Wednesday, December 14, 2011

2011: சிறந்த பத்து பாடல்கள்

புத்தாண்டிற்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் இந்த வருடத்து சிறந்த பாடல்களின் தொகுப்பு இது.

பத்து பாடல்கள் மட்டுமே என்பதால் பிறை தேடும் இரவிலே ( மயக்கம் என்ன)  டியோ டியோ டோலே (அவன் இவன்) உள்ளிட்ட பாடல்கள் லிஸ்டில் இடம் பெறாமல் போகிறது.

சென்ற ஆண்டின் (2010) சிறந்த பத்து பாடல்கள் : இங்கே 
2009-ன் சிறந்த பத்து பாடல்கள்    : இங்கே

1 , 2 , 3 என எந்த ரேங்கிங்கும் இன்றி இந்த வருடத்தின் சிறந்த பத்து பாடல்கள் இதோ..

நீ கோரினால் (180 )

மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு புது இசை அமைப்பாளர் ஷரத் இசை அமைத்துள்ளார். அட்டகாசமான மெலடி தந்தமைக்கு வெல்டன் ஷரத் !

நீ கோரினால் வானம் மாறாதா?
தினம் தீராமலே மேகம் தூறாதா? என்று ஆண் துவங்க


தீயே இன்றியே நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத் தடைத்து ஓடாதே என்று பெண் தொடருவார்.

"நநநநநந " என பாட்டின் துவக்கத்திலும் இறுதியிலும் வரும் ஹம்மிங் Very catchy !

இந்த பாடலின் சிறப்பே மிக வித்யாசமான மெட்டு தான். மெதுவாகவும், பின் திடீரென்று வேகமாகவும் போகும் இந்த பாட்டு.

எனக்கு தெரிந்த பல யூத்துகளின் ரிங் டோனாக இந்த பாடல் இருந்ததே இந்த பாடலின் வெற்றிக்கு சாட்சி !

கேட்க மட்டுமன்றி பார்க்கவும் இந்த பாட்டு நன்றாகவே இருக்கும். Thanks to ஹீரோயின் ப்ரியா ஆனந்த் !
சொட்ட சொட்ட நனைய வைத்தாய் / மாசமா (எங்கேயும் எப்போதும்)

இந்த இரண்டு பாடல்களையும் சேர்த்தே தான் சொல்ல வேண்டி உள்ளது. மாசமா பாட்டு மிக எளிமையான மெட்டு, இசை, பாடல் வரிகள். But very attractive and effective ! தோள் அசைப்பை வைத்தே இந்த பாட்டை மிக மிக ரசிக்கும் விதத்தில் படமாக்கிய குழுவிற்கு ஒரு பூங்கொத்து !

சொட்ட சொட்ட நனைய வைத்தாய் ரொம்ப அழகிய மெலடி. கேட்கும் போதே மனதை என்னமோ செய்கிறது. இவை தவிர "கோவிந்தா..கோவிந்தா" என இன்னொரு ஹிட் பாடலையும் தந்த புது இசை அமைப்பாளரிடம் அடுத்தடுத்த படங்களில் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !

யாரது (காவலன்)

விஜய் நடித்து இவ்வருடம் வெளி வந்த இரு படங்களிலும், படம் பார்த்த பிறகு பாடல்கள் ரொம்பவே பிடித்தது. அவற்றில் ஒரே பாட்டை சொல்ல வேண்டுமெனில் இந்த பாட்டை தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனவரியில் வந்த இப்பாட்டை வருடக்கடைசி வரை, தொடர்ந்து மிக அடிக்கடி கேட்கிறேன். அப்படி ஏதோ இந்த பாட்டில் இருக்கிறது. குறிப்பாக மெட்டு ....Beautiful ! படமாக பார்க்கும் போதும் விஜய் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படி உள்ளது. ஏழாம் அறிவு - இன்னும் என்ன தோழா

படம் வெளியாகும் முன்பே அனைவர் மனதிலும் இடம் பிடித்த பாடல் இது. உலகெங்கும் உள்ள ஈழ தமிழர்களுக்கு இந்த பாட்டை சமர்ப்பிப்பதாக ஹாரிஸ் ஜெயராஜ் சொல்லியிருந்தார். பாடல் வரிகளும் அவர்களுக்கு மிக பொருந்துவதாகவே இருந்தது. "வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே" என்கிற வரிகளோடு அனைவராலும் ஒன்ற முடிந்தது.

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!


விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?படமாக்கிய விதத்தில் சற்று ஏமாற்றம் தான் எனினும், இத்தகைய நல்ல பாடலை தந்தமைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், பா. விஜய் மற்றும் முருக தாசுக்கு நன்றி !!

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ (எங்கேயும் காதல்)

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
பாடல் வரிகள்: மதன் கார்க்கி

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான மெலடி. டிபிகல் ஹாரிஸ் பாட்டு தான் என்றாலும், ஹாரிஸ் எப்படி மியூசிக் போட்டாலும் அநேகமாய் எனக்கு பிடித்து விடுகிறது.

இந்த பாட்டின் மெட்டு ஒரு ஊஞ்சல் போல் அங்கும் இங்கும் ஊசலாடும். அது தான் பாட்டின் அழகே. பாட்டிற்கு பின்னணி இசையில் தபேலா போன்ற வாத்தியங்கள் உபயோகம் செய்துள்ளது சற்று வித்யாசமாக உள்ளது. ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் சின்மயி பாடிய இந்த அருமையான பாட்டை கேட்டு பாருங்கள்விழிகளிலே விழிகளிலே (குள்ள நரி கூட்டம்)

இசை செல்வகணேஷ்
பாடல் ஆசிரியர்: நா. முத்து குமார்
பாடியவர்கள் சின்மயி & கார்த்திக்

இந்த பாடல் கேட்க கேட்க தான் பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பாய் படம் பார்த்ததும் ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது. ஹீரோயின் ரம்யா நம்பீசனின் கண்களும், குட்டி குட்டி சிரிப்பான சம்பவங்களும் சேர்ந்து இப்பாடலை நன்கு என்ஜாய் செய்ய வைக்கிறதுஅமளி துமளி (கோ)

மற்றொரு ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி. இந்த பாட்டின் மெட்டு ஒரே கோட்டில் இல்லாமல் வெவ்வேறு விதமாய் செல்வது தான் பாடலை மிக ரசிக்க வைக்கிறது. KV ஆனந்த் இந்த பாடலை இது வரை நாம் பார்த்திராத, மிக அரிதான, eye catching லொகேஷன்களில் படமாக்கியிருந்தார். இதே படத்தின் என்னமோ ஏதோ தான் பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். எனக்கும் அந்த பாடல் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலில் இருக்கும் ஏதோ ஒரு அழகு இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது !
ஆரிரோ.. ஆராரிரோ (தெய்வ திருமகள்) 

இந்த படமே ஒரு "Copy cat" படம் என நிறையவே கோபம் உள்ளது. ஆனாலும் இந்த பாட்டை ரசிக்காமல் இருக்க முடிய வில்லை. காரணம் பாட்டு அப்பா -பெண் உறவை பற்றி சொல்வதால்.  ! வெறும் டூயட்களே வரும் திரை உலகில் இத்தகைய பாடல்கள் மிக அபூர்வம் தான் ! எனக்கும் என் பெண்ணுக்கும் மிக பொருந்துவதால் இந்த பாடல் ரொம்பவே ஸ்பெஷல். 

அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

கேட்கும் போதே சில நேரம் நமக்கும் விழிகளில் ஈரம் வர வைக்கும் வரிகள் !இதே படத்தில் வரும் "விழிகளில் ஒரு வானவில்  " கேட்க அல்ல, பார்க்க மிக பிடித்த பாடல். :))

சார காத்து (வாகை சூட வா)

இந்த வருடம் தேர்ந்தெடுத்துள்ள பத்து பாடல்களில், இந்த பாடலையும் சேர்த்து எத்தனை பாடல் சின்மயி பாடியது பாருங்கள் ! உண்மையில் வரிசை படுத்தும் போது தான் சில பாடல்கள் சின்மயி பாடியது என்பதையே அறிந்தேன். தமிழில் டாப் பாடகிகளில் சின்மயி நிச்சயம் செம உயரத்தில் இருக்கிறார் ! இந்த பாட்டும் சரி படமாக்கிய விதமும் சரி செம அழகு. குறிப்பாக ஒளிப்பதிவு.. மீன் துள்ளி நீரில் விழுவதை ரொம்ப அழகாய் காட்டிய ஒளிப்பதிவாளர் யார்னு தெரியலை. Very Well done !அய்யய்யோ நெஞ்சு அலையுதடி / யாத்தே, யாத்தே (ஆடுகளம்)

