Sunday, April 29, 2012

Hunger Games :ஆங்கிலபட விமர்சனம்

னைவி இதுவரை எக்ஸ்பிரஸ் அவிநியூ பார்த்ததில்லை. ஒரு முறை போகலாமே என்றார். வெறும் எக்ஸ்பிரஸ் அவிநியூ போனால் பர்ஸ் பழுத்துடும் என்பதால் படத்துக்கு கூட்டி போய் அப்படியே எக்ஸ்பிரஸ் அவிநியூ சுற்றி காட்டி விடலாம் என திட்டம் தீட்டினேன். அப்படி பார்த்தது தான் Hunger Games !

படத்துக்கு விரிவான விமர்சனம் எழுதிய ரெவரி மற்றும் கருந்தேள் ஆகியோருக்கும் இப்படத்தை எனக்கு பரிந்துரைத்த மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் நன்றிகள் !

கதை  

வட அமெரிக்காவில் வருங்காலத்தில் கதை நிகழ்கிறது. புரட்சி செய்த மக்களை ஒடுக்கும் அரசாங்கம் இனி ஒரு முறை புரட்சி வெடிக்க கூடாது என்பதற்காக வருடா வருடம் நடத்துவது தான் " Hunger Games " . அந்த நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் இருந்து ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக மொத்தம் 24 பேர் தேர்ந்தெடுக்க படுகிறார்கள். இவர்கள் 12 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த 24 பேரும் ஒரு காட்டில் விடப்படுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு, காட்டில் மறைந்து வாழ்ந்து மீதம் உள்ளவர் அனைவரும் இறந்த பின் மீளும் ஒருவர் தான் அந்த ஆண்டில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவர் அரசாங்கத்துக்காக வேலை பார்ப்பார்.

இதற்கான தேர்வு, பெயர்களை சீட்டு குலுக்கி போட்டு எடுக்கின்றனர். 12ஆவது மாவட்டத்தில் இருக்கும் கேட்னிஸ் தன் தங்கை பெயர் சீட்டில் வர, அவளுக்கு பதில் நான் செல்கிறேன்" என்று கூறி போட்டியில் இறங்குகிறாள். அவளுக்கு ஒரு காதலன் உண்டு. அவனிடம் தன் தாயாரையும், தங்கையையும் பார்த்து கொள்ள சொல்லி விட்டு செல்கிறாள்.   அதே மாவட்டத்திலிருந்து, அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பீட்டா என்பவன் வருகிறான்.

நிறைய டிரைனிங் தந்து அவர்களை அனுப்புகிறார்கள். மக்களுக்கு பயம் வர வைக்க, அவர்கள் செய்யும் அனைத்து நடவடிக்கையும் டிவி மூலம் நாடு முழுதும் ஒளி பரப்படுகிறது.

முதல் நாளே 24 பேரில் பாதி ஆட்கள் இறக்கிறார்கள். நான்கைந்து பேர் மட்டுமே மீதம் உள்ள நிலையில் " ரூல் மாற்ற பட்டு விட்டது. ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் உயிருடன் இருந்தால் இருவரும் வென்றவர்கள்" என அறிவிக்கிறார்கள்.

இதனால் பீட்டாவை தேடி சென்று கண்டுபிடிக்கிறாள் கேட்னிஸ். அவர்கள் இருவர் மட்டும் கடைசியில் உயிருடன் இருக்க " ரூல் மாற்ற பட்டு விட்டது. ஒருவர் தான் உயிரோடு இருக்கலாம் " என   மீண்டும் பல்டி அடிக்கிறது அரசாங்கம் . " இந்த ஏமாற்று வேலையை சகிக்க முடியாது இருவரும் விஷம் சாப்பிட்டு சாகலாம் என கேட்னிஸ்   சொல்ல" , அவர்கள் அப்படி செய்வதற்குள்,  நாட்டில் புரட்சி வெடிக்கும் என்கிற பயத்தில்  " இல்லை இருவருமே வென்றவர்கள்" என விளையாட்டை முடிக்கிறார்கள்.

இருவரும்  ஊருக்கு திரும்பி வர, ஊர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறது !

#############

Heroine Jenniffer Lawrence
 இந்த ஆக்ஷன் oriented படத்தில் மிக முக்கிய பாத்திரம் கேட்னிசாக நடித்த ஜெனிபர் லாரன்ஸ் தான் ! இதுவரை பெண்களை மையமாக வைத்து வந்த எந்த ஆக்ஷன் oriented படமும் பெறாத வெற்றி, இந்த படம் பெற்றதாக சொல்கிறார்கள்.

கேட்னிசாக வரும் ஜெனிபர் லாரன்ஸ் என்னா நடிப்பு ! அற்புதம் ! முகபாவம், உடல் மொழி, உழைப்பு அனைத்திலும் அசத்துகிறார். துவக்கத்தில் அவரை பார்க்கும் போது மிக சாதாரணமாக தெரிந்தாலும் போக போக அந்த " பெரிய சைஸ் பாத்திரத்தை " அனாயாசமாக சுமக்கிறார்.

இதே பெயரில் வந்த நாவலை தான் படமாக்கி உள்ளனர். கதை களனும் சரி, திரைக்கதையும் சரி செம வித்யாசம் ! ஹாலிவுட்டில் மட்டும் தான் இத்தகைய படங்களை காண முடியும் !

குறிப்பாக வன்முறை எவ்வளவோ இருக்க வாய்ப்புள்ள இந்த கதையில், ஒருவரை ஒருவர் கொல்லும் அத்தகைய காட்சிகளை, பார்ப்பவர்கள் மனதை பாதிக்காதவாறு Fade out முறையில் சில நொடிகளில் காட்டி போவதை மிக ரசித்தேன். நம் தமிழ் படத்தில் சாதா சண்டையிலேயே ரத்தம் கொப்பளிக்கும் ! ஹும் :((

படத்தில் ரசித்த சில காட்சிகள் :

ரூ என்கிற சிறுமியை கேட்னிஸ் காப்பாற்றி வருவாள். ஆனால்  ரூ  கொல்லப்பட, தன்னை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து தாக்கலாம் என்கிற நிலையிலும், கேட்னிஸ் பொறுமையாய் காட்டில் உள்ள பூக்களை பறித்து, இறந்த ரூவை சுற்றி மலர்களால் அலங்கரித்து விட்டு, இதனை நிச்சயம் டிவியில் பார்ப்பார்கள் என மக்களை பார்த்து அவளுக்கு மரியாதை செய்ய சொல்லும் காட்சி அட்டகாசம் ! (இதன் தொடர்ச்சியாய் ரூ இருந்த மாவட்டத்தில் புரட்சி வெடித்து பின் அடக்கப்படுகிறது )

Hunger Games ஆட்டத்துக்கு முன் அதற்கு தரும் டிரைனிங், அதில் அசத்தும் கேட்னிஸ், அங்கு வரும் குடிகார டிரைனர் என பல விஷயங்கள் நம்மை ஈர்க்கிறது

அரசாங்கம் என்பதும் அரசியல் வாதிகளும் இரட்டை நாக்கும், மோசமான மனதும் கொண்டவர்கள் என்பதை பூடகமாக சொல்கிறார்கள் (இலங்கை நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை)

இந்த படத்தில் ஹீரோ பாத்திரம் கிட்ட தட்ட டம்மி தான் ! பெண் சிங்கம் போல ஹீரோவை காப்பாற்ற போராடுவது Heroine தான் !

போர், கொலைகள், விளையாட்டு என்று போனாலும் அதன் அடிநாதமாய் அன்பும், சக மனிதனை நேசிப்பதையும் அழுத்தமாக சொல்வதற்கு Hunger Games டீமுக்கு ஒரு சல்யூட் !


தியேட்டர் நொறுக்ஸ்

மனைவி, மகள் அனைவருக்குமே படம் மற்றும் தியேட்டர் மிக பிடித்தது.

ஆங்கில படம் தான் எனினும், ஆங்கில சப் டைட்டில்களுடன் போட்டார்கள். முன் பகுதியில் வரும் வசனங்களை நன்கு புரிந்து கொள்ள இது உதவியது. பின் பகுதியில் அதிக வசனம் இல்லை. Action தான் !

