Thursday, December 29, 2011

2011 எனக்கு எப்படி இருந்தது?

2011-ல் நான் என பதிவுலகில் ஒரு தொடர் பதிவு போய்க்கிட்டிருக்கு. நம்மை யாராவது எழுத சொல்லுவாங்கன்னு பார்த்தா யாரும் கூப்பிடலை. வான்டடா வந்து வண்டியில் ஏறும் வடிவேலு மாதிரி " நமக்கு நாமே" திட்டத்தில் என்னை நானே அழைத்து இப்பதிவு எழுதி விட்டேன்.

அலுவலகம், சார்ந்த துறை, பதிவுலகம் என தனிப்பட்ட அனுபங்கள் தான் இந்த பதிவில் இருக்கும். முழுக்க சுயசரிதை ! பிடிக்கா விட்டால் எந்த நிலையிலும் நீங்கள் எஸ் ஆகலாம் !!
*****
இந்த படமாவது Profile போட்டோவுக்கு  சரியா வருமா என யோசிக்கும் அய்யாசாமி


2010- ஜனவரியில் துவங்கிய ஒரு நல்ல விஷயம் இந்த ஆண்டும் முழுதும் தொடர்ந்தேன். ஜிம்முக்கு செல்வது தான் அது ! வாரத்தில் ஐந்து நாட்களாவது ஆபிஸ் ஜிம்முக்கு போவதை இரண்டு ஆண்டுகளாக தொடர்கிறேன். வெயிட் எல்லாம் தூக்கி உடம்பை முறுக்கு ஏற்றாமல், டிரெட்மில், சைக்கிள் போன்றவற்றில் தான் தினமும் 45 நிமிடம்  செலவழிப்பேன். இதனால் உடம்பு குறையாட்டியும் ஏறாமல் இருக்கு. சர்க்கரை நோய், BP போன்றவை வராமல் தடுக்க முடிகிறது. வரும் ஆண்டுகளிலும் இதனை விடாமல் தொடர வேண்டும் என்பது ஆசை + பிரார்த்தனை. உடல் நலனில் செலுத்தும் இந்த அக்கறை தான் முதல் இடம் ! உடல் நலனை விட முக்கியம் வேறு எதுவுமே இல்லை!

அலுவலக வாழ்வில் சற்று மாறுதல்களும் பிரஷரும் இருந்தது. Legal -departmentல் உடன் இருந்த ஒரே நபரான ராம் வேலையை விட்டு விலக, குறுகிய கால அவகாசத்தில் இருவரை வேலைக்கு எடுத்து அவர்களை முழுதும் பயிற்சி தர வேண்டியிருந்தது. மேலும் புதிதாக சில வேலைகள் என் வசம் வந்தது. இதனால் தினம் இரவு 9 முதல் 11 வரை வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்க்கிற மாதிரி ஆனது. (அப்போது தான் US-க்கு காலை நேரம் !) துவக்கத்தில், தூங்கும் நேரத்தில் இந்த விஷயங்களை செய்ததால், அன்றைய பிரச்சனை குறித்த சிந்தனையில் இரவு தூக்கம் சற்று disturb ஆனது. ஆனால் பிரச்சனை உடனேயே தீர வேண்டும் என நினைக்கும் என் எண்ணத்தில் தான் தவறு என உணர்ந்து அதை மாற்றி கொண்ட பின் இந்த இரு மணி நேர இரவு அலுவல் பழகி விட்டது.

நான் படித்து முடித்த ACS- Institute -ல் முன்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்பு எடுத்து வந்தேன். சில ஆண்டுகளாக அதனை நிறுத்தி விட்டேன். இந்த ஆண்டு முதல், அங்கு மாணவர்களுக்கு வெவ்வேறு தலைப்புகளில் செமினார் எடுப்பதை துவங்கி உள்ளேன். இவ்வாறு இவ்வருடம் ஐந்து வெவ்வேறு தலைப்புகளில் செமினார் எடுத்ததால் அந்தந்த தலைப்புகள் குறித்து விரிவாக வாசிக்க, அவை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இது நான் சார்ந்த துறை சார்ந்த விஷயங்கள் என்பதால் மிக உதவியாக இருந்தது. இவற்றிற்கு அந்த செமினார் அட்டன்ட் செய்தவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது நேரடியாகவும், பின் ACS- Institute -ல் இருந்து வந்த feedback மூலமும் அறிய முடிந்தது. வரும் வருடங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இப்படி செமினார் எடுப்பது தொடரும்.