இசைக்கு வயது கிடையாது என்பதை SPB இந்த வருடம் இரண்டு பாடல்கள் மூலம் மீண்டும் உறுதி படுத்தினார். தன் மகன் SPB சரணுடன் இணைந்து பாடிய இந்த பாட்டு அட்டகாசம். பாட்டில் மெட்டு, மென்மையான குரல், உறுத்தாத இசை என அனைத்துமே அற்புதமாக உள்ளது. ஆண் குரலில் எது SPB , எது சரண் என்று பிரித்து அறிய முடியா விட்டாலும், பாடலை ரசிப்பதை அது தடை செய்ய வில்லை. பாடலை வெற்றி மாறன் படமாக்கிய விதமும் செம கியூட். தனுஷ் சாப்பிட்டு முடித்து விட்டு தன் சட்டையில் ஈர கையையும், வாயையும் துடைத்து கொள்ள, அதை பார்க்கும் ஹீரோயினும் தயங்கியவாறு தன் உடை மேல் கையை துடைத்து கொள்வது கவிதை.இதே ஆடு களத்தில் " யாத்தே யாத்தே" பாட்டும் கேட்க மட்டுமன்றி பார்க்கவும் அழகாக இருந்தது.
***
உங்களுக்கு பிடித்த பாடல் இதில் இருந்தால் சொல்லுங்கள். இல்லா விடினும், உங்களுக்கு பிடித்த விடுபட்ட பாடல் எது என்பதை குறிப்பிடலாம் !
***
அடுத்தடுத்த வாரங்களில் வர இருக்கும் புத்தாண்டு சிறப்பு பதிவுகள்:

2011- சிறந்த பத்து தமிழ் படங்கள்

பதிவுலகம் 2011

டாப் 10 மொக்கை படங்கள் - 2011

24 comments:

 1. சிறந்த தேர்வு.

  ReplyDelete
 2. I think u hate yuvan. U missed his two super hit albums. Vanam and mankatha purposely.

  ReplyDelete
 3. நன்றி ராம்வி
  **
  ராஜா கனி : அப்படியெல்லாம் இல்லீங்க. யுவனின் இசையில் அவன் இவன் மற்றும் மயக்கம் என்ன பாட்டுகள் எனக்கு ரொம்ப பிடிச்சது. நீங்க சொன்ன பிறகு தான் யுவன் பாடல்கள் இந்த லிஸ்டில் அதிகம் இல்லை என உணர்கிறேன். வேணும்னேல்லாம் தவிர்க்கலை. இந்த பத்து பாடல்கள் தான் இந்த வருடம் நான் திரும்ப திரும்ப கேட்ட பாடல்கள். அந்த அடிப்படையில் தான் இந்த லிஸ்ட் தயார் ஆனது. எனது Alltime favourite Music Director- இளைய ராஜா - அவரது மகன் யுவன் இவ்வளவு திறமை சாலியாக இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே .

  ReplyDelete
 4. மயக்கம் என்ன மியூசிக் டைரக்டர் GV பிரகாஷ் குமார் என அறிகிறேன். போன கமண்டில் சொன்னது போல் யுவன் அல்ல.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. வெரி குட்..

  இதில இருக்குறதுல ஒரு சாங் கூட நா கேட்டதே இல்ல..
  ம்ம்ம்.. நா இந்த உலகத்துலதான் இருக்குறேனா ?

  ReplyDelete
 7. சமீபங்களில் எந்தப் பாடல்கள் ஹிட் என்பதெல்லாம் அறிந்திருக்கவில்லை. தொகுப்புக்கு நன்றி. கடந்த வருடங்களிலும் இப்படிப் பகிர்ந்திருப்பின் அதன் சுட்டிகளையும் பதிவிலோ பின்னூட்டத்திலோ தரலாமே.

  ReplyDelete
 8. தெய்வத் திருமகள் பாடலின் ஆரம்பம் 'ராசிதான் கை ராசிதான்' பாடலையும் சரணத்தில் 'இரு விழியின் வழியே நீயா வந்து போவது' பாடலின் சரணத்தையும் நினைவு படுத்தும் விதமாக இருக்கும். (எனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றுகிறதா...)

  ReplyDelete
 9. நல்ல தேர்வு.

  வாகை சூடவா சர சர பாட்டு பிடித்த பாடல்.

  ReplyDelete
 10. மாதவா: :))) சினிமா பாட்டும் அவ்வப்போதாவது கேளு நண்பா
  **
  ராமலக்ஷ்மி said...

