Monday, April 26, 2010

வானவில் -சுறா விஜய்- ஐயாசாமியின் சவால்

ஒரு சம்பவம்

வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு காய்கறி, மளிகை பொருள் வாங்க போயிருந்தேன். அந்த கடை ஒரு கணவன், மனைவி இருவர் மட்டும் manage செய்வார்கள். அன்று அந்த பெண்மணி மட்டும் இருந்தார். பொருட்கள் விலை எழுதி மிக வேகமாக, ஆனால் சரியாக கூட்டி விட்டார். எனக்கு சற்று ஆச்சரியம். " எப்படிங்க செம speed-ஆ கூட்டுறீங்க? " என்றேன். " சார் டென்த்தில் நான் நூத்துக்கு நூறு மார்க் சார். அப்புறம் மேல படிக்க வைக்கல" .. இதில் முதல் வரி சொல்லும் போது வெட்கமும் அடுத்த வரி சொல்லும் போது வருத்தமும் தெரிந்தது. " ஏன் மேல படிக்கலை" என நான் கேட்டு அவரை embarass செய்ய விரும்ப வில்லை.

எனது டென்த் மார்க் நினைவு வந்து இம்சை செய்தது. 59 மார்க் வாங்கிய நான் எந்த நிலையில் உள்ளேன்? கிராமத்தில் படித்து,நூறு மார்க் வாங்கிய பெண் ஒரு சாதாரண ஆளை திருமணம் முடித்து, மொட்டை அடித்து கொண்டு கடையில் மளிகை பொருள் மடிக்கிறார். பெற்றோர், குடும்ப சூழல் இவை ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவு நிர்ணயம் செய்கிறது... எண்ணியவாரே நடந்தேன். பையை விட மனம் கனத்தது.

ஐ. பி. எல் கார்னர்

ஐ. பி. எல்லில் சென்னை வென்றது இன்று காலை பேப்பர் பார்த்து தான் தெரிந்தது!! பஞ்சாபிடம் சென்னை தோற்ற மேட்ச் பார்த்தவர்கள் சென்னை பைனல் வரும், ஜெயிக்குமென நினைத்திருக்க மாட்டார்கள். (நானும் தான்)..கடைசில் தர்ம சாலா மேட்ச் துவங்கி அனைத்தும் இக்கட்டான மேட்ச்கள். இவை ஜெயித்து ஜெயித்து சென்னைக்கு நெருக்கடி handle செய்வது பழகி போய் விட்டது.. மும்பையோ பெரும்பாலும் cakewalk போன்ற வெற்றிகளே பெற்று வந்தது. சென்னை semi finals கூட வராது என்று எழுதியது நான்தான். எனது ஊகம் பலிக்கா விட்டாலும் சென்னை வென்றது மிக மிக மிக மகிழ்ச்சியே!!

சுறா படம் பற்றி அலுவலகத்தில் லஞ்ச் ரூம் டிஸ்கஷன்


" சுறா பாட்டெல்லாம் போடுறாங்களே.. பாத்தீங்களா?"

" வடிவேலை தவிர்த்து மத்தது அப்படியே வேட்டைக்காரன் டிரைலர் மாதிரி தான் இருக்கு"

" வழக்கம் போல் விஜய் அதே கெட் அப்; வெறும் விஜய் ஸ்டில் மட்டும் வச்சு அது எந்த படம்னு சொல்லவே முடியாது"

" எப்பவுமே விஜய் கூட நடிக்கிற ஹீரோயின் வச்சி தான் அது எந்த படம்னு கண்டு பிடிக்கணும்; வேற வழி இல்லை"

" ஓ அதுக்கு தான் வேற வேற ஹீரோயின் கூட நடிக்கிறாரா?"

" எப்படியோ விஜய்க்கு பாட்டெல்லாம் ஹிட் ஆகிடுதுப்பா; படம் எப்ப பாக்க போறே? "

" ம்ம் வழக்கம் போல ஒரு மாசம் கழிச்சு சீடியில்தான் "

ஒரு சந்தேகம்

உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாசம் கோயம்பதூரில் மூணு நாள் நடக்க போகுது; இதனால் தமிழுக்கு என்ன நன்மை? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்படியே தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பலன்? இது தெரிஞ்சாலும் சொல்லுங்க. நமக்கு தெரியலை. நாலட்ஜ் இம்ப்ருவ் பண்ணிக்குறேன் (அட.. தமிழ் பத்தி சொல்லிட்டு ஒரே ஆங்கில வார்த்தையா...)