நான் சார்ந்த துறையில் பல்வேறு மீட்டிங் இவ்வருடம் கலந்து கொண்டதில் நிறைய புது நண்பர்கள் (அனைவரும் என்னை போல கம்பனி செகரட்டரிகளே !) கிடைத்தனர். இவர்களில் நான்கைந்து பேராவது தினம் ஒருவருக்கொருவர் போன் செய்து பரஸ்பரம் சந்தேங்களை தீர்த்து கொள்கிறோம். இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் இந்த வருடம் என் துறை சார்ந்த புது நண்பர்கள் கிடைத்தது மிக மகிழ்ச்சியான விஷயம்.

புழுதிவாக்கம் பள்ளி அறிமுகம் ஆனது இந்த வருடம் தான். அதன் பிறகு

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு

என இப்பள்ளிக்கு இந்த ஆண்டு முடிந்த உதவிகள் செய்து வருவது மிகுந்த மன நிறைவை தருகிறது.

அதிகம் ஊர் சுற்றுவதில் நாட்டமுடையவன் எனினும் இந்த வருடம் வேளாங்கண்ணி-நாகூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பயணங்கள் மட்டுமே சாத்தியம் ஆனது. காஞ்சிபுரம் மிக அற்புத செய்திகள் சொன்னது. இது பற்றிய பயண கட்டுரை தொகுப்பு விரைவில் நம் ப்ளாகில் துவங்கும் !

தமிழகம் தாண்டி எங்கும் பயணம் செல்லாதது இவ்வருடம் சற்று ஏமாற்றம் தான். வரும் வருடமாவது வேறெங்கும் செல்ல சந்தர்ப்பம் வாய்க்குமா என பார்க்க வேண்டும்.

இறுதியாக ப்ளாக் உலக அனுபவங்களுக்கு வருவோம்:

இந்த வருடத்தின் பிப்ரவரியில் தமிழ் மணம் நட்சத்திரமாக ஒரு வாரம் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். பால குமாரன் சந்திப்பு குறித்த கட்டுரை நிறைய கருத்து வேறுபாடுகளை கிளப்பியது. அம்மா குறித்த பதிவும் சீனு சார் குறித்த பதிவும் என்னுள் எவ்வளவு நெகிழ்வை ஏற்படுத்தியதோ அதே உணர்வை அப்பதிவை வாசித்த நண்பர்களிடமும் கண்டது இனிய அனுபவமாக அமைந்தது.

பின் நவம்பரில் யுடான்ஸ் ஸ்டாராகவும் இதே வருடத்தில் இருந்தாயிற்று. இந்த இரு முறையும் ஸ்டாராக இருந்த போது ஒவ்வொரு முறையும் ப்ளாகை தொடர புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்தனர்.

இவ்வருடம் முழுதும் குறைந்தது வாரம் இரு பதிவுகளாவது எழுதியிருக்கிறேன். இப்படி தொடர்ந்து எழுதியது இந்த வருடம் மட்டும் தான் ! நடுவில் மூன்று வாரம் தினம் பதிவு எழுதி பார்த்து அந்த மூன்று வாரமும் தமிழ் மணம் முதல் இருபது பதிவுகளுக்குள் வருகிற திருப்தியும் பார்த்தாயிற்று. பின் இது சரிப்படாது என தினம் எழுதுவதை கை விட்டேன்.

இவ்வருட அளவுக்கு மிக அதிக பதிவுகள் எழுதுவது இனி எந்த வருடத்திலும் நிச்சயம் சிரமமே ! பதிவுலகம் தருகிற சுதந்திரம் : வேண்டுகிற போது எழுதலாம் என்பதே ! அவ்வழியில் வருகிற ஆண்டு
வாரம் ஓரிரு பதிவுகள் எழுதும் எண்ணம் !

பதிவுலகில் நிறைய்ய்ய புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களோடு கை கோர்த்தவாறு வரும் ஆண்டுகளும் பயணிப்பேன்.