  //கடந்த வருடங்களிலும் இப்படிப் பகிர்ந்திருப்பின் அதன் சுட்டிகளையும் பதிவிலோ பின்னூட்டத்திலோ தரலாமே.//

  இப்போது சேர்த்து விட்டேன் ..கடந்த இரண்டு வருடங்களின் பாடல் இணைப்பை. நன்றி
  **
  நன்றி ரிஷபன் சார்
  **
  நன்றி ராஜா

  ReplyDelete
 11. ஸ்ரீராம்: எனக்கு அப்படி தெரியலியே !! ஒரு வேளை அந்த பாடல்கள் ஒரே ராகமோ ??
  **
  நன்றி கோவை டு தில்லி மேடம்

  ReplyDelete
 12. எதோ நம்மால முடிந்த selection:
  why this kolaiveri
  கலசல கலசல (ஒஸ்தி)
  ஒஸ்தி மாமே
  விளையாடு மங்காத்தா
  மச்சி open the bottle
  கன்னித்தீவு பெண்ணா

  ReplyDelete
 13. உண்மையில், உங்கள் லிஸ்ட்டில், 2 பாடல்கள் மட்டும் தான் கேட்டிருக்கிறேன். இருந்தாலும், தொகுப்பு வாசிக்க சுவாரசியம். தெய்வத்திருமகள் பாடலின் உங்கள் விமர்சனம் பிடித்தது.இங்கே தில்லியில், 'கொலைவெறி' ன்னா என்னன்னு நண்பர்கள் நச்சரிக்கிறார்கள்...தெருவில் விளையாடும் மூன்று வயது இந்தி குழந்தை கூட,"பேசு(face) கலரு வையிட்டு" ன்னு அலம்பல் பண்ணுது. அந்த பாடலும் படமும் இன்னும் ரிலீஸ் ஆகலையா?
  இந்திக்காரர்களுக்கு ஆங்கிலம் கற்று தந்த தமிழ் பாடலாயிற்றே!!!

  ReplyDelete
 14. வாசகன்: சிரமம் + முயற்சி எடுத்து விடுபட்ட பாடல்கள் சொன்னதுக்கு நன்றி
  **
  டாக்டர் வடிவுக்கரசி : ஓய் திஸ் கொலைவெறி பாட்டு வரும் படம் ( "3") இப்போ தான் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. அடுத்த வருடம் வெளியாகும் நன்றி

  ReplyDelete
 15. //இங்கே தில்லியில், 'கொலைவெறி' ன்னா என்னன்னு நண்பர்கள் நச்சரிக்கிறார்கள்...
  //

  கொலைவெறி is = murderous rage.

  கொலைவெறி is = savage fury (thanks to irrepressible Raja Sen)

  ReplyDelete
 16. பாடல் தொகுப்பிற்கு அன்பு நன்றி!
  தஞ்சை வந்திருக்கிறேன். ஷார்ஜா திரும்பச் சென்றதும்தான் இந்தப் பாடல்கலைக் கேட்டுப்பார்க்க வேண்டும்!!

  ReplyDelete
 17. நன்றி தனபாலன்
  **
  நன்றி இந்தியன்
  **
  மனோ மேடம் தஞ்சையிலா உள்ளீர்கள் ? மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 18. சிறந்த தொகுப்பு! புதிய பாடல்களை இந்த தொகுப்பால் அறிந்து கொள்ள முடிந்தது!

  ReplyDelete
 19. இந்தப் பதிவுக்கு நிறைய ஹோம் வொர்க் பண்ணி இருக்கீங்க என்பது நல்லவே தெரியுது... நல்ல பதிவு..
  தவிர பதிவர் சந்திப்புக்கு வர முயற்சி செய்கின்றேன்..

  ReplyDelete
 20. Anonymous8:33:00 PM

  அண்ணே எனக்கும் வர வேண்டுமென்று ஆசை தான், ஆனால் அன்று பெரியம்மா வீட்டில் ஒரு விஷேசம் உள்ளது. நீங்கள் யாருடன் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் பயணத்திட்டம் பற்றி கூறினால் முடிந்தால் நானும் இடையில் உங்களுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன். முடிந்தால் எனக்கு போன் செய்யவும் என்னுடைய செல்நம்பர் 8883072993.

  ReplyDelete
 21. நன்றி தளிர்
  **
  நன்றி திரு. ஜெய ராமன்
  **
  நன்றி செந்தில்

  ReplyDelete
 22. தொகுத்துள்ள பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்கள்

  ReplyDelete
 23. ennamo etho song from KO also can be added

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...