Monday, August 29, 2011

பெண் பார்த்த அனுபவங்கள்

ருபத்தைந்து வயது ஆன போதே பெரியண்ணன் எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார். படித்து முடிக்கவே இருபத்தி நான்கு வயதாகியது. பெண் பார்க்க ஆரம்பித்த போது நல்ல வேலையில் இல்லை. அதுக்குள் கல்யாணமா? மனுஷனை கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்க விடுங்க சாமிகளா என கெஞ்சியும் கேட்க வில்லை (அண்ணன்கள் வாழ்க்கையை பார்த்தே கல்யாண கஷ்டம் புரிந்திருந்தது ...)

சரி... கல்யாணம்னு செய்தால், வேலைக்கு போகும் பெண்ணை தான் செய்துப்பேன் என்றேன்... வீட்டில் கடும் எதிர்ப்பு... அண்ணிகள் இருவரும் வேலைக்கு போக வில்லை.. ஆனால் என் அக்கா ஒரு டாக்டர். அக்கா வேலை பார்க்கும் போது, என் மனைவி வேலை பார்க்க கூடாதா?? யாரும் கடை குட்டியான என் பேச்சை (எப்போதும் போல்) கேட்கவே இல்லை... ஊரில் உள்ள பல ஜாதகங்களை அலசி ஆராய்ந்தனர்...

ஒரு முறை தஞ்சை சென்றிருந்த போது அண்ணன், "வா வெளியே போகலாம்" என அழைத்து கொண்டு போனார். ஒரு சாதாரண சட்டை, கைலியுடன் எதற்கு என்று தெரியாமலே அவர் வண்டி பின்னால் அமர்ந்து செல்கிறேன்.. ஒரு போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். புகைப்படம் எடுப்பவரையே எனக்கு டை மாட்டி விட வைத்தார்.. அதற்கு மேல் கோட் வேறு.. (டை, கோட் போன்றவை ஸ்டுடியோவில் எப்பவும் இருக்கும் என்பதே அன்று தான் எனக்கு தெரிந்தது!)


மேலே கோட் கீழே லுங்கி உடன் எடுத்த இந்த போட்டோவை வைத்து தான் என்னை மாப்பிள்ளை என மார்க்கெட்டிங் செய்தார். அந்த போட்டோ ஓரளவு நன்றாகவே வந்திருந்தது.எனது மனைவி பார்த்து மயங்கிய (!!???) முதல் போட்டோவும் இதுவே!

********** **************** ****************
அண்ணன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மிகவும் வற்புறுத்தினார். சொந்தமாய் ஒரு வீடும் கூடவே டிவி, பிரிட்ஜ் , டூ வீலர் என அனைத்தும் அவர்கள் தருவதாகவும் வாழ்க்கையில் உடனே செட்டில் ஆகி விடலாம் என்றும் செம பிரைன் வாஷ் செய்தார். ஆனால் வேலைக்கு செல்லும் பெண் என்கிற நம்ம பாலிசி மேட்ச் ஆகலை. அதோடு பெண்ணின் பெயர் காளீஸ்வரி! "எனக்கு பெயரே பிடிக்கலை. கல்யாணம் செய்துக்க மாட்டேன்" என்றேன். "பேரையாடா கல்யாணம் பண்ணிக்க போற? பொண்ணை தானே கட்டிக்க போறே?" அண்ணன் கோபத்தில் திட்டினார்.

இந்த வாக்குவாதம் நடந்தது தஞ்சையில். அன்று அண்ணன் வீட்டுக்கு போய் விட்டு சென்னை திரும்புகிறேன். அவரது வண்டியில் என்னை ரயில் நிலையத்தில் இறக்கி விட வந்து கொண்டிருந்தவர், கடைசி வரை காளீஸ்வரியை திருமணம் செய்து கொள்ள நான் ஒத்து கொள்ளாததால் கோபமாகி நடு வழியில் இறக்கி விட்டு போய் விட்டார். (ரயிலுக்கு பத்தே நிமிடம் மீதம் இருக்க ஆட்டோவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் லிப்ட் கேட்டு, ஓடி வந்து டிரைன் பிடித்தேன்....)