பொதுவாக நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது என ஆழமாய் நம்புபவன் நான். நம்மை நம்மோடு மட்டும் தான் ஒப்பிடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சாமாவது வளர்ச்சி அடைந்தோமா என பார்க்க, வருட இறுதி ஒரு நல்ல வாய்ப்பு ! நீங்களும் இவ்வருடம் செய்த நல்ல விஷயங்கள் குறித்து யோசியுங்கள் நண்பர்களே !!

28 comments:

 1. புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. //பதிவுலகில் நிறைய்ய்ய புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களோடு கை கோர்த்தவாறு வரும் ஆண்டுகளும் பயணிப்பேன்.//

  என்ன தான சொன்னீங்க?

  ReplyDelete
 4. 2012 இன்னும் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள் அண்ணே....

  ReplyDelete
 5. பொதுவாக நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது என ஆழமாய் நம்புபவன் நான். நம்மை நம்மோடு மட்டும் தான் ஒப்பிடவேண்டும்

  அருமை
  புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. தங்களை பற்றிய அறிய உதவிய பதிவு இது....
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அருமையாக சொல்லி இருக்கீங்க நண்பரே , அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  தமிழ்மணம் 3 வது வாக்கு
  ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

  ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 8. மனுஷனுக்கு உடல்தான் முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் இல்லையா...!!! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. நன்றி வித்யா; தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!
  **
  நன்றி உலகநாதன்
  **
  நன்றி TVR சார். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !
  **
  ஆதி மனிதன்: உங்களை(யும்) தான் சொன்னேன். நன்றி

  ReplyDelete
 10. நன்றி சங்கவி
  **
  முதல் வருகைக்கு நன்றி சசிகலா.
  **
  மகிழ்ச்சியும் நன்றியும் பிரகாஷ்
  **
  நன்றி M.R
  **
  நன்றி மனோ

  ReplyDelete
 11. 2011 எப்படி இருந்தது என்று புரிந்து விட்டது. இந்த அனுபவம் 2012 க்கு மிக உதவியாய் இருக்கும்.. இல்லியா..

  ReplyDelete
 12. அருமையான பதிவு.
  மனப்பூர்வ புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. சிறப்பான பகிர்வு... வரும் வருடங்களும் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பரே....

  ReplyDelete
 14. மிகத் தெளிவான, சிற‌ப்பான பதிவு!

  ReplyDelete
 15. பகிர்வு அருமை. இறுதியாகச் சொல்லியிருப்பதும் நன்று. 2012ஆம் ஆண்டும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. அடடே தெரிஞ்சிருதா நான் உங்கள அழைச்சிருப்பேனே....ஆனா நீங்களா எழுதினது இயல்பா இருக்கு புத்தாண்டுவாழ்த்துகள்!

  ReplyDelete
 17. உங்க ஆட்டிட்யுடுக்கு எல்லா வருடமுமே நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
 18. Anonymous2:12:00 PM

  ப்ரோபைல் போட்டோ இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப்பில் எடுக்கப்பட்டு இருக்கலாம். கணினியில் சரி செய்யக்கோருகிறேன்.

  ReplyDelete
 19. சிறப்பான பகிர்வு!

  ReplyDelete
 20. Anonymous2:14:00 PM

  உடற்பயிற்சி...எனக்கு தேவையான செய்தி. வருமாண்டு மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. இன்றுதான் உங்கள் வலை கண்டேன்..கண்ட முதற்பதிவிலேயே மகிழ்ச்சியுடன் இணைகிறேன்....

  ReplyDelete
 22. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. கலக்கல், சுய மதிப்பீடு.... வரும் ஆண்டும் இனிதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. சுய பரிசோதனை! எப்போதும் நம்மை உயர்த்தும்!
  தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  அன்புடன் அழைக்கிறேன் :
  "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

  ReplyDelete
 25. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  //நம்மை யாராவது எழுத சொல்லுவாங்கன்னு பார்த்தா யாரும் கூப்பிடலை//

  உங்களை மாதிரி நிறையப் பேரு நினைச்சிருப்பாங்கள்ல, நீங்களாவது ஒரு நாலுபேர அழச்சிருக்கலாம்ல? (ச்சே.. சே.. நான் என்னயச் சொல்லல...) :-)))))

  ReplyDelete
 26. போன வருஷத்தைப்போலவே இந்த வருஷமும் இனிமையாயிருக்க வாழ்த்துகள்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...