Monday, August 22, 2011

வானவில்: 180 -ம், சூப்பர் சிங்கரும்


பார்த்த படம்: 180

ஹீரோவுக்கு கேன்சர் உள்ள இன்னொரு கதை என்ற தயக்கத்துடன் தான் பார்க்க ஆரம்பிதேன். ஆனால் படம் பெருமளவுக்கு நன்றாக தான் உள்ளது. சித்தார்த் நடிப்பு மிக இயல்பு. சில பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் இனிமை. ஹீரோயின்கள் ஓகே ரகம். ஹீரோவுக்கு கேன்சர் என தெரிந்த பின் தான் கதை சோக ராகம் பாட ஆரம்பித்து விடுகிறது. முடிவு வித்யாசமாக ஹீரோ இறக்கிற மாதிரி காட்டாமல் இருப்பது சற்று ஆறுதல். (ஆமாம் ஆனந்த விகடனில் முன்பு கேன்சரால் யாராவது இறக்கிற மாதிரி படத்தில் காட்டினால், அது தவறு. இப்படி தவறான விஷயத்தை காட்டும் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டோம் என அறிவித்திருந்தார்களே. இன்னும் தொடர்கிறார்களா என்ன?). சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்கும், புது இயக்குனரின் முயற்சிக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்

QUOTE HANGER
If you judge people, you will not have time to love them.

பிடித்த பாடல்

இந்த பாடல் பிடிக்க முக்கிய காரணம் ரஹ்மான். இந்த பாடலை உருவாக்கிய விதமும், குறிப்பாய் இந்த பாடலில் திருக்குறள் ஒலிக்க வைத்ததும் அருமை.எங்கே போச்சு அந்த ஹிட்ஸ்?

சென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ் அசர வைத்தது. மூன்று நாளில் ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் வாசித்தனர் எனினும், கூகிளில் "பிரபல பதிவுகள்" கணக்கிற்கு மட்டும் அதை எடுத்து கொள்ள வில்லை. முதல் ரெண்டு நாள் அதே கூகிள் தான் எப்போது பார்த்தாலும் 18 பேர், 22 பேர் வாசிப்பதாக காட்டியது. இது உண்மை என்று தான் நினைக்கிறேன். அந்த ஒரு பதிவிலேயே நான்கு Follower-கள் சேர்ந்தனர். (பொதுவாய் இப்போதெல்லாம் ரெண்டு பதிவுக்கு ஒருத்தர் தான் சேர்கிறார்). இப்படி நான்கு பேர் ஒரே நாளில் சேர்ந்ததிலேயே இந்த பதிவை ரெண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வாசித்தது புரிந்தது. "ஆல் டைம் அதிகம் படித்த" பதிவாக இருக்க வேண்டியது இப்போ தான் "இந்த மாத டாப் 5-க்குள் நொண்டியடிக்கிறது !

நாட்டி கார்னர்

நாட்டிக்கு இப்போதெல்லாம் எங்களை நன்கு அடையாளம் தெரிய ஆரம்பித்து விட்டது. முன்பு கூண்டுக்குள் கை விட்டால் கடிக்க வரும். சாப்பாடு குடுக்க சென்றாலும் அதே கதை தான். இப்போது சாப்பாடு குடுத்தால் சமத்தாக வாங்கி சாப்பிடுகிறது. சும்மா கை விட்டாலும் கடிப்பதில்லை. ஆனால் சில நேரம் அதற்கு பிடிக்காத மாதிரி சில வேலைகள் செய்து விட்டால் ரொம்ப கோபமாகி விடும். அடுத்த சில நாள், நாம் அருகில் போனாலே கடிக்கிற மாதிரி பாவம் காட்டும். நாட்டிக்கு மற்றொரு கிளி துணைக்கு வாங்கலாமா என யோசித்து வருகிறோம். நிஜத்தில் நடக்குமா என தெரியலை. தற்சமயம் பரீசலனையில் மட்டும் உள்ளது.

டிவி பக்கம்

சூப்பர் சிங்கர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. மாளவிகா அவுட் ஆனது சரி என்று தான் சொல்லவேண்டும். அதற்கு முந்தைய சில வாரங்களாக அவர் சரிவர பாடலை. இந்த வாரம் டிரைலர் பார்த்தால் சாய் சரண் அவுட் ஆக போவது போல் தெரிகிறது. (குழப்பினாலும், குழப்புவாங்க). சாய் சரண், பூஜா,சத்ய பிரகாஷ் ஆகிய மூவரில் இருவர் மட்டும் நேரடியாக பைனல் செல்ல உள்ளனர். மாளவிகா, சந்தோஷ் உள்ளிட்ட மற்றவர்கள் ஒயில்ட் கார்ட் ரவுண்ட் மூலம் மீண்டும் உள்ளே வருவார்கள். ஒயில்ட் கார்டிலும், பைனலிலும் நம்மை எல்லாம் மொபைலில் ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நன்றாக காசு பார்ப்பார்கள். நடத்துங்கப்பா,. நடத்துங்க !

