Wednesday, December 21, 2011

2011-ன் மாபெரும் மொக்கை படங்கள்

நூறு படம் வந்தால் பத்து படம் தான் ஓடுகிறது. மீதம் தொண்ணூறும் தயாரிப்பாளர் கையை கடிக்கிறது ...அறுவையாகவும் இருக்கிறது ! அதற்காகவெல்லாம் படம் பாக்காம இருக்க முடியுமா? அதிக சிரமம் இன்றி இந்த வருடத்தின் சிறந்த பத்து மொக்கை படங்களை தேர்ந்தெடுத்தேன்.

******
சென்ற வருடத்தின் (2010) சிறந்த மொக்கை படங்களை இங்கே வாசிக்கலாம்
******
சிறு படங்களில் பல தோல்வி என்றாலும், அவற்றை கணக்கில் எடுக்கலை. சற்றேனும் எதிர் பார்க்க வைத்து தோல்வி அடைந்தவை மட்டுமே இங்கு கணக்கில் உள்ளது. வாருங்கள் மொக்கை படங்களை சற்று ரீ- வைன்ட் செய்து பார்ப்போம்.

வெடி

விஷால், சமீரா ரெட்டி என்கிற டபிள் ஹீரோ சப்ஜக்ட். என்னது சமீரா ரெட்டி ஹீரோயின் ஆச்சே அப்புடீங்கறின்களா? ம். நீங்க தான் அப்படி சொல்றீங்க. நமக்கு ஒன்னும் அப்படி தோணலை. டுவிட்டரில் கூட பலர் சமீராவை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. சமீரா பையன் தனி ஹீரோவா நடிக்க பாக்கலாம்.

சரி வெடி படத்துக்கு வருவோம். போலீஸாக இருக்கும் விஷால் வில்லன்களை பந்தாடும் கதை. இதில் தங்கச்சி செண்டிமென்ட் வேற ! முடியலை ! விவேக் காமெடி கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது. "இச்சு இச்சு இச்சு கொடு " பாட்டு ஓரளவு பிடித்தது. அந்த பாட்டு சாருவுக்கு(ம்) பிடிக்கும் என்ற பிறகு எனக்கு பிடிக்காமல் போயிடுச்சு !

சன் டிவி தயாரிச்சு செமையா ஊத்தி கொண்ட படம். புது மாப்பிள்ளை பிரபு தேவாவின் வெடி நமத்து போயிடுச்சு.

வந்தான் வென்றான்

ஜீவா மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோருக்காக பார்த்து நொந்த படம். வெளியான ஒரு மாசத்துக்குள், ஜெயா டிவியில் போட்டுட்டாங்கன்னா பாத்துக்குங்க எப்படி இருக்கும் படம்னு? தாப்சி... "பே.......ப்சி".

அஞ்சனா..அஞ்சனா & காஞ்சனமாலா ரெண்டு பாட்டு மட்டும் நல்லா இருந்தது. இந்த தயாரிப்பாளர் இனி சினிமா தயாரிப்பாரா??

அவன் இவன்

பாலா இயக்கிய படம் இந்த லிஸ்டில் வருவது எனக்கே கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு. இருந்தாலும் உண்மையை சொல்லி தானே ஆகணும்? காமெடி என்று சொல்லி கெட்ட வார்த்தைகளில் பெண்கள் பேசினார்கள். டைரக்டர் சார் இது தான் உங்க டக்கா? வழக்கமான பழி வாங்கும் கதைக்கு எதுக்கு பாலா வேணும்? ஆர்யா முடியை டைரக்டர் ஒரு வழி பண்ணார். விஷால் இன்னும் பாவம். படம் முடியறதுக்குள் கண்ணு வலி வந்துடுச்சு. பாலா இதுவரை எடுத்த படங்களில் கடைசி இடம் இந்த படத்துக்கு தான் தரணும். இதை விட மோசமான படம் இனி மேல் தர மாட்டார் என நம்புவோம்.

எங்கேயும் காதல்

சன் மற்றும் பிரபு தேவா கூட்டணிக்கு இன்னொரு மாபெரும் தோல்வி படம் ! அருமையா பாட்டு போட்டு கொடுத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். கொடுமையான கதையால் அவை அனைத்தும் நாசமாகி விட்டது. காதில் பூ சுற்றும் கதை. ஜெயம் ரவி நடித்து இந்த ஆண்டு வெளி வந்த ஒரே படம்.. இப்படி ஆகிடுச்சு. ஹன்சிகா பார்த்து நம்ம பதிவர்கள் பலர் ஜொள்ளு விட்டனர். ஆனால் படம் பார்த்தா வெறுத்து போயிருப்பாங்க.