********* *********** ************
ஒரு வழியாய் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ஒத்து கொள்ள, முதன் முறையாய் பெண் பார்க்க அண்ணன், அண்ணி உடன் செல்கிறேன். சென்னையின் வழக்கமான ஒரு கொதிக்கும் நாளாக தான் அது இருந்தது. மாலை நேரம் ஒரு வாடகை காரில் கிளம்பினோம். சற்று நேரத்தில் சரியான பேய் மழை.. இடி, மின்னல்!! ஒரு வழியாய் பெண் வீட்டை அடைய அங்கு கரண்ட் கட்! மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் பேசினோம். அநேகமாய் அனைவருமே சகுனம் சரி இல்லை என்ற எண்ணத்துடன் இருந்தனர். இதில் பெண்ணையும் என்னையும் தனியே வேறு பேச வைத்தனர்.. இடி சத்தம்.. மழை. இதற்கு நடுவில்.. ஒரு சந்திப்பு.. நான் எதோ உளறி கொட்டினேன்.. சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டு வீடு வந்தோம்.

பெண் வீட்டார் "சகுனம் சரி இல்லை; ஜாதகம் பொருந்தலை" என தகவல் அனுப்பினர்.. அண்ணன் நான் பெண்ணிடம் பேசியதால் தான் இப்படி ஆனதாகவும் இனி பெண் பார்க்க போகும் போது, எந்த பெண்ணிடமும் தனியே பேசக்கூடாது என்றும் கூறினார் !
********* *********** ************

அடுத்து பெண் பார்த்தது எனது மனைவியை தான்…

மறைந்த நண்பன் லக்ஷ்மணன் நினைவாக அவனது கவிதை புத்தக வெளியீடு நடந்த அன்று, அதே நேரத்தில் நான் பெண் பார்க்க வருவதாக, பெண் வீட்டில் அண்ணன் சொல்லி இருந்தார். என்னிடம் இதை சொல்ல, நான் முடியவே முடியாது என போகாமல் இருந்து விட்டேன். அண்ணனுக்கு பயங்கர கோபம். லட்சுமணன் விழா நடக்கும் ஹால் தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டுபிடித்து (அப்போ செல் போன் நஹி)  " பெண் பார்க்க போ.." என்று ஆர்டர் போட்டார்.. நான் "முடியாது" என மறுத்தேன்.. "மதியம் அல்லது மாலையாவது போ " என்றார்.. "எல்லா ஊர்களில் இருந்தும் பிரண்ட்ஸ் வந்துருக்காங்க. இன்று போகவே முடியாது என மறுத்து விட்டேன்.. (அன்று என் மனைவி வீட்டில் எங்களுக்காக பஜ்ஜி முதலியவை செய்து வைத்து, நாங்கள் வராமல் ஏமாந்தனராம்.)

பின் மீண்டும் மறு நாளே பெண் பார்க்க ஏற்பாடு செய்து விட்டார். சென்னையில் உள்ள அண்ணனின் நண்பர் ஒருவருடன் வேண்டா வெறுப்பாக தான் பெண் பார்க்க சென்றேன். காரில் செல்லும் போது தற்போது திருமணம் வேண்டாம் என அவரிடம் புலம்பி தள்ளியவாறே சென்றேன். ஆனால் பெண்ணை பார்த்ததும், உடனே மனதுக்குள், " இவள் தான் என் மனைவி" என உள்ளுணர்வு மிக தெளிவாக சொல்லி விட்டது..

சினிமாவில் வருவது போல் காபி உடன் தலை குனிந்தவாறு பெண் வர வில்லை. நாங்கள் பேசி கொண்டிருக்கும் போது ரொம்ப சாதாரணமாக வந்து எங்களுடன் அமர்ந்து, எந்த தயக்கமும் இல்லாமல் பேசினாள்.

காரில் திரும்ப செல்லும் போது ஒரு முழு பல்டி அடித்து "இந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்.. பேசி முடிக்க சொல்லுங்க" என்று கூறி விட்டேன். வரும் போது பேசினதுக்கு கொஞ்சமாவது வெக்கபடனுமே.. ம்ஹும்..

இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்றவன் எப்படி கல்யாணத்திற்கு ஒத்து கொண்டான் என வீட்டில் அனைவருக்கும் ஆச்சர்யம். ஆனால் அண்ணன் அதற்கு பின்னும், டூ வீலர் வாங்கி தர சொல்லி பெண் வீட்டில் கேட்க, அதற்காகவே வேறு வரன் பார்க்கும் அளவு அவர்கள் போய் விட்டனர்.