அய்யாசாமியின் சவால்

" ஆபிசில் கெட்-டுகதர் வச்சா ஏதேதோ போட்டி வைக்கிறாங்க. வாயில் ஸ்பூன் & லெமன் வச்சிட்டு ஓடறது, கையாள தண்ணி எடுத்து பாட்டிலில் ஊத்தறது.. அது இதுன்னு. நம்மால ஒன்னும் ஜெயிக்க முடியலை . ரெண்டு நிமிஷத்தில் எத்தனை புடவை சரியா மடிக்கிரதுன்னு ஒரு போட்டி வைக்க சொல்லுங்க; ஜென்ட்ஸ் மட்டுமில்ல, லேடிசையே நான் ஜெயிச்சுடுவேன்"

விரைவில் ஒரு குட்டி பயண கட்டுரை

மைசூர் -கூர்க் நான்கு நாள் சென்று வந்தோம்; எனவே பதிவுலகம் பக்கம் நாலு நாளாய் எட்டி பார்க்கலை. விரைவில் எதிர் பாருங்கள்.. மைசூர் -கூர்க் பயண கட்டுரை..(ஐயோ பாவம் நீங்கள் )

வாங்க முன்னேறி பாக்கலாம் தொடருக்கான ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அமைதி அப்பா வாரத்தின் குறிப்பிட்ட ஒரு கிழமையில் வெளியிட சொல்லியுள்ளார். புதன் அன்று வெளியிட முயல்கிறேன். வீடு மற்றும் அலுவலக வேலை பளுவால் சில நேரம் முடியாமல் போகலாம். அத்தகைய நேரம் பொருத்தருள்க !!

23 comments:

 1. //பெற்றோர், குடும்ப சூழல் இவை ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவு நிர்ணயம் செய்கிறது... எண்ணியவாரே நடந்தேன். பையை விட மனம் கனத்தது.//

  எனக்கும் கனத்தது.

  ReplyDelete
 2. //நாலட்ஜ் இம்ப்ருவ் பண்ணிக்குறேன்//

  ம்ம்ம்ம்.... இம்ப்ரூவ் ஆன மாதிரிதான்.

  ReplyDelete
 3. அப்புறம் பார்த்து ரொம்ப நாளாச்சு மோகன்..

  ReplyDelete
 4. //பெற்றோர், குடும்ப சூழல் இவை ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவு நிர்ணயம் செய்கிறது... எண்ணியவாரே நடந்தேன். பையை விட மனம் கனத்தது.//

  கனத்தது உங்கள் மனம் மட்டும் அல்ல - படிக்கும் எங்களது மனமும் தான். கூர்க் பயணக்கட்டுரை எப்போது?

  வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 5. //தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பலன்?//

  சில‌ ப‌ல‌ பார‌ட்டு விழாக்க‌ள்???

  ReplyDelete
 6. Anonymous4:17:00 PM

  முதல் சம்பவம் - பலருக்கு வாழ்க்கைல அந்த மாதிரி ஆகிடுது.

  சென்னை ஜெயிச்சதுக்கு ஒரு ஹை.

  விஜய் ஹஹஹா

  ReplyDelete
 7. Anonymous4:25:00 PM

  ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். விருப்பமிருந்தால் தொடரலாம்.

  http://chinnaammini.blogspot.com/2010/04/blog-post_26.html//

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 9. நீங்கள் குறிப்பிட்ட முதல் சம்பவம் வேதனையளித்தது.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. //உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாசம் கோயம்பதூரில் மூணு நாள் நடக்க போகுது; இதனால் தமிழுக்கு என்ன நன்மை? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்படியே தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பலன்? இது தெரிஞ்சாலும் சொல்லுங்க. நமக்கு தெரியலை. நாலட்ஜ் இம்ப்ருவ் பண்ணிக்குறேன் (அட.. தமிழ் பத்தி சொல்லிட்டு ஒரே ஆங்கில வார்த்தையா...)//

  இதே சந்தேகம் எனக்கும் உண்டு மோகன். நானும் ஒரு பதிவா எழுதி கேட்கலாம்னு நினைச்சேன்.

  வானவில் நல்லா இருக்கு.

  ReplyDelete
 12. //பெற்றோர், குடும்ப சூழல் இவை ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவு நிர்ணயம் செய்கிறது...//

  உண்மைதான் சார்.

  //ஐ. பி. எல்லில் சென்னை வென்றது இன்று காலை பேப்பர் பார்த்து தான் தெரிந்தது!! //

  என்னாச்சு சார்? நீங்க கிரிக்கெட் பார்ப்பதால்தான் பிளாக் பக்கம் வரலையோன்னு நினைச்சேன்.


  //விரைவில் எதிர் பாருங்கள்.. மைசூர் -கூர்க் பயண கட்டுரை..//

  நிறைய சுவாரஸ்யமான தகவல் கிடைக்கும்..


  //அமைதி அப்பா வாரத்தின் குறிப்பிட்ட ஒரு கிழமையில் வெளியிட சொல்லியுள்ளார். புதன் அன்று வெளியிட முயல்கிறேன்.//

  எனது வேண்டுகோளுக்கு தலையசைத்ததற்கு நன்றி.