யுவன் யவதி

பரத் என்கிற சற்று மார்கெட் உள்ள நடிகர் நடித்ததாலும் , சந்தானம் இருந்ததாலும் ஓரளவு எதிர் பார்ப்பு ஏற்படுத்திய படம். ஆனால் ஒரு வாரம் கூட எந்த தியேட்டரிலும் ஓட வில்லை. இந்த வருடத்தின் மாபெரும் தோல்வி படம் + தயாரிப்பாளரை மட்டையாக்கிய படம் என போட்டி வைத்தால் இந்த படம் tough fight கொடுக்கும்

வெப்பம்

இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பு, பெண் இயக்குனர் இயக்கம் என்பதால் தான் பார்த்தேன். தாதா கதையை இவ்வளவு அறுவையாகவும் சொல்ல முடியுமா? கொடுமைடா சாமி !! இருந்தும் இந்த படத்தை முழுவதும் பார்க்க காரணம் நித்யா மேனன் என்கிற ஹீரோயின்.. ஹிஹி

மாப்பிள்ளை

ரஜினி நடித்த மாப்பிள்ளையே எனக்கு பிடிக்காத படம். அதுக்கு ரீ மேக் வேறா? ஆடு களம், மயக்கம் என்ன மாதிரி அருமையாக நடித்த தனுஷுக்கு இந்த படம் திருஷ்டி பொட்டு. விவேக் காமெடி சிரிப்பு வரலை; சன் டிவியின் மற்றொரு தோல்வி படம்.

நடுநிசி நாய்கள்

இந்த படம் எடுத்த இயக்குனரை என்ன சொல்லி திட்டுவது? படம் வெளி வந்த போதே போதும் போதும் என்கிற அளவு திட்டி விட்டார்கள். நான் விஜய் டிவியில் போட்ட போது தான் பார்த்தேன். பல காட்சிகள் டிவியில் வெட்டி தள்ளி விட்டனர். அப்போதும் பார்க்க கொடுமையாக இருந்தது. கெளதம் மேனன் என்கிற இயக்குனருக்கு ஒரு நல்ல இமேஜ் இருந்தது. அது இந்த படத்தால் சற்று சரிந்தது என்பது உண்மை.

தூங்கா நகரம்

அய்யா அவர்களின் பேரன்,  அய்யா ஆட்சியில் இருக்கும் போது எடுத்த படம். இருந்தும் படத்தை ஓட வைக்க முடியலை. நாலு நண்பர்களை கொண்டு கதை சொன்னாலே படம் ஓடிடுமா என்ன? இயக்குனரே ஒரு நண்பன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு பிளாஷ்பேக்குகள் மேல் என்ன அப்படி ஒரு காதலோ? பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக்.. அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக்.. என படமே பிளாஷ்பேக்குகளில் நகர்கிறது.

தூங்கா நகரம். நம்மை தியேட்டரிலேயே, படம் பார்க்கும் போது தூங்க வைத்த படம்.

விருதகிரி

கேப்டன் இயக்குனர் ஆன படம். காமெடியன் இல்லா விட்டாலும் கேப்டனே அந்த குறையை போக்கினார் . படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் நண்டு, சுண்டு கேரக்டர்கள் கூட கேப்டனை வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். வில்லன்களே இவரை புகழும் போது வயிற்றை பிடித்து கொண்டு நாம் சிரிப்பது உறுதி.

சீரியஸ் படம் என்கிற போர்வையில் வந்த சிரிப்பு படம் இது !
*******
மொக்கை படங்கள் லிஸ்ட் பார்த்தாச்சு. இந்த வருடத்தின் சிறந்த படங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் !
*******
தொடர்புடைய பதிவுகள் : 2011-ன் சிறந்த பத்து பாடல்கள்

21 comments:

 1. அவன் இவன் , விருத்தகிரி ஓரளவிற்கு வசூல் செய்த படம் என்று சொன்னார்களே...

