Thursday, August 11, 2011

டுபுக்கு & அப்துல்லா :சென்னை பதிவர் சந்திப்பு - சுடச்சுட பகிர்வு

பதிவர் டுபுக்கு வருகையை ஒட்டி சென்னையில் நேற்று மாலை பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இதில் "அண்ணே" அப்துல்லா நண்பர்களின் நீண்ட நாள் விருப்பத்திற்கிணங்க பிரியாணி ஏற்பாடு செய்வதாக சொல்ல, கூட்டம் களை கட்டியது.

முதலில் வழமை போல் காந்தி சிலை என்று தான் சொல்லியிருந்தனர். ஆனால் திடீர் மழையால் சந்திப்பு, அப்துல்லா வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு மாற்றி விட்டனர். கிட்டத்தட்ட 25 பதிவர்கள். மிக அற்புதமான, நிறைவான சந்திப்பு

எனக்கு தெரிந்து வந்திருந்த நண்பர்கள்:

டுபுக்கு, அப்துல்லா, அனுஜன்யா, கேபிள் சங்கர், யுவக்ரிஷ்ணா, அதிஷா,பால பாரதி, டாக்டர் புருனோ, கார்க்கி, ஆதி, கே. ஆர். பி. செந்தில், ஓ.ஆர். பி. ராஜா, சுரேகா, எறும்பு ராஜகோபால், பலா பட்டறை சங்கர், அதியமான் , காவேரி கணேஷ், எல் கே , தமிழ் அமுதம், சுகுமார், பிரதீப் (பெய்யென பெய்யும் மழை), வெட்டி பையன்.

இன்னும் சிலர் வந்திருந்தனர். பெயர் மறந்து விட்டது. மன்னிக்க. விடுபட்ட பெயர்கள் நண்பர்கள் சொல்லலாம்.


படங்கள் நன்றி தமிழ் அமுதன்மேலும் படங்களுக்கு இங்கே பாருங்கள்


சந்திப்பின் சில துளிகள்:

முதலில் அப்துல்லா அலுவலகம் வெளியில் காத்திருந்தோம். அப்துல்லா மற்றும் கேபிள் பிரியாணி வாங்க பெரியமேடு சென்றிருந்தனர். அப்துல்லா போன் செய்து சொன்னதும் அலுவலக கான்பரன்ஸ் அறையில் அமர வைத்தனர். நண்பர்கள் வந்த வண்ணம் இருக்க, அறையில் சேர்கள் போத வில்லை. பின் எங்கெங்கிருந்தோ சேர்கள் எடுத்து வந்து போட்டனர். ஆபிசில் இருக்கும் எல்லா சேரும் அங்கே வந்திருக்கும் போல என கமெண்ட் அடித்து கொண்டிருந்தோம்.

சந்திப்பு செமையாக களை கட்டியதற்கு முக்கிய காரணம் கார்க்கி, டுபுக்கு, சுரேகா, பால பாரதி உள்ளிட்டோரின் நகைச்சுவை உணர்வு. மனிதர்கள் சிரிப்பு வெடிகளை அள்ளி விட்டு கொண்டிருந்தனர். அதுவும் கார்க்கி ஒரு சிரிப்பு பட்டாசு.

ஒரு பிரபல பதிவர், அதிஷா என்பது பெண் பெயர் என நினைத்து கொண்டிருந்து விட்டு, அதிஷாவை நேரில் பார்த்து ஆண் என தெரிந்து நொந்து போன சம்பவம் பற்றி பகிர்ந்த போது அனைவரும் சிரித்து கண்ணில் தண்ணியே வந்து விட்டது.

இருந்த பதிவர்களை கலாய்த்தது ஒரு பக்கம் என்றால் வராத ஜாக்கி, உண்மை தமிழன் சாரு போன்றோர் பற்றி பேசி சிரித்தது இன்னொரு தனி கதை.