இது மாதிரி மல்டிபிலக்ச்களில் மிக சரியான நேரத்துக்கு (சில நேரம் அஞ்சு நிமிஷம் முன்பாகவே) படம் போட்டுடுறாங்க.

முன்பெல்லாம் படம் துவங்கும் முன் சோப்பு மற்றும் நகை கடை விளம்பரம் போடுவாங்க. இடைவேளையில் புது பட டிரைய்லர் போடுவாங்க. எக்ஸ்பிரஸ் அவின்யூவில் இது உல்ட்டாவா நடக்குது. முதலில் டிரைய்லர் ! இடைவேளையில் தான் விளம்பர படங்கள் !

எக்ஸ்பிரஸ் அவின்யூவுக்கு நம்மை மாதிரி சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் மிக குறைவாக தான் வருவார்கள் என நினைக்கிறேன். அங்கு வரும் மக்கள் (குறிப்பாய் பெண்கள்) உடைகள் மற்றும் பேச்சை பார்த்தால் நாம் இருப்பது சென்னையா என சந்தேகமாய் உள்ளது. குறிப்பாய் இந்த படம் சென்று திரும்பும் போது எங்களை தவிர யாரும் தங்களுக்குள் தமிழில் பேசி பார்க்க வில்லை. ஆங்கில படம் உள்ளே மட்டுமல்ல வெளியிலும், கவுண்டர்களிலும் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள் !

நாங்கள் சென்று அமரும் போதே சீட்டில் இருந்த அனைவரும் நிறைய ஸ்நாக்ஸ் உடன் அமர்ந்து சாப்பிடும் வேலையை ஆரம்பித்திருந்தனர் (எல்லாம் எக்ஸ்பிரஸ் அவின்யூவில் வாங்கியது தான் ! வெளி உணவு தான் அனுமதிப்பதே இல்லையே !). எங்களுக்கான இரவு உணவு டிக்கெட் புக் செய்யும் போதே Order செய்திருந்தேன். இடை வேளைக்கு முன் இதனை தருகிறார்கள். இப்படி ஆர்டர் செய்து சாப்பிட்டது அன்று நாங்கள் மட்டும் தான் ! வேறு யாருக்கும் அப்படி வரவில்லை. எல்லாரும் தாங்களே வேண்டியதை போய் வாங்கி கொள்கிறார்கள் !

படத்தின் டிரைலர் 

***********
வித்யாசமான கதைக்காகவும் ஜெனிபர் லாரன்சின் அட்டகாச நடிப்பிற்காகவும் அவசியம் இந்த படத்தை பார்க்கலாம் !

20 comments:

 1. Multiplex இல் மனைவியுடன் சினிமா! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. I watched this movie on first day of its release along with my daughter and her friends. They loved this movie because they already read the book (Hunger games first came as a book) and very much excited to watch it as a movie. But it did not impressed me much as there is lot of violence and kind of showing that a government can still torture innocent people and make them kill each other. There should be some good message in any movie. But that is missing in this movie. Also there is nothing amazing in this movie. Even the graphics/technology shown in this movie we have seen in other movies. It’s my personal opinion.

  After seeing this movie I thought of publishing a post about this movie. But I thought it won’t reach many people. Now I see more posts coming out on Hunger Games.

  ReplyDelete
 3. அவசியம் இப்படத்தைப்பார்க்கவேண்டும் என்கிற
  ஆவலைத் தூண்டிப் போகிறது
  தங்கள் விமர்சனம்.
  விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. போர், கொலைகள், விளையாட்டு என்று போனாலும் அதன் அடிநாதமாய் அன்பும், சக மனிதனை நேசிப்பதையும் அழுத்தமாக சொல்வதற்கு Hunger Games டீமுக்கு ஒரு சல்யூட் !

  -இந்த ஒரு விஷயத்துக்காகவே படம் பாக்கணும்னு தோணுது. ஹீரோயின் சாகசங்கள் வேற ஆர்வத்தைத் தூண்டுது. டிவிடில கிடைக்குமான்னு பாக்கறேன். மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்லாம் எனக்கு வாய்ப்பில்ல... Ha... Ha...

  ReplyDelete
 5. சென்னை வரும் வெளியூர் பதிவர்களுக்கு மோகன் & சிவா Multiplex க்கு அழைத்து செல்வார்கள் என அறிவிக்கிறேன்......ஹஹ!