  ReplyDelete
 13. நன்றி சத்ரியன்.. சுட சுட தங்கள் அளித்த கமெண்டுக்கு.
  ***
  மணிஜி: ஆம்; ஏப்ரல் மாதம் அலுவலகத்தில் சற்று வேலை அதிகம்; விரைவில் சிந்திப்போம்
  ***
  நன்றி வெங்கட்.. விரைவில் எழுதுகிறேன்
  ***
  கரிசல் காரன்: ம்ம் ரைட்டு; நிஜமா வேற ஏதும் இல்லையா?
  ****
  சின்ன அம்மணி: தொடர் பதிவா?? ம்ம்ம் பாக்குறேன்; ஏற்கனவே ரகு கூப்பிடது பாக்கி இருக்கு
  ****
  நன்றி சங்கர்; தொடர்ந்து வாசியுங்கள்
  ****
  நன்றி சரவணா; ஆம் வருத்தமான விஷயம் தான் அது !
  ***
  நன்றி உலக்ஸ்..

  ReplyDelete
 14. அமைதி அப்பா said...
  //என்னாச்சு சார்? நீங்க கிரிக்கெட் பார்ப்பதால்தான் பிளாக் பக்கம் வரலையோன்னு நினைச்சேன். //

  டிரைனில் வந்து கொண்டிருந்தோம் எனவே ஸ்கோர் தெரியலை.

  கருத்துக்கு நன்றி சார்

  ReplyDelete
 15. வானவில் அருமை.:))

  கூர்க் - ஆவல்.;)

  ReplyDelete
 16. நல்ல பதிவு. விரைவில் பயண கட்டுரை ........!!!

  ReplyDelete
 17. தமன்னா அண்ணே...நீங்களே ஒரு மாசம் கழிச்சு பார்த்த எப்படி...??

  ReplyDelete
 18. //மனம் கனத்தது//
  படித்த எனக்கும்...

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா, சுறா ஆபீஸ் டிஸ்கஷன், அருமை.
  சீக்கிரம் எழுதுங்க, கூர்க் நான் இன்னும் போனதில்லை, உபயோகமா இருக்கும். அப்புறம் போட்டோஸ் முக்கியம்....
  :-)

  ReplyDelete
 20. //தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பலன்?//

  சம்பந்தமே இல்லாமல் கன்னடமும் செம்மொழி அந்தஸ்து பெற்றதுதான் பலன். இப்போ செம்மொழிக்கு இலக்கணம் இல்லாமல் போய்விட்டது. (நான் கன்னடத்துக்கு எதிரி அல்ல, ஆனால் தமிழின் பழமை, பெருமைக்கு முன்னாள் கன்னடம் தூசு)


  //" எப்படியோ விஜய்க்கு பாட்டெல்லாம் ஹிட் ஆகிடுதுப்பா; படம் எப்ப பாக்க போறே? "

  " ம்ம் வழக்கம் போல ஒரு மாசம் கழிச்சு சீடியில்தான் //

  நீ ஒரு தடவை முடிவு பண்ணிட்டா உன் பேச்சை நீயே கேட்க மாட்டியோ? ( ஒய் ப்ளட், சேம் ப்ளட்)

  ReplyDelete
 21. தங்கள் எதிர் பார்பிற்கு நன்றி
  ****
  ஜெட்லி: அது நான் சொன்னதுன்னு சொல்லலயே??
  (ம்ம்ம் நீங்க சரியா கண்டு பிடிச்சீடீங்க )
  ****
  நன்றி ஜனா சார்
  ****
  முரளி: நன்றி நிச்சயம் படங்களுடன் வெளியிடுகிறேன்
  ***
  பெயர் சொல்ல: எங்கடா ரொம்ப நாளா உன்னை காணும்? (ஆஹா இப்படி டா சொல்லி அழைக்க எவ்ளோ சந்தோசம்??)

  ReplyDelete
 22. முத‌ல் ச‌ம்ப‌வ‌ம் - ப்ச், நானும் இந்த‌ மாதிரி சில‌ரை பார்த்திருக்கேன். வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தை த‌விர‌ வேற‌ எதுவும் அவ‌ங்க‌ளுக்காக‌ செய்ய‌முடிவ‌தில்லை :(

  ஐபிஎல் - நான் அப்ப‌வே சொன்ன்னேன்ங்க‌ :)

  //எப்படியோ விஜய்க்கு பாட்டெல்லாம் ஹிட் ஆகிடுதுப்பா//

  ஒரு திருத்த‌ம்..'பாட்டெல்லாம்' இல்ல‌, 'பாட்டாவ‌து' ;))

  ச‌வால் - அநியாய‌த்துக்கு வாக்குமூல‌ம் த‌ர்றீங்க‌!

  //ஜெட்லி said...
  தமன்னா அண்ணே...நீங்களே ஒரு மாசம் கழிச்சு பார்த்த எப்படி...??//

  நீங்க‌ த‌ம‌ன்னாவுக்கு அண்ண‌னா? கேக்க‌ற‌துக்கே ரொம்ப‌ ம‌கிழ்ச்சியா இருக்கு :)))

  ReplyDelete
 23. ரகு: நான் ஜெட் லிக்கு தான் அண்ணன். தமன்னாவிற்கு அல்ல. மறுபடி படிங்க :)) நற.. நற

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...