  ReplyDelete
 2. viruthagiri vasool avan ivan flop

  ReplyDelete
 3. நன்றி கோவை நேரம்
  **
  கேபிள்: நீங்க விருதகிரியை முதலில் இருந்தே ஆதரித்து வருகிறீர்கள். நான் மொக்கை என்று தான் சொல்கிறேன். படம் ஓரளவு வசூல் ஆகியிருக்கலாம்

  ReplyDelete
 4. லத்திகா இந்த வரிசையில் இல்லை..நீங்க சரியா தரவரிசைப்படுத்தலையா...இல்ல அதெல்லாம் ஒரு படமாகவே எடுத்துக்கிடலையா?

  ReplyDelete
 5. லத்திகா இந்த வரிசையில் இல்லை..நீங்க சரியா தரவரிசைப்படுத்தலையா...இல்ல அதெல்லாம் ஒரு படமாகவே எடுத்துக்கிடலையா?

  ReplyDelete
 6. Anonymous11:59:00 AM

  சிறு மாற்றங்களுடன் மீண்டும் பாருங்கள்.

  கண்டுபிடியுங்கள் பிரபல பதிவர்களை

  http://www.thothavanda.blogspot.com/2011/12/blog-post_21.html

  ReplyDelete
 7. விருதகிரி

  கேப்டன் இயக்குனர் ஆன படம். காமெடியன் இல்லா விட்டாலும் கேப்டனே அந்த குறையை போக்கினார் . படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் நண்டு, சுண்டு கேரக்டர்கள் கூட கேப்டனை வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். வில்லன்களே இவரை புகழும் போது வயிற்றை பிடித்து கொண்டு நாம் சிரிப்பது உறுதி.//

  வருத்தகறி ச்சே ச்சீ விருதகிரி பார்த்துட்டு பேதி பீதி ஆகி ஓடிப்போனவர்களை எனக்கு தெரியும் ஹி ஹி...

  ReplyDelete
 8. சரியான பார்வை சரியான அலசல்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. //இந்த வருடத்தின் சிறந்த படங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் !//

  ஓகே, வெயிட் பண்ணா போச்சு!

  ReplyDelete
 10. போன‌ ஜென்ம‌த்துல‌ நான் ஏதோ புண்ணிய‌ம் ப‌ண்ணியிருக்கேன் மோக‌ன். உங்க‌ லிஸ்ட்டில் இருக்கும் எந்த‌ ப‌ட‌த்தையும் நான் பார்த்த‌தில்லை :)

  ReplyDelete
 11. வந்தான் வென்றான் - வந்தான் கொன்றான் (ஷேவாக்)
  எங்கேயும் காதல் - இங்கேயும் மோதல் (ஜெ, சசி)

  ReplyDelete
 12. நல்ல தொகுப்பு மோகன். இந்த பத்து படங்களும் தேறவே தேறாது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 13. நல்ல படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.. லிஸ்ட் ஒத்துப் போகுதான்னு பார்க்க.

  ReplyDelete
 14. காளிராஜ்: நான் லத்திகா பாக்கலை
  **
  நன்றி மனோ
  **
  செந்தில்: நன்றி
  **
  ரமணி: நன்றி
  **
  அமைதி அப்பா: நன்றி

  ReplyDelete
 15. ரகு: யூ ஆர் லக்கி
  **
  நன்றி வாசகன். வெளி நாட்டில் இருந்தாலும் தமிழகத்தையே நினைக்கிறீர்கள்
  **
  ஒஸ்தி சுமார்னு சொல்றாங்க ஷர்புதீன். மொக்கை லிஸ்டில் சேராதுன்னு நினைக்கிறேன். நான் இன்னும் பாக்கலை
  **
  நன்றி ஸ் டார்ஜன் தொடர்வதற்கும்
  **
  நன்றி ரிஷபன் சார். அடுத்த வாரம் சிறந்த பத்து படங்கள் வெளியாகும்

  ReplyDelete
 16. நல்ல படங்களை மட்டும் மீண்டும் பார்க்க உதவிடும் முயற்சியா?

  ReplyDelete
 17. அழகாக தரம் பிரித்துள்ளீர்கள் அருமை நண்பரே

  ReplyDelete
 18. 'வேங்கை'ன்னு ஒரு படம் வந்துச்சேண்ணே! அதை வுட்டுடீங்க...

  ReplyDelete
 19. mapillai movie is awesome may be you dont have a sense of humour dumbass

  ReplyDelete
 20. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...