ஒரு பக்கம் நான் அண்ணனிடம், " டூ வீலர் எல்லாம் வேண்டாம்; ஒழுங்கா இந்த alliance- ஐ முடி.." என சொல்ல......

" வேறு வரன் பார்க்கலாம்" என்ற என் மாமனார் மாமியாரிடம் என்னோட "அழகில் மயங்கி விழுந்த" மனைவியும் " இவர் தான் வேணும்" என அடம் பிடிக்க (ம்ம் விதி வலியது!!) ரெண்டு குடும்பமும் புரிந்து கொண்டு எங்க நிச்சய தார்த்தம் நல்ல படியா நடந்தது. 

அடுத்த ஒண்ணரை மாதத்தில் கல்யாணம். ம்ம் காதலர்களாக சென்னையில் சுற்றி திரிந்தது அந்த ஒண்ணரை மாதம் தான்.
******* *********** ************
திருமணம் நிச்சயம் ஆன பிறகு என் மாமனார் அவ்வபோது என் அலுவலகம் வருவார். அப்படி வரும் போது ஒரு முறை சொன்னார் "நீங்க ரொம்ப நல்ல டைப். ஆனா ரொம்ப பாவம்..." என்று.அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.சில வருடங்கள் கழித்து புரிந்த போது ஒன்றும் செய்ய முடிய வில்லை..
********* *********** ************
எங்கள் திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், நாங்கள் தேனிலவில் இருக்கும் போதே இரண்டு பெண்கள் இறந்த செய்தி எங்கள் காதுகளை எட்டியது... ஹலோ.நீங்களா எதுவும் கற்பனை செய்யாதீங்க.. இறந்தவர்கள் பேரை கேளுங்க... முதலாமவர் இளவரசி டயானா. அடுத்தவர் மதர் தெரசா.

மனைவியிடம் "மோகன் குமாருக்கு கல்யாணம் ஆன சோகத்தில் தான் இந்த ரெண்டு பெரும் இறந்திட்டாங்க.." என்றேன்...

கல்யாணமான புதிது என்பதால் அப்போதெல்லாம் மனைவி என்னை அடிக்க ஆரம்பிக்க வில்லை. அந்த தைரியம் தான் !!

39 comments:

 1. மோகன் சார்.. உங்களுக்கு கல்யாணம்'ன்னு கேள்விப் பட்டதும் டயானாவே மனசொடைஞ்சு "போயிட்டாங்களா".. :)) Anyways.. Happy Wedding Anniversary!

  ReplyDelete
 2. Your Photo speaks lot of expressions

  1. you are in jail looking out side

  2. is there any possible to jump out side (may be too height)

  3. is there any followers are coming

  4. seeing the responsible people for this cause.

  ReplyDelete
 3. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.


  //எனது மனைவி பார்த்து மயங்கிய (!!???) முதல் போட்டோவும் இதுவே!
  //

  //காரில் திரும்ப செல்லும் போது ஒரு முழு பல்டி அடித்து "இந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்.. பேசி முடிக்க சொல்லுங்க" என்று கூறி விட்டேன். வரும் போது பேசினதுக்கு கொஞ்சமாவது வெக்கபடனுமே.. ம்ஹும்..//


  //திருமணம் நிச்சயம் ஆன பிறகு என் மாமனார் அவ்வபோது என் அலுவலகம் வருவார். அப்படி வரும் போது ஒரு முறை சொன்னார் "நீங்க ரொம்ப நல்ல டைப். ஆனா ரொம்ப பாவம்..." என்று.அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.சில வருடங்கள் கழித்து புரிந்த போது ஒன்றும் செய்ய முடிய வில்லை..//

  //கல்யாணமான புதிது என்பதால் அப்போதெல்லாம் மனைவி என்னை அடிக்க ஆரம்பிக்க வில்லை. அந்த தைரியம் தான் !!//

  ஹா ஹா ஹா

  ரொம்பவே ரசிச்சி படிச்சேன்.

  ReplyDelete
 4. நல்ல அனுபவங்கள்..
  திருமண தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா....

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் பாஸ். :-))

  ReplyDelete
 7. திருமண நாள் வாழ்த்துக்கள். ஒரு வரியில் சொன்னால் அடி விழும் என்பதற்காக அல்ல, நான் ரசித்த சில கீழே...

