Monday, August 8, 2011

வானவில்: அழகர் சாமியின் குதிரை.. கல்கி கவிதை !

பார்த்த படம் அழகர் சாமியின் குதிரை 
அழகர் சாமியின் குதிரை இப்போது தான் பார்க்க முடிந்தது. இந்த வருடம் வெளிவந்த நல்ல திரைப்படம் என நிச்சயம் சொல்லலாம். பிற நாட்டு படங்களின் பாதிப்பின்றி இப்படி ஒரு நல்ல படம் எடுத்தமைக்கே பாராட்ட வேண்டும். அடுத்து அப்புக்குட்டி போன்ற ஒருவரை ஹீரோவாக போட்ட தைரியம். படம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. கோயிலில் உள்ள குதிரை வாகனம் யார் திருடியது, எப்படி கிடைக்கும் என்ற சஸ்பென்ஸ் நம்மை தொடர்ந்து ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. கிளைமாக்ஸ் சற்று dramatic !! ராம ராராயணன் படங்கள் மாதிரி குதிரை எல்லா கெட்டவர்களையும் அஞ்சு நிமிஷத்தில், செய்த தப்புக்கேற்ற மாதிரி "அந்தந்த" இடத்தில் மிதிக்கிறது!! இளைய ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. மொத்தத்தில் படம் பார்த்து முடிக்கும் போது ரொம்ப நிறைவாக உள்ளது. சமீபத்திய இயக்குனர்களில் நிச்சயம் சுசீந்திரன் கவனிக்க படவேண்டியவர். மூன்று படங்களும் இதுவரை மிக டீசன்ட் ஆகவும், வித்தியாசமாகவும் தந்துள்ளார். அவசியம் பாருங்கள் அழகர் சாமியின் குதிரை.

கல்கியில் கவிதை


நீண்ட நாள் கழித்து எனது கவிதை ஒன்று புத்தகத்தில் பிரசுரம் ஆகியுள்ளது. சென்ற வார கல்கியில் வெளியானது இந்த கவிதை...


சொந்த ஊர் பற்றிய பாடல் ஒன்று 

தனது ஊருக்கு சென்று பெற்றோரை பார்க்க முடியாத சோகம் சொல்கிறது மேலே உள்ள கவிதை. சொந்த ஊர் பற்றிய பாடல்களில் என்னை மிக கவர்ந்தது இந்த பாடல். வீடியோவாக பார்க்கையில் அவ்வளவு தூரம் ஈர்க்காததன் காரணம் இந்த பாடலை கேட்ட பல்வேறு தருணங்களிலும் என் சொந்த ஊரே மன கண்ணில் ஓடியதாக இருக்கலாம். ஆடியோவில் கேட்க, கேட்க அலுக்காத பாடல் இது. பேருந்தில் எங்கள் ஊரான நீடாமங்கலத்தில் நுழையும் போது வாக்மேனில் இந்த பாடலை கேட்டவாறே , "பாலங்கள், ஆறுகள், தெருக்கள்" பற்றிய வரிகளோடு இந்த பாடலின் நாயகனாக சில முறை வாழ்ந்திருக்கிறேன்.


இந்த பாடலின் காட்சியமைப்பில் என்னை கவர்ந்தது: சிறுவனை ஹீரோயினும், நடக்க முடியாத பெரியவரை ஹீரோவும் தூக்கி வருகிற இடம் தான். (பிடித்த பாடல்கள், அதன் காரணத்தோடு இனி அவ்வப்போது இப்படி பகிர எண்ணம்..)

கிரிக்கெட் கார்னர்


இங்கிலாந்தில் ஆடும் இந்திய அணியை பார்த்தால் பாவமாய் இருக்கு. ஹர்பஜன் இவ்வளவு மோசமாக பவுலிங் போட்டு பார்த்ததில்லை. பேட்டிங்கில் டிராவிட் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி யாரும் ஆட வில்லை. உலகின் மிக நீண்ட டெயில் நம் டீமுடையது. மாறாக இங்கிலாந்து அணியில் கடைசி ஆட்களின் ஆவரேஜ் யுவராஜ், ரைனா போன்ற நமது பாட்ச்மேன்களின் டெஸ்ட் ஆவரேஜ் போல் உள்ளது. டிராவிட் முதல் இரு மேட்ச்களிலும் அற்புதமாக ஆடினார். மிக மெதுவாக ஆடுகிறார் என டிராவிடை வெறுக்கும் ஆட்களும் கூட ரசிக்கும் படி இருந்தது அவர் ஆட்டம் !