அனுஜன்யா மும்பையிலிருந்து வேறு வேலையாக வந்தவர் சர்பிரைஸ் ஆக வந்து ஜோதியில் கலந்தார். டுபுக்கு மற்றும் அனுஜன்யா இருவரும் வங்கியில் பணி புரியும் பதிவர்கள். இரு வேறு துருவங்களான இவர்கள் அருகருகில் அமர்ந்து பேச, " நீங்க பேசுங்க நாங்க எல்லாரும் பாக்குறோம்" என நக்கல் !!

கிரிக்கெட் ஆர்வலரான எல் கே அங்கு வந்தும் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் ஸ்கோர் பற்றி பேசி மனம் நொந்து கொண்டிருந்தார்.

டுபுக்கு பல ஆண்டுகளாக எழுதுவதால் பழைய பதிவர்கள் பலர் வந்திருந்தனர்.

கேபிள் நிர்வாக தயாரிப்பளாராக பணியாற்றிய அரும்பு மீசை படத்துக்கு விமர்சனம் எழுதிய ஒரே பதிவர் கேபிள் தான் என கலாய்க்க, "ஏய். இல்லைப்பா. ஜாக்கி கூட எழுதினாரு தெரியுமா? " என்றார் கேபிள்.

காவேரி கணேஷ் தனக்கு மகள் பிறந்ததாக இனிப்பு தந்தார். திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை. மிக மகிழ்ச்சியாக வாழ்த்து சொன்னோம்.

டாக்டர் புருனோவுக்கு எப்போது போன் செய்தாலும் ரீச் ஆகாது என சொல்ல, அவர் அதை மறுக்க, அப்போதே சிலர் போன் அடித்தும் அவருக்கு ரீச் ஆகலை !! டாக்டர் சார் வேற சர்விசாவது மாத்துங்க

லண்டனில் தற்போது எதனால் கலவரம் நடக்கிறது என்று பகிர்ந்தார் இங்கிலாந்தில் வசிக்கும் டுபுக்கு (இன்டர்வியூ உபயம் கார்க்கி)

"ஒரே ஆளை பார்க்க இவ்வளவு பெரிய கூட்டம் இந்த ஆபிசில் யாருக்கும் வந்திருக்காது. அப்துல்லா வேற தி.மு.க காரர். நில அபகரிப்பு கேசில் தப்பிக்க தான் நம்மளை எல்லாம் இங்கே ஒளிச்சு வச்சிருக்கார்னு நினைச்சுக்க போறாங்க" என ஒருவர் எடுத்து விட்டார். அடுத்த முறை ஆபிஸ் பையன் தண்ணீர் வைக்க வந்த போது " ஏம்பா, மதுக்கூர் நிலவரம் எப்படி? மதுரையில் என்ன நடக்குது? போலிஸ் வந்துடும்னு நினைக்கிறியா? " என்றெல்லாம் பேச, தண்ணீர் கொண்டு வந்த பையன் சற்று கலவரமாகி வெளியே சென்றான் !

சமீபத்திய ஆங்கில படமொன்றில் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் டயபடிஸ் சரி செய்ய மருந்து வந்தும், அதை வெளியே சொல்லாமல் எப்படி ஏமாற்றுகிறார்கள் என காண்பித்ததாக சுரேகா சொல்ல, "அந்த படம் புருடாங்க. நூறு பேரில் அம்பது பேருக்கு டயபடிஸ் சரி பண்ண சொல்லுங்க பார்ப்போம்" என பொங்கி விட்டார் டாக்டர் புருனோ.

"தோழி மற்றும் குஜ்ஜு என எப்படி ரெண்டு பேரை சமாளிக்கிறீங்க? குஜ்ஜு பொய் தானே? "என அடுக்கடுக்காய் கார்க்கியை குறுக்கு விசாரணை செய்தார் வக்கீல் (வேற யாரு அய்யாசாமி தான்!)

"வக்கீல் கிட்டேயும் டாக்டர் கிட்டேயும் பொய் சொல்ல கூடாது இங்கே ரெண்டு பேரும் இருக்காங்க " என சொல்லிட்டு அடுத்தடுத்து பொய்யா சொல்லிக்கிட்டிருந்தார் கார்க்கி

ஏற்கனவே ஹீரோ மாதிரி இருக்கும் பலா பட்டறை சங்கர் பிரான்ச் தாடியெல்லாம் வைத்து அசத்தி கொண்டிருந்தார்.