  கீழே லுங்கி, மேலே சட்டை, கோட், டை - நினைத்து பார்க்கவே சிரிப்பு தான்...

  என்னுடைய பெண் பார்க்கும் அனுபவம் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். நான் பார்க்கும் முதல் பெண்ணையே திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையுடன் இருந்தேன். அதில் வெற்றியும் அடைந்தேன்.

  நிறைய இடங்களில் நீங்கள் "அனுபவித்து" எழுதி இருப்பது புரிகிறது....

  மீண்டும் திருமண நாள் வாழ்த்துக்கள் மோகன்...

  ReplyDelete
 8. இனிய மணநாள் வாழ்த்துக்கள். தெரசா,டயானால்லாம் படிச்சிட்டோம்..ஒக்கே?!!

  ReplyDelete
 9. திருமண நாள் வாழ்த்துக்கள்! நீங்கள் பெண் பார்த்த கதையை சுவாரசியமாக எழுதி இருக்கீங்க. :-)

  ReplyDelete
 10. அண்ணே...

  நல்ல அனுபவம்...

  ..கல்யாணமான புதிது என்பதால் அப்போதெல்லாம் மனைவி என்னை அடிக்க ஆரம்பிக்க வில்லை. அந்த தைரியம் தான் !! ..

  அடிப்பதை விட அடி வாங்குவதில் சுகம் அதிகம் என நினைக்கிறேன்... சரியா அண்ணே...

  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சார்.

  பெண் பார்த்த அனுபவங்களை ரொம்ப நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 13. கடைசியில் வண்டி கிடைத்ததா இல்லையா.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. :)
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. அதிசயம்தான். எப்பவுமே இந்த பெண்
  பார்க்கும் வைபவம் பற்றியெல்லாம்
  பெண்கள்பேசித்தான் கேட்டிருக்கேன்.
  முதல்தடவையா உங்க அனுபவம். மிகவும் ரசனையான பதிவு, நல்லா
  சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 16. //திருமணம் நிச்சயம் ஆன பிறகு என் மாமனார் அவ்வபோது என் அலுவலகம் வருவார். அப்படி வரும் போது ஒரு முறை சொன்னார் "நீங்க ரொம்ப நல்ல டைப். ஆனா ரொம்ப பாவம்..." என்று.அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.சில வருடங்கள் கழித்து புரிந்த போது ஒன்றும் செய்ய முடிய வில்லை.//

  வாய்விட்டு சிரிச்சுட்டேன் :)))

  இனிய‌ திரும‌ண நாள் வாழ்த்துக‌ள் :) நாளைக்கு என்னோட‌ அப்பா அம்மாவுக்கு.

  ReplyDelete
 17. நன்றி மணிகண்டன். மனசொடைஞ்சு "போயிட்டாங்களா".. ரெண்டு அர்த்தத்தில் சொல்லி அசத்துறீங்க :))
  ***
  சேஷாத்ரி: உங்க கமெண்ட் மிக ரசித்தேன். போட்டோ பற்றி நான் நினைத்த சில விஷயம் நீங்க எழுதி இருக்கீங்க. குறிப்பாய் நீங்க எழுதிய முதல் ரெண்டு பாயின்ட் நினைத்து தான் இங்கு போட்டேன்
  ***
  தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது வரதராஜுலு சார்.
  ***
  நன்றி ராம்வி

  ReplyDelete
 18. நன்றி மணி & முரளிகுமார்
  **
  வெங்கட்: மகிழ்ச்சி. இது ஒரு மீள் பதிவு. எழுதும் போது மிக ரசித்து தான் எழுதினேன். நன்றி.
  **
  மரா: ஓகே நன்றி
  **
  நன்றி சித்ரா
  **
  சங்கவி : நீங்க இதுவரை அடி வாங்கலைன்னு தெரியுது . நன்றி

  ReplyDelete
 19. நன்றி மாலதி
  **
  நன்றி கோவை டு தில்லி மேடம்
  **
  அமுதா மேடம்: அதான் வண்டி வேண்டாம், பெண்ணே போதும்னு விழுன்தேட்டேனே ! அப்புறம் எங்கிருந்து வண்டி கிடைக்கும்?
  **
  இளங்கோ: நன்றி
  **
  லட்சுமி மேடம். பெரியவரான உங்க ஆசி இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி
  **
  நன்றி ரகு.அப்ப எங்க கல்யாண நாள் உங்களுக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும். அம்மா அப்பாவுக்கு வாழ்த்துகள் சொல்லுங்க. இல்லாட்டி நம்பர் குடுங்க. நான் பேசுறேன். கூடவே பையனுக்கு எப்ப கல்யானம்னு கேக்கலாம் பாருங்க :))

  ReplyDelete
 20. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

  ரொம்பவே ரசிச்சி படிச்சேன்....