எப்போது லேண்ட்மார்க்கை நெருங்கினாலும் சில மேட்சுகள் நம்மை காக்க வைத்து விட்டு பின் கடப்பது தான் சச்சினின் வழக்கம். அவரை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் அவரும் நூறாவது செஞ்சுரி அடிப்பார் என மேட்ச் நடக்கும் நாட்களில் ஒரு பக்கம் விளம்பரத்திற்கு ஒதுக்கி வைத்து ஏமாறுகின்றன.

இந்தியா தனது நம்பர் ஒன் டெஸ்ட் ஸ்டேட்டசை தற்காலிகமாவது இழக்கத்தான் போகிறது. அடுத்தடுத்த சீரிஸ் ஆவது ஒழுங்காக ஆடி மீண்டும் நம்பர் ஒன் ஆனால் சரி !

QUOTE HANGER

As food is necessary for the body, prayer is necessary for the soul.

நாட்டி கார்னர்

(எங்கள் வீட்டு கிளி நாட்டியின் குறும்புகள் சில அவ்வப்போது இங்கு பகிரப்படும்).

காலை எழுந்ததும் அநேகமாய் அனைவரும் நாட்டி அருகில் சில நிமிடங்களாவது செலவிடுவதும், அதனை கொஞ்சுவதும் வழக்கமாகி விட்டது. ஒரு நாள் முதலில் எழுந்த நான் கூண்டினுள் பார்க்க நாட்டியை காணும். ரூம் முழுதும் பார்த்தும் ஆளை காண வில்லை. டியூப் லைட் போட்டு பதட்டத்துடன் தேட, டைனிங் டேபிள் கீழே ஒளிந்து கொண்டு அமர்ந்திருந்தது நாட்டி ! பின் மெதுவாய் நடந்து வந்து கூண்டினுள் சென்று விட்டது. அது காணாமல் பதட்டப்பட்ட நிமிடங்கள் செம டென்ஷன் !

நாட்டி பல நேரம் கூண்டில் உள்ள கட்டையில் அமர்ந்து கொண்டு கீழே பாத்திரத்தில் உள்ள ஏதாவது உணவை சாப்பிடும். இப்படி கீழே குனிந்து சாப்பிடுவதால் தலை கீழாய் சாப்பிடுவது போல் இருக்கும். கூண்டிற்குள் கீழ் பக்கம் வந்து அமர்ந்தும் சாப்பிடலாம். ஆனால் நாட்டிக்கு இப்படி தலை கீழாய் சாப்பிடுவது தான் பிடிக்கிறது!

அய்யாசாமி

"கடவுளால் கூட முடியாத விஷயம் ஒண்ணு உண்டு. நடந்ததை மாத்த அவராலும் முடியாது" இது மனசுல நல்லா பதிஞ்சு போனதிலிருந்து, கடந்த காலம் பத்தி அதிகம் வருத்தப்படுவதில்லை. ஆனா எதிர் காலம் பற்றி பயம், யோசனை இல்லாம இருக்க முடியலை. "எல்லாம் நல்லா தான் போய்க்கிட்டுருக்கு ஆனா கூட ஏன் எதிர் காலம் பத்தி பயம் இருந்து கிட்டே இருக்கு?"  என்னென்னவோ சொல்லி உள்ளுக்குள்ளே இருக்க ஆளை சும்மா இருக்க சொன்னாலும், அவரு அடங்காமல் எதையாவது எடுத்து விட்டுகிட்டே இருக்கார். இதுக்கு என்ன தான் பண்றது? இது எனக்கு மட்டுமா? எல்லாருக்குமா? பதில் சொல்லுங்க மக்களே "

14 comments:

 1. "அழகர் சாமியின் குதிரை..