சம்பவம்

அலுவலகம் வரும்போது ஒரு வளைவில் ஒரு டூ வீலர் ஓட்டி வந்தவர் திடீரென சறுக்கி விழுந்தார். அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்த சிறுவர்கள் ஓடி போய் அவரையும், வாகனத்தையும் தூக்கி நிறுத்தினர். நடக்க முடியாமல் நொண்டியவாறு கீழே கிடந்த மொபைலை எடுத்தவாறு, அருகில் உள்ள கட்டையில் சென்று அமர்ந்தார். நான் அவரிடம் நெருங்கி "யாருக்காவது போன் செய்யணுமா? கூப்பிடணுமா?" என்றேன். (அவரசமாய் அலுவலகம் செல்லும் நிலை. என்னால் நிச்சயம் அவருடன் மருத்துவமனை செல்ல முடியாது) " இல்லீங்க. போன் வொர்க் ஆகுது. நானே கூப்பிட்டுக்குறேன்" என்றார். " வேன் காரன் ஒருத்தன் வண்டி ஓரத்தில் இடிச்சிட்டு போய்ட்டான். நிக்கவே இல்லை" என்றார். அருகில் இருந்தவர்களும் " ஆமாம் அதனாலதான் விழுந்தார்" என சொல்ல, இத்தகயவர்களை நினைத்து எரிச்சலும் கோபமும் வந்தது. அநேகமாய் அவருக்கு ஒரு கால் எலும்பு முறிவு ஆகியிருக்கும், அசைக்கவே முடிய வில்லை. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலை அடி படவில்லை. இல்லா விடில் நிச்சயம் அடி பட்டிருக்கும். காலை அலுவலகம் செல்ல வேண்டியவருக்கு இப்படி ஆகி விட்டது. பொறுப்பில்லாமல் இடித்ததும் இல்லாமல், நிறுத்தாமலும் செல்லும் இத்தகைய ஓட்டுனர்களை வண்டி எண் வைத்து கண்டுபிடித்து அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தால் தான் இத்தகைய தவறு/ விபத்துகளை தவிர்க்க முடியும்.

10 comments:

 1. //சென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ் அசர வைத்தது. மூன்று நாளில் ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் வாசித்தனர் //

  காஞ்சனா முனி-2 : எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்று போட்ட உங்கள் பதிவும் இப்போ சூப்பர் ஹிட் ஆயிடுச்சு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..
  நல்ல விமர்சனம்..

  http://sempakam.blogspot.com/2011/08/blog-post_22.html#comments

  ReplyDelete
 3. வண்ணமயமான வானவில்....

  சம்பவம்... இங்கே தில்லியில் இன்னும் மோசம்... இடிபட்டு கீழே விழுந்தால் தூக்கிவிடக்கூட ஆள் இல்லை... நேற்று காலை பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரே தெருவில் மூன்று விபத்துகள் - 10-15 நிமிடங்களுக்குள்....

  இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹிட்ஸ்.... வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. பொறுப்பில்லாமல் இடித்ததும் இல்லாமல், நிறுத்தாமலும் செல்லும் இத்தகைய ஓட்டுனர்களை வண்டி எண் வைத்து கண்டுபிடித்து அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தால் தான் இத்தகைய தவறு/ விபத்துகளை தவிர்க்க முடியும்.


  .... விபத்துக்குள்ளாக்கிய பின் , நிறுத்தி உதவி செய்யாமல் போனால் என்ன மாதிரியான சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் சொல்லி இருக்கலாமே.

  ReplyDelete
 5. வானவில் கலக்கல்!

  ReplyDelete
 6. //சென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ்//

  ஹிட்ஸ், பிரபல பதிவுகள், ஃபாலோவர்ஸ்னு ரொம்ப ஆராய்ச்சி பண்றீங்க.. ஆமா, ரெண்டு பதிவுக்கு ஒரு ஃபாலோவர் தவறாமப் புதுசாக் கிடைக்கீறாரா? ஆச்சர்யம், வாழ்த்துகள்!!

  ReplyDelete
 7. 2000ல் இருந்து சீக்கிர‌ம் பிம்பிலிக்கி பிலாபி வ‌ரை முன்னேற‌ வாழ்த்துக‌ள் :)

  அது ம‌ன்னிப்பாயா பாட‌லா? ஆஃபிஸில் வீடியோ ப்ளாக் ப‌ண்ணிவெச்சிருக்காங்க‌ :(

  ReplyDelete
 8. கேபிள்: நன்றி
  **
  ஆதி மனிதன்: தேங்க்ஸ்
  **
  நன்றி விடிவெள்ளி
  **
  வெங்கட்: டில்லியிலும் இதே நிலையா ? :((

  ReplyDelete
 9. வாங்க சித்ரா : நன்றி
  **
  நன்றி மாதவி
  **
  ஹுசைனம்மா:

  //ஆமா, ரெண்டு பதிவுக்கு ஒரு ஃபாலோவர் தவறாமப் புதுசாக் கிடைக்கீறாரா? //

  ஆம். ஆவேரஜா ரெண்டு பதிவுக்கு ஒருவர் வரவே செய்கிறார்.
  **
  ப்ரியா: நன்றி (நீங்க ப்ரியாவா? கண்ணனா?)
  **
  ரகு: ஆம் மன்னிப்பாயா பாட்டு தான். நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...