  ReplyDelete
 6. படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் விமர்சனம் ஏற்படுத்துகிறது ஆனால்! டப் செய்யப்படாத ஆங்கிலப்படம் இங்கே வருவதில்லை.....நான் ஆங்கிலத்தில் படம் பார்த்தது பல வருடங்கள் சென்று விட்டது!

  ReplyDelete
 7. //T.N.MURALIDHARAN said...
  Multiplex இல் மனைவியுடன் சினிமா! வாழ்த்துக்கள்.//

  ******

  நண்பா: பெண்ணும் தானே கூட வந்துள்ளாள் :)) நன்றி

  ReplyDelete
 8. ஆதி மனிதன்: நாங்கள் பெரும்பாலும் நிறைய தமிழ் படம் தான் பார்க்கிறோம் எனவே இது எங்களுக்கு அவற்றை விட பல மடங்கு better என தோன்றியது. இப்படத்திலும் "தைரியமாய் போராட வேண்டும்" என்கிற message-ம் பெண்களுக்கு தைரியம் தரும் வகையிலும் உள்ளதே !

  ReplyDelete
 9. நன்றி ரமணி ; தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்

  ReplyDelete
 10. நிரஞ்சனா: நன்றி DVDயிலும் இந்த படம் பார்க்கலாம்

  ReplyDelete
 11. சுரேஷ்: சென்னை வரும் போது சொல்லுங்க. போயிட்டா போகுது.

  இந்த படத்திலேயே சப் டைட்டில் போட்டதால் முழுதும் படம் புரிந்தது. மொழிக்காக படத்தை மிஸ் செய்யாதீர்கள். இதனால் ஆங்கில படம் என்றால் கதை முழுதும் படித்து விட்டு நான் பார்ப்பது வழக்கம்

  ReplyDelete
 12. நல்லதொரு விமர்சனம். பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது.

  ReplyDelete
 13. உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டுது. இன்னும் ஒரிஜினல் ப்ரிண்ட் வரலயே. அதுக்கு தான் வெயிட்டிங்.

  ReplyDelete
 14. உங்கள் புண்ணியத்தில் நானும் எக்ஸ்ப்ரஸ் அவென்யூ பார்த்துட்டேன்....!

  ReplyDelete
 15. நன்றி கோவை2தில்லி மேடம்

  ReplyDelete
 16. மகிழ்ச்சியும் நன்றியும் ஹாலிவுட் ரசிகன். பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்

  ReplyDelete
 17. ஸ்ரீராம் : படத்தை பத்தி பேசாம கடைசியில் சொன்ன எக்ஸ்பிரஸ் அவிநியூ பத்தி பேசுறீர்? :))

  நன்றி ஹை

  ReplyDelete
 18. Anonymous6:09:00 PM

  This comment has been removed by the author.

  ReplyDelete
 19. Anonymous6:10:00 PM

  உங்கள் மூவருக்கும் படம் பிடித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு மோகன்...

  மறக்காமல் பதிவிட்டதற்கு நன்றி நண்பரே...

  அனுபவம் + விமர்சனம் அழகாய் இருந்தது.

  நான் நேற்று மகளிடம் படம் பற்றிய உங்கள் மறுமொழியை காட்டிகொண்டிருந்தேன்...

  என் மகள் உங்கள் மகளுக்காக ...

  Hi there.

  I am glad you liked the movie.
  Welcome to the club.

  முடிந்தால் மூன்று புத்தகங்களையும் வாசிக்கவும்

  நவம்பர் 22 ,2013 க்கு காத்திருக்கவும்

  Guess what.It is already in pre-production.

  Cheers

  ReplyDelete
 20. ரெவரி: உங்கள் பெண் என் பெண்ணுக்கு கடிதம் எழுதியது மகிழ்ச்சி. அவளுக்கு காட்டுகிறேன்

  அவள் எட்டாவது படித்தாலும் இன்னும் சின்ன பசங்க நிகழ்ச்சி + புத்தகங்கள் தான் படிக்கிறா. படங்களில் மட்டும் இத்தகைய நல்ல படங்கள் எங்களுடன் சேர்ந்து பார்ப்பாள்

  நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...