"டுபுக்கு நீங்க ஹீரோ மாதிரி தான் இருக்கீங்க. நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நீங்க தான் ஹீரோவா? " என கேட்க, " இல்லீங்க "நான் டைரக்சன் மட்டும் தான் " என்றார் டுபுக்கு சீரியசாக !

டுவிட்டர், பேஸ்புக், ப்ளாக், லின்குட் இன் இவற்றின் ஒற்றுமை, வேற்றுமை, பலன்கள், பிரச்சனைகள் இவை கொஞ்ச நேரம் பிரித்து மேயப்பட்டது.

ஆதிக்கும் எனக்கும் ஒரு பதிவில் சின்ன சண்டை வந்திருந்தது. அதையும் பேசி சரியாகி இந்த முறை "நண்பேண்டா" ஆகிட்டோம்

கார்க்கி பாஸ் அவருக்கு போன் செய்தார். அப்போ கார்க்கி பேசிய ஸ்டைலை பார்க்கணுமே ! என்ன பவ்யம்!! அவர் பேசிய போது நாங்கள் அனைவரும் பேசுவதை நிறுத்தி விட்டு கார்க்கி பம்மியதை மட்டும் பார்த்து சிரித்து கொண்டிருந்தோம்.

மொட்டை மாடியில் ஊழியர்கள் உணவருந்தும் இடத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.சூடாக, சுவையாக பிரியாணி. செம டெஸ்ட்டி. கேபிள் பாணியில் சொல்லனும்னா டிவைன் !

சாப்பிடும் போது " என்னயா இந்த விஜய் படம் எடுக்கிறார். பொய் சொல்ல போறோம், மதராச பட்டினம் , தெய்வதிருமகள், எல்லாமே திருட்டு தான்" என ஒரு கூட்டம் சொல்ல, மற்றொரு குழுவோ "காபி அடிக்கமால் படமே எடுக்க முடியாது" என வாதிட்டது.

பிரபல பதிவர் கேபிள் சங்கரும், பிரபல தொழிலதிபர் ஓ.ஆர். பி. ராஜாவும் தான் அனைவருக்கும் ஓடி, ஆடி உணவு பரிமாறினார்கள் (வெயிட்டான ஆளுங்க. அரை கிலோவாவது குறைஞ்சா சரி. )

தமிழ் அமுதம், டுபுக்கு போன்ற சிலர் புகை படம் எடுத்தனர். அவர்கள் அவற்றை பகிர்ந்தால் உண்டு.

எனக்கு அலுவலகம் மற்றும் தனிப்பட்ட முறையில் சில வாரங்களாக ஏகப்பட்ட மன அழுத்தம். தொடர்ந்து ரெண்டு, மூன்று மணி நேரம் எல்லா கவலையும் மறந்து விட்டு விடாது (Non Stop) சிரிக்க முடிந்தது மிக பெரிய relief ஆக இருந்தது.

 ****
மேலே படத்தில் உள்ள இந்த பதிவருக்கு நாளை பிறந்த நாள். நாளை காலை முழுதும் ACS Institute-ல் ஒரு செமினாரில், தான் பேச உள்ளதாகவும் அதனால், அப்போது நண்பர்கள் யாரும் தொலை பேசியில் பேச வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். (ம்க்கும்.. இவர் செமினாரில் பேசுறதை உங்க கிட்டே சொல்லணுமாம்!)

யாரென்று கண்டு பிடிக்க முடியா விட்டால், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12-ல் எழுதிய இந்த பதிவை பாருங்கள் !!

40 comments:

 1. பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன்..

  ..
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 2. .....கலகலப்பான பதிவர் சந்திப்பு..... !!!

  ....HAPPY BIRTHDAY, MOHAN!!
  Enjoy your special day!

  ReplyDelete
 3. Best wishes to you mohan... Have a nice day...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் மோகன். செமினார்ல பேசுறதை நிச்சயம் சொல்லணுமில்ல..:)

  ReplyDelete
 5. அன்பின் நண்பருக்கு.,

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. ஆஹா..... வெளுத்துக் கட்டி இருக்கீங்கபோல! ( ப்ரியாணியை!)