  ம்ம்.. இப்பவாவது பாத்தீங்களே..
  நான் இப்பவும் பாக்கல..

  // கல்கி கவிதை !"//
  பாராட்டுக்கள்..

  என்ன பண்ணுறது.. எரோப்லேன்லாம் பங்க்சுவலா வர்றதில்ல..

  ReplyDelete
 2. நல்ல தொகுப்பு மோகன்.. கல்கி கவிதைக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 3. கல்கியில் வெளியான கவிதைக்கு, வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 4. சொற்சுருக்கமும், எழும் உணர்வும் ... கவிதை பிரமாதம்!

  ReplyDelete
 5. நல்ல பதிவு. கல்கி கவிதை மனதை கனக்க வைத்தது. வெளியானதற்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 6. கல்கியில் கவிதை முன்பே பார்த்தேன். நீங்கள்தானா என்று சந்தேகமாக இருந்தது. பாராட்டுகள்.

  ReplyDelete
 7. கல்கி கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

  நாட்டிக்கு வானவில்லில் ஒரு வர்ணம்:)! நன்று.

  ReplyDelete
 8. பாடல் மிக அருமை. இந்தப்பாட்டை கேட்டால் இனி நானும் எங்கள் ஊரை நினைத்துக் கொள்வேன்.

  // "எல்லாம் நல்லா தான் போய்க்கிட்டுருக்கு ஆனா கூட ஏன் எதிர் காலம் பத்தி பயம் இருந்து கிட்டே இருக்கு?"...இது எனக்கு மட்டுமா? எல்லாருக்குமா? பதில் சொல்லுங்க மக்களே//

  கொஞ்ச நாள் கழித்து எதிர்காலம் கடந்த காலம் ஆகிவிடும். அப்புறம் நீங்கள் கவலை பட வேண்டியதில்லை. ஏனென்றால் "கடவுளால் கூட முடியாத விஷயம் ஒண்ணு உண்டு. நடந்ததை மாத்த அவராலும் முடியாது"

  ஹி ஹி எப்படி?

  உண்மையை சொல்லப்போனால் நான் அதிகமாக எதிர் காலத்தை பற்றி கவலை படுவதில்லை. ஏனெனில் எதிர்காலமும் நம் கையில் இல்லை.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு. கல்கியில் வெளியான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. கிட்டதட்ட ஒரு வருஷம் கழிச்சி படம் பார்த்துட்டு, அவசியம் பாருங்கன்னுன்னு ரெக்கமண்டேஷன் வேற, யேண்ணே... :-)

  ReplyDelete
 11. நல்ல வண்ணங்கள்...

  கல்கியில் வெளியான கவிதை மனதை கனக்க வைத்தது. வெளியானதற்கு பாராட்டுகள்.

  நாட்டி கார்னர் :)))

  ReplyDelete
 12. அழகர்சாமியின் குதிரையில் ஆரம்பித்து,

  அய்யாசாமியின் நாட்டில முடிச்சிருக்கீங்க...

  ஹி.. ஹி..

  //எதிர் காலம் பற்றி பயம், யோசனை இல்லாம இருக்க முடியலை//
  பொறுப்பான மனுஷங்களுக்கு இருக்கத்தான் செய்யும். எனக்கும் இருக்குல்ல.. :-))) ஆனா, நான் யோசிக்க/பயப்பட மட்டுமே செய்கிறேன் ;-)))))

  ReplyDelete
 13. azhagarsaamiyin kudirai is still on the list.
  naughty is our favourite too these days.
  somehow i dont think abt the future at all(neither the past).a boon in one way, a curse too. it is always good to plan things ahead... may be one needs to consider fear of future as a positive stress?! could be productive even.

  ReplyDelete
 14. //"அழகர் சாமியின் குதிரை..

  ம்ம்.. இப்பவாவது பாத்தீங்களே..
  நான் இப்பவும் பாக்கல..//

  நானும் இப்படித்தான் சொல்லணும்.

  ***********************

  கல்கி கவிதைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...