழுதுங்கள்

  ReplyDelete
 33. நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் சார்,
  ஒவ்வொருவர் மனதில் வந்து போகும் எண்ணங்களை விரிவாக எழுதிவுள்ளீர்கள்.

  //வாழ்க்கையில் முன்னேற தேவையான குணங்கள் எவை, விலக்க வேண்டிய குணங்கள் எவை என அனுபவத்திலிருந்து ஒரு தொடர் போல் எழுதலாமா என ஓர் யோசனை உள்ளது;//

  இதை எழுதுவதற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் தாங்கள் என்பதில்
  இருவேறு கருத்து இருக்கமுடியாது என்பதே எனது கருத்து.

  நிச்சயமாக தாங்கள் எழுதவேண்டும் என்பதே, எனது அன்பான வேண்டுகோள்.

  ReplyDelete
 35. வாழ்த்துகள் தலைவரே :)

  உங்ககிட்ட நான் இன்னும் பெட்டரா எதிர்பாக்குறேன் :))

  ReplyDelete
 36. தல அருமையான இடுகை. எனக்குள்ளும் இப்படியான் நினைவுகள் இருக்கிறது. கடுமையான பணிச்சுமைகளுக்கிடையே பிளாக்கை தொடர்ந்து எழுதுவது சிரமமாக இருக்கிறது. அதனால் நேரம் இருக்கும்போது மட்டும் எழுதுவது என்று விட்டுவிட்டேன்.

  வாழ்த்துக்கள் சதத்திற்கு.
  சச்சின் மாதிரி 200 க்கு அதிக டைம் எடுக்காதிங்க, சட்டுபுட்டு அடிங்க, சாரி எழுதுங்க....
  :-)

  ReplyDelete
 37. நீங்கள் சொல்வது சரிதான்.

  வேலையைச் சரியாக திட்டமிடுபவர்களுக்கு நிறைய உபரி நேரம் இருக்கும். அதில் சில நிமிஷங்களை இங்கே செலவிடுவதில் தப்பில்லை.

  பல அலுவலகங்களில் இது தெரிந்தும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

  சென்ச்சுரிக்கு வாழ்த்துக்கள்.

  டெண்டுல்கர் மாதிரி தொடர்ந்து சென்ச்சுரி அடியுங்கள்.

  ReplyDelete
 38. நன்றி மணி; முதலிலேயே சொல்ல விட்டு விட்டேன்.. மன்னிக்க
  ****
  நன்றி துளசி கோபால்; // ஸ்லோ & ஸ்டடியா தோணும்போதெல்லாம் எழுதிக்கிட்டே இருங்க// ஆம் அப்படி தான் செய்ய போகிறேன்..
  ******
  ருத்ரன் சார் மிக்க நன்றி; உங்கள் வாழ்த்துக்கள் மிக மகிழ்ச்சி தருகிறது; உங்கள் எழுத்துக்களை விரும்பும் வாசகன் நான்
  ******
  நன்றி அண்ணாமலையான் & சித்ரா
  ******
  ஓகே ஏஞ்சல் எழுதுறேன்
  ******
  நன்றி புலிகேசி & காவேரி கணேஷ்
  ******
  அமைதி அப்பா; உங்களுக்கு அதீத அன்பு; எழுதுகிரேன்..
  ******
  ஹா ஹா .. ரைட்டு அப்துல்லா
  ******
  நன்றி முரளி; ரொம்ப சரி நீங்க சொன்னது. பதிவுலகை விட்டு முழுதும் விலகவும் வேண்டாம்; இதுவே வேலை என்றும் இருக்க வேண்டாம்; இயலும் போது எழுதலாம்; அந்த சுதந்திரம் நிச்சயம் இருக்கு.

  ReplyDelete
 39. 100-க்கு இந்த 50-ன் வாழ்த்துக்கள். மேலும் மேலும் நீங்கள் எழுத, அதைப்படிக்க ஆவலுடன் இருக்கும் -

  வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 40. வாழ்த்துக்க‌ள் சார்

  ReplyDelete
 41. நல்லா எழுதி இருக்கிங்ன நண்பரே வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 42. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 43. பல நூறு பதிவுகள் ஆக வாழ்த்துக்கள் அண்ணே...
  பதிவுலகம் மேட்டர் நச்னு சொல்லி இருக்கீங்க...

  ReplyDelete
 44. Anonymous2:28:00 PM

  100க்கு வாழ்த்துக்கள் மோகன், நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 45. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் சார்

  + மற்றும் - பற்றி அருமையான ஆய்வு.

  இளமுருகன்
  நைஜீரியா

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. நன்றி வெங்கட் நாகராஜ்; தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி
  ***
  நன்றி கரிசல் காரன்
  ***
  நன்றி ஜாக்கி;
  ***
  நன்றி ஹுசைனம்மா
  ***
  ஜெட்லி நன்றிங்கண்ணா
  ***
  வணக்கம் சின்ன அம்மணி
  ***
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமுருகன்.

  ReplyDelete
 48. வாழ்த்துகள் மோகன்.!

  ReplyDelete
 49. நன்றி ஆதி
  ***
  முதன் முறையாக எனது பதிவு ஒன்றுக்கு 50 கமெண்டுகள் (எனது பதில்களையும் சேர்த்து) வந்துள்ளன. நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் மிக மிக நன்றி !!

  ReplyDelete
 50. 100க்கு வாழ்த்துக‌ள் :)

  எழுதும்போது ஒரு ம‌ன‌ நிறைவு கிடைப்ப‌து உண்மை. நீங்க‌ தொட‌ரை எழுதுங்க‌, அட்வைஸ் மாதிரி சில‌ருக்கு தோன்றினாலும், ப‌ல‌ருக்கு ப‌ய‌னுள்ள‌தாக‌ அமையும்....:)

  ReplyDelete
 51. //மைனஸ்: இதே பிளஸ், ஆரம்ப கட்டத்தில் எழுதுபவர்களை கொஞ்சம் addict ஆகிடுது; ப்ளாகே கதியா கிடப்பது பலருக்கும் ஆரம்பத்தில் நிகழ்கிறது ; இதில் இருந்து வெளியே வந்து இது ஒரு ஹாபி தான்; முழு நேர வேலை இல்லை என புரிய நேரம் ஆகிடுது//

  நல்லா சொன்னீங்க....Eye Opener. நன்றிங்க. வாழ்த்துக்கள் 100 வது பதிவுக்கு

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...