  மோகனுக்குப் பொறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  திரு & திருமதி காவேரி கணேஷுக்கும் புதுப்பிஞ்சுக்கும் ஆசிகள்.

  ReplyDelete
 8. ஹேப்பி பர்த் டே மோகன்ஜி:))

  ReplyDelete
 9. பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 10. //யாரென்று கண்டு பிடிக்க முடியா விட்டால், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12-ல் எழுதிய இந்த பதிவை பாருங்கள் !!//
  அந்த பிஞ்சு முகம் இன்னமும் "வீல் மோர்" முகத்தில் தெரிகிறதே. மேலே உள்ள பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்குனுமா?

  என் இனிய பிறந்தால் நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பகிர்வுக்கு மிக்க நன்றி மோகஞி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

  பதிவர் சந்திப்பு கலகல :-)

  ReplyDelete
 13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன் குமார்.

  ReplyDelete
 14. கல கல சந்திப்பு. கலக்கல் பிரியாணி, தம்பியண்ணாவுக்கு நன்றிகள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  பிறந்தநாள் வாழ்த்துக்கள், மோகன்!

  //பிரபல தொழிலதிபர்//

  கல்யாணத்துக்கு முன்னே இந்த மாதிரி கூப்பிட்டிருந்தீங்கன்னா, எதுனா ஒரு நடிகையையாவது கரெக்ட் பண்ணியிருக்கலாம் ;))

  ReplyDelete
 15. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

  பதிவு போட்டாச்சு பாருங்க..!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் மோகன். செமினார்ல பேசுறதை நிச்சயம் சொல்லணுமில்ல..:)

  ReplyDelete
 17. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன் அண்ணா! :)

  ReplyDelete
 20. அப்துல்லாஹ் அண்ணே!

  நோன்பு திறப்பு (இப்தார்) நிகழ்ச்சி ஒண்ணு செய்ய சொல்லலாமான்னு ஒரு வாரமா யோசித்துக்கொண்டே இருந்தேன், அதுதானா இது??!

  ReplyDelete
 21. அருமையான பதிவர் சந்திப்பு.

  போட்டோ எங்கே பாஸ்???

  ReplyDelete
 22. பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகுந்த சுவாரஸ்யம்!
  நாளை அனைத்தும் இனிதாய் மலர, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 25. பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன்..


  அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 26. Anonymous7:49:00 PM

  என்னுடைய வாழ்த்துக்களும் நண்பரே!

  கலக்கலான சந்திப்பு தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. மறுபடி எப்போது அப்துல்லா சந்திப்பு நடத்துவார். எல்லாம் ‘டிவைன்’ விஷயத்துக்காகத்தான் ...

  ReplyDelete
 28. ஆபீசில் வேலை இருந்ததால் என்னால் வரமுடியவில்லை பாஸ் .. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. பிறந்த நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 30. ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete
 31. நல்லா கவனிச்சிருக்கீங்க அண்ணே!!

  :))

  உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 32. happy b day mohan sir. have a blasting day.
  may peace and grace be with you, today and days to come.

  ReplyDelete
 33. சந்திப்பை சிறப்பாக பகிர்ந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன் சார்.

  ReplyDelete
 34. பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன்

  ReplyDelete
 35. *இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்*

  ReplyDelete
 36. பிறந்த நாள் வாழ்த்துகள் மோகன். ஆதியுடன் பேசியதையும் கவனித்தேன். நிறைவு :)

  ReplyDelete
 37. நல்லதோர் பதிவர் சந்திப்பு பற்றிய உங்கள் செய்திகள் கலகல....

  பிறந்த நாள் காணும் மோர் பதிவருக்கு , அட அது நீங்கதாங்க, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

  ஒரு விஷயம் ஹிந்தியில் “மோர்” என்றால் மயில் என்று அர்த்தம்.... :)))

  ReplyDelete
 38. வாழ்த்து சொன்ன பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...