  ReplyDelete
 21. Mail from Anantha Narayanan:

  Dear Mohankumar,

  Super o Super. I need to appreciate your openness in admitting the mistakes which most of the youngsters underwent at their marriage age. This blog was thoroughly interesting and I enjoyed every bit of it. I felt like watching a Bhagyaraj movie, I am forwarding this to my friends.

  Regards,

  Ananth

  ReplyDelete
 22. நல்ல பிளாஷ்பேக்....

  ''காரில் திரும்ப செல்லும் போது ஒரு முழு பல்டி அடித்து "இந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்.. பேசி முடிக்க சொல்லுங்க" என்று கூறி விட்டேன். வரும் போது பேசினதுக்கு கொஞ்சமாவது வெக்கபடனுமே.. ம்ஹும்.. ''


  ஹிஹிஹிஹி..........

  ReplyDelete
 23. very nice post. thoroughly enjoyed.happy anniversary to both of you.even i liked your madam.. the way u described her.

  ReplyDelete
 24. sir eppadiyavathu unmayayai sollungal eppadi ungalai azhagaga photo edukka chunneergal photo vil azhagagathaan irukkeereerigal.

  ReplyDelete
 25. வாழ்த்துகள்!

  மிகவும் சி(ரி/ற)ப்பான பதிவு.

  ReplyDelete
 26. திருமண நாள் வாழ்த்துக்கள்!பூங்கொத்தோடு!

  ReplyDelete
 27. திருமண நாள் வாழ்த்துக்கள் மோகன். நல்ல ரசனையான பதிவு.

  ReplyDelete
 28. //ஒரு முழு பல்டி அடித்து //

  //வரும் போது பேசினதுக்கு கொஞ்சமாவது வெக்கபடனுமே//

  கல்யாணக்களை அப்பவே வந்துடுச்சு பாருங்க!! அதாவது, கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் வழக்கமா செய்றதை அப்பவே செய்ய ஆரம்பிச்சுட்டீங்கன்னு சொல்றேன். :-)))))))))

  ReplyDelete
 29. அருமையான தருணங்கள்!
  ரசித்து படிதேன்...

  உங்களுக்குள் எத்துனை நகைசுவை உணர்வு...
  திருமண நாள் வாழ்துக்கள்...

  ReplyDelete
 30. // சில வருடங்கள் கழித்து புரிந்த போது ஒன்றும் செய்ய முடிய வில்லை..// ஹா ஹா ஹா

  அருமையாக கூறி உள்ளீர்கள்.... பசுமை நிறைந்த நினைவுகள்

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. Anonymous12:21:00 PM

  கிட்டத்தட்ட என் கதையும் உங்களைப்போலவே ஆகஸ்ட் 17ல் திருமணம், பெண்ணைப் பார்த்த உடனேயே இவள் தான் என் மனைவி என்று மனதில் தோன்றியது.. உண்மை. காரில் திரும்பி வரும் பொழுது குடும்பத்தார் அனைவரும் ஏற்றுக்கொள்ளாமல் கமெண்ட் அடிக்க, நான் பிடிவாதாமாக (என்ன செய்வது சனி அப்படி) ...

  சிவபார்க்கவி
  http://sivaparkavi.wordpress.com/

  ReplyDelete
 34. சூப்பர் கதை.என்னோடு அனுபவம் கொஞ்சம் மாறினது.

  நான் காலேஜிலே படிக்கும்போது என் நண்பன் என்னை ஒரு பஞ்சாபி பொண்ணோடு மாட்ச் பண்ணி விட்டான். அவனுக்கும் தமிழ் தெரியாது. அவளுக்கும் தமிழ் தெரியாது.

  அழகா தான் இருந்தா . ஆனா பேர் வந்து அருணா குண்டி. எப்படி அம்மா கிட்டே ஒரு குண்டியெ கல்யாணம் பண்ணிக்கனம்னு சொல்லறது!!

  வேண்டாம்னு சொல்லிட்டேன் :)  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...